வால்மீகி ராமாயண பாராயணத்தின் முடிவில் சொல்லப்படும் மங்கள ச்லோகங்கள் (மங்கள ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்).
Series: பாலகாண்டம்

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.
ஸங்க்ஷேப ராமாயணம்
4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.
வால்மீகி ராமாயணம் பிறந்த கதை
5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.
அயோத்யா நகர மாந்தர்கள் பெருமை
7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.
[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி] (audio file. transcript given below)
தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு
8. தசரதர் பிள்ளை வரம் வேண்டி, ஒரு அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்து, அதை தன் புரோஹிதர்களிடம் சொல்லுகிறார். அவர்களும் அதை ஆமோதித்து யாகம் நடத்த உத்தரவு அளிக்கிறார்கள்.
தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு (audio file. Transcript given below)