Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் அளித்த விருந்து

bharadwaja feast
100. பரத்வாஜர் பரதனுடைய சேனைக்கு தெய்வங்களின் உதவியால் ஒரு அற்புதமான விருந்து படைக்கிறார். எல்லோரும் விருந்தில் மயங்கி ‘நாம் அயோத்திக்கும் போக வேண்டாம். சித்ரகூடத்திற்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இருந்து விடலாம்.’ என்கிறார்கள். பரதன் மனம் இவற்றில் செல்லவில்லை. ஒரு சிம்மாசனத்தை பார்த்ததும் ராமர் அங்கு அமர்ந்து இருப்பதாக பாவித்து அதை வணங்குகிறான். பொழுது விடிந்ததும் முனிவரிடம் ‘எனக்கு என் அண்ணா ராமர் இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகிறான்.

[பரத்வாஜர் அளித்த விருந்து]

இப்படி பரத்வாஜர் பரதன்ட்ட, “சித்ரகூட மலையடிவாரத்துல ராமன் இருக்கான், நீ நாளைக்கு போய் அவன பாரு. இன்னிக்கு இங்க என்னோட தங்கு”னு சொன்ன உடனே, சரின்னு சொல்லிடறான். “உன்னுடைய சேனைக்கு நான் அதிதி ஸத்காரம் பண்ணனும்னு ஆசப்படறேன் அப்படின உடனே, “ஆயிடுத்தே, நீங்க பழங்கள் எல்லாம் குடுத்தேளே” அப்படினு பரதன் சொல்றான். “நீ சுலபமா திருப்தி ஆகிடற, இருந்தாலும் என்னோட ஆசைக்காக நான் உன் சேனைக்கு ஒரு விருந்து வெக்கறேன். அவாள இங்க வரச்சொல்லு, எங்கனு கேட்ட உடனே, சேனை எங்கனு” கேக்கறார். “நான் இந்த ரிஷிகள் எல்லாம் இருக்கற இடத்துக்கு யானைகள் குதிரைகள் சேனைகள் எல்லாம் வந்துதுனா எதாவது ஹிம்சை பண்ணிடுவானு தள்ளி நிக்க சொல்லிருக்கேன்” அப்படிங்கறான். பரவாயில்லை வரச்சொல்லுனு சொல்றார். அவாள்லாம் வரா.

பரத்வாஜர் தன்னோட ஆஸ்ரமதுக்குள்ள போய் அக்னி இருக்கற இடத்துல, “அக்னிஷாலாம் ப்ரவிஸ்யாத பீத்வாப: பரம்ருஜ்யச” ஆசமனம் பண்ணி, வாய தொடசுண்டு எல்லா தெய்வங்களையும் ப்ரார்த்தனை பண்றார். விஷ்வகர்மா, த்வஷ்டா, இந்திரன், அக்னி, வாயு, வருணன் அப்டின்னு திக்தேவதைகள், சந்திரன், சூரியன் அப்டினு எல்லா தெய்வங்களையும் வேண்டி “எல்லாரும் எனக்கு சகாயம் பண்ணனும். நான் இந்த பரதனுக்கு, இவனுடைய சேனைக்கு ஒரு அற்புதமான விருந்து வெக்கணும்னு ப்ரியப்படறே”ன்னு சொன்ன உடனே, விஷ்வகர்மா ஒரு பெரிய ஒரு யோஜைனைக்கு ரத்ன கம்பளதுனால பந்தல் போட்டு அதுக்குள்ளே ஒரு அரண்மனை. யானைகள் குதிரைகள் தங்கறதுக்கு மொதக்கொண்டு தனியான கூடாரங்கள், அப்படி ஒரு அற்புதமான ஸ்ருஷ்டி. அதுக்குள்ள அப்சரஸ் ஸ்திரீகள் எல்லாம் வந்துடறா. எல்லா நதிகளும் பெண்ணுருவம் எடுத்துண்டு வந்துடறது. கந்தர்வர்களெல்லாம் வரா. கந்தர்வ கானம், வீணா கானம், துந்துபி, ம்ருதங்கம், எல்லா நடனங்கள், இப்படி ஒவ்வொண்ணா ஆரம்பிச்சு ரொம்ப கண்கொள்ளாக் காக்ஷியா ரொம்ப, தேவலோகமே பூமில இறங்கி வந்தா மாதிரி ஒரு ஸ்ருஷ்டி பண்ணிடறா.

