17. விஸ்வாமித்ரர் ராமருக்கு எல்லா அஸ்த்ரங்களையும் உபதேசிக்கிறார். பின்னர் அஸ்த்ரங்களை திரும்ப பெரும் மந்த்ரங்களையும் கற்றுத் தருகிறார். ஸித்தாஸ்ரமத்தை நெருங்கும் போது முனிவர் ராமருக்கு வாமன சரித்திரத்தை சொல்கிறார்.
[வாமன சரித்ரம் (link to audio file. Transcript given below]
விஸ்வாமித்ர மஹரிஷி, தாடகா வதம் ஆன பின்னே, அன்னிக்கு ராத்திரி தூங்கி எழுந்துட்டு, அடுத்த நாள் கார்த்தால ராமன் கிட்ட, “ஹே ராமா நான் உனக்கு, அஸ்த்ரங்களெல்லாம் சொல்லித் தரேன், அஸ்த்ர வித்தைகளெல்லாம் வாங்கிக்கோ”, அப்படின்னு, கிழக்கு முகமா நின்னுண்டு, அந்தந்த அஸ்த்ரங்களோட தேவதைகளை சொல்றார். தர்மச்சக்கரம், காலச்சக்கரம், விஷ்ணுச்சக்கரம், வஜ்ராஸ்த்ரம், ப்ரம்மாஸ்த்ரம், ஆக்னேயாஸ்த்ரம், வாயுவாஸ்த்ரம், காந்தர்வஸ்த்ரம், மோகனம், இப்படின்னு பல விதமான அஸ்த்ரங்கள், பாசுபதாஸ்த்ரம், சக்தி, இப்படின்னு, எல்லா தெய்வங்களுடைய எல்லா அஸ்த்ரங்களையும் விஸ்வாமித்ரர், ஐநூறு அஸ்த்ரங்களையும். அந்தந்த மந்த்ரங்களையும் சொன்னவுடனே, அந்தந்த அஸ்த்ரங்கள் முன்னாடி வரது, அதை ராமர் ஏத்துக்கறார். இப்படி எல்லா அஸ்த்ரங்களையும் சொல்லிண்டே வரார், அப்புறம், இதெல்லாம் வாங்கிண்ட பின்னே, இப்படி கிளம்பி போறா.
அப்போ விஸ்வமித்ரர் கிட்ட ராமர் கேக்கறார், “எல்லா அஸ்த்ரங்களையும் சொன்னேள், அதை நான் க்ரஹிச்சுண்டேன். ஆனா இந்த அஸ்த்ரங்களெல்லாம் விட்ட பின்ன திரும்பி வாங்கறதுக்கு, உண்டான மந்த்ரங்களெல்லாம் சொல்லி குடுக்கணுமே”, அப்படின்னு கேக்கறார். உடனே, ஆமா, அதெல்லாம் சொல்லித்தரேன், அப்படின்னு அந்த மந்த்ரங்களெல்லாம், சத்யவந்தம், சத்யகீர்த்திம், த்ருஷ்டம், ப்ரபதம், அப்படின்னு பல விதமான மந்த்ரங்களெல்லாம், ஒரு அஸ்திரத்தா விட்டனா, அது திரும்பவும், வாங்கிக்கறதுக்கு உண்டான மந்த்ரங்கள் எல்லாமும் சொல்லித்தரார்.
