Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினெட்டாவது ஸ்லோகம் (13 min audio file. Same as the script below)

நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்தில 17வது ஸ்லோகம்.

स्फुरद्रत्नकेयूरहाराभिरामः

चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः |

कटौ पीतवास करे चारुशक्ति:

पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज: ||

ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:
ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக: |
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி:
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ: ||

ன்னு ஒரு ஸ்லோகம் பார்த்தோம்.அந்த ஸ்லோகத்துல ‘முருகா, நீ என் முன்னாடி வந்து தரிசனம் கொடு’ , அப்படின்னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார். அந்த ஸ்லோகத்துக்காக, முருகப் பெருமானை ‘என் முன்னால வா’னு சொல்ற திருப்புகழ் பாடல்கள் தேடினேன். நிறைய இருந்தது. அதுல இன்னொரு அழகு பார்த்தேன். முக்கால்வாசிப் பாடல்கள்ல அருணகிரி நாதர் முருகப் பெருமானை ‘நீ ஆடிண்டு வரணும். ஓடி வரணும்’ னுலாம் வேண்டியிருக்கார். ‘என் முன்னாடி தரிசனம் கொடுக்கணும்’ங்கறதை விட, ‘என் முன்னாடி மயில்ல பறந்தோடி வரணும். விரைந்து வரணும். ஆடிண்டு வரணும்’னுலாம் நிறைய பாடி இருந்தார். இதை என்னன்னு யோசிச்சேன். அப்புறந்தான் ‘அதல சேடனார் ஆட’ ங்கற பாட்டும் கதையும் ஞாபகம் வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். இருந்தாலும் மகான்களோட சரித்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லணும். திரும்பத் திரும்பக் கேட்கணும். அது தான் நமக்கெல்லாம் ஆனந்தம் இல்லையா!

அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணமலையில் சம்பந்தாண்டான்னு மந்திரவாதி ஒருத்தன் இருக்கான். பிரபுடதேவ மஹாராஜா-ன்னு ஒருத்தர் திருவண்ணாமலை ராஜாவா இருக்கார். அவர் கிட்ட இந்த சம்பந்தாண்டான் ஒரு மந்திரியாட்டம் , குலகுரு மாதிரி இருக்கான். அவன் காளி உபாசகன். அதனால அவன் கிட்ட சில மந்த்ர சக்திகள், சித்திகள்-லாம் இருக்கு. அதையெல்லாம் வெச்சு ராஜாவை மயக்கி வச்சிருக்கான்.

இங்க அருணகிரிநாதர் கோவில்ல முருகப் பெருமான் அருள் பெற்று அற்புதமா திருப்புகழ் பாடறார்-ன்ன உடனே நிறைய ஜனங்கள் அவர்கிட்ட பக்தர்கள் ஆயிடுறா. அவருடைய பெருமை உலகத்துக்கு தெரியறது. ராஜாவும் கோவில்ல போய் அருணகிரிநாதரை நமஸ்காரம் பண்ணி, அவருடைய அருள் முகத்தால ஈர்க்கப்படறார். இதனால சம்பந்தாண்டானுக்கு பொறாமை ஏற்படறது. உடனே அவன் ராஜா கிட்ட ‘இவரப் போய் நீங்க ரொம்ப பெரியவர்னு நெனைக்கிறேள். நான் கூப்பிட்டா காளி தேவி என் கண் முன்னாடி வருவா. இந்த அருணகிரிநாதர் கூப்பிட்டா முருகப் பெருமான் வருவாரா’ன்னு சொல்றான். உடனே நாம கேட்போமேன்னு அருணகிரி நாதர்கிட்ட ராஜா போய் ‘நான் ஸ்வாமி தர்சனம் பண்ணனும்னு ஆசைப் படறேன். நீங்க முருகப் பெருமானை வரவழைக்கணும்’ன்ன உடனே சரின்னு சொல்லிடறார். ‘ஆனா நீ கோயிலுக்கு வா. உன் சபைக்கு நான் வரமாட்டேன்’னு சொல்லிடறார்.