இந்த அரண்மனைக்குள்ள பரதனையும் அவனுடைய, எல்லாரையும் அழைச்சுண்டு போறா மந்த்ரிகள், சேனாதிபதிகள் எல்லாம். அங்க போனவுடனே ஒரு ராஜ ஆஸனம் இருக்கு. பரதன் நேரா போறான், அந்த ராஜ ஆசனத்துக்கு கைகூப்பி வணங்கி, பக்கத்துல இருந்த சாமரத்த எடுத்து விசுறுகிறான். அவன் மனசுல ராஜான்னா ராமன் தான், அங்க ராமர் உக்காந்துருக்கார். அவன் கண்ணுக்கு ராமரா தெரியறார். அத மாதிரி அவனுக்கு தனியான ஒரு பாவம். அவன் அந்த மாதிரி பண்ணின உடனே எல்லாருமே அப்படி பண்றா. அப்பறம் கீழ வந்து, வேற ஒரு ஆசனத்துல உக்காந்துகறான். அப்போ எல்லாரும் அதே மாதிரி அந்த ஆசனத்துல போய், ராமர் இருக்கார்னு வணங்கிட்டு வந்து அவாவா உக்காந்துகறா.

இந்த எடத்துல மஹாபெரியவா, தந்தத்துல ஒரு ஆச்சார்யாள் விக்ரஹம் பண்ணி கொண்டு வந்தாளாம். அதுமேல ஒருத்தர் மல்லிப்பூ வெச்ச உடனே, “இது அவளோ பொருத்தமா இல்லையே. அந்த கலருக்கு (colour) ரோஜாப்பூ வெசான்னா அழகா இருக்கும். ஒரு ரோஜாப்பூ எடுத்து வை”, அப்படின்னாளாம்.

அது மாதிரி, ராமேஸ்வரத்துல ஒரு மண்டபம் கட்டினா. அதுல ரொம்ப தள்ளி இருந்து பாக்கறா மாதிரியே ஆச்சார்யாள், சிஷ்யர்கள் எல்லாம் அவளோ பெருசா பண்ணிருக்கா. பெரியவா இங்க தேனம்பக்கத்துல இருக்கும்போது, எப்படி பண்ணனும்னு என்ஜினியருக்கு (engineers) இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (instructions) எல்லாம் குடுக்கறா. பெரியவா, “சிஷ்யர்களுக்கு எல்லாம் என்ன வர்ணம் குடுத்துருக்க” அப்படினோன்ன, “நான் அவாளுடைய காவி வஸ்திரத்துக்கு காவி வர்ணம் குடுத்துருக்கேன்”, அப்படினு சொல்லிண்டே வரார். “பின்னாடி என்ன colour”, அப்படி பெரியவா கேக்கறா? “என்ன colour குடுக்கலாம்” அப்படின்னு அங்க இருக்கறவா எல்லாம் கேக்கறா. ஒருத்தர் காவி குடுக்கலாம், அப்டில்லாம் சொன்னோன்ன, இல்ல, அது சொச்சமா வெள்ளையாவே இருக்கட்டும். அப்பதான் பெரியவா, ஆச்சார்யாள் சிஷ்யர்களோட இருக்கறது தள்ளி இருக்கறவாளுக்குகூட நன்னா தெரியும். ஒரு மஹான் இருக்கார்னு மனசுல நெனச்சு அது அவாளுக்கு நல்லது பண்ணும்”, அப்படின்னு பெரியவாளுக்கு இருந்த ஆச்சார்யாள் பக்தி ஒரு தனி.

அந்த மாதிரி இந்த பரதனுடைய ராம பக்தி தனியானது, அப்படின்னு காமிக்கறதுக்காக இந்த ஒரு சீன் (scene).

