Categories
Ramayana One Slokam ERC

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு ஸ்லோகம்

ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा।

निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।।

ப்ரம்மஹக்னே   ச ஸுராபே ச  கோக்னே பக்னவ்ரதே ததா |

நிஷ்க்ருதிஹி ஹித சதபிஹி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதிஹி ||

அப்படினு ஒரு ஸ்லோகம். நிஷ்க்ருதிஹி ன்னா ப்ரயஸ்சித்தம். ப்ரம்மஹக்னே – ப்ரம்மஹத்தி பண்ணிணவனுக்கும், ஸுராபே – ஸுரா பானம் பண்ணிணவனுக்கும், கோக்னே – கோஹத்தி பண்ணிணவனுக்கும்,  பக்னவ்ரத: விரதத்தை முறித்தவனும், இங்க வந்து கல்யாணத்துக்கு முன்னாடி பிரம்மச்சர்ய விரதத்தை விட்டுட்டவனும், என்ற ஒரு அர்த்தம் சொல்லுவா. இந்தமாதிரி பாபங்களுக்கெல்லாம் ” நிஷ்க்ருதிஹி விஹிதா” ரிஷிகளால் பிராயஷ்ச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது,  “சத்பிஹி” சாதுக்களால், ரிஷிகளால். “க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதிஹி ” செய்த நன்றியை மறந்தவனுக்கு பிராயஸ்சித்தமே கிடையாது அப்படினு ஒரு ஸ்லோகம்.

இதை அப்படியே வள்ளுவர் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” அப்படினு ஒரு குரளில் எழுதியிருக்கார். திருவள்ளுவருடைய நிறைய குறள் பாடல்களுக்கு வைதீகமான அர்த்தம் சொல்லமுடியும், அதுவும் பரிமேலழகர் உரையில நம்முடைய தெய்வ மதத்துல இருக்க அந்த அர்த்தங்கள் தான் சொல்வார். தர்ம சாஸ்த்திரம் பண்ணின  பதினெட்டு ரிஷிகளோட இவர் பத்தொன்பதாவது ரிஷியா இவர் ஒரு சாஸ்த்ரம் ஸ்ம்ருதி கொடுத்திருக்கார்னு ஒரு interpretation சொல்லுவா.

அப்படி ஒரு புஸ்தகம் ஒரு பெரியவர் எழுதி இருக்கார். மஹாபெரியவா “அதை நான் மூணு வாட்டி படிச்சேன்னு அவர்கிட்ட சொல்லு” அப்படினு சொல்லிருக்கா. அந்த புஸ்தகம் எழுதின பெரியவர் ஸ்வாமிகள் ஆத்துக்கு வருவார், அவர் ஒரு வைஷ்ணவர், ஆனா அம்பாள் உபாஸகர், தமிழ்ல நல்ல படிப்பு,  அதனால திருக்குறளுக்கு இந்த மாதிரி உரை எழுதிருக்கார்.  “ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்” ராஜா ஒழுங்கா ஆட்சி பண்ணலைனா, பசுக்கள் பால் கம்மியா கொடுக்கும், அறுதொழிலோர், ஷட்கர்மநிரதா: னு பிராமணர்களுக்கு ஒரு பேரு , யாகம் பண்ணனும், யாகம் பண்ணி வைக்கணும், வேதம் படிக்கணும், வேதம் சொல்லித் தரணும், தானம் வாங்கணும், தானம் கொடுக்கணும், இந்த ஆறுதொழில பண்றதுனால ஷட்கர்மநிரதா:னு பேரு, இந்த ஆறுதொழில் பண்ணக் கூடிய பிராமணர்கள் நூல் மறப்பர், வேதத்தை மறந்து போய்டுவா. “காவலன் காவான் எனின்” எவ்வளோ பெரிய நஷ்டம் ஒரு தேசத்துக்கு, அப்படினு ஒரு திருக்குறள்  இருக்கு. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” அப்டீங்கிற திருக்குறளுக்கு, equivalent ஆ இந்த ராமாயணத்துல இந்த ஸ்லோகம் இருக்கு.

