நேற்றைய கதையில் ஆதி சங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணினது, காலபைரவாஷ்டகம் பண்ணினது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.
நேற்றைய கதையில் ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு முன்னாடி அந்த அத்வைத பரம்பரையில் மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌட பாதர், கோவிந்த பகவத் பாதர், அவரோட சிஷ்யரா சங்கர பகவத் பாதாள் இந்த பரம்பரை, அதுல இருந்த மஹான்களுடைய பெருமையெல்லாம் பார்த்தோம். இந்த கோவிந்த நாமத்துல ஆதி சங்கரருக்கு இருக்கக் கூடிய ப்ரியத்துனால பஜகோவிந்தம், பஜகோவிந்தம் னு பாடினார், அப்படீன்னு சொன்னேன்.
நேற்றைய கதையில், ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதாள் கிட்ட ஸந்யாஸ தீக்ஷை வாங்கிண்டு, அவர் உத்தரவு படி காசியிலே போயி, அத்வைத தத்துவத்தை ஜனங்களுக்கு பாஷ்யங்கள் மூலமாகவும், தன்னுடைய ப்ரவசனங்கள் மூலமாகவும், 56 தேசத்திலேருந்து வந்த பண்டிதர்களெல்லாம் சொல்லி, அதன் மூலமா வேத மதத்துக்கே ஒரு புத்துயிர் கொடுத்தார், அப்படீங்கிறதை சொல்லிண்டு இருந்தேன்.
நேற்றைய தினம், ஆதி சங்கர பகவத் பாதாள் பூமியில பிறந்தது, காலடியில சிவகுரு, ஆர்யாம்பாங்கிற தம்பதிக்கு, குழந்தையாக தக்ஷிணாமூர்த்தியே பூமியில அவதாரம் பண்ணியிருந்தார், ரொம்ப மேதாவியா இருந்ததுனால அவருக்கு, அஞ்சு வயசுலயே பூணல் போட்டுட்டா, அப்படீன்னு சொன்னேன். இந்த வசந்த ருதுல பகவத் பாதாளோட அவதாரம். விவேக சூடாமணியில ஒரு ஸ்லோகம் இருக்கு.
ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் வறுமையை போக்கி,எல்லா மங்களங்களை அளிக்கும்.
ஆதிசங்கரர் கனகதாரை பொழியச் செய்த வரலாறு
https://valmikiramayanam.in/?p=2440
சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு (Audio of kanakadhara stothram )
अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती

ஸ்ரீ சங்கர அவதாரம் (20 min audio in tamil. same as the script above)
சம்பு சங்கரராக அவதாரம் (14 min audio in tamil. same as the script above)
நேத்திக்கு சங்கர சரித்திரத்தை நாம் ஏன் கேட்க வேண்டும் அப்படின்னு சொல்லிண்டு இருந்தேன். இன்னிக்கு தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட பிரார்த்தனை பண்ணி, பகவான் பூமியில ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் அப்படிங்கற விஷயம்.

ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்? (16 min audio in tamil. same as the script above)
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||
ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|

கடந்த பத்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, மூன்றாவது புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராம பக்தி ஸாம்ராஜ்யம்





