கடாக்ஷ சதகம் 2nd ஸ்லோகம் பொருளுரை – மோஹ முத்கரம்
இன்னிக்கு சங்கர ஜயந்தி. மஹாபெரியவா இந்த சங்கர ஜயந்தி புண்ணிய காலம் அவசியம் எல்லாரும் கொண்டாடணும், இது ராம நவமி, கிருஷ்ணாஷ்டமி மாதிரி, அதுக்கும் மேல சர்வோத்க்ருஷ்டமான புண்ணிய காலம். ஏன்னா நமக்கு ராம நவமி, கிருஷ்ணாஷ்டமிலாம் மிஞ்சினதே ஆச்சார்யாளாலத் தான். அதனால ஆச்சார்யாளோட ஜயந்தியை கொண்டாடணும், விமர்சையாக கொண்டாடணும் அப்படின்னு சொல்லிக் கொடுத்திருக்கா.
இன்னிக்கு ஆச்சார்யாளோட பஜ கோவிந்தம் அப்படிங்கிற ஸ்தோத்திரத்தைப் பத்தி ஒரு பத்து நிமிஷம் பேசலாம்னு ஆசைப்படறேன்.
இந்த “**ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம் கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே । ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டு³க்ருஞ் கரணே**” அப்படின்னு ஒரு ஃபர்ஸ்ட் ஸ்லோகம். ஒரு கதை சொல்வா. ஆச்சார்யாள் காசியில இருக்கும்போது ஒரு கிழவர், ‘டு³க்ருஞ் கரணே’ங்கறது ஒரு இலக்கண விதி, அதை உருப்போட்டுண்டு இருந்தார். அதைப் பார்த்த உடனே ஆச்சார்யாளுக்கு “அடராமா, இந்த வயசுக்கு அப்புறம் கூட இவர் இன்னும் இலக்கணம் படிச்சுண்டு இருக்கார், பகவானை அடையற வழி தெரியாம” அப்படின்னு நினைச்சு, “கோவிந்தம் பஜ. எமன் பக்கத்துல வரும்போது இது உன்னைக் காப்பாத்தப் போறது இல்லை, இந்த இலக்கணம்” அப்படின்னு சொல்றார்.
அப்படின்னா இந்த இலக்கணம், இது மாதிரி சிவானந்த லஹரியிலயும் ஒரு ஸ்லோகம் சொல்றார்: “**வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா பத³ாம்போ⁴ஜம் ஶம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ ஸுதீ⁴:**”. வெறும் தர்க்கத்தைப் பேசி, அதுக்கு சில எக்ஸாம்பிள்லாம் சொல்லி, இதையே திருப்பி திருப்பி உருட்டிண்டு இருந்தா தொண்டைதான் வலிக்குமே தவிர, “பதாம்போஜம் ஷம்போர்பஜ” – பகவானுடைய பாதத்தைப் பஜித்தேன்னா பரமானந்தம் கிடைக்கும் அப்படின்னு சொல்றார்.
அப்படின்னா இந்த படிப்பெல்லாம் வேண்டாமா அப்படின்னு ஒரு கேள்வி வரும். புத்தியைக் கொண்டு காலகாலத்துல படிக்கணும் சின்ன வயசுல. அப்புறம் லைஃப் முழுக்க படிச்சுண்டுதான் இருக்கணும். அந்தப் படிப்பைக் கொண்டு உலகத்துல பணம் சம்பாதிச்சு, பணத்தைக் கொண்டு சுகத்தை அனுபவிக்கிறது – அறம், பொருள், இன்பம். ஆனா அதுலேயே தங்கிண்டே இருந்தா எப்ப தான் அறம், பொருள், இன்பம், வீடு – மோக்ஷம்னு ஒண்ணு இருக்கே, அதைப் பத்தி யோசிக்கலையே, இந்த கிழவர் இன்னும் இதையே பண்ணிண்டு உட்கார்ந்து இருக்காரே அப்படின்னு ஆச்சார்யாளுக்கு ஒரு தயை ஏற்படுறது. அதனால இந்த ஸ்லோகம் சொல்றார்.
ஆனா இந்த ஸ்லோகம் வந்து ‘The Whole Truth’ இந்த ஸ்தோத்திரத்துக்கு உண்மையான பேர் வந்து ‘**மோஹ முத்³க³ரம்**’. மோஹம் அப்படின்னா மயக்கம். அதாவது உலகப்பற்று, பொருட்பற்று, குடும்பப்பற்று இதெல்லாம் தான் நம்மளை இங்கேயே பிடிச்சு வச்சிருக்க அந்த மோஹம். முத்கரம்னா உலக்கைன்னு அர்த்தம். அந்த மயக்கத்தை, அந்த மோஹத்தை தூள் தூளா ஆக்குறதுக்காக பகவான் சங்கரர் அனுக்ரஹம் பண்ணிருக்கார் இந்த ஸ்லோகத்தை. அதனால எல்லாமே ரொம்ப டைரக்டா இருக்கும். பொலிட்டிக்கலி கரெக்டாலாம் இருக்காது. இது சொல்லலாமா, சொல்லக்கூடாதா? ஆச்சார்யாளுடைய ஸ்தோத்திரங்கள் பகவானைப் பாடும்போது அது ஒரு தனி, வேதாந்த ஸ்தோத்திரங்கள் இருக்கு அது ஒரு தனி. இது வந்து நேரடியான உபதேசம். ஒரு சத்குரு கிட்ட போனா அதுதான் நடக்கும் நமக்கு. நம்முடைய அகந்தை, நம்முடைய மோஹம் வந்து தூளாயிடும். அப்புறம் தான் நமக்கு ஹுமிலிட்டி (humility) வரும்.
ஏன்னா நம்ம நம்முடைய உலகப் படிப்போ, “நான் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன், பி.எச்.டி பண்ணிருக்கேன், இல்ல வேதாந்தம் படிச்சிருக்கேன், வியாகரணம் படிச்சிருக்கேன்” அது மாதிரி அந்தப் படிப்பைப் பத்தி ஒரு கர்வம், இல்ல பதவியில இருக்கேன், பணம் இருக்கு எனக்கு, இந்த மாதிரி எல்லாம் நமக்கு கர்வம். “ஹெல்த் நன்னா இருக்கு எனக்கு” இந்த மாதிரி கர்வம் எல்லாம் “இதெல்லாம் உனக்கு உபயோகம் இல்லை, இதெல்லாம் க்ஷணபங்குரம்” அப்படின்னு ஒரு குரு புரிய வைப்பார்.