இது எங்க வரதுன்னா, ராமர் வாலி வதம் பண்ணின பின்ன, சுக்ரீவன்,  வானரா எல்லாம் வந்து, ராமர் கிட்ட நமஸ்காரம் பண்றா. “நீங்க கிஷ்கிந்தைக்கு வாங்கோ” அப்டீன்னு சுக்ரீவன் சொல்றான். ராமர், “இல்ல, எந்த ஒரு கிராமத்துக்குள்ளயோ, நகரத்துக்குள்ளயோ, நான் வர மாட்டேன், எங்க அப்பாக்கு, நான் அந்த வாக்கு கொடுத்துருக்கேன். நீ போய் பட்டாபிஷேகம் பண்ணிண்டு ஆட்சி பண்ணு. ரொம்ப நாள், நீ கஷ்டப் பட்டுட்ட. அதனால கொஞ்சம் சுகம் அனுபவி. மழை காலமா இருக்கு, அதனால வெளியிலையும் கிளம்ப முடியாது. மழை காலம் முடிஞ்சா உடனே நீ என்னை வந்து பார். அப்டீன்னு சொல்றார். வந்து, எனக்கு, சீதாதேவியை, தேடிக் கொடு. இது, நமக்குள்ள இருக்கற ஒப்பந்தம்”. அப்டீன்னு சொல்றார்.

சுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு போறான். வானரா எல்லாரும் அவனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைக்கறா. அவன் குடியிலயும் காமத்துலயும், எல்லாத்தையும் மறந்து போயி, அதுலயே மூழ்கி கிடக்கறான். ஆச்சு. மழைகாலம் முடிஞ்சுது, சரத் காலம் வந்துடுத்து.  அவனுக்கு ஒண்ணுமே தெரியலை. அப்போ, ஹனுமார் போயி அவனுக்கு ஞாபகப் படுத்தறார். “இந்த மாதிரி நீ ராமருக்கு நீ வாக்கு கொடுத்துருக்க. செய்த நன்றி மறக்கக் கூடாது. பெரியவா எல்லாம் கேட்கறதுக்கு முன்னாடி நாமளே பதில் உதவி பண்ணனும்” அப்டீன்னு ஞாபகப் படுத்தறார், அதுக்கு அவன், “நீ என்ன வேண்ணா பண்ணு”, அப்டீங்கறான். உடனே நீலனை கூப்பிடறார், ஹனுமார். இந்த சுக்ரீவன் நீலன் கிட்ட உத்தரவு போடறான். “எல்லா வானராளையும் ஒரு மாசத்துக்குள்ள வரச் சொல்”, அப்படீன்னு ஒரு உத்தரவு போட்டுட்டு, அவன் திரும்பியும் அந்தபுரத்துக்குள்ள போயிடறான், சுக்ரீவன்.

நீலன் அந்த மாதிரி ஒரு உத்தரவு போடறான். எல்லா வானராளும் வர ஆரம்பிக்கறா. தூதர்களை அனுப்பிச்சு, எல்லா வானராளையும் கிஷ்கிந்தைக்கு, வரச்சொல்றா. ஸ்வாமிகள் சொல்வார், “இந்த சுக்ரீவனுடைய military தான் ரொம்ப best. அங்கங்க மரத்துல பழம் இருந்தா சாப்டுக்கணும். ஆத்துல, எங்கயாவது ஜலம் இருந்தா குடிச்சுக்கணும், வான்னா வரணும், எங்க இருந்தாலும் ரிப்போர்ட், பண்ணனும். செலவே இல்லாத military” அப்டீன்னு சொல்வார். அந்த, மாதிரி வானரா எல்லாம் வந்துண்டு இருக்கா.

அதுக்கு நடுவுல ராமர் காத்துண்டு இருக்கார். லக்ஷ்மணன்கிட்ட, அப்பப்ப புலம்பறார், லக்ஷ்மணன், “இல்ல, சுக்ரீவன் தயவு பண்ணுவான், காத்துண்டு இருங்கோ, அவன் சொன்ன வார்த்தையை மீற மாட்டான், அப்டீன்னு சொல்றார், ஆனா இப்படி, நாள் கடந்துடுத்து , அப்டீன்ன உடனே, ராமருக்கு கடுங்கோபம் வர்றது. அவர் லக்ஷ்மணன் கிட்ட சொல்றார், “இந்த சுக்ரீவன் செய்த நன்றியை மறந்துட்டான். நீ போய் அவனுக்கு ஒரு எச்சரிக்கை குடு. நான் எந்த கதவைத் திறந்து வாலியை யமலோகத்துக்கு அனுப்பிச்சேனோ அந்த கதவை இன்னும் மூடலை. உன்னையும் யம லோகத்துக்கு அனுப்பிடுவேன் சொல்லு” என்கிறார் ராமர்.

