Categories
Ayodhya Kandam

பரதன் சபதம்

bharata
98. வருத்தத்தில் தவிக்கும் பரதனுக்கு குகன், ராம லக்ஷ்மணர்கள் அங்கு வந்திருந்த போது தம்மிடம் பேசிய விவரங்களையும், அவர்கள் ஜடை தரித்து கங்கையை தாண்டி சென்றதையும்  கூறுகிறான். ராமரும் சீதையும் கங்கை நீரை மட்டும் அருந்தி, புல் தரையில் படுத்து உறங்கினார்கள் என்று அறிந்த பரதன் ‘ராமரை அயோத்திக்கு அரசராக்கி நான் ஜடை தரித்து காட்டில் தபஸ்வியாக வாழ்வேன்’ என்று சபதம் செய்கிறான்.

[பரதன் சபதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/98%20bharathan%20shabadam.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனும் குஹனும்

bharatha goes to forest
97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.’ என்று சொல்கிறான். குஹன் மிக மகிழ்ந்து  ‘எளிதில் கிடைத்த அரச பதவியை விரும்பாமல் ராமன் படும் கஷ்டத்தை எண்ணி, அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே! என்னே உன் மஹிமை! இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் விளங்கும்’ என்று வாழ்த்துகிறான்.

[குஹன் பரதனை புகழ்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/97%20bharathanum%20guhanum.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனின் உயர்ந்த ராமபக்தி

bharatha vasishta
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம்.  ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.

[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]

Categories
Ayodhya Kandam

ராமர் விரதம் இருந்தார்

44. வசிஷ்டர் ராமருடைய அரண்மனைக்கு வந்து, ராமருக்கும் சீதைக்கும் விரதம் எடுத்து வைக்கிறார். ராமர் சீதையோடு விஷ்ணுவை பூஜித்து, பின் தரையில் தர்பையில் படுத்துறங்கி மறுநாள் காலை வெகு விரைவில் எழுந்து சந்த்யாவந்தனம் செய்கிறார். அயோத்யா ஜனங்கள் தசரதரையும் ராமரையும் புகழ்ந்து கொண்டே ஊரை அலங்கரிக்கிறார்கள்.

Categories
Ayodhya Kandam

தசரதரின் சஞ்சலம்

43. தசரதர் தன் அரண்மனைக்கு ராமனை வரவழைத்து ‘என் மனத்தில் சில சஞ்சலங்கள் இருப்பதால் உனக்கு நாளையே பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இன்றிரவு நீயும் சீதையும் விரதமாக இருங்கள்.’ என்று கூறுகிறார். ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். கௌசல்யை ராமனை ஆசிர்வதிக்கிறாள்.

Categories
Ayodhya Kandam

ராமருக்கு தசரதர் செய்த உபதேசம்

42. தசரதர் வசிஷ்டரிடம், ராம பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்தி தருமாறு வேண்டுகிறார். வசிஷ்டர், மந்த்ரிகளிடமும் புரோஹிதர்களிடமும், தேவையான பொருட்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். தசரதர் ராமனை சபைக்கு வரவழைத்து ‘உனக்கு பதவி அளிக்க போகிறேன். நீ மேலும் வினயத்தோடும் புலனடக்கதோடும் மக்களின் நன்மையை பேண வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.

Categories
Ayodhya Kandam

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி

41. தசரதர், ராஜசபையை கூட்டி, பெரியோர்களிடம், தன் மகன் ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறி உத்தரவு கேட்கிறார். அனைவரும் பெருமகிழ்ச்சியோடு அதை வரவேற்கிறார்கள். தசரதர் ‘இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்களே, என் ஆட்சியில் ஏதும் குறை இருக்கிறதா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார். ஜனங்கள் ராமருடைய பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறி ‘இப்பேர்பட்ட ராமனை நாங்கள் ராஜாவாக அடையும்படி நீங்கள் வரம் தர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
[ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி]

Categories
Ayodhya Kandam

ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்


40. பரதன், சத்ருக்னனோடு கேகய ராஜ்யத்திற்கு செல்கிறான். தசரதர், ராமரின் உயர்ந்த குணங்களையும், மக்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பையும் நினைத்து, தனக்கு முதுமை வந்ததுவிட்டது என்பதையும் எண்ணி, ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
[ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்]