Categories
Ayodhya Kandam

ராமர் நாஸ்திகத்தை கண்டித்தார்

ram_japali111. ராமர் பரதனிடம் மேலும் ‘நான் காட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பேன். நீ வருந்தாதே. அயோத்திக்கு திரும்பிச் செல்.’ என்று கூறுகிறார். ஜாபாலி என்ற முனிவர் ‘ராம! கையில் கிடைத்ததை அனுபவி. அப்பா அம்மா சத்யம், சாஸ்திரம் என்று மற்றதை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்?’ என்று நாஸ்திகமாக பேசியதும் ராமர் ‘சத்தியமே எல்லாவற்றிலும் மேலானது. அதுவே பதவிக்கும், பணத்துக்கும், பக்திக்கும், முக்திக்கும் மூலம். சத்யத்தை கைவிட மாட்டேன். நாஸ்திகம் பேசும் உங்களை என் தந்தை அருகில் வைத்திருந்ததே தவறு என்று நினைக்கிறேன்.’ என்று கடிந்து கூறியதும், ஜாபாலி ‘உன்னை திரும்ப அழைத்து போகும் எண்ணத்தில் சிலது பேசி விட்டேன். இனி நாஸ்திகம் பேச மாட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கிறார்.

[ஜாபாலி மத நிரஸனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/111%20jabali%20kandanam.mp3]

Categories
Ayodhya Kandam

சத்யமே நித்யம்

Ram meet bharat 2110. ராமர் பரதனிடம் மேலும் ‘நான், நீ, உறவு, பிரிவு, ராஜ்யம், வனவாசம் எல்லாம் அநித்தியம். சத்யமே நித்யம். சத்யத்தை காப்பாற்றியதால் நம் தந்தையார் சுவர்க்கம் அடைந்துள்ளார். அவரைப் பற்றி வருந்த வேண்டாம். அவர் வார்த்தைப்படி நாம் நடக்க வேண்டும்’ என்கிறார். பரதன் ‘இப்படி ஒரு ஞானவானகிய நீ எங்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? இங்கு காட்டில் கஷ்டப் படுவதை விட ராஜ்யத்தை வகித்து அந்த கஷ்டப்படலாமே? உன்னை தலை வணங்கி கேட்கிறேன். பரமேஸ்வரன் உயிர்களிடத்தில் கருணை செய்வது போல, என்னிடத்திலும் உன் பந்துக்களிடதிலும் கருணை செய்யவேண்டும்’ என்று வேண்டுகிறான்.

[தர்மத்தை காக்க வேண்டும்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/110%20sathyame%20nithyam.mp3]

Categories
Ayodhya Kandam

ராம கீதை

rama-bharatha109. ராமர் பரதனுக்கு ஞானோபதேசம் செய்கிறார். ‘உலக வாழ்க்கை நிலையற்றது. வயது ஏற ஏற மரணம் நெருங்கி வருகிறது. செல்வம், மனைவி மக்கள், உறவெல்லாம் சில காலமே. நாம் மற்றவர்கள் திருப்திக்காக காரியங்களை செய்ய முடியாது. பகவானுடைய அனாதியான கட்டளையான தர்மத்தை தான் அனுஷ்டிக்க வேண்டும். சத்தியத்தை கடை பிடிக்க வேண்டும். நம் ஆத்மாவுக்கு க்ஷேமத்தை தரும் கார்யங்களையே செய்யவேண்டும்’ என்று உபதேசிக்கிறார்.

[ராமர் செய்த ஞானோபதேசம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/109%20rama%20geetai.mp3]