ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம்

நேற்றைய கதையில் ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு முன்னாடி அந்த அத்வைத பரம்பரையில் மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌட பாதர், கோவிந்த பகவத் பாதர், அவரோட சிஷ்யரா சங்கர பகவத் பாதாள் இந்த பரம்பரை, அதுல இருந்த மஹான்களுடைய பெருமையெல்லாம் பார்த்தோம். இந்த கோவிந்த நாமத்துல ஆதி சங்கரருக்கு இருக்கக் கூடிய ப்ரியத்துனால பஜகோவிந்தம், பஜகோவிந்தம் னு பாடினார், அப்படீன்னு சொன்னேன்.

இந்த காசி வாசத்தும் போது தான் இந்த பஜகோவிந்தம் பாடினார், அப்படீன்னு சொல்வா. காசியிலே இருக்கும்போது ஒரு பாடசாலைக்கு, அவா கூப்பிட்டு இருந்தான்னு போய்ப் பார்த்தாராம். அங்க எல்லாரையும் அனுக்ரஹம் பண்ணிட்டு கிளம்பும் போது ஒரு வியாகரண பண்டிதர் நிறைய தங்க ஆபரணங்கள் எல்லாம் போட்டுண்டு, தன்னோட படிப்பைப் பத்தியும் பணத்தைப் பத்தியும் ரொம்ப கர்வமா இருந்திருக்கார், வயசும் ஆயிடுத்து அவருக்கு. அவர் இந்த வ்யாகரணத்தை பத்தியே பேசிண்டு, ஏதோ வீண் வாதம் பண்ணும் போது ஆதி சங்கரர், படிப்பு இருந்தாலும் ஞானம் இல்லையே அப்படீன்னு நினைச்சு

भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते ।

सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति डुकृङ्करणे ॥

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்  மூடமதே |

ஸம்ப்ராப்தே சன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி, டுக்ருஞ்சகர்ணே ||

இந்த டுக்ருஞ்சகர்ணே grammar rules எல்லாம் உங்களை வயசான காலத்துல எமன் கிட்டே இருந்து காப்பாத்தப் போறது இல்ல. பகவத் பஜனம் தான் காப்பாற்றும். அப்படீன்னு சொல்றார். இந்த பஜ கோவிந்தத்துக்கு “மோஹ முத்கரம்” னு இன்னோரு பேரு. இது தான் ஆதி சங்கரரோட உபதேசங்கள்ல ரொம்ப ஒரு straight from the heart னு சொல்ற மாதிரி ரொம்ப direct ஆன உபதேசங்கள். அதுல

मा कुरु धनजनयौवनगर्वं हरति निमेषात्कालः सर्वम् ।

मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥

மா குரு த⁴னஜனயௌவனக³ர்வம் ஹரதி நிமேஷாத்கால: ஸர்வம் ।

மாயாமயமித³மகி²லம் ஹித்வா ப்³ரஹ்மபத³ம் த்வம் ப்ரவிஶ விதி³த்வா ॥

“பணம், ஜனங்கள், யௌவனம் எல்லாம் இருக்குனு கர்வப்படாதே. ஒரு நிமிஷத்துல எல்லாம் போயிடும். பகவானைப் பத்தி ஆத்மாவைப் பத்தி யோசி”அப்படீன்னு சொல்றார்.

गेयं गीतानामसहस्रं ध्येयं श्रीपतिरूपमजस्रम् ।

नेयं सज्जनसङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥

கே³யம் கீ³தாநாமஸஹஸ்ரம் த்⁴யேயம் ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் ।

நேயம் ஸஜ்ஜனஸங்கே³ சித்தம் தே³யம் தீ³னஜனாய ச வித்தம் ॥

பகவத்கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் பண்ணு. சாதுக்களோட சங்கத்தை  விரும்பு. ஏழைகளுக்கு தானம் பண்ணு, அப்படீன்னு சொல்றார்.

