Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் குளிர் நிலவு


கடாக்ஷ சதகம் 21வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் குளிர் நிலவு

पीयूषवर्षशिशिरा स्फुटदुत्पलश्री-
मैत्री निसर्गमधुरा कृततारकाप्तिः ।
कामाक्षि संश्रितवती वपुरष्टमूर्तेः
ज्योत्स्नायते भगवति त्वदपाङ्गमाला ॥

6 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் குளிர் நிலவு”

மிகவும் அழகான ஸ்லோகம். அம்பாளுடைய கடாக்ஷம் எப்பொழுதும் அஷ்டமூர்த்தியாக இருக்கின்ற பரமசிவன் மேலேயே இருக்கிறது என்பதை கவித்துவத்துடன் வர்ணிக்கிறார் மூககவி. 🙏🌸

நிலவொளியைக் காட்டிலும் அம்பாளுடைய கடாக்ஷம் மேன்மையானது என்று காட்டவே அம்பாளை பகவதி என்கிறார் போலும். எல்லா பகங்களும் (சிறப்புகளும்) எவரிடம் நிறைந்திருக்கிறதோ, அவரே ‘பகவான்’; பெண் பாலானால், ‘பகவதி’. அப்படிப்பட்ட காமாக்ஷியின் கடாக்ஷம், அமிர்தம் போல் எப்பொழுதும் பரமசிவன் மேலேயே இருப்பதால்தான், அவர் ஆலகால விஷம் உண்டும் கூட அவரை விஷம் பாதிக்காமல் ரக்ஷித்தது🙏🌸

ஆர்யா சதகத்தில் எப்படி பரமேஸ்வரனுக்கு அம்பாள் அம்ருதமாக காட்சி கொடுக்கிறாள் என்பதை மேற்கோள் காட்டி, கூடவே ராமர் சீதை எப்படி இருந்தார்கள் என்பதை விளக்கி, கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியது மிக அருமை 👌🙏🌸

ஸ்வாமிகள் கடாக்ஷம்(காமாக்ஷி கடாக்ஷம் போல்), மஹா பெரியவா(அஷ்ட மூர்த்தி) மேலேயே இருந்தது. பெரியவா சொன்னதையே வேத வாக்காக கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் முன்னிருத்தி வாழ்ந்து காட்டி இருக்கார். பஜனத்தையே குறிக்கோளாக கொண்டு, தன் சிஷ்யர்களுக்கும் உபதேசித்திருக்கிறார் ஸ்வாமிகளிடம் ப்ரார்த்தனை செய்தால், நாமும் அந்த பஜனத்தை விடாமல் பண்ணி கொண்டிருப்போம். 🙏🙏🙏🙏

ஜககாமாக்ஷி அம்பாள் கடாக்ஷம் எப்படிப்பட்டது? அந்த மழையால் குளிர்ந்தது! அன்றலர்ந்த அல்லிப்பூவின் அழகுடன், நட்பும் கொண்டது! நக்ஷத்ர மண்டலம் வரை சென்று நிலாவுடன் நட்பு கொண்டது! சிவனுடன் லயித்திருப்பதால் , சிவனுடைய அஷ்ட மூத்திகளின் மீதும் நன்றாகப் பொருந்தி பிரகாசிக்கும் தன்மையது! அவளது கடைக் கன் பார்வை இயல்பாகவே குளுமை உடையதால் எங்கும் குளுமையே வியாபிக்கச் செய்வதாய் உள்ளது!
காமாக்ஷிவர்ணனையாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகம் எப்படி ராம சீதக்கும் அமைகிரார்போல் வர்ணித்திருப்பதுஇயல்பாக இங்கு
கொண்டு வரப்பட்டது சிறப்பு!

கணவன் மனைவி இடையே மலரும்.அன்பு இயல்பாக இங்கு கொண்டு வரப்பட்டு எப்படிதாம்பத்யம் இருக்க வேண்டும் என்பதை தேர்ந்த
சொற்களால் சிறப்புடன் வர்ணிக்கப்பட்டு இருக்கிறது சிறப்பமசம் !
அத்துடன் தரணி மயீம் ஸ்லோகத்தில் விளக்கம் பெரியவாளை சம்பந்தப் படுத்தி ச் சொன்னது அருமை !
ஸ்வாமிகள் எப்படி பெரியவாளிடம் full.focussed பக்தி பண்ணினா என்ற இடம் அருமை ,!
எல்லார் குடும்பத்திலும் அமைதி நிலவ கணவன் மனைவி அன்பு நிலைத்திருக்க இந்த ஸ்லோகம் பாராயணம்.பண்ணி பயனடையலாம் அல்லவா?
பெரியவா சரணம், ஜய ஜய ஜஹாதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.