எனக்கு இந்த ‘மோஹ முத்கரம்’ அப்படின்னு சொல்லி இந்த ஸ்லோகம் எல்லாம் படிக்கும்போது ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ ஸார் (SAR) ஓட புக் ஞாபகம் வருது. இந்த ஏணிப்படிகளில் மாந்தர்கள் படிச்சாலே நமக்கு ஒரு திகிலா இருக்கும். என்னடா இது அப்படின்னு. இவர் வந்து ‘மூடன்’னு சொல்றார், அவர் வந்து ‘பாமரன்’னு சொல்வார் ஸார் புக்ல. ஏன்னா பாமரன்ங்கறவன் இந்த மாதிரி தான். படிப்பு, பணம் அதெல்லாம் பத்தி கர்வம். இதுக்கு நடுவுல ஏதோ ரெண்டு ஸ்லோகம் படிச்சுட்டு நான் தெய்வீகத்துல திளைச்சிருக்கேன், ஆன்மிகத்துக்கு அடுத்தது போயிடப் போறேன் அப்படின்னு நினைச்சுக்கிறான். அப்படி கிடையாதுப்பா அதெல்லாம். முதல்ல பற்றுகள் விலகணும். அது வந்து எத்தனையோ ஜென்மால நடக்குற விஷயம். அதுக்கு நீ வந்து முதல்ல ஹம்பிளா (humble) உன்னோட ஈகோவை (ego) குறைச்சுண்டு உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கணும். அது பேர் விவேகம். அதுக்கப்புறம் செல்பிஷ்னஸ் (selfishness) தன்னலத்தை விட்டு உலகத்துக்காகப் பரோபகாரம் பண்ணி வாழணும். அது சாது. அதுக்கப்புறம் உண்மையான பக்தின்னா என்ன? பகவானுடைய குணங்கள் என்ன? இப்படி அதுலேயே உலக விஷயங்கள்ல இருந்து மனசைத் திருப்பி பகவான் இடத்துல வச்சு அந்த தெய்வப் பாசத்தை வளர்த்துண்டா அதுக்கப்புறம் தான் உனக்கு பக்தி, தெய்வீகம்ங்கறது ஏற்படும் அப்படின்னு ஸார் புக்ல இதை வந்து ரொம்ப பளிச்சுப் பளிச்சுன்னு சொல்வார். அதனால அதை படிக்கும்போது நமக்கு தயக்கமே இருக்காது. அச்சோ என்னடா இது நாம ஏதோ ஒரு லெவல்ல இருக்கும்னு நினைச்சோம் ஒண்ணுமே இல்லையே அப்படின்னு பயம் வரும். அதே எஃபெக்ட்டை (effect) இந்த மோஹ முத்கரம் படிச்சாலும் வரும். எனக்கு சுவாமிகளைப் பார்த்த அந்த 15 வயசுலேயே அந்த 20 வயசுலேயே வந்தது அது, அந்த எஃபெக்ட். அந்த மாதிரி ஒரு சத்குருவை அடைஞ்சாலும் அந்த நம்மளுடைய ஈகோ உலக்கையால அடிக்கிற மாதிரி பொடி பொடியாகும். அதனாலதான் இதுக்கு ‘மோஹ முத்கரம்’னு பேர் வச்சிருக்கார்.
பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ அப்படின்னு ஆரம்பிக்கிறதுனால பஜ கோவிந்தம்ங்கற பேர்ல எல்லார்க்கும் இது தெரியும். பெரியவா இதோட ஸ்ரீமுகத்துல “பாலகர்கள் கொண்டு எல்லாரும் இதைப் படிச்சு பக்தி ஏற்பட்டு பகவானை அடையணும் அப்படின்னு பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” அப்படின்னு போட்டிருக்கார். அந்த மாதிரி சின்ன வயசுலேயே இதெல்லாம் மனப்பாடம் பண்ணி வச்சுருந்தா அதுக்கான ஒரு வேளை வரும்போது அதை மனனம் பண்ணி அது மூலமா நமக்கு மோஹ முத்கரம் ஏற்படும்.
“**ஜஹீஹி த⁴னாக³மத்ருʼஷ்ணாம்**” – தனாகமம், பணம் வரவு. அதைப் பத்தி ஒரு த்ருஷ்ணா, ஒரு தர்ஸ்ட் (thirst). எப்படி பணம் வரும், எப்படி இப்படி சம்பாதிக்கலாமா, அப்படி சம்பாதிக்கலாமா? பல விதத்துல பணத்துல பேராசை. அதை “ஹே மூட⁴” – மூடனே, பாமரனே “ஜஹீஹி” – அதை விடு.
“**மனஸி வித்ருʼஷ்ணாம்**” – மனசுல வைராக்கியம் ஏற்படுவதற்கான “**ஸத்³பு³த்³தி⁴ம் குரு**” – அதுக்கான நல்ல புத்தியை வளர்த்துக்கோ.
“புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன். முதுசூர் நடுங்க சக்தியை வாங்கத் தரமோ, கூவத்தவிடு பட குத்திய கங்கேயேனே வினையேற்கு என் குறித்தனையே” – பிரார்த்தனையா வைக்கிறார் இங்க. அந்த மாதிரி புத்திங்கறது உலகத்துல சம்பாதிக்கிறதுக்கும் சுகப்படுறதுக்கும் இருக்கு. ஆனா முக்கியமான நோக்கம் புத்தி, அதான் இங்க ஸத்புத்தின்னு சொல்றார். அந்த மாதிரி வைராக்கியம் ஏற்படுறதுக்கு மீண்டும் மீண்டும் சிந்தனை பண்ணி “கா தே காந்தா” – இதென்ன உலகத்துல நாம வந்து பிறந்திருக்கோம், இது மனைவி மக்கள் இதென்ன? இதெல்லாம் பத்தி யோசிக்கிறது. “சிந்தனை செய் மனமே”ன்னு சொன்ன மாதிரி யோசிச்சா அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த வைராக்கியம் வரும். அதுக்கு புத்தியை உபயோகப்படுத்தணும். அதுக்கான இந்த புராணங்கள் எல்லாம் படிக்கும்போது ரிஷிகள் வாக்கியத்துல ஒரு இம்பேக்ட் (impact) ஏற்படும். அதை கிரிஸ்டலைஸ் (crystallize) பண்ணிக்கணும். அதுக்கான அந்த புத்தியை அதுக்கு யூஸ் பண்ணு. “புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பாய் முக்தியை வாங்க அறிகின்றிலேன்” அப்படிங்கறார். அந்த பக்தியைக் கொடுத்து பகவான் கிட்ட இருந்து முக்தியை வாங்கணும்.
“**குரு ஸத்³பு³த்³தி⁴ம் மனஸி வித்ருʼஷ்ணாம் யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்**” – “மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெறும் செல்வம்” அப்படின்னு அவ்வைப்பாட்டி சொல்றா. மேலைன்னா முன்னோர்கள். முன்னோர்கள் பண்ண தவத்தைப் பொறுத்துதான் நமக்கு எவ்வளவு செல்வம் வரும். நம்மளுடைய பூர்வ ஜென்ம வினையினாலும். அதனால அது மூலமா என்ன பணம் வரதோ அல்லது நிஜகர்மோபாத்தம்கிறதுக்கு நம்மளுடைய குலதர்மத்துப்படி என்ன பண்ணணுமோ அதை பண்ணி அதுல என்ன பணம் வரதோ அந்த “**வித்தம்**” – அந்தப் பணத்தைக் கொண்டு “**வித்தம் தேன வினோத³ய சித்தம்ம**” – அந்தப் பணத்தைக் கொண்டு உனக்கு வேணுங்கறதை அனுபவிச்சு சந்தோஷப்பட்டுக்கோ. பேராசைப்படாதே, வைராக்கியத்தை வளர்த்துக்கோ அப்படின்னு சொல்றார்.
நான் எல்லா ஸ்லோகமும் சொல்ல முடியாது, ரெண்டு மூணு மணி நேரம் ஆயிடும். அதனால குறிப்பிட்ட ஸ்லோகங்கள் சொல்றேன். ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்துல இந்த பஜ கோவிந்தத்துல எதை இந்த மாதிரி ஃபர்மா (firm), டைரக்டா ஒரு உபதேசமா சொல்றாரோ அதையே வந்து தன்னுடைய மற்ற ஸ்லோகங்கள்ல பிரார்த்தனையா பகவான் கிட்ட வச்சிருக்கார்.
“**நித்யம் ஸ்வோத³ர போஷணாய ஸகலானது³த்³தி³ஶ்ய வித்தாஶயா வ்யர்த²ம் பர்யடனம் கரோமி ப⁴வத: ஸேவாம் ந ஜானே விபோ⁴ । மஜ்ஜன்மாந்தர புண்யபாகப³லத: த்வம் ஸர்வ ஸர்வாந்தரஸ்திஷ்ட²ஸ்யேவ ஹி தேன வா பஶுபதே தே ரக்ஷணீயோஸ்ம்யஹம் ॥**” அப்படின்னு ஒரு ஸ்லோகம். “வயிற்றைக் கழுவுறதுக்காகவும் சம்பாதிக்கிறதுக்காகவும் உலகம் எல்லாம் சுத்திண்டே இருக்கேன். உன்னுடைய பஜனத்தைப் பண்ண மாட்டேங்கிறேன் ஹே பகவானே. ஆனா ஏதோ ஒரு புண்ணியத்துனால நீதான் அந்தர்யாமி தெரிஞ்சுண்டு இருக்கேன். அதனால என்னை காப்பாத்து” அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம் இது சிவானந்த லஹரியில வருது.
இதே மாதிரி “அற்றைக்கிரை தேடி அத்தத்திலும் ஆசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ” அப்படின்னு காஞ்சிபுரம் பாட்டு திருப்புகழ். அற்றைக்கிரை தேடி, அன்னன்னைக்கு இரை வயித்துக்குச் சாப்பாடு தேடி. “அத்தத்திலும் ஆசை” – இன்னும் கொஞ்சம் பணம் இருந்தா நாளைக்குத் தைரியமா இருக்கலாம் அப்படின்னு நினைக்கிறோம். எவ்வளவு வந்தாலும் அந்த நாளைப் பற்றிய கவலை பணத்துனால போறது இல்லை. “அற்றைக்கிரை தேடி அத்தத்திலும் ஆசை பற்றித் தவியாத உன் பற்றைப் பெறுவேனோ” – உன் கிட்ட பற்றுதான் எனக்கு அந்தத் தவிப்பை போக்கும், அதைக் கொடுக்க மாட்டாயா? “வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் துளைசீலா கற்றுற்றுணர்போதா கச்சிப் பெருமாளே” அப்படிக் குட்டியா ஒரு பாட்டு திருப்புகழ்.
இன்னொரு பஜ கோவிந்தம் ஸ்லோகம் பார்க்கலாம்:
“**நளினீத³ளக³தஜலமதிதரளம்
தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் ।
வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மானக்³ரஸ்தம்
லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥**”
தாமரை இலைத் தண்ணி எப்படி ஸ்டேபிளா (stable) இல்லாம இப்படி இப்படி ஓடிண்டே இருக்குமோ அந்த மாதிரி இந்த “ஜீவிதம்” – ஒரு லைஃப்ங்கறது (life) அதிசய சபலம் – ரொம்ப சபலமானது. “வித்தி வ்யாதி அபிமானம் க்ரஸ்தம்” – வியாதி, அபிமானம் இதெல்லாம் உலகத்தைப் பிடிச்சுண்டு இருக்கு. அதனால உலகமே “ஶோகஹதம் ச ஸமஸ்தம்” – எல்லா பற்றுகள் விலகி சந்துஷ்டியோடு தூய்மையில உயர்ந்தவர்கள் மட்டும் தான் நிம்மதியா இருக்காளே தவிர, பாக்கி உலகம் முழுக்க ஶோகஹதம் ச ஸமஸ்தம். எல்லாரும் கஷ்டத்துல தான் இருக்கா, சோகத்துல தான் இருக்கா அப்படின்னு சொல்றார்.
இதையே சிவ அபராத க்ஷமாபண ஸ்தோத்திரத்துல:
“**ஆயுர்னஶ்யதி பஶ்யதாம் ப்ரதிதி³னம் யாதி க்ஷயம் யௌவனம் ப்ரத்யாயாந்தி க³தா: புநர்ந தி³வஸா: காலோ ஜக³த்³ப⁴க்ஷக: । லக்ஷ்மீஸ்தோயதரங்க³ப⁴ங்க³சபலா வித்³யுச்சலம் ஜீவிதம் தஸ்மான்மாம் ஶரணாக³தம் கருணயா த்வம் ரக்ஷ ரக்ஷாது⁴நா ॥**” அப்படின்னு சொல்றார்.
ஒவ்வொரு நாளும் ஆயுசு போயிட்டே இருக்கு. யௌவனமும் போயிட்டே இருக்கு. போன நாள் திரும்பி வர்றது இல்லை. “காலோ ஜகத் பக்ஷக:” – காலம் உலகத்தை விழுங்குகிறது. “லக்ஷ்மீஸ்தோய தரங்க ப⁴ங்க சபலா” – பணத்துக்காக அலைஞ்சு அலைஞ்சு மின்னல் போல இந்த வாழ்க்கை முடிஞ்சு போயிடுறது. அதனால நான் உன்னை சரணாகதி பண்றேன் என்னை காப்பாத்து அப்படின்னு சொல்றார்.
“**பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த: தருணஸ்தாவத்தருணீஸக்த: । வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த: பரே ப்³ரஹ்மணி கோபி ந ஸக்த: ॥**”
சின்ன வயசுல விளையாட்டுலேயே குழந்தைகள் பொழுது போக்கறா. இளமையில புலனின்பத்துல பொழுது போக்கறா. வயசானா கவலைப்படுறதுல பொழுது போக்கறா. யாருமே பரப்பிரம்மத்தைப் பத்தி யோசிக்க மாட்டேங்கறாளே அப்படின்னு சொல்றார்.
“**ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம் நிஸ்ஸங்க³த்வே நிர்மலோஹத்வம் । நிர்மலோஹத்வே நிஶ்சலிதத்த்வம் நிஶ்சலிதத்த்வே ஜீவன்முக்தி: ॥**” அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
ஸத்ஸங்கத்தினால நிஸ்ஸங்கம் ஏற்படும், பற்றுகள் விலகும். அதனால எந்த ஸங்கத்தின் மூலமா நமக்கு பற்றுகள் விலகுறதோ – இந்த பஜ கோவிந்தத்துல இருக்குற கருத்துக்களை யார் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லித் தர்றாளோ, அதாவது வெறும்னா சொன்னா புரியாது, இப்ப நான்லாம் பேராசை எனும் பிணியில் பிணிப்பட்டு ஓராத வினையேன் உழலத் தகமோன்னு நான் உழன்றுண்டு இருக்கேன், அதனால ஆத்ம சக்தியோடு இருக்குற ஒரு மஹான் இந்த மாதிரி கருத்துக்களைச் சொன்னா கேட்ட உடனே அதுக்கு ஒரு இம்பேக்ட் (impact) இருக்கும். அந்த மாதிரி ஸத்ஸங்கம். மஹான்களுடைய ஸூக்திகள் இருக்கு, அதெல்லாம் பெரியவாளோட தெய்வத்தின் குரல் இருக்கு, அந்த மாதிரி வாக்கு, அது மூலமா ஆச்சார்யாளுடைய எத்தனையோ ஸ்தோத்திரங்கள் இருக்கு இதெல்லாமே ஸத்ஸங்கம். இந்த ஸத்ஸங்கம் பண்ணா நமக்கு பற்றுகள் விலகும். அப்படி பற்றுகள் விலகினா மோஹம் போகும், மோஹம் போச்சுன்னா மனசு அடங்கும், மனசடங்கினா ஜீவன்முக்தி ஏற்படும் அப்படின்னு சொல்றார்.
“**மா குரு த⁴னஜந யௌவனக³ர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் ।
மாயாமயமித³மகி²லம் ஹித்வா
ப்³ரஹ்மபத³ம் த்வம் ப்ரவிஶ விதி³த்வா ॥**”
தனம், ஜனம், யௌவனம். என்கிட்ட பணம் இருக்கு, எனக்கு மனுஷா இருக்கா, எனக்கு யௌவனம் இருக்கு என்ற கர்ப்பப்படாதே (கர்வம் கொள்ளாதே). ஏன்னா இதெல்லாம் நிமிஷத்துல இல்லாமப் போயிடும்.
நான் ஒரு லேண்ட் (land) வாங்கிப் போட்டிருக்கேன் அப்படின்னு சொல்வா, அடுத்த வாட்டி அங்க போய்ப் பார்த்தா யாரோ பொலிட்டீஷியன் (politician) பிடுங்கிண்டு இருப்பான். அவ்வளவுதான், ஒரு கோடி ரூபாய் போச்சுன்னு அழுதுண்டு இருக்கணும். அந்த மாதிரி “நிமேஷாத் கால: ஹரதி” – ஒரு நிமிஷத்துல இல்லாமப் போயிடும். பணங்கறது மேலே கீழே மேலே கீழே போயிண்டே இருக்கும்.
ஜனங்கள். என் பிள்ளை பொண்ணுலாம் அமெரிக்கால இருக்கா, என்னை வா வான்னு கூப்பிட்டுண்டே இருக்கா. இந்த காலத்துல டிக்கெட் விக்கிற விலையில வா வான்னு கூப்பிடுறாளா தெரியாது, சொல்லிப்பா! அந்த எனக்கு அந்த போலீஸ்ல என் மாமா பையன் இருக்கான் இப்படி எல்லாம் அந்த ஜனங்களைப் பத்தி யாரோ மனுஷா இருக்கா எல்லாத்தையும் சாதிச்சுடுறேன் அப்படிங்கற ஒரு கர்வம்.
யௌவனம். 50 வயசானா கூட எனக்குத் தலை நரைக்கவே இல்லை, நான் நினைச்சதெல்லாம் சாப்பிடுவேன் அப்படின்னு சொல்வா, திடீர்னு பொட்டுன்னு போயிடுவான். அந்த மாதிரி 50 வயசுக்கு மேலேயே 60 வயசுல 70 வயசுல கூட இந்த அளவுக்கு யௌவன கர்வம் இருந்தா நிஜமாவே 30 வயசுல இருக்கறவாளுக்கு எவ்வளவு யௌவன கர்வம் இருக்கும்? அதை நம்ம அதை நம்பக் கூடாது அப்படின்னு இவர் சொல்றார். இதெல்லாம் ஒரு காட்சி. இது ரொம்ப உண்மை என்று நம்பி இதுலேயே மூழ்கி இருக்காதே. இதை விட்டுட்டு “ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிஶ விதித்வா” – யோசிச்சு ஞானத்தை அடையறதுக்கு வழி பார் அப்படின்னு சொல்றார்.
சிவ அபராத க்ஷமாபண ஸ்தோத்திரத்துல:
“**கிம் யானேந த⁴னேந வாஜிகரிபி⁴: ப்ராப்தேந ராஜ்யேந கிம் கிம் வா புத்ரகளத்ரமித்ரபஶுபி⁴: தே³ஹேந கே³ஹேந கிம் । ஜ்ஞாத்வைதத் க்ஷணப⁴ங்கு³ரம் ஸபதி³ரே த்யாஜ்யம் மனோ தூ³ரத: ஸ்வாத்மார்த²ம் குருவாக்யதோ ப⁴ஜ மன: ஸ்ரீபார்வதிவல்லப⁴ம் ॥**” அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
அதே மாதிரி வண்டி இருக்கு, பணம் இருக்கு, வேலைக்காரன் இருக்கான், ராஜ்யம் இருக்கு, புத்ர களத்ர மித்ர பஶுபி⁴: தே³ஹேந – யௌவனம் இருக்கு, வீடு இருக்கு இப்படி எல்லாம் இதைப் பத்தி நினைக்காதே. இதெல்லாம் க்ஷணபங்குரம். ஒரு க்ஷணத்துல எங்க போச்சுன்னு தெரியாம போயிடும். எந்த உலக விஷயங்கள்ல நாம பற்று வச்சாலும் ஒண்ணு நாம்ப அதுல இருந்து விலகி உயிர் பிரியும் போது அழணும், இல்ல அது நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போகும் போது அழணும். அதனால இதெல்லாம் க்ஷணபங்குரம்னு தெரிஞ்சுண்டு குரு வார்த்தையை நம்பி பார்வதிவல்லபம் பஜ. மனமே பார்வதி நாயகனான பரமேஸ்வரனை பஜனம் பண்ணு அப்படின்னு சொல்றார்.
மூகபஞ்சசதி கடாக்ஷ சதகத்துல இரண்டாவது ஸ்லோகம்:
“**மாதர்ஜயந்தி மமதாக்³ரஹ மோக்ஷணாநி
மாஹேந்த்³ரநீலருசி ஶிக்ஷணத³க்ஷிணாநி ।
காமாக்ஷி கல்பிதஜக³த்த்ரயரக்ஷணாநி
த்வத்வீக்ஷணாநி வரதா³னவிசக்ஷணாநி ॥**”
உன்னுடைய கடாக்ஷங்கள் வரங்களைக் கொடுக்கிறது. தானே சிருஷ்டி பண்ண இந்த மூவுலகையும் கடாக்ஷம் காப்பாற்றுகிறது. ‘மாஹேந்த்ர நீல’ – இந்திர நீலக் கல்லுக்கு எப்படி அழகா ஒளி விடணும்னு சொல்லிக் கொடுக்கிற திறமை வாய்ந்தது, அப்பேர்ப்பட்ட உன்னுடைய கடாக்ஷம்.
“மமதாக்ரஹ மோக்ஷணாநி” – என்னுடைய மமதை, எனது எனது இதெல்லாம் இந்த வீடு கார் பங்களா இப்படி உலக விஷயங்கள்ல இதெல்லாம் எனது எனதுன்னு நினைச்சுக்கிறேனே, இது வந்து ஒரு பிசாசு மாதிரி என்னை பிடிச்சுண்டு இருக்கு. “மாதர் ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணாநி” – அதுல இருந்து என்னை விடுவிக்கும் உன்னுடைய கடாக்ஷம் ஜயந்தி – வெற்றியோடு விளங்கட்டும் அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
அந்த மாதிரி எதை ஆச்சார்யாள் ஒரு உபதேசமா பஜ கோவிந்தத்துல சொல்றாரோ அதையே இங்க பிரார்த்தனையா மூக கவி “மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங்கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே” – இது மின்னல் போன்ற வாழ்க்கை. இதுலேயே நான் வந்து மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங்கிதுவோ – இதான் என்னோட விதியா? இல்லை என்னை மீட்கக் கூடாதா அப்படின்னு பிரார்த்தனையா மஹான்கள் சொல்றார்.
இன்னும் ஒரு ரெண்டு மூணு வச்சிருந்தேன், நேரமாயிடுத்து. அதனால கடைசி ஸ்லோகம் சொல்றேன்.
“**குருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த:
ஸம்ஸாராத³சிராத்³ப⁴வமுக்த: ।
ஸேந்த்³ரியமானஸநியமாதே³வம்
த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥**”
எல்லாம் இருக்கு, ஆனா இவரும் பக்தியில முடிக்கிறார். பிரம்ம சூத்திர பாஷ்யத்தோட முடிவுலேயே பக்தியினால இந்த உயர்ந்த ஞானத்தை அடையலாம்னு ஆச்சார்யாள் முடிக்கிறார். அந்த மாதிரி எல்லார்க்கும் ஹோப் (hope) கொடுக்கிற ஒரு மஹான். அதனாலதான் 2500 வருஷத்துக்கு அப்புறமும் இன்னிக்கும் நாம் அவருடைய ஜயந்தியைக் கொண்டாடிட்டு இருக்கோம். அவரே மஹாபெரியவாளா அவதாரம் பண்ணி திரும்பவும் அருளாட்சி பண்ணி இந்த தர்மத்தைத் தழைக்க வச்சிருக்கா. அந்த குருவினுடைய சரணாம்புஜ நிர்பர பக்த: – யார் குருவின் பாதத் தாமரைகளில் இடையறாது பக்தி பண்றானோ “ஸம்ஸாராத³சிராத்³ப⁴வமுக்த:” – அவன் விரைவில் இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவான். “ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம்” – இப்ப முன்ன இந்த மோஹ முத்கரத்துல சொன்ன விஷயங்கள் எல்லாம் மனசுல வாங்கிண்டு இந்திரியங்களையும் மனசையும் அடக்கி “நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்” – உனக்குள்ளேயே இருக்குற ஹிருதய புண்டரீகத்தில் வசிக்கும் அந்தப் பரம்பொருளை “தேவம் த்³ரக்ஷ்யஸி” – குரு அனுக்ரஹம் இருந்துட்டா பார்க்கலாம்.
எனக்கு தனியா ஒண்ணும் தர வேண்டாம் பகவானே, என்னோட சொரூபானந்தத்தை எனக்குள்ளேயே இருக்கறது எனக்குக் கொடுத்துடு அப்படின்னு கேட்கிறார். அந்த மாதிரி “மத்யம் தேஹி ச பவன் மதியமேவ ஸ்வரூபானந்தம்”, அந்த மாதிரி இந்த குரு சரணாம்புஜத்துல பக்தி பண்ணா அவர் நீ யார் அப்படிங்கற உண்மையை உனக்கு புரிய வச்சுடுவார் அப்படின்னு கடைசி ஸ்லோகம் சொல்லி முடிக்கிறார்.
இந்த பஜனம் ஆனந்தமா இருக்கும் அப்படிங்கறதுக்கு ஒரு தடவை சுவாமிகள் “கிருஷ்ணா ராமான்னு சொல்லிட்டு இருக்கக்கூடாதா வயசான காலத்துல?” அப்படின்னு யாரோ புலம்பினா, அப்ப அவர் சொல்லிக் காமிச்சார் என்கிட்ட. “கிருஷ்ணா ராமான்னு சொல்லிண்டு இருக்கிறது எவ்வளவு ஆனந்தம் தெரிஞ்சா வயசானவா இல்ல எல்லாருமே அதையே சொல்லிண்டு இருப்பா” அப்படின்னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் பாடிக்காமிச்சார்.
“கிருஷ்ணா ராமா கோவிந்தா ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா கேசவ கோவிந்தா ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா அனந்த முகுந்த முராரே வாமன மாதவ கோவிந்தா
ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ லக்ஷ்மி நாயக நரசிம்மா
நந்த நந்தனா கோவிந்தா ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா அனந்த முகுந்த முராரே வாமன மாதவ கோவிந்தா
ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ லக்ஷ்மி நாயக நரசிம்மா”
அவர் அன்னிக்குச் சொன்னது அப்படியே அமிர்தமா இருந்தது. எனக்கு ரொம்ப மனசுல அது ரொம்பப் பதிஞ்சது. எப்படியாவது தூக்கம் வரலைன்னா இது சொல்லிட்டே தூங்கிடுவேன்.
கோபிகா ஜீவன ஸ்மரணம் – கோவிந்தா கோவிந்தா!
Today is Shankara Jayanthi. Maha Periyava has taught us that everyone must celebrate the auspicious period of Shankara Jayanthi. Just like Rama Navami and Krishnashtami, it is an even more supreme (Sarvothkrustaman) holy period. This is because Rama Navami and Krishnashtami has survived only through the Grace of Acharya. Therefore, we must celebrate Acharya’s Jayanthi in a grand manner.
Today, I wish to speak for about ten minutes regarding Acharya’s stotram called Bhaja Govindam.
There is a first verse that goes:
“ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம் கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே । ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டு³க்ருஞ் கரணே”
bhaja goviMdaM bhaja goviMdaM goviMdaM bhaja mUDhamate |
saMprApte sannihite kAle nahi nahi rakshati Dukru~nj karaNe ||
A story is told about this. When Acharya was in Kashi, an old man was repeating ‘Dukru~nj karaNe’, which is a rule of grammar (Vyakarana). Seeing this, Acharya thought, “O Rama, even after reaching this age, he is still studying grammar without knowing the way to reach God.” He said, “Chant the name of Govinda. When Yama (the God of Death) is near, this grammar is not going to save you.”
This is regarding grammar. He says a verse in Sivananda Lahari as well:
“வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா பத³ாம்போ⁴ஜம் ஶம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ ஸுதீ⁴:”
vRthA kaMThakshobhaM vahasi tarasA tarkavacasA
padAmbhojaM shambhorbhaja paramasaukhyaM vraja sudhI: ||
If you just keep speaking logic (Tarka), giving examples, and repeating the same things over and over, you will only end up with a sore throat. He says, “Worship the lotus feet of Shambhu (Padambhojam Shambhorbhaja) – if you worship the feet of the Lord, you will attain supreme bliss.”
A question may arise: “Does this mean we don’t need education?” One must study at the right time in childhood using the intellect. One should continue learning throughout life. Using that education, one earns money in the world and enjoys pleasures through that money—Virtue, Wealth, and Pleasure (Aram, Porul, Inbam). But if one remains stuck only in that, when will they think about the fourth goal—Liberation (Veedu/Moksha)? Acharya felt compassion seeing that this old man was still doing the same thing. That is why he spoke this verse.
However, this verse is ‘The Whole Truth’. The true name of this hymn is ‘Moha Mudgaram’. Moha means delusion. That is, the attachment to the world, wealth, and family is the delusion that keeps us trapped here. Mudgaram means a mallet or hammer. Lord Shankara has graced us with this verse to shatter that delusion into pieces. Therefore, everything in it is very direct. It isn’t necessarily “politically correct.” One might wonder, “Should this be said or not?” Acharya’s hymns to praise God are one category, and Vedantic hymns are another. This is a direct instruction (Upadesha). This is what happens when we go to a Satguru (true teacher). Our ego and our delusion will be shattered. Only then will humility come to us.
Because we have our worldly education—”I have studied Engineering, I have a Ph.D., I have studied Vedanta, I have studied Vyakarana”—there is a pride associated with that learning. Or, “I am in a high position,” “I have money” “My health is good” — these are all forms of pride. A Guru will make us realize that “These are of no use to you; these are all transient (Kshanabhanguram).”
When I read these verses of ‘Moha Mudgaram’, I am reminded of the book ‘Enippadigalil Maanthargal’ by Shivan SAR. Reading ‘Enippadigalil Maanthargal’ gives one a sense of trepidation. Acharya calls him a ‘Fool’ (Mudhan), and SAR calls us a ‘Layman’ (Paamaran) in his book. A layman is like this: prideful about education and money. In the midst of this, having read a couple of verses, he thinks, “I am immersed in divinity, I am about to reach the next stage of spirituality.” It isn’t like that, dear friend. First, attachments must go. That happens over many births. For that, you must first be humble, reduce your ego, and understand what the truth is. That is called Discrimination (Viveka). After that, one must leave selfishness and live for the benefit of the world. That is a Sadhu. After that one has to find, what is true devotion? What are the qualities of Bhagavan? If one turns the mind away from worldly matters and develops that divine love for Bhakthi, then only Devotion (Bhakti) and Divinity will occur. SAR says this very clearly in his book. Reading it, one will have no hesitation. One might think, “O no, we thought we were at some level, but that is not true” — that fear will come. The same effect occurs when reading Moha Mudgaram. I experienced that effect when I saw Swamigal at the age of 15 and 20. When you reach a Satguru, your ego will be shattered into pieces as if hit by a mallet. That is why it is named ‘Moha Mudgaram’.
Because it starts with Bhaja Govindam, Bhaja Govindam, it is known to everyone by the name Bhaja Govindam. In the Srimukham to this book, Maha Periyava has written, “I pray that everyone, including children, should read this, develop devotion, and reach God.” If one memorizes these in childhood, when the time comes, they can contemplate them, and through that, Moha Mudgaram (the shattering of delusion) will occur.
“ஜஹீஹி த⁴னாக³மத்ருʼஷ்ணாம்”
(itrans: jahIhi dhanAgamatRshNAm)Dhanagamam – the arrival of money. A thirst for that. “How will money come? Can I earn it like this? Can I earn it like that?” Greed for money in many ways. To that, he says, “O fool, O layman, give it up (JahIhi).”
“மனஸி வித்ருʼஷ்ணாம்”
(itrans: manasi vitRshNAm)
To develop dispassion in the mind, “ஸத்³பு³த்³தி⁴ம் குரு” (sadbuddhiM kuru) – develop a good intellect for that.
“புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன். முதுசூர் நடுங்க சக்தியை வாங்கத் தரமோ, கூவத்தவிடு பட குத்திய கங்கேயேனே வினையேற்கு என் குறித்தனையே”
(Tamil Quote: Puthiyai vaangi nin padhaampuyathil pugatti anbaal mukthiyai vaanga arigindrilen. Mudhusoor nadunga shakthiyai vaanga tharamo, koovathavidu pada kuthiya gangeyene vinaiyerku en kurithanaiye)
This is placed here as a prayer. The intellect exists to earn in the world and to be comfortable. But the primary purpose of the intellect is what is called Sadbuddhi here. To develop dispassion, one must contemplate again and again, “Ka te kanta” – “Why are we born in this world? Who is this wife? Who are these children?” Thinking like this, as said in the song “Think, O Mind” (Chinthai sei maname), dispassion will slowly arrive. Use the intellect for that. Reading the Puranas and the words of the Rishis will create an impact. Crystallize that. Use the intellect for that purpose. He says, “I have taken my intellect and fixed it at your lotus feet to receive liberation through love.” One must give devotion to God and receive liberation.
“குரு ஸத்³பு³த்³தி⁴ம் மனஸி வித்ருʼஷ்ணாம் யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்”
(itrans: kuru sadbuddhiM manasi vitRshNAm yallabhase nijakarmopAttam)
“The wealth one receives is according to the measure of one’s past penance,” says Avvaiyar. mElai means ancestors. How much wealth we get depends on the penance done by ancestors and our own past-life actions (Prarabdha). Therefore, with whatever money comes through that or through one’s own righteous duty (Nijakarmopattam), take that wealth (வித்தம் / vittam)…
“வித்தம் தேன வினோத³ய சித்தம்ம”
(itrans: vittaM tena vinodaya chittamm)
…and with that money, enjoy what you need and be happy. Do not be greedy; develop dispassion.