यावद्वित्तोपार्जनसक्त-स्तावन्निजपरिवारो रक्तः ।

पश्चाज्जीवति जर्जरदेहे वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥

யாவத்³வித்தோபார்ஜனஸக்த-ஸ்தாவன்னிஜபரிவாரோ ரக்த: ।

பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே வார்தாம் கோऽபி ந ப்ருʼச்ச²தி கே³ஹே ॥

நீ ஏதோ பணம் சம்பாதிச்சுண்டு வந்தா உலகத்துல மதிப்பா. இல்லைன்னா யாரும் உன்னை மதிக்க மாட்டா. இருக்கியா, போனியான்னு கூட கேட்க மாட்டா. இந்த உலகத்துல நீ இவ்வளவு ஜனங்கள் மேல attachment வெச்சுண்டு இருக்கியே.

“மாகுரு தன ஜந யௌவன கர்வம்”, அந்த கர்வம் படாதே, அப்படீன்னு சொல்றார். அதோட கடைசி சுலோகம்.

गुरुचरणाम्बुजनिर्भरभक्तः संसारादचिराद्भव मुक्तः ।

सेन्द्रियमानसनियमादेवं द्रक्ष्यसि निजहृदयस्थं देवम् ॥

கு³ருசரணாம்பு³ஜ நிர்ப⁴ரப⁴க்த: ஸம்ஸாராத³சிராத்³ப⁴வ முக்த: ।

ஸேந்த்³ரியமானஸ நியமாதே³வம் த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥

அந்த பண்டிதர் திருந்தி “என்ன பண்றது, எனக்கு வழி சொல்லுங்கோ” ன்னு கேட்டபோது கருணையினால் “குரு சரணாம்புஜத்தை பிடிச்சுக்கோ. உனக்கு உண்மைப் பொருள், ஆத்ம ஸ்வரூபம் விளங்கும்” அப்படீன்னு சொல்லி முடிக்கறார்.

இந்த பஜ கோவிந்தம் பத்தி சொன்ன உடனே, இன்னொரு விஷ்ணு ஸ்தோத்ரம் ஞாபகம் வர்றது.

விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு ஆதி சங்கர பகவத் பாதாள் பாஷ்யம் பண்ணியிருக்கார். அதுக்கு, ஒரு கதை சொல்வா. லைப்ரரியை சரஸ்வதி பண்டாரம்னு சொல்வா. “லைப்ரரில போயி நீ ஒரு புஸ்தகம் எடுத்துண்டு வா, சின்ன புஸ்தகமா ஒன்னு எடுத்துண்டு வா. அதுக்கு நான் பாஷ்யம் பண்றேன். அதுக்கு அப்புறம் பிரஸ்தான த்ரயத்துக்கு பாஷ்யம் பண்றேன்” அப்படீன்னு ஆச்சார்யாள் சொன்னாராம். ஒரு குழந்தை போயி எடுத்துண்டு வரான். அவன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை எடுத்துண்டு வரான். அவர் “லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் பண்ணலாம்னு ஆசை பட்டேன். இதை வெச்சுட்டு நீ லலிதா சஹஸ்ர நாமம் எடுத்துண்டு வா” ன்னு சொல்றார். அந்த குழந்தை உள்ள போறான். அங்க அம்பாளே ஒரு சின்ன பொண்ணாட்டம் வந்து “இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கே பாஷ்யம் பண்ண சொல்லு” அப்படீன்னு சொன்னாளாம். “அத்வைத பரம்பரையில் இன்னொரு மஹான் வந்து லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணுவார்”, அப்படீன்னு அம்பாள் சொன்னா, அப்படீம்பா. அது பாஸ்கர ராயர்ன்னு ஒரு மஹான். அவர் லலிதா சஹஸ்ரநாமம் பாஷ்யம் பண்ணியிருக்கார்.

ஆதி சங்கரர், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாஷ்யம் பண்ணியிருக்கார். அது ரொம்ப அழகா இருக்கும். ரொம்ப பக்தியோட பண்ணியிருக்கார். அதை பத்தி இன்னொரு இடத்துல நான் விவரமா பேசியிருக்கேன்.

இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தை பத்தி பேசும்போது  மஹா பெரியவா தெய்வத்தின் குரல்ல, பக்தி மூலமாவே ஞானத்தை அடையலாம் எங்கிறதை ஆதி சங்கரர் இந்த விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் emphasize பண்ணி சொல்லியிருக்கார். அதை நாம அவாளுடைய எல்லா பக்தி கிரந்தங்கள்லேயும் பார்க்கலாம், “பாலில் சக்கரை கலந்துட்டா கண்ணுக்கு தெரியாது. ருசியில் தான் தெரியும். அது போல பக்தியோடு ஞானத்தை கலந்து குடுப்பார்” அப்படின்னு சொல்லி நிறைய ஸ்லோகங்கள் quote பண்றார்.

நான் அதுல ஒரு மூணு ஸ்லோகங்களை எடுத்து உங்களுக்கு சொல்றேன்.

சிவானந்த லஹரில

अङ्कोलं निजबीजसन्ततिरयस्कान्तोपलं सूचिका

साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा पशुपतेः पादारविन्दद्वयं

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति बलात् सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம் நிஜ பீ3ஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா

ஸாத்4வீ நைஜ விபு4ம் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்து4ஸ்ஸரித்3 வல்லப4ம் |

ப்ராப்னோதீஹ யதா2 ததா2 பஶு-பதே: பாதா3ரவிந்த3-த்3வயம்

சேதோ-வ்ர்த்திருபேத்ய திஷ்ட2தி ஸதா3 ஸா ப4க்திரித்யுச்யதே ||

அப்படின்னு சொல்றார். அழிஞ்சில் மரம்ன்னு ஒண்ணு இருக்கு. அதோட விதை வந்து மரத்தின் கீழே விழுந்து, அப்படியே மெது மெதுவா magnet போல மரத்து பக்கத்துல போய் ஒட்டிண்டு, மரத்தோடவே ஐக்கியம் ஆயிடுமாம். அழிஞ்சில் மரத்தோட விதை, எப்படி, மரத்தோட போய் சேர்ந்துடறதோ, ‘அய:காந்தோ பலம் ஸூசிகா’, காந்த கல் கிட்ட எப்படி இரும்புஊசி போய் ஒட்டிக்கறதோ, ‘சாத்வி நைஜவிபும்’ ஒரு பதிவ்ருதை எப்படி தன்னுடைய கணவனை எப்படி நினைச்சிண்டே இருப்பாளோ, “லதா க்ஷிதிருஹம்” ஒரு கொடியானது எப்படி மரத்தை சுத்திக்கறதோ, ‘சிந்துஸ் ஸரித்வல்லபம்’ ஒரு நதியாது எப்படி போய் கடல்ல கலக்கறதோ, அந்த மாதிரி மனசு ஒரு தைல தாரை மாதிரி, பகவனோட, பரமேஸ்வரனோட சரணாரவிந்தங்களில் லயிச்சு நிக்கறதுக்கு பேர் தான் பக்தி அப்படின்னு சொல்றார். நதியானது எப்படி கடல்ல கலக்கறதோ அது போல என்றால், நதி கடலாகவே ஆயிடறது, அதுக்கப்பறம் நதிங்கிறதே இல்லை. அந்த மாதிரி நம்ம மனசு பகவான் கிட்ட பக்தி மூலமா, இரண்டற கலந்து அத்வைத ஞானம் ஏற்படும் அப்படீன்னு ஒரு அர்த்தம்.

சௌந்தர்ய லஹரில இன்னொரு ஒரு ஸ்லோகம், மஹா பெரியவாளே இதுக்கு word by word ரொம்ப அழகா அர்த்தம் சொல்லி இருக்கா, அந்த recordingகூட இருக்கு,

