Categories
mooka pancha shathi one slokam

முக்திக்கு வித்தாகும் மூர்த்தி

ஆர்யா சதகம் 73வது ஸ்லோகம் பொருளுரை – முக்திக்கு வித்தாகும் மூர்த்தி

मूर्तिमति मुक्तिबीजे, मूर्ध्नि स्तबकित-चकोरसाम्राज्ये ।
मोदितकम्पाकूले, मुहुर्मुहुर्मनसि, मुमुदिषा‌sस्माकम् ॥

ஸ்வாமிகள் ஆராதனை காணொளிகள் – Swamigal Aradhana 2023 photos videos

3 replies on “முக்திக்கு வித்தாகும் மூர்த்தி”

Exclusive pravachnam!அவ்வையாரிலிருந்து, மாணிக்கவாசகர், சிவானந்தலஹரி இவற்றிலிருந்து குருவின் மகத்வம் பற்றி விவரித்தது மிக அருமை! எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும் சொற்பொழிவு. திரு ஸுந்தர்குமார் பற்றிக் கூறும்போது எப்படி குருபக்தி நம் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்கள் மீறி குருபக்தி க்கு முக்யத்வம் அளித்து , ஸ்வாமிகளின் பூஜையில் கலந்து கொண்டார் என்பது அனைவருக்கும் ஒரு போதனை!
ஸ்லோகத்தின் அர்த்தம் சொல்லியது மிக அருமை எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் !

சகோர பக்ஷியின் சாம்ராஜ்யமே சந்த்ரன் தான் அல்லவா? அந்த சந்த்ரனில் ஒழுகும் அமிர்தமே அதற்கு ஆகாரம். அம்த நிலவையே தன் தலையில் அணிந்த தேவி நமக்கு மோக்ஷம் அளிக்கிறாள். தர்மார்த்த காம மோக்‌ஷம் என்ற சதுர்வித குரு ஷா ர் த் தங்களையும் அளிக்கும் விதமாக ஸ்ரீவித்யா ஸ்வரூபிணியாக காமாக்ஷியை வழிபட்டால் மன நிறைவு ஏற்படும்.
முக்திக்கு வித்தானதும், சகோர பக்ஷி க்கு உயிரான சந்த்ரனை தேவி சிரஸில் அணிந்திருக்கிறாள்.என்று விளக்கும் இந்த ஸ்லோகத்தினை கணபதி அவருக்கே உரித்தான எளிமையான பாணியில் விவரித்துள்ளார்.
ஜய ஜய ஜகதம்ப சிவே.

நமஸ்காரம் 🙏🙏
ஸ்ரீ ஸ்வாமிகள் ஆராதனை பற்றிய பதிவின் மூலம் ஸ்வாமிகளின், ஆசிகளை பெற ஸ்தோத்திர‌ பாராயணம் பிரதானமானது என்பது தெளிவு. எம் போன்ற ஸ்த்ரீகளுக்கு வேத பாராயணம் செய்ய
அதிகாரம் இல்லை ஆனதால் ஸ்தோத்திர பாராயணதம் எளிதான பக்திக்கு ஓர் வித்து. பின்னர் இந்த தொடர் ஸ்தோத்திர பாராயண பக்தி நம்மை பக்குவமாக்கி பின் முக்திக்கு ஓர் யுக்தியாகிறது. ஸ்வாமிகளின் பரமானந்த நிலை, பகவத் பஜனம் மூலம் இந்த வியவஹார உலகில் சிக்காமல் இருக்க முடியும் என்று உறுதியாக வாழ்ந்த காட்டிய உத்தம புருஷர். பெரியவாளும், சாரும் ஸ்வாமிகளை உயர்வாக கருதினர். இப்படியான, ஸ்ரீ ராமனை போல் தர்மாத்மாவாக வாழ்ந்த ஸ்வாமிகளிடம் பழகும் வாய்ப்பு ஓர் மாபெரும் அனுக்ருஹம்.
திருவடி தியானத்தின் உயர்வு, திருவாசகமும், சிவானந்த லஹரியும்,
விளக்கம் மனதை குழைய வைத்தது. ஸ்வாமிகள் ஆராதனைக்கு காத்திருப்பது போல், ஸ்வாமிகள் பற்றி உங்கள் திரு வாக்கினால் கேட்க ஆவல் அதிகமாகிறது.
ஸ்வாமிகள் திருவடிகளுக்கு ஷரணம்.💅

ஸ்வாமிகள் ஆராதனை புகைப்படங்கள் பார்க்க கண்கள் முதல்ல புண்யம் பண்ணிருக்கு. சுவாமிகள் ஆராதனை ஊர் இடமெல்லாம் முன்கூட்டியே தெரிவிச்சா வந்து நமஸ்காரம் பண்ற பாக்கியம் கிட்டட்டும். தங்கள் குரல்வ குரு மகிமை கேட்கறது எங்களுக்கு பக்தி கலந்த ஆனந்தம் அண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.