இப்படி எல்லா அஸ்த்ர வித்தைகளெல்லாம் சொல்லித் தந்தவுடனே, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வினோதமா, ஒண்ணு வந்து சூரியன போல ஜொலிக்கறது, ஒண்ணு சந்திரன போல குளுமையா இருக்கு, இப்படி ஒவ்வொரு அஸ்த்ரமும் ஒவ்வொரு ரூபத்தோட விளங்கறது, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து நின்னு, ராமர் அந்த மந்த்ரங்களெல்லாம் திருப்பி சொன்னவுடனே, அவருக்குள்ள அது வந்துடுத்து, எல்லாம் அவர் முன்னாடி கை கட்டி நிக்கறது,
इमे स्म नरशार्दूल शाधि किं करवाम ते ।
இமே ஸ்ம நரஷார்தூல ஷாதி கிம் கரவாம தே |
ஹே மனிதர்களுள் ஸ்ரேஷ்டனே – ஷாதி, நீ உத்தரவு பண்ணு, நாங்க சொன்னபடி கேக்கறோம் அப்படின்னு சொல்றா, அப்போ ராமர் சொல்றார்,
मानसा: कार्यकालेषु साहाय्यं मे करिष्यथ।
गम्यतामिति तानाह यथेष्टं रघुनन्दन:।।
மானஸா: கார்யகாலேஷு சாஹாய்யம் மீ கரிஷ்யத |
கம்யதாம் இதி தானாஹ யதேஷ்டம் ரகுநந்தன: ||
என் மனஸ்ல இருங்கோ, அந்தந்த காலத்துல நான் கூப்பிடும்போது வந்து, எனக்கு சஹாயம் பண்ணுங்கோ, அப்படின்னு சொல்றார். இப்படியாக, அஸ்த்ர வித்தைகளெல்லாம் விஸ்வாமித்ரர், ராமலக்ஷமனாளுக்கு உபதேசஸம் பண்றார்.
அப்புறம், அவா கிளம்பிப் போறா, ஒரு இடம் வந்தவுடனே, ராமர் “ஆஹா இந்த இடமே ரொம்ப பரம ரம்யமா ரொம்ப ரமணீயமா இருக்கே, இது என்ன இடம் அப்படி?” ன்னு கேட்டவுடனே, இதுதான் பா அந்த சித்தாஸ்ரமம். இங்க தான் நான் இருந்துண்டு இருக்கேன். முன்னே விஷ்ணு பகவான், நூற்றுகணக்கான யுஹங்களுக்கு இங்க தபஸ் பண்ணிட்டிருந்தார், அந்த நேரத்துல பலின்னு ஒரு அசுரன், அவன் வந்து சுக்ராசார்யார்ன்னு அவரோட குரு அவனுக்கு நிறைய பலத்தை குடுத்தார், அதை வெச்சுண்டு அவன், இந்த்ரனையே ஜெயிச்சு மூவுலகத்துக்கும் ராஜாவாயிட்டான், இந்த்ரன், எங்கயோ ஒளிஞ்சுண்டு கஷ்டபட்டுண்டு இருந்தான்,
அப்போ கஷ்யபரும், அதிதிதேவியும், விஷ்ணு பகவான குறித்து, ஆயிரம் திவ்ய வருஷங்கள், வெறும் பாலை மட்டும் சாப்பிடுண்டு, தபஸ் பன்ணா, தபஸோட முடிவுல, விஷ்ணுபகவான் காட்சி குடுத்தார், அவா கிட்ட, அவர் உங்களுக்கு என்ன வரம் வேணும்ன்னு கேட்டார், அப்போ கஷ்யபர் “அதிதி தேவியோட வயிற்றில நீ இந்த்ரனுக்கு தம்பியா, நீங்கள் எனக்கு குழந்தையா பொறந்து, இந்த தேவர்கள் படும் துன்பத்தை துடைக்கணும்”, அப்படின்னு பிரார்த்தனை பண்றார். அப்படியே ஆகட்டும்னு சொல்லி, விஷ்ணுபகவான், வாமன மூர்த்தியாக அவதாரம் பண்றார்.