அப்ப லக்ஷ்மணனுக்கு, ரொம்ப கோபம் வர்றது. ராமர் சீதையை, பிரிஞ்சி படற கஷ்டத்தை, பாக்கறான். இப்ப வரைக்கும் சமாதனம் சொல்லிண்டே இருக்கான். அப்போ, லக்ஷ்மணன், சொல்றான், “இவனோட என்ன பேச்சு? இவன் ரொம்ப முட்டாளாக இருக்கான். புத்தி கெட்டவனா இருக்கான். இவனுக்கு, ராஜ்யத்தை, கொடுத்தே இருக்கக் கூடாது. நாம, ஹனுமான், அங்கதன், இவாளை எல்லாம் வெச்சு, சீதா தேவியை தேடி கண்டு பிடிச்சுடுவோம். நான், இவனை போய் வதம் பண்ணிடறேன்” அப்படீன்னு சொல்றான். அப்ப ராமர், சொல்றார். “அப்படி பண்ணாதே, ஏன்னா, நாம சீதையை, இழந்து, ஜடாயுவை, இழந்து, நாம ஒரு கபந்தத்துக்கு, கிட்ட மாட்டிண்டோம். அப்புறம், தனுங்கற கந்தர்வன், சொல்லி, இந்த சுக்ரீவனை, வந்து பார்த்தபோது, “நீயும் நானும், நண்பர்கள். உன் கஷ்டம், என் கஷ்டம்”, அப்படீன்னு ஒரு வார்த்தை அவன் சொன்னானே, அன்னிக்கு, அது எவ்வளவு, ஆறுதலா இருந்தது எனக்கு. அதனால நீ அவனை, கொல்லாதே, நீ அவனப் போயி, எச்சரிக்கை பண்ணு, warning கொடு, புரிஞ்சிண்டுடுவான்”, அப்படீன்னு, சொல்றார்.

அதே மாதிரி, லக்ஷ்மணர் கடுங்கோபத்தோட கிஷ்கிந்தைக்கு வரார், எல்லாரும்,பயப்படறா. அங்கதன், எல்லாம், ரொம்ப பயந்து போயி, தாரை கிட்ட, சொல்றான், ருமை கிட்ட சொல்றான், சுக்ரீவன் கிட்ட சொல்றான். சுக்ரீவன் ஓரளவு தான் தெளிவா இருக்கான், அப்புறம் சுக்ரீவன், வெளியில வரான். மந்திரிகள், எல்லாம் வந்து, அவன் கிட்ட நல்ல புத்தி சொல்றா. ஹனுமார், கடுமையா அவன்கிட்ட சொல்றார், “ராமர், கோவத்துல இருக்கார். ஆனாலும், அவர் உன்னை, உயிரோட விடணும்னு, நினைச்சு, லக்ஷ்மணனை, அனுப்பி இருக்கார். அவரே வந்து, இருந்தார்னா, உனக்கு, இன்னியோட, முடிவு வந்திருக்கும். அவர், லக்ஷ்மணனை, அனுப்பிருக்கார் என்பதில் இருந்தே, உன் பேர்ல, அவருக்கு, இன்னும், கொஞ்சம் பரிவு இருக்கு என்று தெரிகிறது. அதனால, நீ செய்த, நன்றியை, மறந்துட்ட. லக்ஷ்மணன் வரான், நீ அவன் கிட்ட கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கோ, அது ஒண்ணுதான், உனக்கு வழி, நான் மந்திரியா இருக்கலாம், நீ ராஜாவா இருக்கலாம், எனக்கு, என் உயிர் மேல, ஆசை இல்ல, நான் உனக்கு, நல்லதை சொல்றேன்” அப்டீன்னு சொல்றார், ஹனுமார்.

சுக்ரீவன் “வாஸ்தவம்தானே, ராமர், பண்ணிண நன்றியை, நான் மறப்பேனா, அவரால் தானே, எனக்கு இந்த ராஜ்யமே கிடைச்சுது”ங்கறான், “இது உனக்கு ஞாபகம் இருக்கோல்யோ, நீ இதை, லக்ஷ்மணன் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டுக்கோ”ன்னு சொல்லி, ஹனுமார் சொல்லி கொடுக்கறார். அப்புறம், அந்த சுக்ரீவன், லக்ஷ்மணன் கிட்ட தாரையை அனுப்பறான். லக்ஷ்மணன் கோபத்தோட வரான். அந்த ஆதிசேஷனோட கோபம். எல்லாரும், பயந்து நடுங்கரா. அந்த கிஷ்கிந்தையையே இன்னிக்கு, அழிச்சுடப் போறான்னு, அவ்வளோ பயப்படறா, எல்லாரும். அப்போ, அந்த தாரை எதிரே வந்த உடனே, இவன் கோபத்தை விடறான், பெண்கள்கிட்ட, மஹாத்மாக்கள், கோச்சுக்க மாட்டாங்கிறதுனாலதான், இந்த சுக்ரீவன், அவளை அனுப்பறான். அவள் வந்து, “ஏன் நீ கோவிச்சுக்கிற? இந்த சுக்ரீவன் ரொம்ப நாளைக்கு அப்புறம், ஏதோ வாழ்வு வந்ததுன்னு, அவன் அனுபவிச்சுண்டு இருக்கான். உன்னை மாதிரி அவனுக்கு, புலனடக்கம், இல்லையே, உனக்கு, அந்த கஷ்டம் பத்தி தெரியாது, ஏதோ, அவன் கிடைச்சதை, அனுபவிச்சுண்டு இருக்கான், நீ அவனை, மன்னிச்சுடு. என்ன இருந்தாலும், உன் friend தானே” அப்படீன்னு, சொல்லி, அவ வந்து, “நான் அழைச்சுண்டு போறேன்னு, அப்படீன்னு, அந்தப்புரதுக்குள்ள அழைச்சுண்டு போறா.