அந்த சம்பந்தாண்டான் அன்னிக்கி ராத்திரி அம்பாள்கிட்ட ‘நான் உன்ன கோயில்ல நாளைக்கி மந்திரம் சொல்லி கூப்பிடுவேன், நீ வந்து தரிசனம் கொடுக்கணும்’ன உடனே அம்பாள் ‘நான் எல்லார் முன்னாடி வர மாட்டேன்’னு சொல்லிடறா. அப்போ இந்த சம்பந்தாண்டான் அழுது புலம்பி ‘எனக்கு அவமானமா ஆயிடுமே. எனக்காக இது ஒண்ணாவது பண்ணு. முருகப் பெருமானை அருணகிரி நாதர் கூப்பிடும் போது, அவர் வராத மாதிரி பிடிச்சி வச்சுக்கோ’ன்னு சொல்றான். ‘சரி நான் அப்படி பண்றேன்’ன்னு சொல்லி அம்பாள் முருகப் பெருமானைப் பிடிச்சு மடியில வெச்சிண்டிருக்கா.

கோவிலுக்கு வந்த போது, சம்பந்தாண்டானுக்குத் தெரியும் , அம்பாள் வர மாட்டான்னு. ‘அருணகிரி நாதரை முதல்ல முருகனைக் கூப்பிடச் சொல்லுங்கோ’ன்னு சொல்றான். அருணகிரி நாதர் முருகனை தியானம் பண்றார். அவருக்குக் கைலாசக் காட்சி தெரியறது. ‘அம்பாள் முருகனைப் கெட்டியா, விடாம பிடிச்சு வச்சிண்டிருக்கா,’ ன்னு தெரியறது. உடனே அவர் ‘மயில் விருத்தம்’னு ஒண்ணு பாடறார். ரொம்ப அழகா இருக்கும். மயில் விருத்தத்தைப் பாடின உடனே, மயில் போய் அம்பாள் முன்னாடி நடனம் ஆடறது. அம்பாள் பார்த்து மயங்கி கையில முருகக் குழந்தையைக் கெட்டியாப் பிடிச்சிண்டுருக்கோம்கறதை மறந்து நழுவ விட்டுடறா. அப்போ அருணகிரி நாதர் இந்தப் பாட்டைப் பாடறார்.

அதல சேட னாராட அகில மேரு மீதாட

அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட

மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு

கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்

கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது

கனக வேத கோடூதி …… அலைமோதும்

உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத

உவண மூர்தி மாமாயன் …… மருகோனே

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ

னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.

அப்படி அவர் பாடின உடனே முருகப் பெருமான் ஓடி வந்துடறார். அங்க ஒரு கம்பத்துல வந்து எல்லாருக்கும் தர்சனம் கொடுக்கறார். எல்லாரும் சந்தோஷப் படறா. திருவண்ணாமலை கோவில்ல இருக்கிற கம்பத்தில தோன்றி எல்லாருக்கும் காட்சி கொடுத்து, இன்னிக்கும் அந்த கம்பத்திலயே இருக்கார் முருகர். அந்த சன்னிதி ‘கம்பத்து இளையனார் சன்னிதி’ ன்னு அங்க போனா பாக்கலாம். இதுல ‘கதை(Gadhai) விடாத தோள் வீமன்’னு வரும். சில பேர் தெரியாம ‘கதை(Kadhai) விடாத’ ன்னு பாடிடுவா. தமிழ் Phoneticஆ இல்லாததனால இப்படி ஆகிவிடும். கதை (Kadhai) விட்ற வீமன்-லாம் கிடையாது. எப்போதும் கதை(Gadhai) வச்சிண்டுருக்கான். அதனால ‘கதை விடாத தோள் வீமன்’ . இதுல அந்த பிரபுடதேவ மகாராஜாவோட பேரைக் குறிப்பிடுறார். ஏன்னா முருகப் பெருமான் வந்து அந்த ராஜாவுக்கு தர்சனம் குடுத்துட்டார் இல்லையா. அதனால அந்த அளவுக்கு அவருக்கு யோக்யதை இருக்கு. மஹான்கள் மனுஷா. பிரபுடதேவ மகாராஜா-ன்னு 10000 திருப்புகழ்ல ஒரு திருப்புகழ்ல இந்த ஒரு பேரைத் தான் Mention பண்ணியிருக்கார். அப்படி முருகன் ஓடி வந்து தரிசனம் குடுத்ததுனால எல்லாப் பாட்டிலேயும் ‘எனது முன் ஓடி வரவேணும்’ னு பாடி இருக்கார் போலிருக்கு.

