இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, மூணாவது சர்க்கத்துல, தசரத மகாராஜா, ராமர் கிட்ட சொல்றது
कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।।
गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्।
भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।।
காமத: த்வம் ப்ரக்ருத்யைவ வினீத: குணவானஸி |
குணவத்யபிது ஸ்னேஹாத் புத்ர வக்ஷ்யாமி தே ஹிதம் ||
பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய: |
ஹே, ராமா, காமத: த்வம் ப்ரக்ருத்யைவ – நீ இயல்பிலேயே ரொம்ப வினீத: – humble ஆ பணிவோட இருக்கே. குணவானஸி – எல்லா குணங்களும் உன்கிட்ட இருக்கு. குணவத்யபிது ஸ்னேஹாத் புத்ர வக்ஷ்யாமி தேஹிதம் – உன்கிட்ட எல்லா குணங்களும் இருந்தாலும், எனக்கு உன் மேல இருக்கிற ஸ்நேகத்துனால, உனக்கு ஹிதமான ஒரு விஷயத்தை சொல்றேன். கேட்டுக்கோ, அப்டீங்கறார். நீ இதுக்கு மேல, பதவி வந்த பின், இன்னும் விநயமா இரு, பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய: அப்டீன்னு சொல்றார்.
அந்த context என்னன்னா, ராமனுக்கு பட்டாபிஷேகம் பண்ணனும், அப்டீன்னு ராமருடைய குணங்களை எல்லாம், தசரதர் நினைச்சு பார்த்து, இப்பேற்பட்ட, எல்லாரும் விரும்பக்கூடிய என்னுடைய, ராமனை, ராஜாவா, பட்டாபிஷேகம், பண்ணினா, நான் உயிரோட இருக்கும்போதே அவனை ராஜாவா பார்த்தா, இன்னும் எவ்வளவு எனக்கு, சந்தோஷமா இருக்கும், அப்டீன்னு, நினைக்கறார். அவர், சபையை கூட்டி, எல்லா சிற்றசர்களை எல்லாம் வர சொல்லி, “என் பிள்ளை ராமனை ராஜாவா ஆக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு ரொம்ப உடம்பு, தளர்ந்துடுத்து, நான் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு நினைக்கறேன், retire ஆகப் போறேன். இந்த எண்ணம், எனக்கு ரெஸ்ட் வேணும்னு அப்டீன்னு, ஒரு motive எனக்கு இருக்கு. எனக்கு சுயநலமான ஒரு motive இருக்கறதுனால, நான் இப்படி முடிவு பண்ணி இருக்கேன். இது கரெக்ட் ஆ தப்பான்னு நீங்க சொல்லுங்கோ” அப்டீன்னு சபையில கேட்கறார். எல்லாரும் சேர்ந்து, அந்த மண்டபமே பிளக்கும்படியா, கரகோஷம் பண்ணி, சந்தோஷப்பட்டு “ஆஹாஹா, அவசியம் பண்ணுங்கோ, ராமரை ராஜாவா, ஆக்குங்கோ. நாங்க எல்லாம் காத்துண்டு இருக்கோம்” அப்டீன்னு, சொல்றா.
உடனே, தசரதருக்கு தெரியும். இவா எல்லாருக்கும், ராமனை ரொம்ப பிடிக்கும்னு, இருந்தாலும், அப்பாக்கு பிள்ளையோட, குணத்தை மத்தவா சொல்லி கேட்டா, அது தனி சந்தோஷம். அதனால, “என்ன, என்னோட ஆட்சியில ஏதாவது, குறையா? ராமனை ராஜாவா ஆக்கட்டுமான்னு கேட்ட உடனே, நீங்க எல்லாம் இவ்வளவு சந்தோஷப்பட்டு, இவ்வளவு என்னை அவசரப் படுத்தறேளே”, அப்டீன்னு கேட்கறார். அது வந்து, ராமனை பத்தி இவா புகழ்ந்து பேசட்டுமே, கேட்போமே, அப்டீங்கறதுக்காக சொல்றார்.
