Categories
Bala Kandam

ஸங்க்ஷேப ராமாயணம்

4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.

ஸங்க்ஷேப  ராமாயணம் (Audio file. Transcript given below)

तपः स्वाध्याय निरताम् तपस्वी वाग्विदाम् वरम् |

नारदम् परिपप्रच्छ वाल्मीकिः मुनि पुंगवम् || १-१-१

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக்விதாம் வரம் /

நாரதம் பரிப்ரக்ஷூச்சா வால்மீகி முனி புங்கவம் //

இது வால்மீகி இராமாயணத்தின் முதல் ஸ்லோகம்.

‘தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த நாரத மகரிஷியிடம், வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

அதாவது, பகவான் வந்து ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து பூமியில் தருமத்தை நிலை நாட்டிய பின்னே, இன்னும் பின்னே யுகங்களில் வருபவர்களும் கடைத்தேறுவதற்காக, வால்மீகி மகரிஷி மூலமாக இந்த இராமாயணம் வெளிவர வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.

இதற்கு அந்த வால்மீகி முனிவர் செய்த தபஸென்ன? புற்று மூடும்படியாக ‘ராம’ நாம ஜபம் செய்தது தான் அந்த தபஸு.

அந்த வால்மீகி பகவானுக்கு ஒரு குருமுகமாக இந்த ராமச்சரித்திரத்தை உபதேசம் செய்யப்பட்டு, பின் அவர் மூலமாக, வால்மீகி ராமாயணமாக வரவேண்டும் என்று, நாரத மகரிஷி இங்கே வருகிறார்.

அப்போது வால்மீகி பகவான் கேட்கிறார்…

को नु अस्मिन् सांप्रतम् लोके गुणवान् कः च वीर्यवान् |

धर्मज्ञः च कृतज्ञः च सत्य वाक्यो धृढ व्रतः || १-१-२

चारित्रेण च को युक्तः सर्व भूतेषु को हितः |

विद्वान् कः कः समर्थः च कः च एक प्रिय दर्शनः || १-१-३

आत्मवान् को जित क्रोधो द्युतिमान् कः अनसूयकः |

कस्य बिभ्यति देवाः च जात रोषस्य संयुगे || १-१-४

கோ னு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |

தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |

வித்வான் க: க: சமர்தஸ்ச:   ஏக பிரிய தர்சன: ||

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: ||

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்

சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்

குணவான் வீர்யவான் |

தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |

வித்வான் க: க: சமர்தஸ்ச:   ஏக பிரிய தர்சன: ||

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: ||

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||

இப்படி ஒரே மனுஷரிடத்தில் இத்தனை குணங்களும் இருக்கணும், என்று எல்லாத்தையும் வால்மீகி பகவான் கூறுகிறார்.

“குனவானாய் இருக்கணும், வீர்யவானாய் இருக்கணும், தர்மஞ்ஜயனாய் இருக்கணும், க்ரித ஞனாய் இருக்கணும், சத்தியத்தை கடைபிடிப்பவனாய் இருக்கணும், வித்வானாய் இருக்கணும், அவருக்கு கோவம் வந்தால் தேவர்கள்கூட பயப்படனும். இப்படி குணங்கெல்லாம் கொண்ட ஒருவரை நீங்கள் பார்த்ததுண்டா?”, என்று வால்மீகி பகவான், நாரத மகரிஷியைப் பார்த்து கேட்கிறார். விஸ்தாரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக open-ended-ஆக கேட்கிறார்.

நாரத மகரிஷிக்கு சொல்லப்பட்ட நான்கு அடைமொழிகளும், ஒரு குருவானவர் எப்படி இருக்கவேண்டும், அவருக்கான லக்ஷணங்களகும் என்ன என்பதை காட்டுகிறது.

‘தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.

‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.

‘வாக் விதாம்வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிகொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.

‘முனிபுங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனிபுங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

இந்த அடைமொழிகளை பார்க்கும் போது, எனக்கு என் சத்குருநாதரான ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஞாபகம் வருகிறது. அவருக்கு இது நான்கும் அப்படியே பொருந்தும்.

‘தபோ நிரதம்’ – தன வாழ்நாள் முழுதும் எத்தனையோ தபஸ் செய்திருக்கின்றார். 108 ஆவர்த்தி சுந்தர காண்ட பாராயணம் இரவு பகலாக செய்திருக்கிறார். பொரி மட்டும் சாப்பிட்டுக் கொண்டு குருவாயூரில் பாகவத சப்தாகம் செய்திருக்கிறார். இப்படி கணக்கில்லாமல் தபஸ் செய்தவர்.

‘ஸ்வாத்யாய நிரதம்’ – இது, இரண்டு விதத்தில் அவருக்கு பொருந்தும். அவர் யஜுர் வேதத்தை அத்யயனம் செய்தவர். தினம் ப்ரஹ்ம யக்ஞம் பண்ணி வேதத்தை சொல்லிக் கொண்டிருப்பார்.   வேதமே இராமா யணமாய் வந்தது என்று பார்த்தோமல்லவா? அந்த இராமாயணத்தையும், பாகவதத்தையும் படிப்பதிலேயும், எடுத்துச் சொல்லுவதிலேயும் அவ்வளவு சந்தோஷம் அவருக்கு.

