ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.
ஸீதாதேவியும் தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது முதல், அரண்மனையில் இருந்தாலும், காட்டில் நடந்தாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து, கணவனை தெய்வமாக கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதை எடுத்துக் காட்டினாள்.
ஸீதா கல்யாண கட்ட ஸ்லோகங்கள் (Audio of seetha kalyana slokams from Valmiki Ramayana)
ஸ்ரீராம ஜனனம், மற்றும் இந்த ஸீதா கல்யாண கட்ட ஸ்லோகங்களை சுந்தரகாண்ட பாராயணத்தின் ஆரம்பத்தில் படிப்பது ஸ்வாமிகள் வழக்கம்.
சுந்தரகாண்ட பாராயணத்தின் முடிவில், யுத்தகாண்டம் முதல் சர்கம் மற்றும் ராம பட்டாபிஷேக சர்கங்களை படித்து பூர்த்தி செய்வார்.
ராமாயண பாராயணம் விவாஹம், குழந்தைப் பேறு, மற்றும் சகல மங்களங்களையும் தர வல்லது.