Categories
mooka pancha shathi one slokam

அனுபூதி விளக்கம்


கடாக்ஷ சதகம் முதல் ஸ்லோகம் பொருளுரை – அனுபூதி விளக்கம்

கந்தர் அனுபூதி ஸ்தோத்ரம் அருணகிரிநாதர் அனுபூதி அடைந்த பின்னர் அருளிச் செய்தது என்று தாயுமானவர் ஸ்வாமிகள் பாடுகிறார்.
“கந்தர் அனுபூதி பெற்று
கந்தர் அனுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி
இருக்கும் நாள் எந்நாளோ?” அப்படின்னு சொல்றார். அதனால் இது அனுபூதி பெற்று, பாடினது என்று தெரிகிறது. ஸ்வாமிகள் ‘இந்த கந்தர் அனுபூதி ஒன்றே போதும் பகவானை அடையரதுக்கு’ என்று சொல்வார். நிறைய பேர் அதனால தினமும் ஒரு ஆவர்த்தி பண்ணுவது என்று வெச்சிண்டிருக்கா. ஆனா ஒரு அனுபூதி பெற்ற மஹான் “வளைபட்ட கைமாதொடு மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ”.. “மதிகெட்டறவாடி மயங்கி அறக் கதி கெட்டவமே கெடவோ கடவேன்” என்றெல்லாம் பாடுவாரா? ‘ஒரு அனுபூதி பெற்றவருக்கு இதெல்லாம் என்ன? ‘ என்று தோணும்.
“கருணைக்கு அருணகிரி” என்று ஔவை பாட்டி சொல்லி இருக்கா! அருணகிரிநாதர் அனுபூதி அடைந்தாலும் , அவதார மஹான்கள் அந்த உயர்ந்த ஞான ஸ்திதியை அடைந்தாலும், அவா ‘அவதரித்து’ – கீழே இறங்கி வந்து , மத்தவாளை கை தூக்குவதற்காக அவாளுடைய வாக்கை விட்டுட்டு போயிருக்கா! இது சாதகர்களுக்காக! We go through so many emotions.. அதனால அனுபூதி நிலைமை என்று ஒன்று இருக்கு அப்படின்னு தெரிஞ்சுண்டு, அதுக்கு ஏத்த மாதிரி ஒண்ணொண்ணு பண்ணிண்டு, ‘all the ups and downs’ னு சொல்றோமே , அப்படி அந்த அனுபவங்களை எல்லாம் அப்படியே நமக்காக record பண்ணியிருக்கார் ‘கந்தர் அனுபூதி’ல. அதனால நம்மளுடைய பாதைல இதை படிச்சாலே நமக்கு உறுதுணையாக இருக்கும் என்று மஹான்கள் எல்லாம் இதை படிக்க சொல்லி அறிவுறுத்துறா. இதுல முதல் பாட்டு,
“நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் ஷண்முகனுக்கியல் சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.”
பொதுவா, சிலது தான் உருகும். தங்கம்னா உருகும். கல்லு எங்கேயாவது உருகுமா? ‘நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக’ – நெஞ்சம் என்கிற கல்லு எப்ப உருகும்? இந்த முருகப்பெருமானிடத்தில் தஞ்சம் அடைந்தால். -‘தஞ்சத்து’ .. இந்த நெஞ்சக் கனக்கல்லும் நெகிழ்ந்து உருகும்படி அருள் செய்யும் – ‘தஞ்சத்து அருள் ஷண்முகன்’. இப்பேற்பட்ட கருணை பண்ணியதால அவனைப் பற்றி நான் பாடணும். இந்த ஸ்தோத்ரம் நல்லா அமையறதுக்கு நான் ஐந்துகரத்தனை வேண்டுகிறேன் அப்படின்னு ஆரம்பிக்கிறார். இதை படிச்ச உடனே எனக்கு கடாக்ஷ சதகம் முதல் ஸ்லோகம் ஞாபகம் வர்றது.
