சீதையும் ராமரோடு கிளம்பினாள்

61. ராமர் சீதையின் பிரிவுத் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் வரும்போது சீதை, ‘ஏன் உங்கள் முகத்தில் என்றும் இல்லாத வாட்டம்?’ என்று கேட்கிறாள். ராமர் ‘மதிப்பிற்குரிய தந்தையார் என்னை வனவாசம் போகும்படி ஆணை இட்டுள்ளார். நீ என் பெற்றோரை தினமும் வணங்கி, அவர்களுக்கு பணிவிடை செய்து, பரத சத்ருகனர்களிடம் அன்பு பாராட்டி, விரதங்களை கடைபிடித்து எளிமையாக வாழ்ந்து வா’ என்று அறிவுரை கூறுகிறார்.
[ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

62. சீதை ராமரிடம் ‘உங்களை காட்டிற்கு போகச் சொன்னால் அது என்னையும் சொன்னது போல தான். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டு. என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘வனம் என்பது ஆபத்தான இடம். வனவாசம் மிகவும் கஷ்டமானது’ என்று கூறும் போது சீதை, ‘உங்களோடு இருந்தால் எனக்கு எதுவும் கஷ்டமில்லை. எனக்கு உங்கள் அன்பு ஒன்றே போதும்’ என்று கூறுகிறாள்.
[சீதாதேவியின் வேண்டுகோள்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

63. ராமர் அனுமதி தரத் தயங்கவே, சீதை ‘உங்களோடு இருப்பதே எனக்கு சொர்க்கம். நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம். நீங்கள் என்னை இங்கே விட்டுச் சென்றால் நான் உயிரை விட்டு விடுவேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘அம்மா அப்பா குரு மூவரும் கண்கண்ட தெய்வம். அப்பா குடுத்த வாக்கை காப்பற்ற நான் வனம் செல்கிறேன். அந்த தர்மத்தில் துணையாக நீயும் என்னோடு வா’ என்று அனுமதி அளிக்கிறார்.
[அம்மா அப்பா குரு மகிமை]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

64. சீதையோடு ராமர் வனம் போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்து லக்ஷ்மணர் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீ இங்கிருந்து என் அம்மாவையும் உன் அம்மாவையும் பார்த்துக் கொள்’ என்று சொல்கிறார். லக்ஷ்மணர்  ‘பரதன் அவர்களைப் பார்த்துக் கொள்வான். நான் வனவாசத்தில் இரவும் பகலும் உங்களுக்கு உதவி செய்வேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராமர் மகிழ்ந்து லக்ஷ்மணர் தன்னுடன் வர அனுமதி அளிக்கிறார். பிறகு லக்ஷ்மணர், ராமர் உத்தரவின்படி ஆச்சார்யரின் வீட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து வருகிறார். 
[லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *