Categories
Bala Kandam

வானரோத்பத்தி


11. வாலி, சுக்ரீவன், ஹனுமார், நளன் நீலன் முதலிய வானரர்களின் பிறப்பு

வானரோத்பத்தி (audio file. Transcript given below)

தசரத மகாராஜ செய்த அஷ்வமேத யாகத்தின் ஹாவிர் பாகத்தை வாங்கிக்க எல்லா தேவர்களும் கூடினார்கள். அப்பொழுது  அவர்கள் பிரம்மாவிடம் ஒரு முறையீடு செய்கிறர்கள். “பிரம்மதேவரே, நீங்கள் இராவணன் என்ற அரக்கனுக்கு அபாரமான வரங்களை கொடுத்து உள்ளீர்கள். அவன் இப்பொழுது வலுவடைத்து எல்லோருக்கும், ஹிம்சை கொடுத்து கொண்டு லோக கண்டகனாக  இருக்கிறான். நாங்க எல்லாம், நாங்கள் அவனைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறோம். இதற்கு ஒரு முடிவு வர  வேண்டும். எங்களுக்கு தயவு பண்ணுங்கோ” என்று வேண்டி கொள்கிறார்கள் .

பிரம்மா தேவர் சொன்னார் – ஆமாம் அவன் செய்யும் அட்டகாசம் அளவு கடந்து விட்டது . அதற்கு ஒரு முடிவு வரத்தான் போகிறது. இப்படி பிரம்மதேவர் சொல்கின்ற பொழுது அங்கே விஷ்ணு பகவான் தரிசனம் தருகிறார். தேவர்கள் எல்லோருமாய் சேர்ந்து விஷ்ணு பகவானை ஸ்தோத்ரம் செய்கிறார்கள். “இந்த இராவணன் கொடுமையில் இருந்து எங்களை காப்பற்றுங்கள்” என்று வேண்டி கொள்கிறார்கள்.

மற்ற அவதாரங்கிளில் தேவர்கள் விஷ்ணு பகவானை பாற்கடலுக்கு சென்று தரிசித்து பிரார்த்தனை செய்தார்கள் என்று இருக்கிறது. ஆனால் ராமரோ ரொம்ப இறங்கி வந்து இரங்கி, இறங்கி- என்று 2′ ரா’வும்  ராமருக்கு பொருந்தும்.

இரக்கத்தினால் பகவான் மனுஷ்யனாக அவதாரம் செய்து வாழ்ந்து காண்பித்தார் என்பதார் போலே பகவானே அங்கு தரிசனம் கொடுக்கிறார். தேவர்கள் அவரிடம் வேண்டின பின்னே விஷ்ணு பகவான் அவர்கட்கு  அபயம் கொடுக்கிறார்.
भयम् त्यजत भद्रं वः”  பயத்தை விடுங்கள் . உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.

நான் பூமியில் தசரதருக்கு பிள்ளைகளாக பிறந்து இந்த ராக்ஷச பதர்களை கூண்டோடு அழித்து 11,000 வருஷம் ஆட்சி புரிந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று தேவர்களுக்கு அபயமும், வரமும் கொடுக்கிறார். தேவர்கள் அந்த க்ஷணத்திலேயே இராவணனிடம் இருந்த பயத்தினில் இருந்து விடுபட்டவர்களாக ஆனார்கள். சிவானந்த லஹரியில் பகவான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பயத்தையும், கோபத்தையும், காமத்தையும் விட்டுவிட்டால், பிறகு முக்தி என்று தனியாக ஏதேனும் இருக்கிறதா? என்று ஆசார்யாள் சொல்கிறார். அப்படி பகவானை நம்பி விட்டால் பயம் போக வேண்டும். அந்த பாக்யத்தை தேவர்கள் அடைந்தார்கள்.

விஷ்ணு பகவான் தசரதரை தந்தையாக தேர்ந்தெடுத்து இக்ஷுவாகு குலத்தில் வந்து அவதாரம் செய்கிறார். ஜனகர் போன்ற ஞானிகள் இருக்கும் பொழுது, ஏன் தசரதருக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றால், இக்ஷ்வாகு வம்ச ராஜாக்கள்  ரங்கநாதரை உபாசிக்கின்ற பக்தர்கள். பக்தர்கள் மத்தியில் இருப்பதே பகவானுக்கு மிகவும் ப்ரியம் என்பதாலே, அங்கு வந்து அவதரிக்கிறார்.