मोहान्धकारनिवहं विनिहन्तुमीडे
मूकात्मनामपि महाकवितावदान्यान् ।
श्रीकाञ्चिदेशशिशिरीकृतिजागरूकान्
एकाम्रनाथतरुणीकरुणावलोकान् ॥
மோஹாந்தகாரநிவஹம் வினிஹந்துமீடே
முகாத்மநாமபி மஹாகவிதாவதான்யான் |
ஸ்ரீகாஞ்சிதேச’சி’சி’ரீ க்ரு’தி ஜாகரூகான் |
ஏகாம்ரநாததருணீ கருணாவலோகான் ||
“மோஹாந்தகாரநிவஹம் வினிஹந்துமீடே” – இந்த நெஞ்சம் ஏன் கல்லாயிடறது? அப்படின்னா, நம்மளுடைய ‘நான்’, ‘என்னோடது’ அப்படிங்கற ‘ஈகோ’ தான்! ‘அகந்தை’ தான்! இதையெல்லாம் வெச்சு நான் சாதித்து விடுவேன் அப்படிங்கிற மோஹம். இப்படி பண்ணுவேன், அப்படி பண்ணுவேன், சம்பாதிப்பேன், வீடு கட்டுவேன்.. இதெல்லாம் ஸுகத்தை தர போறது என்று நினைச்சு, அது எவ்வளவு துக்கத்தை கொடுத்தாலும் பல்லை கடிச்சுண்டு இன்னும் இன்னும் அப்படின்னு போறோமே ! – இதுதான் அந்த ‘அஞ்ஞானம்’.. ‘அந்தகாரம்’. இந்த அந்தகாரம் ‘நிவஹம்’ – கூட்டமா இருக்கு. இன்னும் வளர்ந்துண்டே தான் போறது! இது நமக்கு வயசாக வயசாக தான் தெரியறது. நான் நெனச்சது எதுவுமே நடக்கலை அப்படின்னு! Destinyபடிதான் நடக்கிறதுன்னு! ஆனாலும் நாம விடாம, மோஹத்தால இன்னும் இன்னும் என்று chase பண்ணிண்டே இருக்கோம். இன்னும் இன்னும் கஷ்டப்பட்டு அந்த இருட்டிலேயே தவிக்கிறோம்! அந்த ‘மோஹாந்தகாரநிவஹம்’ – இருள் கூட்டத்தை, ‘நிஹந்தும்’ன்னா போக்குவதற்கு.. ‘விநிஹந்தும்’ – ரொம்ப கடுமையான இருட்டு இல்லையா, அதை அடியோடு போக்குவதற்கு, நான் தியானிக்கிறேன். எதை தியானிக்கிறேன்? ‘ஏகாம்ரநாததருணீ’ – ஏகாம்ரநாதருடைய மனைவியான காமாக்ஷியுடைய ‘கருணாவலோகான்’ கருணா கடாக்ஷத்தை ‘ஈடே’ – தியானிக்கிறேன்.
அது இன்னும் என்ன பண்றது? ‘மூகாத்மநாமபி மஹாகவிதாவதான்யான்’ – ஊமைக்கு கூட மிகப் பெரிய கவிதை என்கிற செல்வத்தை அருளுகிறது காமாக்ஷி கடாக்ஷம் ! இப்படி எல்லாமே ஆச்சர்யமாக இருக்கிறது! இருட்டை வெளிச்சமாக்குகிறது! ஊமையை பேச வைக்கிறது! இது மூக கவியினுடைய அனுபவமே!
வெளிச்சம் கொடுக்கிறது என்றால் சுடுமா அப்படின்னா, இல்ல இல்ல.. ‘ஸ்ரீகாஞ்சிதேச’சி’சி’ரீக்ரு’தி ஜாகரூகான்’ – காஞ்சி தேசத்தையே குளிர பண்றது!
எப்படி நெஞ்சக் கனக்கல்லா இருந்தாலும், பகவானை தஞ்சம் புகுந்தால் அந்த கல்லையே உருக்கி முருகப்பெருமான் ஆட்கொள்கிறாரோ, அப்படி இந்த காமாக்ஷி கடாக்ஷம் இப்படி ஆச்சர்யமா பண்றது! அதனால நூறு ச்லோகம் காமாக்ஷி கடாக்ஷத்தைப் பாடறார்.
கந்தர் அனுபூதில அருணகிரிநாதர் 51 பாடல்களை பாடுகிறார்!கந்தனுடைய பெருமையை, தன்னுடைய அனுபூதியை சொல்றார். ஆனா ups and downs கூட இருக்கு அப்படிங்கறதையும் சொல்லிண்டே வரார்.

