Categories
Ayodhya Kandam

ராமரின் சகோதர பாசம்

Rama_Lakshmana103. பரதன் படையுடன் வருவதைக் கண்ட லக்ஷ்மணன் கோபத்தோடு ‘ராஜ்யத்தில் பேராசை கொண்ட பரதன் நம்மைக் கொல்ல படையோடு வருகிறான். இன்று இவனைக் கொன்று ராஜ்யத்தை உனக்கு அளிக்கிறேன்’ என்று கர்ஜிக்கிறான். ராமர் ‘மகாவீரனும், புத்திமானுமான பரதன் தானே என்னிடம் வரும்போது வில்லிற்கும் கத்திக்கும் என்ன வேலை?  ராஜ்யத்திற்காக அண்ணன் தம்பிகள் யுத்தம் செய்வதா? பந்துக்களுக்கு தீமை விளைந்து அதனால் எனக்கு ஒரு பொருள் கிடைக்குமானால் அது எனக்கு விஷம் போன்றது. உங்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் ஒரு சுகம் கிடைத்தால் அதை நெருப்பு பொசுக்கட்டும். பரதனை ஏன் சந்தேஹப் படுகிறாய்? ராஜ்யத்தை என்னிடம் தருவதற்காகவே வருகிறான். உனக்கு ராஜ்யத்தில் ஆசை இருந்தால் உன்னிடம் தரச் சொல்கிறேன்.’ என்று சொன்னதும் லக்ஷ்ணமன் வெட்கம் அடைகிறான்.

[லக்ஷ்மணர் கோபம் ராமர் சமாதானம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/103%20sahodara%20paasam.mp3]

Categories
Ayodhya Kandam

சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்


84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர்  எடுத்துச் சொல்கிறார்.
[சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/84%20sumanthirar%20seythi.mp3]