118. தண்டக வனத்தில் திடீர் என்று விராதன் என்ற ஒரு கோரமான அரக்கன் வந்து சீதையை கவர்ந்து செல்கிறான். ராமரும் லக்ஷ்மணரும் அவனுடன் யுத்தம் செய்து அவனை கீழே வீழ்த்துகிறார்கள். விராதன் ராமரை யார் என்று அறிந்து ‘ராம! நான் ஒரு கந்தர்வனாக இருந்தேன். குபேரனின் சாபத்தால் அரக்கன் ஆகிவிட்டேன். உன் தயவால் நான் இன்று சாப விமோசனம் அடைந்தேன். என்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என் உடலை ஒரு குழி வெட்டி புதைத்து விடுங்கள். அதன் மூலம் எனக்கு நல்ல கதி ஏற்படும். அருகில் சரபங்கர் என்று ஒரு முனிவர் உள்ளார். அவரைச் சென்று தர்சனம் செய்யுங்கள்” என்று கூறி உயிரை விடுகிறான்.
[விராத வதம்]
Categories