Categories
Ayodhya Kandam

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

Vasistha1112.வசிஷ்டர் ராமரிடம் ‘இக்ஷ்வாகு குலத்தில் மூத்த பிள்ளைக்கு தான் பட்டம் சூட்டுவது வழக்கம். நான் உனக்கும் உன் தந்தைக்குமே குரு. என் பேச்சை கேட்டு நீ அரசை ஏற்பதால் தவறில்லை’ என்கிறார். ராமர் ‘என் தந்தையின் வார்த்தையை மீறி உங்கள் வார்த்தையை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி விடுகிறார். பரதன் ‘உன் இடத்தில்  நான் வனவாசத்தை மேற்கொள்கிறேன்’ என்று கூறும் போது ராமர்  ‘நம் தந்தையார் உயிரோடு இருக்கும் போது எப்படி முடிவு செய்தாரோ அப்படியே தான் நாம் கேட்க வேண்டும். அதை மாற்ற நமக்கு உரிமை கிடையாது’ என்று கூறுகிறார்.  [தந்தை சொல்மிக்க மந்திரமில்லை] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/112%20dharmavid%20utthamaha.mp3]

Categories
Ayodhya Kandam

பரதன் சரணாகதி

sandal2113. பரதனும் ராமரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் அங்கு தோன்றி பரதனிடம், ராமருடைய பேச்சைக் ஏற்கும்படி கூறுகிறார்கள். பரதன் ராமரிடம் சரணாகதி செய்கிறான். ராமர் அதை ஏற்றுக்கொண்டு, வசிஷ்டர் சொன்னபடி தன் பாதுகைகளை பரதனுக்கு அளிக்கிறார். பரதன் அவற்றை தலையில் ஏற்கிறான். ‘பதினைந்தாவது வருடம் முதல் நாள் நீங்கள் அயோத்தி திரும்பாவிட்டால் நான் நெருப்பில் விழுந்து விடுவேன்’ என்று கூறுகிறான். ராமர் ‘நான் அப்படியே வந்துவிடுகிறேன். நீ கைகேயி அம்மாவை கடிந்து ஏதும் பேசக் கூடாது. இது என் மேலும் சீதை மேலும் ஆணை’ என்று கூறுகிறார்.
[பரதன் ராம பாதுகைகளைப் பெற்றான்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/113%20Bharathan%20Sharanagathi.mp3]
Categories
Ayodhya Kandam

பாதுகா பட்டாபிஷேகம்

bharata114. பரதன் ராமருடைய பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ரதத்தில் ஏறி, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி விவரங்களை சொல்லிவிட்டு, அயோத்தி திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்க விரும்பாமல் அருகில் நந்திக்ராமம் என்ற இடத்திற்கு வந்து, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்கிறான். ராமரே தன் அருகில் இருப்பதாக நினைத்து அந்த பாதுகைகளின் துணையோடு ஆட்சி செய்கிறான். ஆனால் எந்த ராஜ போகத்தையும் ஏற்காமல் காட்டில் ராமர் இருப்பது போல தானும் மரவுரி, ஜடை அணிந்து தபஸ்வியாக வாழ்கிறான்.
[பாதுகா பட்டாபிஷேகம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/114%20Paduka%20pattabhishekam.mp3]
Categories
Ayodhya Kandam

அத்ரி அனசூயா தரிசனம்

athri115. பரதன் சென்ற பின் ராமர் சித்ரகூடத்தில் இருந்து வேறிடம் செல்ல நினைக்கிறார். கிளம்புமுன் அத்ரி முனிவரை தரிசிக்கிறார். அத்ரி முனிவர் அவர்களை வரவேற்று அன்போடு உபசரிக்கிறார். தன் மனைவி அனசுயா தேவியிடம் சென்று ஆசி பெற்றுக் கொள்ளுமாறு சீதையை பணிக்கிறார். சீதை வணங்கியதும் அனசூயா தேவி அவளை அணைத்து ஆசிர்வதித்து ராமனோடு காட்டிற்கு வந்ததை பாராட்டுகிறாள்.
அத்ரி தரிசனம்

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/115%20Athri%20Anasuya%20Darsanam.mp3]
Categories
Ayodhya Kandam

சீதா தேவியும் அனசூயா தேவியும்

Sita-Devi-and-Sati-Anusuya
116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.
[சீதா தேவியும் அனசூயா தேவியும்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/116%20sita%20anasuya.mp3]