பகவத் கீதையினுடைய 11ஆவது அத்தியாயத்தில பகவான் க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு விச்வரூபத்தை காமிச்ச பின்னால, என்ன பண்ணனும் அப்படின்னு சொல்றார். பண்ணக்கூடிய கார்யமா ஒண்ணு சொல்றார். இதை ரொம்ப ஸாரமா, ரொம்ப முக்கியமானதா ஸ்வாமிகள் என்னை சங்கர பாஷ்யத்தை எழுதிக்க சொன்னார். அந்த ச்லோகம் என்னன்னா,
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः|
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ||
மத்கர்மக்ரு’ந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ ||
அப்படின்னு ஒரு ஸ்லோகம் இதை ஒவ்வொண்ணையும் எடுத்துண்டு, ‘அனுபூதி’ல எங்க சொல்றார்ன்னு ஒரு 5 மினிட்ஸ் பேசறேன்.

கிருஷ்ண பகவான் சொல்றார் ‘மத் கர்மக்ருத்’ – என்னுடைய கார்யத்தை செய்றவன். இந்த அனுபூதில என்னுடைய கார்யம் அதாவது, பகவானுடைய கார்யம் என்ன பண்ணனும் அப்படிங்கறத சில பாடல்கள்ல சொல்றார்.
“ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமாமுகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.’
இந்த ‘ஆடும் பரி’ அப்படிங்கறதுல, ‘பரி’ என்பது பொதுவா ‘குதிரை’. இங்க ‘தோகை விரித்தாடும் மயில்’. ‘வேல்’ங்கிறது ஞானம். “ஆடும்பரி, வேல், அணி சேவல்” என்று எப்போதும் ‘பாடும் பணியே பணியா அருள்வாய்’ – உலகத்தவர்களிடம் போய் பண்ற காரியமெல்லாம் நிறைய பண்ணியாச்சு.. எத்தனையோ ஜென்மாக்கள்ல பண்ணியாச்சு. ‘அனுபூதி’ வேணும்னா என்ன பண்ணனும்?
“ஆடும் பரிவேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனி யானை சகோதரனே.”
“முருகன் குமரன் குஹனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.”
‘நீதான் என் குரு! முருகா! குமரா!’ என்று சொல்ல சொன்னாலும், மனசு என்னவோ mechanicalஆ சொல்றது. உருக மாட்டேங்கறதே! அந்த ‘நெஞ்சக் கனக்கல்லு’ல உருக்கத்தை ஏற்படுத்தி, அகந்தையை போக்கி, பகவன் நாமத்தை சொல்றச்சே உருகவும், ஆடிப் பாடவும், கண் ஜலம் விட்டு, தொண்டை தழுதழுத்து, மயிர்க்கூச்செரிந்து, அதுல ஒரு ருசி ஜாஸ்தி ஆகறதுக்கு அநுக்ரஹம் பண்ணு.
“முருகன் குமரன் குஹன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்” – அந்த பக்தி உணர்வை எப்பொழுது அருளப் போகிறாய்? அப்படின்னு கேட்கிறார். இது ‘மத்கர்மக்ரு’த்’. பண்ண வேண்டிய கார்யம் ‘நவவித பக்தி’.

‘மத்பரம:’ – பகவானையே பரம்பொருளா நினைக்கிறவன். பகவானையே அடையணும் அப்படின்னு நினைக்கிறவன். எஜமானன்கிட்ட வேலை பார்க்கிறவன் அவன் கொடுக்கிற காசுக்காக வேலை பார்ப்பான். நான் எஜமானனை அடைய வேண்டும் அப்படின்னு யாரும் நினைக்க போறது இல்ல. ஆனா நாம ஸ்கந்த ஸாலோக்யத்தை அடையணும், வைகுண்டத்துக்கு போகணும் அப்படின்னு ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்தை படிச்சார். இந்த இடம் அதாவது ஸ்கந்த லோகம், வைகுண்டம், கைலாசம் அப்படிங்கறது ஒரு உருவகம் தான். பகவானோடேயே ஐக்கியம் ஆகணும் அப்படின்னு நினைக்கிறவன் ‘மத்பரம:’. பக்தனுடைய லக்ஷணம் வேற! சாதாரண ஜனங்களுடைய லக்ஷணம் வேற. அவன் இந்த பகவானுடைய கார்யங்களை எல்லாம் எதுக்காக பண்றான் அப்படின்னா, இங்க ‘க்யாதி லாப பூஜை’க்காக இல்லை. பகவானை அடையறதுக்காக பண்றான். லக்ஷ்யம் மாறாமல் மனசுல வெச்சுண்டே இருந்தா தான் பண்ண முடியும். Frustrate ஆகாம பண்ணனும்.