भवानि त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणा-

मिति स्तोतुं वाञ्छन् कथयति भवानि त्वमिति यः ।

तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीं

मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम् ॥

ப⁴வானி த்வம் தா³ஸே மயி விதர த்³ருʼஷ்டிம் ஸகருணா-

மிதி ஸ்தோதும் வாஞ்ச²ன் கத²யதி ப⁴வானி த்வமிதி ய: ।

ததை³வ த்வம் தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்

முகுந்த³ப்³ரஹ்மேந்த்³ரஸ்பு²டமகுடனீராஜிதபதா³ம் ॥

அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். ‘பவானித்வம்’ – ஹே பவானி, பவனுடைய மனைவியே, ‘தாஸே மயி’ அடிமையான என்னிடத்தில், ‘திருஷ்டிஸ் ஸகருணாம்’ கருணையான உன்னுடைய திருஷ்டியை, ‘விதர’ கொஞ்சம் செலுத்து, அப்படீன்னு வேண்டிக்கரதுக்கு ஒருத்தன் ‘பவானித்வம்’ அப்படீன்னு ஆரம்பிச்சானாம். இந்த ‘பவானித்வம்’ அப்படிங்கிற பதத்துக்கு ஸம்ஸ்க்ருதத்துல, “நான் நீயாகவே ஆக விரும்பிகிறேன்” அப்படீன்னு ஒரு அர்த்தம் இருக்கு. இந்த அர்த்தத்தை வெச்சுண்டு அம்பாள் அவனுக்கு நிஜ சாயுஜ்ய பதவியை, அத்வைத முக்தியே கொடுத்துட்டா, அம்பாள் தன் ஸ்வரூபமாவே அவனை ஆகிட்டா அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். “முகுந்த ப்ரம்மேந்த்ராதி” விஷ்ணு பிரம்மா முதலிய தேவர்கள் எல்லாம் விரும்பும் அந்த பதவியே நீ கொடுத்துட்டியே அப்படீன்னு ஸ்லோகம்.

பவானி த்வம் தாசே – மஹா பெரியவா விளக்கம் https://www.youtube.com/watch?v=ZNMfgnHTBU8

அதே மாதிரி லக்ஷ்மி ந்ருஸிம்ம பஞ்சரத்னம்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. அதுல first ஸ்லோகத்துல

त्वत्प्रभुजीवप्रियमिच्छसि चेन्नरहरिपूजां कुरु सततं

प्रतिबिम्बालंकृतिधृतिकुशलो बिम्बालंकृतिमातनुते ।

चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां

भज भज लक्ष्मीनरसिंहानघपदसरसिजमकरन्दम् ॥

த்வத்ப்ரபு⁴ஜீவப்ரியமிச்ச²ஸி சேன்னரஹரிபூஜாம் குரு ஸததம்

ப்ரதிபி³ம்பா³லங்க்ருʼதித்⁴ருʼதிகுஶலோ பி³ம்பா³லங்க்ருʼதிமாதனுதே ।

சேதோப்⁴ருʼங்க³ ப்⁴ரமஸி வ்ருʼதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்

ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் ॥

அப்படீன்னு ஒரு  ஸ்லோகம். ஒருத்தன் வந்து கண்ணாடில தன்னை பார்க்கறான். அவன் முகத்துல வந்து திலகம் இல்லை, விபூதி இல்லை அப்படீன்னா, அழகு படுத்திக்கறதுக்கு அந்த கண்ணாடி மேலயா கொண்டு போய் அந்த திலகத்தை பூசுவா? தன் நெற்றியில தானே இட்டுப்பா. அந்த மாதிரி, உனக்கு பிரபுத்வம், செல்வம், நல்ல வாழ்க்கை எல்லாம் வேணும்னா, நீ நரஹரி அதவாது நரசிம்ம ஸ்வாமியை பூஜை பண்ணு. அந்த நரசிம்ம ஸ்வாமியோட ப்ரதிபிம்பம்தான் இந்த உலகத்துல உள்ள எல்லாமே, அதனால நீ பகவானை ஸ்தோத்திரம் பண்ணி, அவருக்கு பூஜை பண்ணினியானா உனக்கு இங்க செல்வமும் பதவியும் எல்லாம் கிடைக்கும், ஒரு கண்ணாடிக்கு பண்ற மாதிரி உன்னுடைய உடம்புக்கு, உன்னுடைய சௌக்கியத்துக்காக பாடுபட்டுண்டு இருக்காதே. பகவானோட பஜனத்தை பண்ணினா அதுக்கு reflection மாதிரி, உனக்கு எல்லாம் தானா கிடைக்கும், அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம்.

