Categories
Ayodhya Kandam

சுமந்திரரின் ராம பக்தி


80. ராமர் படகின் அருகில் போகும் போது சுமந்திரரிடம், தசரதருக்கும் பரதனுக்கும் கூற வேண்டிய செய்திகளைச் சொல்லி, அவருக்கு  விடை கொடுக்கிறார். சுமந்திரர் ராமரின் பிரிவை நினைத்து பலவாறு வருந்துகிறார். தன்னையும் வனவாசத்திற்கு கூட அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீங்கள் திரும்பிச் சென்று ராமரை காட்டில் விட்டு விட்டேன் என்று சொன்னால் தான், கைகேயி என் தந்தையை சந்தேகப் படாமல் இருப்பாள். அதனால் போய் வாருங்கள்’ என்று கூறி விடைபெறுகிறார். ஆலம் பாலினால் சிகையை  ரிஷிகளைப் போல் ஜடையாக தரித்துக் கொண்டு, படகில் ஏறுகிறார்.
[சுமந்திரர் ராமனிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/80%20sumanthrar%20ramar.mp3]

Categories
Ayodhya Kandam

சீதாதேவி கங்கா நதியிடம் பிரார்த்தனை


81. கங்கையை கடக்கும் போது சீதை ‘கங்கா மாதா! நாங்கள் நல்ல படியாக வனவாசத்தை கழித்து திரும்பி வந்தால், உன் கரையில் உள்ள கோயிலில் தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் செய்கிறோம். உன் கரையில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம்’ என்று வேண்டிக் கொள்கிறாள். ராமர் அன்றிரவு தன் அம்மாவைப் பற்றி கவலைப்பட்டு லக்ஷ்மணரை அயோத்திக்கு திரும்ப போகச் சொல்கிறார். லக்ஷ்மணர் ‘ராமா! நானோ சீதையோ உன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட உயிர் வாழ மாட்டோம். பரதன் அவர்களைப் பார்த்துக்கொள்வான். கவலைப் படாதே’ என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
[சீதாதேவி கங்கை நதியிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/81%20seethai%20gangai.mp3]

Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் தர்சனம்


82. கங்கையும் யமுனையும் சேரும் பிரயாகை என்ற இடத்தில் தவஸ்ரேஷ்டரான பரத்வாஜ முனிவரை ராமர் தரிசிக்கிறார். பரத்வாஜர் அவர்களை வரவேற்று உபசரித்து, அன்றிரவு புண்ய கதைகளை பேசியபடி கழிக்கிறார்கள். மறுநாள் காலை, முனிவர், ‘உங்கள் வனவாசத்தை ரம்யமான சித்ரகூட மலை அடிவாரத்தில் மந்தாகினி நதி தீரத்தில் கழிக்கலாம்’ என்று சொல்லி அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார். ராமரும் லக்ஷ்மணரும் சீதையும் அவர் சொன்ன வழியில் சென்று யமுனை நதியைக் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தை வணங்கி பின் மந்தாகினி தீரத்தை அடைந்தார்கள்.
[பரத்வாஜர் தர்சனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/82%20bharadwajar%20darshanam.mp3]

Categories
Ayodhya Kandam

ராமர் சித்ரகூடம் அடைந்தார்


83. ராமர் சித்ரகூடத்தின் இயற்கை அழகை வியந்து ‘இங்கு நாம் ரிஷிகளுடன் சுகமாக வசிப்போம்’ என்று சொல்கிறார். பிறகு அவர்கள் வால்மீகி முனிவரை தரிசித்து வணங்குகிறார்கள். பின்னர் மந்தாகினி நதி தீரத்தில் ராமர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, லக்ஷ்மணர் அங்கு ஒரு பர்ணசாலை கட்டுகிறார். ராமர் உரிய மந்திரங்களை ஜபித்து, எல்லா தேவதைகளுக்கும் பலி கொடுத்து வாஸ்து சாந்தி செய்து, அந்த பர்ணசாலையில் அவர்களோடு இந்திரனைப் போல சுகமாக வசிக்க ஆரம்பிக்கிறார்.
[ராமர் சித்ரகூடம் அடைந்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/83%20chithrakoota%20vaasam.mp3]