‘அனுபூதி’ல
“செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்றொவ்வாததென உணர்வித்தது தான்
அவ்வா றறிவார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க்கு இசைவிப்பதுவே.”
‘செவ்வான் உருவில் திகழ் வேலவன்’ – செவ்வானம் எப்படி செக்கச்சவேல் ன்னு இருக்கிறதோ அப்படி முருகப்பெருமான், “இந்த உலக விஷயங்கள், பணம், பொருள் இதெல்லாம் ஒவ்வாதது. ஒவ்வாமைனா allergy. இப்படி இதெல்லாம் உனக்கு ஒவ்வாதுன்னு புரிய வச்சா தான் உணர முடியும். இது உலகத்தவா கிட்ட எல்லாம் explain பண்ண முடியாது. They are very happy where they are! அதனால இதை என்னால புரிய வைக்கவே முடியாது அப்படின்னு சொல்றார். ‘எனக்கு அந்த பகவானை அடையணும்ன்னு நினைச்ச உடனே இந்த உலகத்து விருப்புகள் எல்லாம் விலகி போயிடுத்து.’ அப்படிங்கிறார்.
“திணியான மனோசிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே.”
என் மனசுல முருகப்பெருமானுடைய பாத தாமரைகள் மலர வேண்டும். பகவானுடைய பாதத்தை மனசுல நிறுத்தறது, உலக விஷயங்களை எல்லாம் தள்ளி பகவானுடைய பஜனம் பண்றது, அவனையே அடையணும்ன்னு தீவிரமா நினைக்கிறது ‘மத்பரம:’

‘மத்பக்த: ‘ – என்னுடைய பக்தன். அதுக்கு ஆசார்யாள் என்ன சொல்றார். ‘ஸர்வாத்மநா ஸர்வ பாவேன ஸர்வதா’ – எப்பொழுதும் எல்லா பாவத்திலும் முழு மனதோடு பகவானுடைய கார்யத்தை பண்ணுகிறவன் பகவானுடைய பக்தன். இதுல,
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ ||
நமக்கு அம்மா, அப்பா, பிரண்ட்ஸ், பணம், படிப்பு, மனைவி, மக்கள் இதெல்லாம் என்னோடது அப்படின்னு சொல்லி, இதுக்காக தான் நாம basicஆவே வாழ்க்கையை அதுக்காக வாழறோம். ஆனா இது எல்லாமே பகவான் தான்.

“என் தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மயில் வாகனனே.”
என்னுடைய தாயும் எனக்கு அருளும் தந்தையும் நீதான்! அதாவது முருகன் தான்! அப்படின்னு சொல்றார்.
“முருகன் தனிவேல் முனிநம்குரு என்றருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே.”
‘முருகன் தான் என் குரு!’ என்று எனக்கு அவர் காமிச்சு கொடுத்தார்ன்னு சொல்றார். அப்புறம்,
‘த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ’ அப்படிங்கறதுக்கு,
“மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.”
எனக்கு மன்னனும் நீ தான்! எனக்கு பொன்னும் நீ தான்! பொருளும் நீதான்! மணியும் நீதான்! என் செல்வமும் நீதான்! என் தலைவனும் நீ தான்! அப்படின்னு இந்த ‘த்ரவிணம்’ – பொருள் எல்லாம் வெளியில இருக்கிறது கிடையாது. பேங்க்ல இருக்கிறது கிடையாது. எல்லாமே நீ தான்!
‘வித்யா த்வமேவ’ – படிப்பும் நீதான்!
“யாமோதிய கல்வியும் எம்அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.”
இங்க சத்தியத்தையும் தர்மத்தையும் கொண்டு வந்துடுறார். ‘அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர்’. நாக்கை வச்சுண்டு பகவானுடைய கார்யத்தை பண்ணுங்கோ! நாக்கை வச்சுண்டு பண்றது ரொம்பவே safest. நம்மளுடைய Voiceஐ வெச்சு பகவானுடைய கார்யத்தை ஈடுபடுத்தினா, basically we begin to develop faith. முதன் முதல்ல அதுல நம்பிக்கை இருந்தா தான் அதை பண்ணப் போறோம். முதல்ல நம்பிக்கையை கொண்டு வரும். அதுக்கப்புறம் அதை தெய்வீகத்துல கொண்டு போய் விட்டு விடும். ‘அம்மா, அப்பா, இன்னும் எல்லாமே நீ தான்!’ அப்படிங்கிற பாவத்துல அருணகிரிநாதர் இங்க பாடறார்.

‘ஸங்கவர்ஜித:’ – ஆசார்யாள் இதுக்கு தனம், பத்தினி, புத்ராள் அப்படிங்கற சங்கத்தை விடறது, பற்றை விடுவது. பற்றை விட்டுட்டு பகவானை பஜனம் பண்றவன் என்னை அடைவான். இது நிறைய இருக்கு ‘அனுபூதி’ல.
“சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.”
அப்படிங்கிறார்.
“சிங்கார மடந்தையர் தீநெறிபோய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ஷண்முகனே
கங்கா நதிபால க்ருபாகரனே.”
“பாழ்வாழ்வெனுமிப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாமுளவோ
வாழ்வாய் இனிநீ மயில் வாகனனே.”
இப்படின்னு பல விதத்தில் போட்டு சண்டை போடுறார். கெஞ்சறார். ‘பாழ்வாழ்வு’ அப்படிங்கிற மாயையில் என்னை தள்ளி விட்டுவிட்டு,
“இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன்அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர்வேலவனே.”
உன்னுடைய 12 தோள்கள்லயும் என்னுடைய வாக்கை, ஸ்தோத்திரத்தை எல்லாம் மாலையா போட்டுண்டு, இதை நீ ‘மாயை’ அப்படின்னு சொல்ற!
‘இல்லே எனும் மாயையில் இட்டு’, நான் பண்ற தப்பை மட்டும் துஷ்கர்மா அப்படின்னு சொன்னா, எப்படித்தான் நான் இதுல இருந்து escape ஆறது! அப்படின்னு ஸ்வாமியை நிறைய கெஞ்சறார், கொஞ்ச றார், சண்டை போடறார்!
‘நிர்வைர: ஸர்வபூதேஷு’ – பக்தன் என்பவன் தன் கிட்ட அபகாரம் பண்றவன் கிட்டயும் வைரம், enemity இல்லாம இருக்கணும். உயர்ந்த ஸன்னியாசிகளால அப்படி இருக்க முடியும்! அது மாதிரி,
“கிரிவாய் விடுவிக்ரமவேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே.”
‘கிரிவாய் விடுவிக்ரமவேல்’ – க்ரௌஞ்ச மலை மேல வேலை விட்ட, ‘இறையோன் பரிவாரம்’ – அவனுடைய பரிவாரத்தில, அதாவது பக்தர்களுடைய கூட்டத்தில சேரறது ஒண்ணு தான் நீ பண்ண வேண்டியது. அதுக்கு அகந்தை போகணும். – ‘அரிவாய் அடியோடும் அகந்தையையே’. அந்த அகந்தை என்கிற egoவை, completeஆ annihilate பண்ணனும். அடியோட cut பண்ணி போடணும்! அதுக்கு ‘பொறையாம் அறிவால்’ – உண்மையான ஒரு அறிவால், பொறுமையா எல்லாத்தையும் பொறுத்துண்டு, பஜனத்தை பண்ணிண்டே வந்தா ஈகோ போயிடும். பகவானுடைய கூட்டத்தில் சேரலாம். அந்த உத்தம பக்தர்கள் almost சன்னியாசிகள் மாதிரி தான். அவா ‘நிர்வைர: ஸர்வபூதேஷு’ என்று இருப்பா! அவா,

‘ய: ஸ மாமேதி பாண்டவ’ – ‘ஹே அர்ஜுனா! அப்படி இருக்கிறவா என்னை வந்து அடைவா ‘ அப்படின்னு பகவான் சொல்றார்.
‘நான் இப்படி பகவானை அடைந்தேன்’ அப்படின்னு அருணகிரிநாதர் அநுபூதில நிறைய பாடல்கள்ல சொல்றார்.

“தன்னந்தனி நின்றது தான்அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ்சுடரே.”
“தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன்பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.”
“சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.”
அப்படின்னு வியக்கறார் அவருக்கு கிடைத்த அனுபூதியை!
நம்ம அளவிலேயும் அனுபூதி மாதிரி ஒரு சொட்டு தோணும். அப்புறம் மறுபடியும் வழுக்கி விழுந்திடுவோம். திரும்ப மறுபடியும் முயற்சி பண்ணுவோம். அதனாலதான், இந்த மாதிரி மாத்தி மாத்தி பாடல்களை எழுதி hope கொடுக்கிறார். மஹான்கள் எல்லாம் அப்படித்தான். அதனால பரவால்ல திரும்ப எழுந்துக்கோ! திரும்ப முயற்சி பண்ணு! அப்படின்னு அந்த hopeஐ திரும்ப திரும்ப கலந்து கலந்து கொடுத்திருக்கிறார்.
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குஹுனே.”

வெற்றிவேல் முருகனுக்கு.. ஹர ஹரோஹரா.

3 replies on “அனுபூதி விளக்கம்”

ரொம்ப அழகா, ஆனந்தமா இருக்கு. நீங்கள் சொல்வதை கேட்டு அந்த முருகனின் பாதங்களைப் பற்றிக்கொண்டு மிகவும் பணிவன்புடன் பக்தி வெள்ளத்தில் திளைக்க மனம் ஏக்கமாக இருக்கிறது. ஆஹா, மிக மிக அற்புதம், தேர்ந்த வார்த்தைகள், மீண்டும் மீண்டும் கேட்டு பக்தி வளர ஸ்வாமிகளையும், சாரையும் வேண்டுகிறேன்.💅🙏

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
என உரைத்த பாரதி போல் , எல்லா இடத்திலும், எதிலும் அந்த முருகனின் அருள் மற்றும் அனுபூதியும் கிடைக்க ஓர் பிரார்த்தனை.

அனுபூதி விளக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் அருமை. அதை நீங்கள் கடாக்ஷ சதகத்தின் முதல் பாடலுடன் இணைத்து, கூடவே பகவத் கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பொருந்தும் விதமாக சொன்னதும் மிக அருமை🙏

பகவத்கீதை ஸ்லோகத்தின் பதங்களுக்கு ஆசார்யாள் பண்ணிய சில சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் ஞாபகம் வருகிறது.

‘மத் கர்மக்ருத்’ – ‘த்வத் பாதாம்புஜம் அர்சயாமி’ என்று ஆரம்பிக்கிற ஸ்லோகத்தில், ” ஹே சம்போ! ஜகத்குருவே! உன் திருவடிக் தாமரையை பூஜித்து, உன்னையே இடைவிடாது தியானித்து, உன்னையே சரணடைகிறேன். வாக்கினால் உன்னையே வேண்டுகிறேன். விண்ணோர்களாலும் வேண்டப்படுகிற கருணாகடாக்ஷத்தை எனக்கு கொடுத்து, என் மனஸுக்கும் சௌக்கியமான உபதேசத்தை அருள் பண்ணு’ என்று வேண்டுகிறார். ‘கஞ்சித் காலம் உமாமஹேச’ ஸ்லோகத்தில், “ஹே உமாமஹேச்வரா! கொஞ்ச நேரம் உன் திருவடிகளை அர்ச்சித்து, கொஞ்ச நேரம் உன்னை தியானம் பண்ணி ஸமாதி நிலை அடைந்து, கொஞ்ச காலம் நமஸ்காரம் பண்ணி, கொஞ்ச காலம் உன் கதைகளை ச்ரவணம் பண்ணி, கொஞ்ச காலம் உன் உருவத்தை தர்சனம் செய்து, கொஞ்ச காலம் துதித்து, யார் இப்படி தன் மனஸை சந்தோஷத்தோடு உன்னிடம் அர்ப்பணம் செய்றானோ, அவன்தான் இந்த லோகத்திலேயே மோக்ஷம் அநுபவிக்கிற ஜீவன் முக்தன்.” என்று சொல்கிறார். இப்படி பகவானுடைய காரியத்தை பண்ணிக் கொண்டிருப்பவன் ‘மத் கர்மக்ருத்’.

அடுத்து ‘மத் பரம:’.
‘த்ரயீவேத்யம் ஹ்ருத்யம்’ ஸ்லோகத்தில், “வேதங்களால் அறியத் தக்கவரும், மனதிற்கினியவரும், முப்புரங்களை அழிப்பவரும், எல்லாவற்றிற்கும் முதல்வரும், மூன்று கண்களை கொண்டவரும், ஜடாபாரத்தினால் ரொம்ப கம்பீரத்தோற்றமுடையவரும், அசையும் பாம்பை மாலையாக அணிந்தவரும், மானைக் கையில் ஏந்தியவரும், தேவர்களில் சிறந்தவரும், ஸ்வயம் ப்ரகாசமானவரும், என்னிடம் கருணையுள்ளவரும், ஜீவர்களுக்கு நாயகரும், அறிவிற்கு உறைவிடமானவரும், அம்பிகையுடன் கூடியவரும், நடிப்பு, நாடகம், நாட்டியம் போன்றவற்றில் திறமை மிகுந்தவருமான பரமசிவனை ஹ்ருதயத்தில் தியானிக்கின்றேன்” என்கிறார். ‘கதா வா த்வாம் த்ருஷ்ட்வா’ ஸ்லோகத்தில் “உன்னை பார்த்து, உன் திருவடிகளை இரண்டு கைகளாலும் பற்றி, சிரஸிலும், கண்ணிலும், மார்பிலும் அழுத்தி இறுகத் தழுவிக்கொண்டு, மலர்ந்த தாமரை போன்ற நறுமணத்தை முகர்ந்து, ப்ரம்மா முதலான தேவர்களாலும் அடைய முடியாத மகிழ்ச்சியை நான் அடைவது எப்போது?” என்று ஈஸ்வரனையே பரம்பொருளாக நினைத்து கேட்கிறார். இது ‘மத் பரம:’.