அதே மாதிரி இந்த பக்தி மூலமா ஞானம்ங்கிறதுக்கு தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் இருக்கு

देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः

स्त्रीबालान्धजडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः ।

मायाशक्तिविलासकल्पितमहा व्यामोहसंहारिणे

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥

தே³ஹம் ப்ராணமபீந்த்³ரியாண்யபி சலாம் பு³த்³தி⁴ம் ச ஶூன்யம் விது:³

ஸ்த்ரீபா³லாந்த⁴ஜடோ³பமாஸ்த்வஹமிதி ப்⁴ராந்தா ப்⁴ருʼஶம் வாதி³ன: ।

மாயாஶக்திவிலாஸகல்பிதமஹா வ்யாமோஹஸம்ஹாரிணே

தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம் ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥

அப்படீன்னு மாயசக்தி விலாசத்தால் ஏற்படும் மோஹத்தை போக்கக் கூடியவர் தக்ஷிணாமூர்த்தி தான். அவருக்கு நமஸ்காரம் பண்ணாலே ஞானம் கிடைக்கும், அப்படின்னு சொல்றார்.

இப்படி காசியில ஆதி சங்கர பகவத் பாதாள் இருக்கும் போது, ஒரு நாள் அவர் ஸ்நானம் பண்றதுக்கு போறார், எதிர்ல ஒரு சண்டாளன் நாலு நாய்களை பிடிச்சிண்டு வரான். சங்கரர் அப்போ “கொஞ்சம் விலகு” ன்னு சொல்றார். அந்த சண்டாளன் சொல்றான் “சாமி  நீ அத்வைதம் பாடம் சொல்றியே, நீ இந்த உடம்பை விலக சொல்றியா, உள்ள இருக்க ஆத்மாவை விலக சொல்றியா. உடம்பை சொல்றியானா எல்லா உடம்பும் மலபாண்டம் தானே! ஆத்மாவை சொல்றியானா, சூரிய ஒளி எல்லா ஜலத்துலேயும் பிரதிபலிக்கிறது. ஆனாலும் எல்லாமே சூரியன் தானே, அது எப்படி விலக முடியும்” அப்படீன்னு கேட்கறான்.

இந்த வார்த்தைகளை அந்த பஞ்சமன் சொன்ன போது, ஆதி சங்கரர், “எவனுக்கு இப்பேற்பட்ட ஞானம் இருக்கோ, தான் ஆத்மாங்கிற ஞானம் இருக்கோ, அவன் யாராயிருந்தாலும் ப்ராம்மணனாக இருந்தாலும், சண்டாளனா இருந்தாலும் அவன்தான் எனக்கு குரு, இது தான் என்னோட தீர்மானம்”, அப்டீன்னு சொல்லி, அஞ்சு ஸ்லோகம் சொல்லி அவனை நமஸ்காரம் பண்றார். வந்து இருக்கறது விஸ்வநாத ஸ்வாமி தான். நாலு வேதங்களையும் நாலு நாய்களா பிடிச்சிண்டு வந்து இருக்கார். அவர் காட்சி கொடுத்து ஆதி சங்கரருக்கு  அனுக்கிரஹம் பண்றார்.

जाग्रत्स्वप्नसुषुप्तिषु स्फुटतरा या संविदुज्जृम्भते

या ब्रह्मादिपिपीलिकान्ततनुषु प्रोता जगत्साक्षिणी .

सैवाहं न च दृश्यवस्त्विति दृढप्रज्ञापि यस्यास्ति चे-

च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम

ஜாக்ரத்ஸ்வப்நஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ஜம்பதெ

யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததநுஷு ப்ரொதா ஜகத்ஸாக்ஷிணீ |

ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்

சண்டாலோஸ்து ஸ து த்விஜொஸ்து குருரித்யெஷா மநீஷா மம ||

இது தான் என்னோட தீர்மானம். யாருக்கு ஞானம் இருக்கோ அவா தான் என் குரு அப்படீன்னு சொல்லி நமஸ்கராம் பண்றார்.