உடனே அந்த ஜனங்கள் எல்லாம், “மஹாராஜாவே, உங்ககிட்ட ஒரு தோஷமும் இல்லை. இந்த இக்ஷ்வாகு குலத்துலயே ரொம்ப உத்தமமமான ஒரு பிள்ளையை பெற்றெடுத்து, எங்களுக்கு காண்பிச்சுட்டேள். அது ஒண்ணு தான் தோஷம். இப்பேற்பட்ட ராமனை ராஜாவா அடையணும்னு இந்த பூமியே காத்துண்டு இருக்கு. நாங்க எல்லாரும் காத்துண்டு இருக்கோம்”, அப்டீன்னு சொல்லி. கேளுங்கோ னு சொல்லி ராமனுடைய குணங்கள் எல்லாத்தையும் அவா பட்டியல் போடறா. “அவன் போனா ஒரு யுத்தத்துல ஜெயிச்சுட்டு தான் வருவான். வந்தபோது, எங்களை எல்லாம், யானையில இருந்து இறங்கி நலம் விசாரிப்பான். குழந்தைகள் சௌக்யமா, சிஷ்யர்கள் எல்லாம் சௌக்யமா, ஆத்துல, இருக்கிறவா எல்லாம் சௌக்யமா, அப்டீன்னு அந்த orderல கூட ஒரு அழகு. அந்த மாதிரி ஒரு தெளிவு. அவன் பண்ற எல்லா கார்யங்களும் அழகா இருக்கு. நாங்க எல்லாம் கூச்சப் படுவோம்னு, அவனே முதல்ல வந்து எங்கக்கிட்ட பேசுவான். மதுரமான வார்த்தைகளை பேசுவான். எங்களோட கஷ்டத்துலேயும் சந்தோஷத்துலேயும் சொந்த அப்பா மாதிரி பங்கு எடுத்துப்பான். எல்லா கலைகளையும் சிறந்தவனா இருக்கான். அவனுடைய protection ல நாங்க இருந்தோம்னா, எங்களுக்கு எல்லாம் பயமே கிடையாது” அப்படி இன்னும் நிறைய அவனை ரொம்ப ஸ்தோத்திரம் பண்ணி, “நீங்க எங்களுக்கு பண்ற பெரிய உபகாரமா இருக்கும், அந்த ராமரை, பட்டாபிஷேகம் பண்ணுங்கோ” அப்டீன்னு ஜனங்கள் எல்லாம் சொல்றா.
உடனே இந்த தசரத மகா ராஜா, சுமந்திரர்னு ஒரு தேரோட்டி மந்திரி, அவரை கூப்பிட்டு, “நீ போயி ராமரை அழைச்சுண்டு வா, அப்டீங்கறார். அந்த ராமன் அங்கே இருந்து வரான், இவர் இங்கே இருந்து, ராமர், தேர்ல இருந்து இறங்கறதுக்குள்ள, தசரதர், அவர் அறுபதாயிரம் வருஷம், வயசு, அவருக்கு. அவர் இங்கே இருந்து படி இறங்கி ஓடிப் போறார். அவனை பார்த்த உடனே அவனை கட்டி அணைச்சு, பக்கத்துல அமர்த்தி வெச்சுண்டு, “ஹே ராமா, உனக்கு, பட்டாபிஷேகம் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கேன்”, அப்டீன்னு சொல்லி, அந்த இடத்துல இந்த வார்த்தைகளை சொல்றார். “இயல்பிலேயே ரொம்ப நல்ல குணங்களும், ரொம்ப பணிவும் இருக்கு உன்கிட்ட. ஆனால் அப்பாங்கிற அளவுல உனக்கு நான் நன்மையை விரும்புவதால், ஒரு வார்த்தையை நான் சொல்றேன், இன்னும் பணிவா இருந்து, இன்னும் ஜனங்களோட அன்பை சம்பாதிசுக்கோ”, அப்டீன்னு சொல்றார்.
இந்த, வார்த்தையை கேட்கும்போது, எனக்கு, Paul Brunton பால் ப்ருண்டன் அப்டீங்கற ஒருத்தர் India ல வந்து, யாராவது யோகிகள் இருக்காளா, யாராவது ஞானிகள் இருக்காளா அப்டீன்னு சொல்லி, சுத்தி அலையறார். அவர், கடைசீல கிளம்பறதுக்கு, டிக்கெட் வாங்கிடறார், இங்க சென்னைக்கு வந்துட்டு, கிளம்பும்போது, வெங்கட்ரமணி ன்னு ஒருத்தர் அவர் கிட்ட, “எங்களுடைய ஆசாரியார், ஒருத்தர் இருக்கார். காஞ்சி சங்கராசாரியார்னு பேரு, அவர் foreigners ஐ பார்க்க மாட்டார், நீங்க வேண்ணா அவரை பார்க்கலாம், ஆனா audience கொடுப்பாரான்னு தெரியலை, வேணும்னா வாங்கோ”, அப்டீன்னு சொல்லி கூட்டிண்டு போறார். சரீன்னு சொல்லி இவரும் போறார். மஹாபெரியவாளை போய் பாக்கறார். பெரியவா first time ஒரு foreigner க்கு audience கொடுத்து அவர் கிட்ட பேசறா. Paul Brunton “உலகமெல்லாம் பிசாசு தான் பிடிச்சிருக்கு”, அப்போ, அந்த ரெண்டாவது world war முடிஞ்சு கோரமான ஒரு காலம். அப்படி வருத்தமா பேசறார். பெரியவா, “அதெல்லாம் போகட்டும், நீ உன் மனசை சமாதானப் படுத்திக்கோ, உன்னுடைய ஆத்ம சாந்தியை நீ தேடு”, அப்டீன்னு சொன்ன உடனே “நீங்கதான் எனக்கு குருவா இருக்கணும், பார்த்ததுலயே உங்களைத் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களையே நான் குருவா ஏத்துக்கறேன்”, அப்டீன்ன, உடனே பெரியவா சொல்றா, “நான் மடாதிபதியா இருக்கேன், ஊர் ஊரா போயிண்டு இருப்பேன். உனக்கு நேரம் செலவு பண்றதுக்கு, என்னால முடியும்னு தெரியல. அதனால நான் ஒருத்தரை சொல்றேன். திருவண்ணாமலைன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு. அங்க ரமண பகவான்னு ஒருத்தர் இருக்கார். மஹரிஷின்னு சொல்லுவா. அவரை நீ போயி பாரு. அவர் உனக்கு குருவா இருப்பார்” அப்டீன்னு சொல்லி சொல்றார். இவர் சரின்னு கேட்டுக்கறார்.
அன்னிக்கு ராத்திரி இவர் தூங்கும் போது, பெரியவா இவர் கனவுல வந்து, தசரதர் ராமருக்கு சொன்ன இதே வார்தைகளை சொல்றார், Be humble and you shall find what you seek அப்டீன்னு ஒரு வார்த்தை சொல்றார். “நீ பணிவா இரு. நீ எதைத் தேடறியோ, அந்த பகவான் உனக்கு கிடைப்பார், ஞானம் கிடைக்கும்”அப்டீங்கற அர்த்தத்துல சொல்றார். அவர் அதை வந்து A search in secret India என்கிற புஸ்தகத்துல எழுதி இருக்கார். “மஹாபெரியவா வந்து ஒரு ஒளி உருவமா வந்து எனக்கு காட்சி கொடுத்தார். எனக்கு வந்து அது கனவு கிடையாது. நேரா நான் அவரை பார்த்தேன். அவர் எனக்கு இந்த மாதிரி சொன்னார். அதனால எனக்கு அவர்கிட்ட ரொம்ப பக்தி ஏற்பட்டது, அவர் சொன்னதுனால ரமணரை போயி பார்த்தேன்”
ரமணரை பார்த்த உடனே, அவர் நிறைய கேள்விகள் எல்லாம் எழுதிண்டு போறார். அதெல்லாம் ஒண்ணுமே கேட்கலை. ரமணரோட பார்வையிலேயே இவருக்கு, தெளிவு ஏற்படறது. அதற்கு அப்புறம்தான், அவர் நிறைய புஸ்தகங்கள் எழுதி, அப்புறம் forigners எல்லாம் வந்து, ரமணாஸ்ரமம் போயி, அவரை தரிசனம் பண்ணிண்டு இருந்தா. சில பேர் அங்கேயே தங்கி, தரிசனம் பண்ணிண்டு இருந்தா. Chadwick னு ஒருத்தர். அங்கேயே தங்கினார். அந்த மாதிரி ஒண்ணு நடந்தது.