‘வாக் விதாம்வரம்’ – பகவானைப் பற்றி பேசுவது தான் வாக்கென்றால், அது ஸ்வாமிகளுக்கு மிகவும் பொருந்தும்.  அப்படி அவர் சொல்லுவதை மகாபெரியவா போன்ற மகான்களே விரும்பிக் கேட்பாரென்றால் அதற்கு மேல் வேறென்ன சொல்ல வேண்டும். மகாபெரியவா தான் எங்கேயிருந்தாலும் அங்கே வரவழைத்து கோகுலாஷ்டமி அன்று பூர்த்தியாகும்படி சப்தாகம் செய்யச் சொல்லுவார்கள். பாராயணத்தையும் மணிக் கணக்கா உட்கார்ந்து கேட்பார். சாயங்காலம், ப்ரவச்சனத்தையும் உட்கார்ந்து கேட்பார்.

“ஆஹா! ஹா! மஹாப்ரபோ! என்னமா இருக்கு இந்த விஷேஷார்தம்! மலை போன்ற கார்யம். பாகவதருக்குத்தான் சிரமம். நமக்கெல்லாம் பேரானந்தம். படனம் மதுரம். ப்ரவசனம் மதுரதரம்”, என்றெல்லாம் மகாபெரியவா கொண்டாடியிருக்கிறார். அப்படி ஸ்வாமிகள், இராமாயண, பாகவததிற்காகவே தன வாழ்கையை அர்பணித்தவர்.

‘முனிபுங்கவம்’ – ‘பகவானைப் பற்றி பேசினால், மௌன விரதத்திற்கு கூட பங்கமில்லை’, என்பார்கள். அப்படி பகவானைப் பற்றி மட்டுமே இவர் பேசிக்கொண்டிருந்தார். வேறு உலக விஷயங்களை பேசியதே இல்லை. அதனால், வாழ்க்கை முழுதும் இவர் மௌன விரதமாய்தான் இருந்தார் என்று தோன்றுகிறது. அதனால், முனிபுங்கவம் என்பதுவும் ஸ்வாமிகளுக்கு பொருந்தும்.

அப்படிப்பட்ட ஒரு சத்குருவிடம் வால்மீகி இந்த கேள்விகளை போட்டுகிறார், “மகரிஷே! தும் சமர்தோஸி… நீங்கள் த்ரிலோக சஞ்சாரி. உங்களுக்கு தான் தெரியும். நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்.” இப்படியாக அவரிடம் வேண்டி கொள்கிறார்.

அதைக் கேட்டவுடன் நாரத மகரிஷி வெகு சந்தோஷமாகி, “ஆஹா! பஹவோ துர்லபாஸ்சைவ ன்னு…இது மாதிரி பல குணங்கள் ஒரே இடத்தில் இருப்பது ரொம்ப துர்லபம். ஆனால், அப்படி ஒரு புருஷர் இருக்கிறார். இக்ஷ்வாகு வம்ஸத்தில் பிறந்து, ராமர் என்ற நாமத்துடன் உள்ளவர்”, என்று ஆரம்பித்து, ஸ்ரீ ராமர் பிறந்ததும், ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள்   விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு போனதும்,  ஸீதா விவாகம், கைகேயி வரம் கேட்டது, ஸ்ரீ ராமர் ஜானகியோடும், லக்ஷ்மணரோடும்  காட்டுக்கு போனது, பரதர் வந்து பாதுகையை வாங்கிக் கொண்டு போய் பாதுகா பட்டாபிஷேகம் செய்ததும், ஸீதா அபஹரணம், சுக்ரீவ சகயம், வாலி வதம், ஹனுமார் கடல் தாண்டி போய் ஸீதாதேவியைப் பார்த்து அங்குலியம் கொடுத்தது, சீதாதேவியிடம் இருந்து சூடாமணியை வாங்கி வந்து ஸ்ரீ ராமரிடம் கொடுத்தது, ஸ்ரீ ராம ராவண யுத்தம், ராவண வதம், ஸ்ரீ ராமர் ஸீதாதேவியை மீட்டு அயோத்யாவிற்கு வந்து, ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் முடிய எல்லா நிகழ்ச்சிகளையும் நாரத பகவான் நூறு ஸ்லோகங்களில் வால்மீகி பகவானுக்கு சொல்லுகிறார்.

இதுதான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் முதல் ஸர்கம். இதற்கு “ஸங்க்ஷேப ராமாயணம்” என்று பெயர்.

