12. பரம மங்களமான ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரின் ஜனன உத்சவம்
ஸ்ரீ ராம ஜனனம் (audio file. Transcript given below)
ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி முடித்த உடனே, அந்த அக்னில இருந்து, தேஜோ மயமா, ஒரு பெரிய, மஹானுபாவர் வந்தார், அவர் கையில ஒரு தங்க பாத்திரம், வெள்ளி மூடி போட்ட ஒரு தங்கப் பாத்திரம் வெச்சிருந்தார். அதை பார்த்த உடனே, எல்லாரும் எழுந்துக்கறா. தசரதரும், எழுந்து, அவரை கைகூப்பி வணங்கி, நீங்க யார், நான் உங்களுக்கு என்ன பண்ணனும், அப்படீன்னு கேட்கறார். வந்தவர் சொல்றார், “ராஜன் அர்ச்சயதா தேவான் அத்ய ப்ராப்தம் இதம் த்வயா” இவ்வளவு நாள் நீங்க பண்ணின பூஜையினால திருப்தி ஆகி, தேவதைகள் எல்லாம், இந்த திவ்யமான பாயஸத்தை உங்களுக்குக் கொடுத்துருக்கா. இதை பொருத்தமான உங்களுடைய மனைவிகளுக்குக் கொடுங்கோ, உங்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும்”, அப்படீன்னு அனுக்ரகம் பண்ணிட்டு மறைஞ்சு போயிடறார்.
பரம சந்தோஷம் அடைஞ்ச தசரத மஹாராஜா, அதை வாங்கி, அந்த பாயஸத்துல பாதியை கௌசல்யா தேவிக்கிட்ட கொடுக்கறார். அவா அதை சாப்பிடறா. மீதியில பாதியை, கால் பகுதியை ஸுமித்ரைக்கு கொடுக்கறார். மிஞ்சினதுல பாதியை, அதாவது, அரைக்கால் பகுதியை, கைகேயிக்கு கொடுக்கறார். மீதி இருந்த அரைக்காலை, ஸுமித்ரைக்கே கொடுத்துடறார். அவாளாம் அதை சந்ஷோமாக ப்ராசனம் பண்றா. ரொம்ப ஆச்சரியமும், சந்தோஷமும் அடைஞ்ச தசரத மஹாராஜா, இப்படி தன்னுடைய வேள்விக்கு, கைமேல பலன், கிடைச்ச சந்தோஷத்துல பூரிச்சுப் போயிடறார். எல்லாரையும் நமஸ்காரம் பண்றார்.
யாகத்துக்கு வந்தவா எல்லாரும் சந்தோஷப் பட்டு, விடைபெற்று, எல்லா ராஜாக்களும், ரிஷிகளும், தசரதர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு கிளம்பரா. ரிஷ்யஸ்ருங்கரும் தன்னுடைய மனைவி சாந்தாவோட, எல்லாரும் அவா அவா ஊருக்குப் போயி சேரறா. தசரத மகாராஜாவும் புத்ரோத்பத்தியை எதிர்பார்த்துண்டு காத்துண்டு இருக்கார்.
இப்படியாக அந்த யாகம் முடிஞ்சதுல இருந்து, பன்னிரெண்டாம் மாசம், புனர்வஸு நக்ஷத்ரத்துல, சாக்ஷாத் விஷ்ணு பகவான், கௌசல்யாதேவிக்குப் புத்திரனாக, ராமனாக, அவதாரம் பண்ணினார். கைகேயி பரதனைப் பெற்றெடுத்தாள். ஸுமித்ரை, லக்ஷ்மண, சத்ருக்னர், அப்படீன்னு ரெட்டை குழந்தைகளைப், பெற்றெடுத்தாள். வானத்துல இருந்து, தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிந்தார்கள். தேசத்துல எல்லாரும், ராஜாக்கு குழந்தை பொறந்துருக்குன்னு, சந்தோஷமா கொண்டாடினா. ராஜாவும் பரம சந்தோஷப் பட்டு, எல்லாருக்கும் சாப்பாடு போட்டார். அளவற்ற செல்வத்தை தானங்கள் பண்ணினார்.
வசிஷ்டர், குழந்தைகளுக்கு, கௌசல்யையோட பிள்ளைக்கு, ராமன்னு, பேர் வெச்சார். எல்லாருக்கும் இவன் சந்தோஷத்தை கொடுக்கப் போறான், அப்படீன்னு, ரம்யதேதிஹி ராமஹா, அப்படீன்னு, எல்லாரும் ரமிக்கப் போறா இவன்கிட்ட அப்டீன்னு, ராமன்னு, பேர் வெச்சார். பரதன் பக்தியோட இருப்பான், ராம பக்திக்கு பேர் போனவனா விளங்கப் போறான்னு, பரதன்னு பேர் வெச்சார். லக்ஷ்மணன், இவன் வந்து நிறைய கைங்கர்ய லக்ஷ்மியை, சம்பாதிக்கப் போறான்னு, அவனுக்கு லக்ஷ்மணன்னு பேர் வெச்சார். சத்ருக்னன், இவன் பரதனுக்கு அடியவனாக, அடியார்க்கு அடியனா, இருந்து, ஷட் சத்ருக்களையும் ஜயிக்கப் போறான், அப்படீன்னு சத்ருக்னன்னு பேர் வெச்சார்.
இப்படி இந்த நாலு குழந்தைகளுக்கும் பேர் வைக்கறதுக்காகவே, வசிஷ்டர், இவ்வளவு நாள், இந்த ராமர் அவதாரம் பண்ணப் போறார் என்று, இந்த குலத்துக்கே குல குருவா காத்துண்டு இருக்கார். இந்த குழந்தைகளுக்கு பேர் வெச்சு, பரம சந்தோஷம் அடைஞ்சார். உத்சவமெல்லாம் கொண்டாடினா எல்லாரும். எல்லாரும் பரம சந்தோஷமா இருக்கா. ராம ஜனனம் பரம, மங்களமான ஒரு கட்டம், இதை கேட்கறது ரொம்ப பாக்கியம். இந்த குழந்தைகள், கௌசல்யா தேவி ஆசையா, வார்க்கரா. இந்த ராமாயணத்துல இந்த, பதினெட்டாவது, சர்க்கத்துல ராம ஜனனம். பாதி சர்கத்கத்துக்கு, குழந்தைகள், பொறந்து வளர்றது, வித்யாப்யாசம், பின்னாடியே விஸ்வாமித்ரர் வந்துட்டார். ராம லக்ஷ்மணாளை கூட்டிண்டு போறதுக்கு. வால்மீகிக்கு, துஷ்ட சம்ஹாராம், சிஷ்ட சம்ரக்ஷணம், அது ரொம்ப முக்யம்ங்கிறதுனால, அதை சொல்லிண்டு போறார். அருணகிரி போன்ற மகான்கள், பின்னால., எப்படி கௌசல்யா தேவி ராமரை கொஞ்சினா, எந்தை வருக, ரகுநாயகா வருக, மைந்த வருக, மகனே வருக, அப்படீன்னு பின்னாடி மற்ற மகான்கள் எல்லாம், அனுபவிச்சு சந்தோஷப் படுவா. நாம, மேற்கொண்டு கதை சொல்வோம்னு வால்மீகி கிளம்பிட்டார், அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்வார்.
ஜானகி காந்த ஸ்மரணம்….ஜய ஜய ராம ராம….
One reply on “ஸ்ரீ ராம ஜனனம்”
Sri Rama Jayam. Jai Sri Ram. Vivaranai arumai.