இதை பார்த்துட்டு, ஒரு, நாற்பது வருஷம் கழிச்சு, கிருஷ்ணமூர்த்தி ன்னு, ஒருத்தர், இந்த புஸ்தகத்தை படிச்சுட்டு, பெரியவாகிட்ட, “அன்னிக்கு ராத்திரி உங்களை தர்சனம் பண்ணினேன்னு அவர் எழுதி இருக்கார். உங்களை நேரே பார்த்தேன்னு எழுதி இருக்கார். அந்த மாதிரி எனக்கும் அனுக்ரஹம் பண்ணனும்”, அப்டீன்னு உடனே, பெரியவா வந்து, “அவன் என்னையே நினைச்சுண்டு தூங்கி இருக்கான். கனவுல, என்னை பார்த்தான், அதனால நீயும், படுத்துக்கும் போது, ராம, ராம, ராமான்னு சொல்லிண்டு தூங்கு. உனக்கும் நல்ல சொப்பனமா வரும்”, அப்டீன்னு பெரியவா, சொல்றா. அது அவரோட humility யை காண்பிக்கறது.
பெரியவளுக்கு அந்த மாதிரி கனவுல தரிசனம் கொடுக்க முடியும். இருந்தாலும் humility, ஏதோ அவனோட நம்பிக்கை. அப்டீங்கிற மாதிரி சொல்றா பெரியவா. அப்படி அந்த humility ல என்ன ஒரு advantage அப்டீனா, பெரிய பெரிய கஷ்டங்களை, எல்லாம் தாங்கிண்டு போகலாம்.
ராமர் தசரதர் சொன்ன இந்த வார்த்தையை கேட்டுட்டு, அவர் “சரிப்பான்”னு சொல்லி, அவர், நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறார். அதனாலதான், அடுத்த நாள் காலம்பர அவரே, கூப்பிட்டு “உனக்கு ராஜ்ஜியம் இல்லே, நீ காட்டுக்கு போ”ன்னு, சொன்னபோது, “ஹா, நான், எவ்வளோ பெரியவன், எனக்கு, எவ்வளோ பேர் supportக்கு இருக்கா. என்ன பண்றேன், பார்” அப்படீன்னு சொல்லலை. சரிப்பா, அப்படீன்னு, “அப்பா வார்த்தையை கேட்கறதுதான், எனக்கு, தர்மம்” அப்படீன்னு காட்டுக்கு கிளம்பறார். காட்டுக்குப் போனா, மேலும் மேலும், கஷ்டம். காட்டுல போயி வசிக்கறது, ராஜ்யத்தை, இழந்து, அப்பா, அம்மா அன்பான அப்பாவை, பிரிஞ்சு போயி, காட்டுல இருக்கறது, கஷ்டம். அங்க சீதை காணாம போயிடறா. ஒரு friend ன்னு, அவளுக்கு, கிடைச்ச ஜடாயுன்னு, ஒரு பக்ஷி, கொல்லப் படறது. இப்படி மேலும் மேலும், கஷ்டம் வரும்போது, அதை ராமர், எப்படி தாங்கி மீண்டு வந்தார்னா, அந்த humility தான். நான் ரொம்ப பெரியவன், அப்படீன்னு, நினைச்சாதான், அந்த ego க்கு அடி விழும். அப்படி, இல்லாம humble, ஆயிட்டா, நாம, எல்லா, கஷ்டங்களையும், தாங்க முடியும்.