அவன் முன்னாடி வந்து, தும்புரு கானம், அப்சரஸ் ஸ்திரீகள் நடனம் எல்லாம் பண்றா. எல்லாரும் அதெல்லாம் பாவம் மயங்கறா, ஆனா இவன் பரதனுக்கு அதெல்லாம் ஒண்ணும் ஒட்டல. இந்த எல்லாரையும் குளுப்பாட்டி, சாப்பாடு போட்டு, நல்ல துணிகள் எல்லாம் உடுத்திவிட்டு, தலைவாரி, இப்படி ஒரு ஆச்சர்யமான உபசாரம் எல்லா சேனை, சேனைல இருக்கற எல்லாருக்கும்.

எல்லாரும் “நைவாயோத்யாம் கமிஷ்யாம: நகமிஷ்யாம தண்டகான் | குசலம் பரசஸ்யாஸ்து ராமாஸ்த்யாஸ்து ததா சுகம் ||”.

“ராமனும் க்ஷேமமா இருக்கட்டும் சித்ரகூடதுல, பரதனும் க்ஷேமமா இருக்கட்டும். நம்ப எங்கயும் போக வேண்டாம், இங்கயே இருந்துடலாம். இதுன்னா சொர்க்கம், இந்த மாதிரி உண்டா” அப்டினு எல்லாரும் சொல்ல ஆரமிச்சுடறா. அப்படி, ஒரு போகப்பொருள் கெடச்சுதுன்ன ஜனங்களோட பக்தி எல்லாம் ஆட்டம் கண்டுடறது.

இப்படி கரும்பு, தேன், பொரி, பாயசம், பழங்கள், பழச்சாறு, தயிர், பால், பலவித மாமிச பக்ஷணங்கள் இப்படி, கேட்டதெல்லாம் கிடைக்கறது. நெனச்சதெல்லாம் சாப்டுண்டு சந்தோஷமா அன்னிக்கு பொழுது எல்லாரும் கழிக்கறா. கடைசி வேலைக்கறான் வரைக்கும், கடைசி யானைகள் குதிரைகள் வரைக்கும் எல்லாருக்கும் அற்புதமான விருந்து. எல்லாரும் அதுல மயங்கி போய் அன்னிக்கு ராத்திரிய கழிச்சு, அடுத்த நாள் எழுந்து பார்த்தா ஒண்ணும் இல்ல. எல்லாம் ஸ்வப்ன கல்பம் அப்படினு ஸ்வாமிகள் இந்த எடத்துல “இந்த நம்முடைய வாழ்க்கையே ஒரு ஸ்வப்னம் மாதிரிதான, அத இந்த மாதிரி காமிச்சு குடுக்கறா. ராமாயணத்த புத்தியோட படிச்சா அதுலயும் வைராக்கியம் இருக்கு” அப்படின்னு சொல்வார். அதுமாதிரி ஸ்வாமிகளுக்கு, இந்த அப்சரஸ் ஸ்திரீகள் நாட்டியம் ஆடினா அப்படிங்கறத எல்லாரும் விஸ்தாரமா சொல்லிண்டு இருப்பா. ஸ்வாமிகளுக்கு, இந்த சர்கம் வந்து வாழ்க்கையே ஒரு ஸ்வப்னம் மாதிரி அப்படின்னு வைராக்யத்த தெரிஞ்சுக்கணும்னு சொல்வார். அது மாதிரி ஸ்வாமிகள் இந்த க்ரந்தங்கள் எல்லாம் சேவிக்கர்தே வேற மாதிரி.

இந்த அபிராமி அந்தாதில “தனம் தரும் கல்வி தரும்” அப்படிங்கற பாசுரத்த எல்லாரும் ரொம்ப விரும்பி படிப்பா. அது நன்னாத் தான் இருக்கு, அம்பாள் அநுக்ரஹம். தளராத மனசு வேணும்தான், அத பிரார்த்தனை பண்ணிக்கணும். ஆனா அதே அபிராமி அந்தாதில “நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது ஒன்றேயுமில்லை உனக்கே ப்ரம். எனக்குள்ள எல்லாம் அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட்கடலே பகவான் பெற்ற கோமளமே” அப்படின்னு ஒரு பாசுரம் இருக்கு, அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படினு சொல்வார். அதுமாதிரி ஸ்வாமிகளுக்கு, வைராக்யபரமா இருக்கற ஸ்தோத்ரங்கள் எல்லாம் ரொம்ப அவர் மனசு தொடும்.

