Categories
Bala Kandam

அயோத்யா நகர மாந்தர்கள் பெருமை

7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.

[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி] (audio file. transcript given below)

வால்மீகி முனிவர் இயற்றிய, இராமாயணத்தை, லவ, குசர்கள், ராம, லக்ஷ்மண, பாரத, சத்ருக்னர்களுக்கு, அஸ்வமேத மஹா மண்டபத்துல, சொல்ல ஆரம்பிச்சா.

கோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு நதி தீரத்துல, அயோத்தியா, என்ற ஒரு நகரம் மனுவினால், நிர்மாணிக்கப் பட்டது. மனுவோட, காலத்துல இருந்து, இக்ஷ்வாகு குலத்துல, தசரதர், வரைக்கும், எல்லா ராஜாக்களும், அயோத்தியை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தா. பன்னிரண்டு, யோஜனை நீளமும், மூன்று யோஜனை அகலமும், கொண்டதாக, அந்த நகரம் இருந்தது, அப்படீன்னு சொல்றார். ஒரு யோஜனைங்கிறது, பத்து மைல்னு, சொல்வா. அகழி, கோட்டைகள், பீரங்கிகள் எல்லாம் வெச்சு அந்த நகரம், காப்பாற்றப் பட்டு வந்தது. அயோத்யாங்கிறதே, யுத்தத்தினால ஜயிக்க முடியாத நகரம் என்று அர்த்தம். அப்படி ரத கஜ துரக பதாதிகள் எல்லாம் வெச்சுண்டு, அந்த நகரத்தையும், தேசத்தையும், தசரத மஹாராஜா, ஆண்டு வந்தார்.

அங்கு, நாடக சாலைகளும், பெரிய பெரிய, எட்டு மாடி, பத்து மாடி கட்டிடங்களும், தங்கத்துனாலயும், பலவிதமான, நவரத்தினங்களாலும், கட்டப்பட்ட மாளிகைகளும், பெரிய ராஜவீதிகளும், நிறைய கடைகளும் இருந்தன. இந்த ராஜ வீதியெல்லாம், ஜலம், தெளிச்சு, கோலம் போட்டு, பூவெல்லாம் தூவி, வாசனை தூபங்கள், சந்தனக் கட்டை எல்லாம் ஏத்தி வாசனையா, இருந்தது. அப்படி செல்வ செழிப்பா அந்த அயோத்யா நகரம் இருந்தது. ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, யானைகள், இருந்தது. வெவ்வேறு ஜாதி யானைகள் எல்லாம் சொல்றா. இந்த மாதிரி, யானைகள், அந்த குதிரைகள், ரதங்கள் எல்லாம் தசரதர் நகரில் இருந்தன.

தசரதர்னா, பத்து திக்குகள்லயும், யாரும் தடுக்க முடியாத அளவு ரதத்தை ஒட்டிண்டு போவார். நாலு திக்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, அது ரெண்டும், சேரற திக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, அந்த நாலு, அப்புறம், ஆகாசத்துலயும், பாதாளத்துலயும், இப்படி பத்து திக்குலயும், ரதத்தை ஓட்டக் கூடிய திறமை, இருந்தது, தசரதருக்கு. அவர் அந்த தேசத்தை, ஆண்டுண்டு வந்தார்.

அந்த ஜனங்களோட, குணத்தை எல்லாம், அடுத்து வர்ணிக்கறார். அவாள்லாம் வந்து, மகரிஷிகள், மாதிரி, இருந்தா, அப்படீன்னு, சொல்றா. புலனடக்கதோட, இருந்தா. சத்திய சந்தாளாக, தர்மத்துல, “ஸர்வே தர்மம், ஸத்யம் ச சம்ஸ்ரிதா:” அப்படீன்னு, அடிக்கடி, ராமாயணத்துல சத்தியத்தையும், தர்மத்தையும், கெட்டியா பிடிச்சுண்டு, இருந்தா, அப்படீன்னு, வர்றது. “இப்படி, வரிக்கு வரி, சத்தியம், தர்மம், னு வந்தா, இந்த புஸ்தகத்தை, படிக்கும்போது, தானா அதை, assert பண்ணும். நம்ம மனசுல, அது பதியும்” அப்படீன்னு சொல்வார். அந்த ஜனங்கள் எல்லாம், தன்னோட சொத்துலேயே, தன்னுடைய, பணத்துலேயே த்ருப்தர்களாக இருந்தா. பிறர் பொருளுக்கு ஆசை படவில்லை. யார் ஒருத்தனும், அழுக்காவோ, சின்ன புத்தி, உடையவனோ, யாருமே, அந்த ஊரில கிடையாது. எல்லாரும், குளிச்சு, நன்னா அலங்காரம் பண்ணிண்டு, நல்ல துணியெல்லாம்,உடுத்திண்டு, தலையில கிரீடம், தோள்வளைகள், கையில கங்கணங்கள், கால்ல இடுப்புல, எல்லாம், தங்க ஆபரணங்கள், எல்லாம் அணிஞ்சுண்டு இருந்தா.எல்லார் ஆத்துலயும் கொட்டில்ல நிறைய, பசுக்களும், யானைகளும், குதிரைகளும், தான தான்ய, கோசங்களும், எல்லாருக்கும் இருந்தது.