ராமருக்கு சின்ன வயசுலேர்ந்தே ரிஷிகள் அனுக்ரகம் இருந்த மாதிரி, நமக்கும் நல்ல ஒரு ஸத்குரு, கிடைச்சுட்டார்னா, நம்மளோட ego, ரொம்ப குறைச்சுடும். அந்த ego வை, போக்கறதுதான், ஸத்குரு, பண்ற பெரிய அனுக்ரஹம். நாம ஏதோ ஏதோ பத்தி கர்வப் பட்டுண்டு இருப்போம். ஏதோ, படிச்சிட்டோ, ஏதோ, கேட்டுட்டோ, அதெல்லாம் விட பெரிய விஷயங்கள், இருக்கு, வாழ்கையில,there is a higher purpose அப்டீங்கிறதை, ஒரு realized soul ஆ இருக்கிறவா, நமக்கு சொல்லும் போது, நமக்கு, இந்த நம்முடைய, achievements எல்லாம் பத்தி, நமக்கு ரொம்ப ஒரு கர்வம் வராது. கொஞ்சம் கொஞ்சமா அது போயிடும். அப்புறம்தான், சந்தோஷம்னா, என்னங்கிறது, வாழ்க்கையில, கொஞ்சம் புரியும். அந்த humilityங்கிறது, அந்த spritual path ல ஒரு அத்யாவசிய குணம், அப்படீன்னு, இந்த ஸ்லோகத்தை படிச்ச உடனே தோன்றது.
பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய: (10 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…
4 replies on “பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய:”
I don’t find any words to express my feeling. Iam really blessed Tobe in your group.
இந்த கால கட்டத்தில் Virus அதெல்லாம் வந்து பயப்படுத்தும்போது ராம ஜபம் எத்தகைய அரு மருந்து என்பதை உணர்த்தும் அழகான பதிவு !
தகப்பனார் பிள்ளைக்கு நடுவே உள்ள பிணைப்பு, பாசம் அதை வெளிப்படுத்தும் விதம் எல்லாமே அழகு!
இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் எனும் குறள் பாவை ஞாபகப் படுத்தும் விதமாக
அழகான விளக்கம் பதிவு!!
Humility Vinayam the virtue has to be developed by all spiritual seekers is explained beautifullly.
Periava is the personification of all great virtues.
Pranams.
தசரதர் ராமர் பட்டாபிஷேக சமயம்
விநயம் என்றநற் குணத்தை மேலும். வளர்த்துக்கொள்ள அறிவுரை. அதனால் அடுத்த நாள் எல்லாமே தலை கீழாக ஆன பிறகும் ஒரு வருத்தமும் இல்லாத ஸ்தித ப்ரக்ஞ்ர். இந்த இதிஹாஸ சம்பவத்தோடு மால் ப்ரண்டன் மஹா பெரியவா சம்பவத்தை இணைத்து சொன்ன விதம் அருமை. அந்த உபதேசத்தின் பயனாக பால் ப்ரண்டனுக்கு ஞானம் கிடைத்தது வர்ணித்த விதம் அருமை.
ஆஞ்சனேய ஸ்வாமியை விநய சம்பன்னர் என்று அழுத்தமாக கூறிய மஹா பெரியவா மட்டும் வேறென்ன? Absolute Modesty. Brilliantly Humble. சூர்யனின் ப்ரகாசத்தை மறைக்க இயலுமா?