95. பரதனிடம் மந்திரிகள் முடி சூடிக்கொள்ளும்படி சொல்கிறார்கள். பரதன் அதை மறுத்து ‘அனைவரும் சென்று ராமனுக்கு காட்டிலேயே முடி சூட்டி அவனை அழைத்து வருவோம். சில்பிகளைக் கொண்டு அயோத்தியிலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதை அமையுங்கள்’ என்று உத்தரவு இடுகிறான். அந்த ஆணைப்படி சில்பிகள் கிணறுகளும், குளங்களும், அணைகளும், நிழல் தரும் மரங்களும், தங்குமிடங்களும், கொண்ட ஒரு பாதையை வடிவமைக்கிறார்கள்.
[அயோத்தியிலிருந்து கங்கைக்கரைக்கு பாதை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/95%20raman%20thaan%20rajaa.mp3]
Tag: ராமாயணம் ராமர்
தசரதர் ஈமக்கடன்
94. வசிஷ்டர் பரதனிடம், தசரதரின் ஈமக்கடன்களை செய்யும்படி சொல்கிறார். பரதனும் சத்ருக்ணனும் முறைப்படி தசாதரின் உடலை தகனம் செய்துவிட்டு, பன்னிரெண்டாம் நாள் ஸ்ராத்தம் செய்து, பதிமூன்றாம் நாள் அஸ்தியை எடுக்கும் போது தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். வசிஷ்டரும் சுமந்திரரும் ‘பிறக்கும் எவர்க்கும் இறப்பு உண்டு. மனத்தை தேற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களை சமாதானம் செய்கிறார்கள். மறுநாள் சத்ருக்ணன் கூனியை பார்த்த போது அவளை கிழே தள்ளி அடிக்க முற்படுகிறான். அப்போது பரதன், ‘நாம் இவளைக் கொன்றால் ராமர் நம்மோடு பேசவும் மாட்டார். விட்டுவிடு’ என்று கூறி அழைத்து செல்கிறான்.
[தசரதர் ஈமக்கடன்]
பரதன் தன்னிலை விளக்கம்
93. பரதன் மேலும் கைகேயியிடம் ‘நீ கௌசல்யா தேவி தன் ஒரே மகனைப் பிரிந்து எவ்வளவு துன்பம் அடைவாள் என்பதைக் கூட நினைத்து பார்க்கவில்லையே’ என்று வருந்துகிறான். கௌசல்யா தேவி வந்து பரதனிடம் ‘உனக்கு திருப்தி தானே! என்னையும் காட்டிற்கு அழைத்துச் சென்று என் மகனிடம் விட்டுவிடு’ என்கிறாள். பரதன் பல கடுமையான பாபங்களைக் குறிப்பிட்டு ‘எவன் விருப்பத்தின் பேரில் ராமர் காட்டிற்கு போனாரோ அவன் இந்த பாபங்களை அடையட்டும்’ என்று கூறி ராமர் காட்டிற்கு போனதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்குகிறான். கௌசல்யா தேவி மனம் மாறி அவனை சமாதானம் செய்கிறாள்.
[பரதன் கௌசல்யா தேவியை சமாதானம் செய்தல்]
பரதன் கோபம்
92. பரதன், ராமர் எங்கே என்று கேட்கும் போது, கைகேயி, தான் ராமரை காட்டிற்கு அனுப்பியதைக் கூறுகிறாள். ‘இப்போது நீயே அரசன். பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சி செய்’ என்று கூறுகிறாள். பரதன் கடும் கோபம் அடைந்து கைகேயியை நிந்திகிறான். ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். நான் உன்னோடு இனி பேச மாட்டேன். ராமரை காட்டிலிருந்து அழைத்து வந்து அவனுக்கு முடி சூட்டி நான் அவனுக்கு அடிமையாக இருப்பேன்.’ என்று கூறுகிறான்.
[பரதன் கோபம்]
பரதன் அயோத்தி திரும்பினான்
91. பரதன் வசிஷ்டர் அனுப்பிய தூதர்களோடு அயோத்தி திரும்புகிறான். அயோத்தி நகரம் களை இழந்து காணப் படுவதைக் கொண்டு அரசரின் உயிருக்கு ஆபத்தாய் இருக்கும் என்று அனுமானம் செய்கிறான். தசரதர் அரண்மனையில் அவர் இல்லாததால் கைகேயி அரண்மனைக்கு சென்று அவளைக் காண்கிறான். கைகேயி, தசரதர் காலகதி அடைந்து விட்டதை தெரிவித்ததும் வருந்தி அழுகிறான்.
[பரதன் அயோத்தி திரும்பினான்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/91%20bharathan%20ayodhi%20thirumbinaan.mp3]
சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்
84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர் எடுத்துச் சொல்கிறார்.
[சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/84%20sumanthirar%20seythi.mp3]