இந்த வரவேணும் பாட்டெல்லாம் பாத்துண்டே வந்த போது , வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்னு ஒரு மஹான் இருந்தார். அவர் ‘திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை’னு ஒரு பஜனை பத்ததி ஏற்படுத்தினார். அதுல முதல்ல சில கந்தர் அலங்கார பாடல்கள் எல்லாம் பாடுவா. இந்த ‘ஜயதேவர் அஷ்டபதி’யில ஸ்லோகங்கள் சொல்ற மாதிரி. நெஞ்சக்கனகல்லும், வாரணத்தானை, அருவமும் உருவுமாகி, அந்த மாதிரி பிள்ளையார், முருகனை எல்லாம் தியானம் பண்ற ஸ்லோகங்கள் மாதிரி, இந்த அலங்காரம், அந்தாதி, அனுபூதி எல்லாம் பாடிட்டு, கைத்தல நிறைகனி பாடி, உம்பர்த்தரு பாடி இப்படி பிள்ளையாரோட பாடல்கள். அப்புறம் அருணகிரிநாதர் மேல பாட்டு. அப்புறம் திருப்புகழ் அடியார்கள் மேல. அப்புறம், கடைகண்ணியல் வகுப்புன்னு, வாருமே நீங்கள் வாருமே, மயிலையும் அவன் திருக்கை அயிலையும் கடைக்கண் இயலையும் நினைத்து இருக்க வாருமேன்னு முடியும். நீங்க உங்களோட மத்த வேலையெல்லாம் விட்டுடுங்கோ. முருகனைப் பாடுங்கோ. முருகனுடைய மயிலையும் அவன் திருக்கை அயிலையும் கடைக்கண் இயலையும் நினைச்சிண்டு உட்காருங்கோ. உங்களுக்கு குபேரனைக் காட்டிலும் செல்வம் வரும். இந்திரனை காட்டிலும் பதவி வரும். உங்களுக்கு எல்லா சித்திகளும் வரும்னு அவ்ளோ forceful ஆ சொல்றார். அவ்ளோ நம்பிகையோட அவர் சொல்றார். அதைப் பாடி எல்லா ஜனங்களும் வாங்கோ ன்னு முருகனைப் பாட எல்லாரையும் கூப்டுண்டு, அதற்கப்பறம் அறுபடை வீடு பாடல்கள். அதுல இந்த வரவேணும்னு வரக்கூடிய பாடல்கள் எல்லாம் முதல்ல பாடுவாளாம். அதெல்லாம் வரவு பாடல்கள்னு சொல்லி அறுபடை வீட்டுலயும் வரவேணும்னு இருக்கிற பாடல்களை பாடிட்டு, அப்புறம் முருகப் பெருமான் வந்த உடனே அவருக்கு தூப, தீப, நைவேத்யம், அர்ச்சனை எல்லாத்தையும் திருப்புகழ் பாடல்களை கொண்டே பண்ணுவா. நாதபிந்து கலாதி நமோ நமோ மாதிரி நாலு அர்ச்சனை பாடல்கள் இருக்கு. அதெல்லாம் பாடி அதற்கப்புறம் அருள்வாயேன்னு நிறைய பாடல்கள் இருக்கு திருப்புகழ்ல. அந்த அருள்வாய் பாட்டெல்லாம் பாடிட்டு கடைசீல பக்தியால் யான் உன்னை, ஏறு மயிலேறி, அதெல்லாம் பாடி, மத்த தெய்வங்கள் எல்லாம் பாடி முடிக்கறதுன்னு வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் ஒரு பத்ததி போட்டு கொடுத்திருக்கார். அதை வெச்சிண்டுதான் எல்லா சபைகளிலேயும் திருப்புகழ் பாடறா. மஹான்கள்லாம் ஒத்துண்ட ஒரு பத்ததி அது.