இந்த ஸங்க்ஷேப ராமாயணத்தை படிப்பதே மகா புணியம். இதைப் படிப்பதால் அஸ்வமேக யாகத்தின் பலன் என்று ஸ்வாமிகள் சொல்லுவார். தினம் இதைப் படித்துக் கொண்டிருந்தால் ஞானம் வரும் என்பார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் வேண்டுமென்றால், “ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் இந்த முதல் ஸர்கத்தை படியுங்கள்”, என்பார். இது ஒன்றைப் படித்தால் ராமாயணம் முழுதும் படிக்க வேண்டும் என்று தோன்றும். இப்படி இந்த ஸங்க்ஷேப ராமாயணம் ரொம்ப விசேஷமானது.

पठन् द्विजो वाक् ऋषभत्वम् ईयात् |

स्यात् क्षत्रियो भूमि पतित्वम् ईयात् ||

वणिक् जनः पण्य फलत्वम् ईयात् |

जनः च शूद्रो अपि महत्त्वम् ईयात् || १-१-१००

இந்தக் கடைசி ஸ்லோகத்தில் பலஸ்ருதி சொல்கிறார். ‘இந்த ஸங்க்ஷேப ராமாயணம் படிக்கிறவருக்கு நல்ல ஸம்ஸ்க்ருத ஞானம் வந்துவிடும்’, என்கிறது இந்த ஸ்லோகம்.

ஸங்க்ஷேப ராமாயணம் எல்லா ஸ்லோகங்கள் 1-101 பொருளுரை; Sankshepa Ramayanam all slokams 1 to 101 meaning

ஸ்வாமிகள் இதையும் பலப் பேருக்கு சொல்லுவார். “இந்த வால்மீகி இராமாயணத்தைப் படிப்பதால் ஸம்ஸ்க்ருதம் வரும்”, என்பார். மேலும், “நான், சமஸ்க்ரிதத்தில் எம். ஏ. படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இந்த வால்மீகி இராமாயணத்தை படித்ததால் எனக்கு அந்த குறை போயிடுத்து”, என்பார். அதே போல, “மூக பஞ்சசதி படித்ததினால் சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை என்ற  குறை போயிடுத்து”, என்பார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, “வால்மீகி ராமாயணம் ஒரு அனுக்ரஹ க்ரந்தம். இதைப் படித்தாலே ஸம்ஸ்க்ருத ஞானமும், அதைப் புரிந்துக் கொள்கிற பக்குவமும், ஸ்ரீ ராமர் அனுக்ரஹிப்பார்”, என்பதை ஸ்வாமிகள் அழுத்தந்திருத்தமாக சொல்லுவார்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜெய்! ஜெய்! ராம ராமா!

Series Navigation<< வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?வால்மீகி ராமாயணம் பிறந்த கதை >>

2 replies on “ஸங்க்ஷேப ராமாயணம்”

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஸம்க்ஷேப ராமாயணம் உபன்யாசம் நன்றாக இருக்கு.
ஸ்ரீ ஸ்வாமிகள் எப்பேர்பட்ட ஓர் தபஸ் நிறைந்த வாழ்க்கை வழியில் வாழ்ந்து காட்டியுள்ளார். ராமாயண, பாகவத பாராயணங்கள் மூலமும், ஆஹார கட்டுப்பாடின் மூலமும் அந்தத் தபசை வாழ்ந்து காட்டி உள்ளார். மகாபெரியவா, அவருடைய ப்ரவசனங்களையும், பாராயணங்களையும் மிகவும் ரசித்து கேட்டுள்ளார். சுவாமிகளின் தபஸ் காரணத்தினால் ஸ்ரீ பெரியவா அவரை நிறைய அனுக்ரஹித்துள்ளார். உங்களுக்கு இப்படி ஒரு குரு அமைந்தது, உங்களுடைய பூர்வ புண்ணிய பலன்.
சுவாமிகள் சொன்னது போல் சம்க்ஷேப ராமாயணம் வாசித்தால் சம்ஸ்கிருதம் நன்றாக வரும் என்று கூறியதால் அதை அருள் வாக்காக எடுத்துக் கொள்வோம். நிறைய மூக பஞ்சசதி பாராயணமும் செய்வோம். 🙏🙏🌼🌼

படனம் மதுரம் பிரவசனம் மதுரதரம் எப்படிப்பட்ட பாராட்டு ! பெரியவா திருவாக்கால் போற்றப்பட எவ்வளவு புண்யம் செய்திருக்க வேண்டும்! அதற்கு தகுதி எவ்வளவு இருந்திருக்க வேண்டும்!! நிறை குடம் ததும்பாது. அது போல் ஸ்வாமிகள் அமைதியாய் பக்தி செய்து, வாழ் நாள் முழுதும் பாறாயணத்தில் மட்டும்.மனம் ஒன்றி செய்து வந்தார்கள் ! எப்பேர்ப்பட்ட தபஸ் வாழ்க்கை !! அவர் சொல்படி தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பாராயனத்தில் ஈடுப்பட்டிருப்பது புண்யம்!
ஸ்வாமிகள் உங்கள் வாக்கில் எல்லோருக்கும் போதித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.