எல்லாரும் தர்மத்தையும், சத்தியத்தையும், பிடிச்சுண்டு இருந்ததுனால, தீர்க்காயுசாகயும், சந்தோஷமாகவும், பிள்ளை, குட்டிகளோட, இருந்தா. நிறைய தானம் பண்ணுவா. பிராம்மணர்கள், எல்லாம்

தன்னுடைய தர்மத்துலயே, பிடித்தமாய், அவா அதே பண்ணிண்டு இருந்தா.  “ஜிதேந்தரியஹா” இந்திரியங்களை, ஜயித்தவர்களாய், இருந்தா. நிறைய, தானம், அத்யயனம், இந்த குணங்கள், எல்லாம், அவாகிட்ட இருந்தது. நாஸ்திகனாகவோ, படிப்பில்லாதவனாகவோ, யாருமே இருக்கவில்லை. எல்லா ஜனங்களும் வித்வான்களா இருந்தா. அவாளுக்கு, சிஷ்யர்கள்லாம், இருந்தா. எல்லா, ஜனங்களும் சத்தியத்தை, கடைபிடிச்சா. இந்த தேசத்துக்கே சத்யநாமான்னு, இந்த அயோத்திக்கு, ஒரு பேர் இருந்தது.

இப்பேற்பட்ட, அந்த அயோத்தியில, தசரதர்,” ப்ரஜானாம் பாலனம் குர்வன் அதர்மம் பரிவர்ஜயன்” அதர்மம், கலக்காத விதத்தில், அந்த தேசத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு, வந்தார்.

அது எப்படீன்ன, அவருக்கு, எட்டு மந்திரிகள், இருந்தா. “த்ருஷ்டிர், ஜயந்தோ, விஜய:, சித்தார்த:,அர்த்தசாதக:, அசோக:, மந்திரபாலச்ச, சுமந்திர:”, இப்படி எட்டு பேர், அவருக்கு மந்திரிகள் இருந்தா. இந்த மந்திரிகள், எல்லாம், நன்னா படிச்சவாளா, ராஜசாஸ்திரம், தெரிஞ்சவாளா, பணம் இருக்கறவா கிட்ட இருந்து வலிக்காம, வரி வாங்கி, பணம், இல்லாதவாள, ஸ்ரமம் படுத்தாம, தப்பு பண்ணவாளுக்கு, கடுமையான தண்டனை கொடுத்து, குற்றங்களே இல்லாமல், பார்த்துக்கறது. தன்னோட பிள்ளையா இருந்தா கூட, தப்பு பண்ணிணவன்னா punishment குடுக்கறறது, குற்றத்துக்கு தண்டனை கொடுக்கறது. நிரபராதியா இருந்து, ஏழையா இருந்தா கூட, நிரபரதின்னா அவனுக்கு, எந்த ஆபத்தும் இல்லாம, பார்த்துக்கறது. இப்படி எல்லாம், அவா அந்த ராஜசாஸ்திரங்கள் எல்லாம் follow பண்ணினா. இப்படி இவாளோட பெருமை வந்து, வெளிதேசங்கள் எல்லாம், “தசரதரோட மந்திரிகளா!”, அப்படீன்னு அவாளை கொண்டாடுவா. அவாளுக்கு பல பாஷைகள் தெரிஞ்சு இருந்தது. இப்படி அவாளோட குணத்தை எல்லாம் சொல்றா. வேதம் படிச்சவாளா இருந்தா.

அது தவிர, தசரதரோட சபையை, எட்டு பிரம்மரிஷிகள், அலங்கரித்தார்கள். ஸுயக்ஞ:, ஜாபாலி:, காச்யப:, மார்கண்டேய:, தீர்க்காயு:, காத்யாயன:, வசிஷ்ட:, வாமதேவ:, வசிஷ்டரும், வாமதேவரும் முதலான, எட்டு ரிஷிகள், அவருக்கு, ப்ரோஹிர்களாக இருந்தா. இப்பேற்பட்ட ரிஷிகளையும், மாதிரிகளையும், முன்னிட்டுக் கொண்டு, தசரதர் ஆண்டு வந்ததுனால, அவர், தேவலோகத்தை இந்திரன் ஆளுவதற்கு மேல, இந்த கோசல தேசத்தை, தசரத மன்னர், ஆண்டு வந்தார். யாருக்கும், ஒரு குறையும் இல்லை. ஆனா தசரத மஹாராஜாவுக்கு, ஒரு குறை இருந்தது, அப்படீன்னு சொல்றா, அது என்ன? அது அடுத்து.

Series Navigation<< வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.