உள்ள போன உடனே, சுக்ரீவனை, பார்த்த போது, அந்த ராமர், சொன்ன அதே வார்த்தைகளை, லக்ஷ்மணன், சுக்ரீவன்கிட்ட சொல்றான். “எம பட்டினம் போற வழி, இன்னும் மூடலை. உன்னை, வாலி கிட்ட ராமர், அனுப்பிச்சுடுவார், செய்த நன்றியை, மறக்காதே”, அப்படீன்னு, சொல்றான். அதை சொல்லுமோது, சுக்ரீவன் பயந்து, நடுங்கறான். அப்ப தாரை, திரும்பவும் நடுவில் வந்து, “என்ன இருந்தாலும், இவன் ஒரு மஹாராஜா. நீ எவ்வளோ, கடுமையான வார்த்தைகளை சொல்லாதே, அவன் ஒண்ணும், பண்ணாம இல்ல. ராவணன் கிட்ட கோடிக் கணக்கான, ராக்ஷதர்கள் இருக்கா. அந்த ராக்ஷதர்களை எதிர்க்கணும்னா, வானரப் படை வேணும். அந்த வானரப் படையை, சுக்ரீவன் வரச்சொல்லிட்டான். அவா வர்ரதுலதான், தாமதமே ஒழிய, இவன்கிட்ட, ஒண்ணும் தப்பில்ல”. அப்படீன்னு, அந்த தாரை சொன்ன உடனே, சரி, நான் கோபத்தை, விட்டேன், அப்படீன்னு, லக்ஷ்மணன், சொல்றான். அப்பதான், சுக்ரீவனுக்கு, உயிர் வந்தது.

அவன் எழுந்து கைகூப்பி, “இந்த அடிமை செய்த, தப்பை, மன்னிச்சுடு, நான் இந்த மாதிரி, கள்ளுல, மூழ்கி, இருந்துட்டேன். நான் ராம கார்யத்தை, மறக்கல. அவரோட, தயவால்தான், எனக்கு, இந்த ராஜ்ஜியம் கிடைச்சுதுன்னு, எனக்கு, ஞாபகம் இருக்கு. ராமருக்கு, சஹாயம் என்ன வேண்டியிருக்கு?” அதாவது, தாரை வந்து, இந்த ராக்ஷதர்களை, ஜெயிக்கறதுக்கு, சஹாயம் வேணும்னு சொன்னா, இல்லையா. அதை மறுத்து பேசறான். “ராமர் ஒருவராவே, ராவணனை வதம் பண்ணிடுவார். ஒரு ராஜான்னு, போனா, பின்னாடி, அலங்காரத்துக்கு, ஒரு படை போகணும். அதுக்காக, நாங்க, போகப் போறோம், அவ்வளோதான், ராமருக்கு, ஒண்ணும் சஹாயமே வேண்டியது இல்ல. அதனால, நான் வந்து, அவரை, பார்க்கறேன்”, அப்படீன்னு, சொன்ன உடனே, லக்ஷ்மணரும், “ஆஹா,இந்த மாதிரி, கஷ்டத்துலேயும், எங்களுக்கு, உன்னை மாதிரி ஒரு friend, கிடைச்சது, ரொம்ப தெய்வாதீனம்தான். நீ வந்து ராமரை,நிலையை பாரு, அவர் படற கஷ்டத்தை பார். நீ, உன்கிட்ட, நான் கோபத்துல, சொன்ன வார்த்தைகளை, மறந்துடு” அப்படீன்னு, அவனும், ஒரு magnanimous ஆ சொல்றான்.