மஹா பெரியவா ஒரு warning பண்றா, இந்த காலத்துல reformers, எல்லாத்தையும் கலந்து கட்டி சமூகத்தை deform பண்ற மாதிரி சங்கரர் சொல்லலை. இப்பேற்பட்ட ஞானம் இருக்குறவனுக்கு நான் நமஸ்காரம் பண்றேன் சொல்றார். அந்த மாதிரி அப்பர் போன்ற அடியவர்கள், யாருக்கு சிவ நாமத்துல பக்தி இருக்கோ, அவா யாராக இருந்தாலும் எனக்கு அவா குரு அப்படீன்னு நமஸ்காரம் பண்றேன், அப்படீன்னு சொல்வார், அந்த பாவத்துல சொல்லி இருக்கார்.

காலபைரவர் காசியில இருக்கார், அவர் மேல ரொம்ப அழகான மெட்டுல ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கார்

देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् ।

नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥

தே³வராஜஸேவ்யமானபாவநாங்க்⁴ரிபங்கஜம்

வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து³ஶேக²ரம் க்ருʼபாகரம் ।

நாரதா³தி³யோகி³வ்ருʼந்த³வந்தி³தம் தி³க³ம்ப³ரம்

காஶிகாபுராதி⁴னாத²காலபை⁴ரவம் ப⁴ஜே ॥

அப்படீன்னு ஒரு எட்டு ஸ்லோகங்கள்,

धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशनं  कर्मपाशमोचकं सुशर्मधायकं विभुम् ।

स्वर्णवर्णकेषपाशशोभितांगनिर्मलं  काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥

த⁴ர்மஸேதுபாலகம் த்வத⁴ர்மமார்க³ நாஶகம்

கர்மபாஶமோசகம் ஸுஶர்மதா⁴யகம் விபு⁴ம் ।

ஸ்வர்ணவர்ண கேஶபாஶ ஶோபி⁴தாங்க³ நிர்மலம்

காஶிகாபுராதி⁴னாத²காலபை⁴ரவம் ப⁴ஜே ॥

அப்படீன்னு இந்த மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு அதுல.

कालभैरवाष्टकं पठंति ये मनोहरं

ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।

शोकमोह लोभदैन्य कोपतापनाशनं

ते प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं ध्रुवम् ॥

 

காலபை⁴ரவாஷ்டகம் பட²ந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்திஸாத⁴னம் விசித்ரபுண்யவர்த⁴னம் ।

ஶோகமோஹலோப⁴தை³ன்ய கோபதாபனாஶனம்

தே ப்ரயாந்தி காலபை⁴ரவாங்க்⁴ரிஸன்னிதி⁴ம் த்⁴ருவம் ॥

அப்படீன்னு பலஸ்ருதி சொல்லியிருக்கார், அவர்கள் “கோப, சோக, லோப, தைன்ய நாஷனம்” கோபம், சோகம், லோபம் எல்லாம் போய்டும், இந்த மெட்ல ஒரு ஸ்லோகத்தை படிச்சாலே , கோபம் எல்லாம் போய் மனசு உல்லாசமா ஆயிடறது, அவளோ அழகான ஒரு ஸ்லோகம். இப்படி காசி வாசத்துல ஆதி சங்கரர் பண்ணின ஆச்சர்யமான கார்யங்கள் எல்லாம் பார்த்தோம்.

அடுத்தது ஆதி சங்கரர் குமாரிலபட்டர்னு ஒரு மஹானை தர்சனம் பண்ணிட்டு, அப்பறம் மாஹிஷ்மதிங்கற ஊர்ல போய், மண்டனமிஸ்ரர் அப்படிங்கிற ஒரு பண்டிதரை பார்த்து அவரை வேதாந்தத்துக்கு திருப்ப போறார், அதெல்லாம் நாளைக்கு பாப்போம்.

பக்தி மூலம் ஞானம் (13 min audio in tamil. same as the script above)

கோவிந்த நாம சங்கீர்த்தனம்…கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரைஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா >>
Share

Comments (1)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.