I cannot recite every verse; it would take two or three hours. So, I will speak on specific verses. Whatever Acharya says firmly as a direct instruction in Bhaja Govindam, he has placed as a prayer to God in his other hymns.
“நித்யம் ஸ்வோத³ர போஷணாய ஸகலானது³த்³தி³ஶ்ய வித்தாஶயா வ்யர்த²ம் பர்யடனம் கரோமி ப⁴வத: ஸேவாம் ந ஜானே விபோ⁴ । மஜ்ஜன்மாந்தர புண்யபாகப³லத: த்வம் ஸர்வ ஸர்வாந்தரஸ்திஷ்ட²ஸ்யேவ ஹி தேன வா பஶுபதே தே ரக்ஷணீயோஸம்யஹம் ॥”
(itrans: nityaM svodara poShaNAya sakalAnuddishya vittAshayA vyarthaM paryaTanaM karomi bhavata: sevAM na jAne vibho | majjanmAntara puNyapAkabalata: tvaM sarva sarvAntarastishThasyeva hi tena vA pashupate te rakshaNIyosmyaham ||)
This is a verse that says: “I wander the world in vain, seeking wealth just to feed my stomach. I do not know how to serve you, O Lord. But through some merit, I know that You are the indweller of all. Therefore, O Pashupati, protect me.” This beautiful verse appears in Sivananda Lahari.
Similarly, in the Kanchipuram song of Thiruppugazh:
“அற்றைக்கிரை தேடி அத்தத்திலும் ஆசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ”
(Tamil Quote: Attraikkirai thedi athathilum aasai pattri thaviyaatha pattrai peruveno)
Searching for daily food, for the day’s prey for the stomach. Attachment to wealth (Athathilum aasai) – we think if we have a little more money, we can be confident for tomorrow. No matter how much comes, the worry about tomorrow does not go away because of money. “Will I receive an attachment to You (Un kitta pattru) that does not falter while searching for daily food and craving wealth?” That attachment to You will remove my distress; will You not grant it? “O Victorious Lord with the spear (Vetri Kathirvela), who pierced the mountain, O Lord of Kanchi!” – thus goes a small verse in Thiruppugazh.
Let us look at another Bhaja Govindam verse:
“நளினீத³ளக³தஜலமதிதரளம் தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் । வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மானக்³ரஸ்தம் லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥”
(itrans: naLinIdalagatajalamatitaralaM tadvajjIvitamatishayachapalam | viddhi vyAdhyabhimAnagrasthaM lokaM shokahataM cha samastam ||)
Just as water on a lotus leaf is unstable and keeps moving, so is this life (ஜீவிதம் / jIvitam) – it is extremely fleeting (Atishaya chapalam). Understand that the world is gripped by disease and ego. Therefore, the entire world is stricken by sorrow (Shokahatam cha samastam). Only those who have discarded all attachments and are contented and established in purity are at peace; everyone else in the world is in suffering and sorrow.
He says the same in Shiva Aparadha Kshamapana Stotram:
“ஆயுர்னஶ்யதி பஶ்யதாம் ப்ரதிதி³னம் யாதி க்ஷயம் யௌவனம் ப்ரத்யாயாந்தி க³தா: புநர்ந தி³வஸா: காலோ ஜக³த்³ப⁴க்ஷக: । லக்ஷ்மீஸ்தோயதரங்க³ப⁴ங்க³சபலா வித்³யுச்சலம் ஜீவிதம் தஸ்மான்மாம் ஶரணாக³தம் கருணயா த்வம் ரக்ஷ ரக்ஷாது⁴நா ॥”
(itrans: Ayurnashyati pashyatAM pratidinaM yAti kshayaM yauvanaM pratyAyAnti gatA: punarna divasA: kAlo jagadbhakshaka: | lakshmIstoyatara~ngabha~ngachapalA vidyuchchalaM jIvitaM tasmAnmAM sharaNAgataM karuNayA tvaM raksha rakshAdhunA ||)
Every day, life is ebbing away. Youth is fading. Days that have passed do not return. Time is the devourer of the world (Kalo jagad bhakshaka). Wealth is as fickle as a ripple on water (Lakshmi thoya tharanga bhanga chapala), and life is as fleeting as a flash of lightning. Therefore, I surrender to You; protect me with Your mercy.
“பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த: தருணஸ்தாவத்தருணீஸக்த: । வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த: பரே ப்³ரஹ்மணி கோபி ந ஸக்த: ॥”
(itrans: bAlastAvatkrIDAsakta: taruNastAvattaruNIsakta: | vRddhastAvachchintAsakta: pare brahmaNi kopi na sakta: ||)
In childhood, children spend their time in play. In youth, they spend time in sensual pleasures. In old age, they spend time worrying. No one is attached to the Supreme Brahman.
“ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம் நிஸ்ஸங்க³த்வே நிர்மலோஹத்வம் । நிர்மலோஹத்வே நிஶ்சலிதத்த்வம் நிஶ்சலிதத்த்வே ஜீவன்முக்தி: ॥”
(itrans: satsa~ngatve nissa~ngatvaM nissa~ngatve nirmalohatvaM | nirmalohatve nishchalitattvaM nishchalitattve jIvanmukti: ||)
Through Satsang (holy company), non-attachment occurs, and attachments fade. Therefore, through whatever company our attachments fade—whoever repeats these ideas from Bhaja Govindam to us—because just saying it isn’t enough; I am someone struggling, caught in the disease of greed and past actions. Therefore, if a Mahane (Great Soul) with spiritual power says these things, there will be an impact immediately upon hearing. That is Satsang. The sayings of Great Souls, the ‘Voice of God’ (Deivathin Kural) by Periyava—such speech, and Acharya’s many hymns—all these are Satsang. If one does Satsang, attachments will fade. When attachments fade, delusion (Moha) goes; when delusion goes, the mind becomes still; when the mind is still, liberation while living (Jivanmukti) occurs.
“மா குரு த⁴னஜந யௌவனக³ர்வ³ம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் । மாயாமயமித³மகி²லம் ஹித்வா ப்³ரஹ்மபத³ம் த்வம் ப்ரவிஶ விதி³த்வா ॥”
(itrans: mA kuru dhanajana yauvanagarbaM harati nimeshAt kAla: sarvam | mAyAmayamidamakhilaM hitvA brahmapadaM tvaM pravisha viditvA ||)
Wealth, people, youth. Do not be prideful because “I have money,” “I have people,” or “I have youth.” Because all these will disappear in a moment.
Someone says, “I have bought a piece of land,” and the next time they look at it, some politician has snatched it. That’s it; one has to sit and cry that a crore of rupees is gone. In that way, “Time devours everything in a moment” (NimeshAt kAla: harati). Money keeps going up and down.
People. “My son and daughter are in America, they keep calling me to come.” In these days of high ticket prices, I don’t know if they are really calling! People say it! “My cousin is in the police”—such pride that because there are certain people, I can achieve anything.