அவதாரம் பண்ணி ஒரே நாள்ல குமாரனாயிடறார், அவருக்கு உபநயனம், பிரமச்சாரியா அவருக்கு உபநயனம் பண்ணி வெச்சவுடனே, அந்த வாமனர், அந்த பலி ஒரு யாகம் பண்ணின்டிருக்கான், அந்த பலியோட யாகத்துல போய் தர்ஸனம் குடுக்கறார். உடனே அவன் ரொம்ப சந்தோஷப்பட்டு, வாங்கோன்னு கூப்பிட்டு, உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேக்கறான், அப்போ வாமன மூர்த்தி எனக்கு மூணடி மண் குடுன்னு கேக்கறார், இன்னும் நிறைய கேட்டுக்கலாமே என்றவுடனே, இதுல திருப்தி அடையாதவன், எதுலயும் திருப்தி அடையாமாட்டான், இந்த மூணடி மண்ணே எனக்கு போறும் ன்னு சொல்றார், சரின்னு, விந்த்யாவலின்னு அவனுடைய மனைவி ஜலம் விடறா. மூணடி மண்ணு தாரை வார்த்து குடுத்து அந்த ஜலம் அந்த வாமன மூர்த்தி கைல பட்டவுடனே, விண்ணுக்கும் மண்ணுக்குமா த்ரிவிக்கிரம அவதாரம் எடுக்கறார், பெருசா வளர்ந்து, ஓரடியினால, பூமி முழுக்க அளந்துடறார், இன்னொரு அடியினால வானலோகத்தெல்லாம் அளந்துடறார், இப்படியாக இந்த பலி ஜெயிச்சதெல்லாம் வாங்கின்னுடறார், மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேக்கறார், பலி, பலி வந்து, ப்ரஹலாதனோட பேரன், இயற்கைலையே நல்ல குணம் படைத்தவன், ஆனா இந்த கர்வம் வந்துடறது, நான், என்னதுன்னு, அவனோட அந்த கர்வத்தை, விஷ்ணுபகவான், அவனுடைய சொத்தெல்லாம் பிடுங்கினது மூலமா, அவனுடைய கர்வத்தை எடுத்துடறார், அஹங்காரம், மமகாரங்களெல்லாம் போக்கி, அவனையும் பக்தனாக்கிடறார், அவன் மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேட்டவுடனே, என் தலைல வைங்கோன்னு சொல்றான் கைகூப்பி, பகவான் அவன் தலைல கால வெச்சு அவன பாதாள லோகத்துக்கு அனுப்பிச்சிடறார், ஆனா, நீ சிரஞ்சீவியா அந்த லோகத்தை ஆண்டுண்டிரு, உன்னை யாரும் எதிர்க்காம, நானா பாதுகாக்கறேன்னு விஷ்ணு பகவானே, கைல ஒரு தண்டத்தை வெச்சுண்டு, பலியோட லோகத்தை காவல் காத்துண்டிருக்கார், ராவணன் திக்விஜயம் பண்ணிண்டு வரும்போது, விஷ்ணு பகவான், ராவணன வந்து, பலியோட இடத்துக்கு வந்தபோது, ஒரு அடி குடுக்கறார், அவன் எங்கயோ போய் விழறான், அப்படி விஷ்ணு பகவான் காவல் காத்துண்டிருக்கார், பலிக்காக. அப்படி விஷ்ணு பக்தன் பலி.
இந்த வாமன சரித்ரத்தை சொல்லி, இப்படி கஷ்யபர் பண்ண தபஸும் இந்த இடத்தில பலிச்சது, ஆதிநாராயணனும் இங்க தபஸ் பண்ணிண்டுருந்தார், கஷ்யபருக்காக நாராயணன், வாமன அவதாரம் எடுத்தார், இந்த இடம் எல்லாருக்கும் தபஸ் சித்தியானதுனாலே இது சித்தாஸ்ரமம்ன்னு பேரு, பகவான் என்னை இங்க இருக்கசொல்லி, நான் இங்க இருந்துண்டிருக்கேன், இது உன்னுடைய இடமும் தான், அப்படின்னு ராமர்ட்ட விஸ்வாமித்ரர் சொல்றார்.
அதாவது, விஷ்ணு பகவான் தான் வாமனர், வாமனமூர்த்தி தான் இப்போ ராமரா வந்திருக்கார், அப்படிங்கறத சொல்றார். அங்க அன்னிக்கு ராத்திரி தங்கி, விஸ்ராந்தி பண்ணிக்கறா. பாக்கி நாளைக்கு