அடுத்து ‘மத் பக்த:’. உத்தம பக்தியின் லக்ஷணங்களை ஆசார்யாள் 59, 60, 61 மூன்று ஸ்லோகங்களில் காட்டுகிறார். 61ஆவது ஸ்லோகமான ‘அங்கோலம் நிஜபீ³ஜஸந்ததி:’ யில், “அழிஞ்சல் மர விதைகளை மேற்கோள் காட்டுகிறார். அந்த விதைகள் பூமியில் விழுந்த பின், ஊர்ந்து சென்று மீண்டும் அம்மரத்திலேயே ஒட்டிக் கொள்ளும். அந்த அழிஞ்சல் மர விதைகள் போலவும், ஊசி காந்தக்கல்லை சேர்வது போலவும், தனது கணவனிடமே மனஸை வைத்திருக்கும் பதிவ்ரதை போன்றும், மரத்தைக் கொடி பற்றிக் கொள்வது போலவும், நதி சமுத்திரத்தை அடைவது போலவும், ஒருவனது உள்ளத்தின் ஓட்டம் பரமசிவனது திருவடித்தாமரையை நாடி எப்போதும் நிலைபெற்றிருந்தால் அதுவே பக்தி எனப்படும்” என்கிறார். இப்படி பக்தியின் குணாதிசயங்களை சொல்லிக் கொண்டே ‘பக்தி எதைத்தான் செய்யாது?’ என்று கண்ணப்பனின் உதாரணத்தை சொல்கிறார் ‘மார்கா வர்தித-பாதுகா’ ஸ்லோகத்தில். “வழிநடந்து தேய்ந்த கண்ணப்பனின் பாதரக்ஷை பசுபதியான உனக்கு சிரஸில் வைக்கப்படும் கூர்ச்சமாகிறது. அந்தக் கண்ணப்பன் வாயிலிருந்து உமிழ்ந்த நீர் முப்புரமெரித்த உனக்கு திவ்ய அபிஷேகமாகிறது. அவன் சிறிது உண்டு மிச்சமான மாமிசக் கவளம் புதிதாக உண்டாக்கிய நைவேத்யமாகிறது. இவற்றையளித்த வேடனும் எல்லா பக்தர்களுக்குள் மிகச்சிறந்தவனாக ஆகிவிட்டான்! என்ன ஆச்சர்யம்! பக்தி எதைத்தான் செய்யாது?” என்று வியக்கறார். இது ‘மத் பக்த:’.

‘ஸங்கவர்ஜித:’ ‘ஆசா-பாச-க்லேச-துர்வாஸனாதி’ ஸ்லோகத்தில், “எனது மனமாகிய பெட்டி, ஆசாபாசங்களால் கெட்ட வாஸனைகள் நிரம்பியிருக்கிறது. அதை உங்களுடைய திருவடித் தாமரையின் சிறந்த நறுமணங்கள் மணமுள்ளதாகச் செய்யட்டும்.” என்று வேண்டுகிறார். நம் பற்றுகளை அகற்றுவதற்கு உரிய ஸ்லோகம். ‘நித்யம் ஸ்வோதர- போஷணாய’ ஸ்லோகத்திலும் “ஹே விபோ! எனது வயிற்றை வளர்க்கவே செல்வத்தில் ஆசை கொண்டு, பலரையும் நாடி வீணாக அலைந்து கொண்டு இருக்கேன். உன் சேவையை அறிந்ததில்லை. எனது முற்பிறவிகளில் செய்த புண்ணிய பலனால் எல்லா உயிர்களிலும் உறைபவராக உங்களை தெரிந்து கொண்டேன். அதனால் உங்களால் காப்பாற்றப்பட வேண்டியவனாகிறேன்.” என்கிறார். “ப்ரலோபாத்யை: அர்த்தாஹரண – பரதந்த்ரோ” ஸ்லோகத்திலும் “என் மனமானது பேராசை முதலான தீய குணங்களால் பிறர் பொருளை அபஹரிப்பதில் நோக்கங் கொண்டு பணக்காரர் வீட்டில் நுழைவதில் ஊக்கங்கொண்டு பலவகையில் திரிகின்றது. இந்த மனமாகிய திருடனை நான் எப்படி சகிப்பது? நீயோ மகா திருடனாக இருக்கிறாய். அதனால் என்னை உனக்கு உட்பட்டவனாக ஆக்கிக்கொண்டு, குற்றமற்றவனான என் விஷயத்தில் அருள் புரிய வேண்டும்” என்கிறார். இது ‘ஸங்கவர்ஜித:’ – பற்றை விட்டுவிட்டு பகவானை பஜனம் பண்றவன். அதற்கும் அந்த பகவானையே வேண்டுகிறார் இந்த ஸ்தோத்திரங்களில்.