Youth. Someone says, “Even at 50, my hair hasn’t turned grey; I eat whatever I want,” and suddenly they pass away. If there is this much pride in youth even above 50, or at 60 or 70, how much pride would those at 30 have? We should not believe in that. These are all just a scene. Do not believe this to be the absolute truth and get immersed in it. Leave this, understand the state of Brahman, and seek the path to Wisdom (Gnana).
In Shiva Aparadha Kshamapana Stotram:
“கிம் யானேந த⁴னேந வாஜிகரிபி⁴: ப்ராப்தேந ராஜ்யேந கிம் கிம் வா புத்ரகளத்ரமித்ரபஶுபி⁴: தே³ஹேந கே³ஹேந கிம் । ஜ்ஞாத்வைதத் க்ஷணப⁴ங்கு³ரம் ஸபதி³ரே த்யாஜ்யம் மனோ தூ³ரத: ஸ்வாத்மார்த²ம் குருவாக்யதோ ப⁴ஜ மன: ஸ்ரீபார்வதிவல்லப⁴ம் ॥”
(itrans: kiM yAnena dhanena vAjikaribhi: prAptena rAjyena kiM kiM vA putrakalatramitrapashubhi: dehena gehena kiM | j~nAtvaitat kshaNabha~nguraM sapadire tyAjyaM mano dUrata: svAtmArthaM guruvAkyato bhaja mana: shrIpArvativallabham ||)
Similarly: There is a vehicle, there is money, there is a servant, there is a kingdom, children, wife, friends, animals, the body, a house—do not think about these. These are transient (Kshanabhanguram). In a moment, you won’t know where they went. Whatever worldly thing we are attached to, either we must cry when we leave it at death, or we must cry when it leaves us. Therefore, knowing these are transient, believe the words of the Guru and worship Shiva (Parvativallabham Bhaja). O Mind, worship Parameshwara, the Lord of Parvati.
In the second verse of Muka Panchashati, Kataksha Shatakam:
“மாதர்ஜயந்தி மமதாக்³ரஹ மோக்ஷணாநி மாஹேந்த்³ரநீலருசி ஶிக்ஷணத³க்ஷிணாநி । காமாக்ஷி கல்பிதஜக³த்த்ரயரக்ஷணாநி த்வத்வீக்ஷணாநி வரதா³னவிசக்ஷணாநி ॥”
(itrans: mAtarjayanti mamatAgraha mokshaNAni mAhendranIlaruchi shikshaNadakshiNAni | kAmAkshi kalpitajagattrayarakshaNAni tvatvIkshaNAni varadAnavichakshaNAni ||)
Your glances grant boons. Your glance protects these three worlds that You Yourself created. ‘Mahendra Neela’ – Your glance has the skill to teach the sapphire how to shine beautifully.
“மமதாக்ரஹ மோக்ஷணாநி” – My ego, “mine, mine”—thinking that this house, car, and bungalow are mine—is like a ghost possessing me. He says, “May Your glances, which liberate me from that mine-ness, be victorious.”
Similarly, whatever Acharya said as an instruction in Bhaja Govindam, Arunagiri says here as a prayer: “I who desired this life which is like a flash of lightning, is this the result of my fate? O Golden One, O Jewel, O Substance, O Grace, O King who rides the peacock!” This life is like a flash of lightning. “I who desired this life which is like lightning, is this my fate? Will You not redeem me?”—thus the Great Souls pray.
I had a few more, but it is getting late. So I will say the final verse:
“குருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த:
ஸம்ஸாராத³சிராத்³பவமுக்த: ।
ஸேந்த்³ரியமானஸநியமாதே³வம்
த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥”
(itrans: gurucharaNAmbujanirbharabhakta: saMsArAdachirAdbhavamukta: | sendriyamAnasaniyamAdevam drakshyasi nijahRdayasthaM devam ||)
Shankara also ends with devotion. Even at the end of the Brahma Sutra Bhashya, Acharya concludes that through devotion, one can reach this supreme wisdom. He is a Great Soul who gives hope to everyone. That is why, even after 2500 years, we are still celebrating his Jayanthi today. He himself incarnated as Maha Periyava to rule with grace again and make Dharma flourish. “One who is a constant devotee at the lotus feet of the Guru (Gurucharanambuja nirbhara bhakta)”—he will soon be liberated from this cycle of birth and death (Samsara). “By controlling the senses and the mind (Sendriya manasa niyamat)”—having taken in the things said before in Moha Mudgaram and controlling the senses and mind—”You will see Bhagavan who dwells in your own heart.” If the Grace of the Guru is there, one can see.
“I don’t need anything else separately, O Lord; give me the bliss of my own nature (Swarupanandham) which is already within me,” Shadashiva brahmendra asks. If one has devotion at the lotus feet of the Guru (Gurucharanambuja), He will make you understand the truth of who you are. Thus he concludes with the final verse.
To show that chanting Govinda nama is blissful, once when someone complained to Swamigal, “Shouldn’t one be saying ‘Krishna Rama’ in old age?”, he showed it to me. “If one knew how blissful it is to say ‘Krishna Rama’, everyone, not just the elderly, would be saying it,” he said, and sang for a minute.
“Krishna Rama Govinda Hare Rama Krishna Govinda
Krishna Keshava Govinda Hare Rama Krishna Govinda
Krishna Anantha Mukunda Murare Vamana Madhava Govinda
Sridhara Keshava Raghava Vishno Lakshmi Nayaka Narasimha
Nanda Nandana Govinda Hare Rama Krishna Govinda
Navaneetha Chora Govinda Hare Rama Krishna Govinda
Krishna Anantha Mukunda Murare Vamana Madhava Govinda
Sridhara Keshava Raghava Vishno Lakshmi Nayaka Narasimha”
What he said that day was like nectar. It is deeply etched in my mind. If I can’t sleep, I will keep saying this and fall asleep.
Gopika Jeevana Smaranam – Govinda Govinda!
2 replies on “மோஹ முத்கரம்”
Thank you very much
ஆச்சார்யாளின் பஜகோவிந்தம் நேர்முக விளக்கம் கேட்ட ஆனந்தம், அதை மீண்டும் பல முறை கேட்டு பேரானந்தம்.
சாரின் YPM , ஆதி ஷங்கரரின் மோக முத்கரம், இவைகளால் அனைத்து வகையான கர்வமும் பங்கமாகி விடும் என்று தெரிகிறது. ஒவ்வோர் நாளும் இந்த விரிவுரை விளக்கம் கேட்டு கேட்டு பணிவுடன் (humility) வாழ பழகிக் கொள்ள உதவும். This will remove the delusion and will enable one to understand the real truth. ஸ்வாமிகள் நாம ஜபம் செய்த விதம் என்று பாடியது, ஓர் உற்சாகம், மேலும் குரு பக்தியும் தெரிகிறது. ஸ்வாமிகள் அந்த குரு பக்தியும், பணிவும், பகவானின் குணங்களை நினைத்து பக்தி பண்ண அருள வேண்டும் .