20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]
Category: Bala Kandam
விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை
19. முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்லுவோம்’ என்று சொல்ல விஸ்வாமித்ரரும் ஆமோதிக்கிறார். சித்தாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று கிளம்பி கிரிவ்ரஜம் என்ற இடத்தை அடைகிறார்கள். அன்றிரவு முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்கு தம் முன்னோர்களின் கதைகளைக் கூறுகிறார். [விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை]
விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம்
தாடகா வதம்
15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார்.
[பலை அதிபலை மந்திரோபதேசம் (link to audio file. Transcript given below]
விஸ்வாமித்ரர் வருகை
13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார்.
[விஸ்வாமித்ரர் வருகை. (audio file. Transcript given below]