அடுத்து ‘நிர்வைர: ஸர்வபூதேஷு’ – எல்லா உயிர்கள் கிட்டயும் வைரம், enemity இல்லாமல் இருப்பது. ‘நரத்வம் தேவத்வம்’ ஸ்லோகத்தில் “நான் புழுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, கொசுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, ஒரு மாடாகத்தான் ஜன்மா எடுத்தால் என்ன? தேவனாகவோ, மநுஷ்யனாகவோ, ம்ருகமாகவோ, பறவையாகவோ – இப்படி எந்த ஜன்மா எடுத்தால் என்ன? உன்னுடைய பாதத்தை ஸ்மரிக்கிற பரமானந்த வெள்ளத்தில் மட்டும் ஹ்ருதயம் தோய்ந்து கிடக்குமானால், அப்போது எந்த உடல் வாய்த்தால்தான் என்ன?” என்கிறார். கொசுவாக இருந்துங்கூட பக்தி பண்ணமுடியுமானால், அந்த ஜன்மா எடுக்கக்கூட பயப்படவேண்டாம். மநுஷ்ய உடம்பாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டே ஆனந்தமாக பக்தி பண்ணிக்கொண்டு, ஸமஸ்த ப்ராணிகளிடமும் நிறைந்த அன்போடு இருக்க முடியும் என்றால் அப்போது பகை என்பது தான் ஏது? இது ‘நிர்வைர: ஸர்வபூதேஷு’.

‘ய: ஸ மாமேதி பாண்டவ’ – ‘ஹே அர்ஜுனா! அப்படி இருக்கிற பக்தன் என்னை வந்து அடைகிறான் ‘ என்று பகவான் சொல்கிறார். ஆசார்யாளும் ‘இதம் தே யுக்தம் வா பரமசிவ காருண்யஜலதே’ ஸ்லோகத்தில் பரமேச்வரனுடைய காருண்யத்தை எண்ணி பூரிக்கிறார். “உமது அடியையும் முடியையும் காண வேண்டி பிரம்மாவும், திருமாலும் முறையே பறவையாகவும், மிருகமாகவும் உருக்கொண்டு ஆகாசத்திலும் பூமியிலும் அலைந்து களைத்துப் போய் விட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு தர்சனம் கிடைக்கவில்லை. அப்படியிருக்க எனக்கு எதிரில் எவ்வாறு காணும்படியாக இருக்கிறீர்கள்? இது உமக்கு பொருத்தம் தானா?” என்று தனக்கு கிடைத்த தர்சன அனுபவத்தை இங்கே சொல்கிறார்.

சிவ லீலைகளுக்கு முடிவே இல்லை. பகவானுடைய சரிதம் என்னும் நதியிலிருந்து ‘சிவானந்த லஹரி’ (சிவானந்த வெள்ளம்) பெருகுகிறது. ஈச்வரனின் சரித்ரங்களை — லீலா விருந்தாந்தங்களை — கேட்கக் கேட்க, நினைக்க நினைக்க அவர் செய்திருக்கிற அத்புதங்களில் நாமும் நம்மை கரைத்து பக்தி பண்ணிக் கொண்டிருந்தால், “ய: ஸ மாமேதி – அப்படி இருக்கிற பக்தன் என்னை வந்து அடைகிறான்” என்று கிருஷ்ண பகவான் உறுதி கொடுத்திருப்பது போல், “பகவானுடைய சரித்திரங்களில் இருந்து பெருகுகிற சிவானந்த வெள்ளம், பாவங்கள் என்கிற அழுக்குகளைப் போக்கி, புத்தியெனும் வாய்க்கால் வழியாக பாய்ந்து, பிறவிச் சுழல் உண்டாக்கும் பெரிய துன்பத்தை போக்கி அமைதியை உண்டாக்கி, என்னுடைய மனமாகிய மடுவில் தங்கி, முடிவில் பகவானை அடையச் செய்யும்” என்று ஆசார்யாளும் வழிகாட்டி இருக்கிறார். 🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.