அப்புறம், ரெண்டு பேரும்,போயி ராமரை பார்க்கறா. சுக்ரீவன் ராமரை நமஸ்காரம் பண்றான். ராமர் “தர்மார்த்த காம மோக்ஷம், அந்தந்த கார்யம், அந்தந்த நேரத்துல, பண்ணனும்”, அப்படீன்னு, ஒரு வார்த்தை சொல்றார். அதாவது, “நீ காமத்துல மூழ்கி, தர்மத்தை மறந்துட்டியே” அப்படீன்னு சொல்றார். அதுக்குள்ள, அந்த கோடிக் கணக்கான, வானரர்கள் எல்லா திக்குல இருந்தும் வந்துடறா.

அன்னிக்கு, அந்த ஹனுமார் பண்ணிண உபகாரம். அவர் நடுவுல, வந்து, “நீ உத்தரவு, போடு. அது போறும்”, அப்படீன்னு, சொல்லி, நீலனை, கொண்டு, உத்தரவு, போட்டதுனால, எல்லா, திக்குலிருந்தும், எல்லா வானரர்களும், வந்து சேர்ந்துடறா. அந்த கோடிக் கணக்கான, வானரர்கள் வந்து, சேர்ந்ததுனால, ராமர் திருப்தி, ஆயிடறார். “எப்படி, சூரியன், ஒளியை கொடுக்கறதோ, எப்படி, இந்திரன், மழையை கொடுக்கறாரோ, அந்த மாதிரி, நீ சொன்ன வார்த்தையை மீற மாட்டே. எனக்கு, சஹாயம் பண்ணுவேன்னு, எனக்குத் தெரியும், ரொம்ப சந்தோஷம்”, அப்படீன்னு, சுக்ரீவன்கிட்ட சொல்லிட்டு, அப்புறம் நான்கு திக்குலேயும், அந்த வானரர்களை சீதாதேவியை தேட அனுப்பறா. அதுக்கு மேல, கதை போறது.

அதுமாதிரி, செய்த நன்றியை, மறக்கக் கூடாது. ராமர், முதலில் சுக்ரீவனை அவனை, பார்த்த போது, நானும், நீயும் friends, ன்னு சொன்ன அந்த வார்த்தையை மறக்கல. “அப்போ,ஒரு, திருப்தி, ஏற்பட்டுதே, அப்படீன்னு, அந்த நன்றியை, கூட, மறக்காம, அவனை, சுக்ரீவனை உயிரோட விட்டார். சுக்ரீவன், ஆனா, இப்ப தெளிஞ்சுட்டான். தெளிஞ்ச உடனே, அவனும் தன்  படைகளை, கொண்டு, சீதாதேவி, எங்கயிருக்கான்னு கண்டு பிடிச்சு, அந்த கோடிக்கணக்கான, வானரர்களோட, வந்து, யுத்தம் பண்றான். உயிரையும், துச்சமா நினைச்சு, ராமருக்காக, யுத்தம் பண்றான். அந்த மாதிரி, அவனும் அவனோட, நன்றியை, கான்பிக்கறான். ராமர், பட்டபிஷேகத்துல, வந்து, கலந்துக்கறான். அந்த ராமருடைய, குணம், அது. சின்ன நன்றி பண்ணா கூட,

कथञ्चिदुपकारेण कृतेनैकेन तुष्यति।

न स्मरत्यपकाराणां शतमप्यात्मवत्तया।।

கதஞ்சித் உபகாரேண க்ருதேன எகேன துஷ்யதி |

ந ஸ்மரதி அபகாராணாம் ஷதமபி ஆத்மவத்தயா ||

தன்கிட்ட, பண்ண கொஞ்ச, உபகாரத்தையும், நினைப்பார். நூறு, தப்பு பண்ணாலும் மறந்துடுவார், அப்படீன்னு, ராமரோட, குணம்.

இதே குணம், நான் ஸ்வாமிகள் கிட்டயும், பார்த்திருக்கேன். அவருக்கு, யார் என்ன சின்ன, உபகாரம் பண்ணினான்னு, எல்லாம், ஞாபகம் வெச்சுபார். மகான்கள் சாக்ஷாத் பகவானை போலதான். அவர்கிட்ட, பண்ண, அபகாரங்கள், எல்லாம், அவர் நினைக்கவே, மாட்டார். மஹாபெரியவாளும், அப்படிதான், இருந்துருக்கா, அவாளை எல்லாம், நினைப்போம். நாமும் பிறர் நமக்கு செய்த நன்றியை மறக்காமல் இருப்போம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் (13 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.