அப்படி அன்னிக்குப் பொழுது கழிஞ்சு அடுத்த நாள் எழுந்து பார்த்தா ஒண்ணையும் காணும். பரத்வாஜர் எழுந்து அவருடைய அனுஷ்டானங்கள் எல்லாம் பண்ணிண்டு இருக்கார். எல்லா அப்சரஸ் ஸ்திரீகள், கந்தர்வர்கள், தேவர்கள்,

“பிரதிஜக்முஸ்ச தா நத்யஹ கந்தர்வாச்ச யதா கதம் |

பரத்வாஜம் அனுஞாப்ய தாஸ்ச ஸர்வா வராங்கனா: ||

எல்லாரும் பரத்வாஜர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு பொழுது விடிஞ்சவுடன எல்லாரும் போயிடறா. என்ன இது, கனவா நனவா னு எல்லா ஜனங்களும் விழிச்சுண்டு இருக்கா. எழுந்து பார்த்தா ஒண்ணும் இல்ல.

பரதன் நேரா பரத்வாஜர போய் பாத்து, நமஸ்காரம் பண்றான். அப்போ பரத்வாஜர் கேக்கறார், “எல்லாருக்கும் த்ருப்தியா?” அப்படினோனே, “ஆஹா, இந்த மாதிரி அற்புதமான விருந்தை யாருமே இதுக்கு முன்னாடி பாத்துருக்க மாட்டா. அதுனால எல்லாரும் ரொம்ப, பரம த்ருப்தியா இருக்கா” அப்படின்னு சொல்லிட்டு, “கேட்டதெல்லாம் கொடுக்கற எல்லாரையும் சந்தோஷப்படுத்தற மஹரிஷியே, நான் உங்களிடத்தில் ஒரு ப்ரார்த்தனை பண்றேன்”.

சமீபம் ப்ரஸ்திதம் ப்ராது: மைத்ரேநைக்ஷஸ்வ சக்ஷுஷா

“உங்களுடைய கருணைக்கண்ணால் என்னை பார்க்க வேண்டும். நான் என்னுடைய அண்ணாவை அடையணும், அதுக்கு தயவு பண்ணுங்கோ” அப்படிங்கறான். அந்த மாதிரி, பரதனுடைய மனசு முழுக்க ராமர்கிட்ட தான் இருக்கு. “எனக்கு ராமனைப் பாக்கணும், எனக்கு ராமனைப் பாக்கணும்” அப்படின்னு அதையே கேட்டுண்டு இருக்கான் அவன். “அவன் எங்க இருக்கான்? அத எனக்கு சொல்லுங்கோ, தயவு பண்ணுங்கோ” அப்படிங்கறான்.

உடனே, “பரதம் ப்ராத்ரு தர்ஷன லாலஸம்” அண்ணாவப் பாக்கணும்னு இவளோ ஆசையா இருக்கான் இந்த பரதன். அதுனால பரத்வாஜர், “இங்கேந்து 15 யோஜன தூரத்துல, சித்ரகூடம்னு ஒரு மலை இருக்கு. அதோட அடிவாரத்துல ரிஷிகளோட இருப்பான், அங்க ஜன நடமாட்டமே இருக்காது. நீ அங்க போனா, ராமர பாக்கலாம்னு அந்த வழியெல்லாம் சொல்லிக் கொடுக்கறார். சேனையோட போணும்னா, எப்படி போணும்னா எல்லாம் சொல்றார். அப்பறம் பரத்வாஜர், உன்னுடைய அம்மாக்களை யார் யார்னு எனக்கு அடையாளம் சொல்லு அப்படின்னு கேக்கறார். அதெல்லாம் அடுத்தது பாப்போம்.

ஜானகி காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம…


[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/100%20Bharadwajar%20virundu.mp3]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.