Categories
mooka pancha shathi one slokam

நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து

பாதாரவிந்த சதகம் 77வது ஸ்லோகம் பொருளுரை – நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து

चलत्तृष्णावीचीपरिचलनपर्याकुलतया
मुहुर्भ्रान्तस्तान्तः परमशिववामाक्षि परवान् ।
तितीर्षुः कामाक्षि प्रचुरतरकर्माम्बुधिममुं
कदाहं लप्स्ये ते चरणमणिसेतुं गिरिसुते ॥

6 replies on “நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து”

கோவிந்த தாமோதர் ஸ்வாமிகளை பற்றி உங்கள் மூலமாக தான் அறிந்து கொண்டேன்.
அவர் பற்றிய தகவல்கள் முழுவதும் தங்கள் மூலமாக படித்து தெரிந்து கொண்டேன்.
மூக பஞ்ச சதியை தவறாமல் பஞ்சமி தோறும் முழுவதுமாக படித்து வருகிறேன்.
சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் புத்தகம் வாங்கி பூஜை அலமாரியில் வைத்து பூ வைக்கிறேன்.
இன்றைய விளக்கமும் அருமை.
மீண்டும் மீண்டும் கேட்டு பொருளை அறிந்து கொள்கிறேன்.
நன்றி.
மகா பெரியவா அனுகிரகம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

மூக பஞ்ச சதி படிப்பது கேட்டு ரொம்ப சந்தோஷம். தினமும் கொஞ்சமாவது படியுங்கள். ஒரு பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமிக்குள் ஐந்து ஆவர்த்தி படிக்க முயற்சி பண்ணுங்கள்.

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
நன்றி.

மிக அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம்.

”அம்மா! நீயே கதி” என்று அவள் காலைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றாலும், குரு என்று தீக்ஷை கேட்டாலும் அம்பாளுடைய பாதத்தைத்தான் பிடிக்க வேண்டும். இதைத்தான் ஞானத்திலும் பக்தியிலும் திளைத்த பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பாதத்தின் மகிமையை மூககவி 100 ஸ்தோத்திரங்களில் வர்ணிக்கிறார். ‘ஸம்ஸார ஸாகரத்தில் மிகவும் அலைந்து களைப்படைந்திருக்கும் எனக்கு உன் பாதங்கள் அதைத் தாண்டுவிக்கிற சேதுவாக விளங்குகிறது’ என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.

“உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதய உருவுடைய மலின பவசலராசி ஏற விடும் உறுபுணையும் (மண நாறு சீறடியே)” என்கிறார் அருணகிரிநாதரும் சீர்பாத வகுப்பில். நமக்கு பிறவியினால் வரும் சொந்த பந்தங்களைத் தவிர மனைவி மக்கள் எனப்படும் அலைகள் வீசுகின்ற, பிறவிக் கடலில் இருந்து ஏறச் செய்யும் திடமான தெப்பமும் எதுவென்றால் மணம் வீசுகின்ற முருகப்பெருமானின் திருவடிகளே என்கிறார்.

🙏🌸

அர்த்த நாரீஸ்வரனான பரமேஸ்வரனின் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும்.அம்பாள் நம் சரீரத்தில் இடப்பாகத்தில் அமைந்துள்ள இதய ஸ்தானத்தில்தான் வாசம் செய்கிறாள் !
பவ சாகர துக்க விதூன ஹ்ருதோ
என்று தோடகர் ஆசார்யாளை வர்ணிக்கிறார் போல் பவசாகரத்தைக் கடக்க நம்மை கை தூக்கி விடுவதில் அம்பாளுக்கு பெரும் பங்கு உள்ளது !
பவம் என்ற கடலைக் கடக்க தேவியின் ரத்ன மாயமான சரணங்கள்தான் சேதுவாக இருந்து உதவி பண்ணனும். ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்.கட்டியாளினும் என்ற ஒரு பாடல் ஞாபகத்துக்கு வரது.
ஆசைக் கடலைக் கடப்பது மிக்க கடினம்! ஞானிகள் மட்டும் அதில் சிக்குவதில்லை. காலம் முழுதும் ஏதாவது ஒரு தேடலில் வீணாகக் காலத்தைக் கடத்தி விடுகிறோம் அற்ப ஜனங்களாகிய நாம் ஆசைக்கடலில் மூழ்கி கரை சேருமுன்னே நம்மைக் காலன் அழைத்துச் சென்று விடுகிறான்.
அது வாழ்க்கை நியதி.
ஆனால் அம்பாளின் பாதத்தில் மனம் பற்றி, அவளது பாதத்தை அவர்கள் சிரசில் வைத்து, கொள்பவர்களை சம்சாரம் என்ற கூட்டிலிருந்து கரை சேர்க்கிறாள்‌!
பாதித்திரு நகை என்று அருணகிரி நாதர் அர்த்த நாரீஸ்வரராக அம்மையை வர்ணிக்கிறார் ! சக்தியும் சிவமும் சேர்ந்து நம்மை உய்விக்க நமக்குக் குறை ஏது ?

பாதபஜனம் யாவற்றிலும் சிறந்த வழிபாடு! ஸ்வாமிகள் ஸதா பகவத் தியானத்தில் சம்சார சாகரத்தில் உழலாமல் உயரிய சிந்தனைகளோடு வாழ்ந்தது நம் யாவருக்கும் எடுத்துக் காட்டு !
குரு சரண் தியானம் எல்லா தேவ வழிபாட்டுக்கும்.மேலானது !
அம்பாள் சரணம்…குருவே சரணம்…

மிக அருமையான விளக்கம். நீங்கள் சொல்வவது அனைத்தையும் படிக்க ஆசைதான், ஆனாலும் ஒரு மணி நேரம் படித்ததுமே, மனம் மீண்டும் வெவ்வேறு சிந்தனைகளுக்குச் சென்றுவிடுகிறது. இருந்தும் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன். ஶ்ரீஸ்வாமிகள் க்ருபையினை வேண்டுகிறேன். நமஸ்காரம். சேது.ராமச்சந்திரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.