Categories
Ayodhya Kandam

சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்


84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர்  எடுத்துச் சொல்கிறார்.
[சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/84%20sumanthirar%20seythi.mp3]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் சமாதானம்


85. சுமந்திரர் ராமரைக் காட்டில் விட்டு விட்டார் என்று கேட்ட தசரதரும் கௌசல்யையும் வேதனைப் படுகிறார்கள். அதைக் கண்டு சுமந்திரர் ‘அவர்கள் காட்டில் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ராமர் அருகில் இருப்பதால் சீதை பயப்படவே இல்லை. இப்படி ஒரு சத்தியப் பற்றோடு வாழ்ந்த அரசர், அவரிடம் அன்பு அகலாத மனைவி, தந்தை சொல் ஏற்று கானகம் சென்ற ஒரு பிள்ளை, அவனோடு சென்ற அவன் மனைவி, தம்பி, என்று இந்த சரிதத்தை எல்லோரும் உலகம் உள்ளவரை பேசுவார்கள். நீங்கள் வருந்த வேண்டாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்துகிறார்.
[சுமந்திரர் சாமாதானம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/85%20sumanthirar%20samadaanam.mp3]

Categories
Ayodhya Kandam

கௌசல்யா தேவி சோகம்

86. கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.
[கௌசல்யா தேவி சோகம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/86%20kousalyadevi%20shokam.mp3]

Categories
Ayodhya Kandam

முனி குமாரன் வதம்

shravankumar
87. தசரதர் கௌசல்யா தேவியிடம் தான் இளமையில் அறியாமல் செய்த ஒரு தவற்றைப் பற்றி கூறுகிறார். காட்டில் வேட்டையாட சென்றபோது ‘யானை நீர் அருந்துகிறது’ என்றெண்ணி தசரதர் ஒரு முனிகுமாரனின் மீது அம்பு எய்து விடுகிறார். அந்த முனி குமாரன் ‘ஒரு அம்பினால் என்னையும் என் கண்ணில்லாத பெற்றோரையும் கொன்று விட்டீர். என் தந்தை உங்களை சபிக்காமல்  என்று கூறி உயிர் விடுகிறான். தசரதர் நடந்த விஷயத்தை அவன் பெற்றோரிடம் சென்று தெரிவிக்கிறார்.
[முனி குமாரன் வதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/87%20muni%20kumaran%20maranam.mp3]

Categories
Ayodhya Kandam

தசரதர் வியோகம்

dasaratha dies
88. தசரதர் சொன்ன செய்தியைக் கேட்டு அந்த முனிகுமாரனின் கண்ணிழந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வேதனையில் புலம்புகிறார்கள். பின்னர் அவனுக்கு அந்திம கார்யங்கள் செய்து விட்டு, அந்த முனிவர் தசரதரிடம் ‘நான் என் கடைசிக் காலத்தில் எப்படி என் மகனை பிரிந்து தவிக்கிறேனோ அப்படி நீயும் உன் கடைசி காலத்தில் உன் மகனைப் பிரிந்து தவிப்பாய்’ என்று சாபம் இடுகிறார். தசரதர் இவற்றை எல்லாம் கௌசல்யையிடம் சொல்லி வருந்துகிறார். அன்றிரவு ராமரின் பிரிவு தாங்காமல் அவனையே நினைத்தபடி தசரதர் உயிர் துறக்கிறார்.
[தசரதர் வியோகம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/88%20dasarathar%20viyogam.mp3]

Categories
Ayodhya Kandam

அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்

dasharatha_death_bed
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/89%20dasarathar%20deha%20rakshanam.mp3]