பகவான் வரம் கொடுத்த பின்னர், அந்தர்தானம் ஆனவுடன் பிரம்மா, தேவர்களிடம் ஒரு ஆக்ஞை செய்கிறார். நீங்கள் எல்லோரும், உங்களுடைய அம்சமாக, உங்கள் பராக்கிரமம் கொண்டர்வர்களாய் வானரர்களையும் , கரடிகளையும் ராம சஹாயமாக பூமியில் ஸ்ருஷ்டி செய்யவும். என்றார். இதை சொல்வதற்கு, பிரம்மாவிற்கு தகுதி இருக்கிறது , ஏன் என்றால் அவர் முன்னமே ஜாம்பவானை ஸ்ருஷ்டி செய்திருக்கிறார். ஒரு சமயம் அவர் கொட்டாவி விடும் பொழுது அதிலிருந்து ஜாம்பவான் தோன்றினார் .

ஜாம்பவான் வாமன அவதாரத்தில், வாமன மூர்த்தி மூன்று உலகத்தையும் விஸ்வரூபம் எடுத்து த்ரிவிக்ரம அவதாரமாக அளந்த பொழுது அந்த திரிவிக்கிரம  மூர்த்தியை மத்தளம்  கொட்டிண்டு 21 ப்ரதக்ஷினம் செய்தார். ராம அவதாரத்தில் அபார கைங்கர்யம் செய்து இருகிறார். ஹனுமாரை உற்சாகப் படுத்தி சீதாதேவி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வந்ததும் ஜாம்பவான் காரியம்தானே!

மேலும் அவர் கிருஷ்ணா அவதாரத்தில் ச்யமந்தகமணி  உபாக்யானம் என்று இருக்கு. அதில் ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்து, ச்யமந்தகமணியையும் கொடுத்தார். இப்படி, மூன்று அவதாரத்திலும் சஹாயம் செய்த ஜாம்பவானை ஸ்ருஷ்டி செய்ததால் பிரம்மாவிற்கு தேவர்களுக்கு உத்தரவிட தகுதி இருந்தது, என்று கோவிந்த தாமோதர சுவாமிகள் சொல்லுவார்.

शिवाय नमः” என்று ஒரு மந்திரத்தை ஒரு 5 லக்ஷம் ஜபம் செய்ய நாம் ஒருவரிடம் உபதேசம் செய்ய வேணும் என்றால், நாம் அந்த மந்திரத்தை 15 லக்ஷம் செய்து இருக்க வேண்டும் என்பார். மூன்று மடங்கு யோக்யதை சம்பாதித்து இருக்க வேண்டும் என்று சொல்லுவார்!

பிரம்மாவின் அந்த வார்த்தைகளை கேட்டு தேவர்களும்  வானரர்களை ஸ்ருஷ்டி செய்தார்கள் , இந்திரன் வாலியை ஸ்ருஷ்டி செய்தார் , சூர்ய பகவான் சுக்ரீவனை ஸ்ருஷ்டி செய்தார்,. வாயு பகவான் ஹனுமாரை ஸ்ருஷ்டி செய்தார், அக்னி பகவான் நீலனை ஸ்ருஷ்டி செய்தார், விஸ்வகர்மா நளனை ஸ்ருஷ்டி செய்தார், இப்படியாக பூமியில் வானரர்கள் வந்து உதித்தார்கள்.

அவர்களுக்குள் बुद्धिर् बलम् यशो धैर्यम्नि र्भयत्वम् अरोगताम् अजाड्यम् वाक् पटुत्वम् च​ हनुमत् स्मरणात् भवेत्॥, என்று  எல்லோருக்கும் ஸ்ரேஷ்டராக ஹனுமார் விளங்கினார்.

ராஜாவிற்கு பிள்ளையாக பிறந்ததினால்  வாலி ராஜாவாக  இருந்தான் , சுக்ரீவன் யுவராஜனாக இருந்தான் . இப்படி “राम सहाय हेतोहो” என்று வானரர்கள் எல்லோரும் ராம அவதாரத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர் .

ஸ்வாமிகள் சொல்லுவார், “ஒவ்வொருத்தரும் பூமியில் வந்து பிறந்தால், அவா அப்பா அம்மா நன்னா இருந்து அவனை வளர்க்கனணும், school வாத்தியார் இருந்து படிப்பு சொல்லி கொடுக்கணும், ஒருத்தர் பெண்ணை பெற்று கல்யாணம் பண்ணி தரணும்… எல்லாம் நல்ல படியாக நடந்த அவா சதாபிஷேகம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கலாம். ஏதேனும் குறை இருப்பின் …என்னத்த ஷஷ்டியப்த பூர்தியே வேண்டாம் என்று தோணும். அப்படி, பூமியில் வந்து பிறந்து விட்டால்,. எல்லாம் inter dependent a  தான் இருக்கும், நான் independent என்று சிலர் சொல்லுவா , அப்படி கர்வமாக பேசக்கூடாது. ராமருக்கே, ராம சஹாயம் வேண்டி இருந்தது . பூமியில் வந்த பிறந்தால் சஹாயம் வேணும்” என்று சொல்வார்.

 

 

Series Navigation<< அஸ்வமேத பூர்த்திஸ்ரீ ராம ஜனனம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.