இன்னிக்கு பதினெட்டாவது ஸ்லோகம்.

इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या_

ह्वयत्यादशच्छङ्करे मातुरङ्कात् ।

समुत्पत्य तातं श्रयन्तं कुमारं

हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥१८॥

இஹாயாஹி வத்சேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹ்வயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் |

ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் ||

இதை யாராவது சித்திரமா எழுதினா அவ்ளோ அழகா இருக்கும். ‘மாதுரங்காத்’ -அம்மாவான பார்வதி தேவியின் மடியில் உட்கார்ந்திருக்கும் ‘பாலமூர்த்தி’ – குழந்தையான முருகப் பெருமானை ‘சங்கர:’ சங்கரர் என்ன பண்றார்? ‘இஹாயாஹி வத்ஸ’ – குழந்தாய் இங்க என்கிட்ட வான்னு ‘ஹஸ்தான் ப்ரஸார்ய’ – இரண்டு கைகளையும் நீட்டி ‘ஆஹ்வயதி’ – கூப்பிடறார். ‘ஆதராத்’ -ரொம்ப செல்லமா கூப்பிடறார். அப்படி கூப்பிடும் சங்கரரிடத்தில், ‘ஸமுத்பத்ய’ குதிச்சு வந்து ‘தாதம் ஸ்ரயந்தம்’ – அப்பாவைக் கட்டிக்கொள்ளும், ‘குமாரம்’ அந்த குழந்தையை ‘ஹராஸ்லிஷ்டகாத்ரம்’ அப்படி ஓடி வந்த உடனே ‘ஹர:’ பரமேஸ்வரன் என்ன பண்றார், அப்படியே அணைச்சுக்கறார். அப்படி அம்மா மடியிலிருந்து துள்ளி அப்பா மடிக்கு வந்து, அப்பா கட்டியணைச்சுண்ட அந்த குழந்தையை, பால மூர்த்தியான முருகப் பெருமானை ‘பஜே’ நான் வழிபடுகிறேன்னு ரொம்ப அழகான ஸ்லோகம்.

இஹாயாஹி வத்சேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹ்வயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் |

ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் ||

ன்னு ஒரு ஸ்லோகம்.

சீர்பாத வகுப்புல ரெண்டு வரிகள் இருக்கு.

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர

இமகிரண தருணவுடு  ……  பதிசேர் சடாமவுலி

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென

இமையமயில் தழுவுமொரு  ……  திருமார்பி லாடுவதும்

முருகன் மணநாறு சீறடியே

ன்னு ரெண்டு வரி. கிட்டத்தட்ட இதே அர்த்தம்.

இந்த ஸ்லோகத்தை, குழந்தை பேறு வேணும்னு ஆசைப்படறவா சொன்னா குழந்தை பிறக்கும். ஸ்வாமிகள் எழுதி கொடுத்து, படிச்சு, அவாளுக்கு குழந்தை பொறந்திருக்கு. நான் பார்த்திருக்கேன். நமக்கு நம் வினையினால் நல்ல விஷயங்களை நினைக்கறதுக்கே நம்ம மனசை தடுத்துடறது. இந்த மாதிரி ஒரு குழந்தையை கொஞ்சற காட்சியை நம்மால மனசுல நினைக்க முடிஞ்சா, அது உண்மையிலேயே நடந்துடும். ஆனா நம்மால ஏதோ வருத்தங்கள் பட முடியறதே தவிர, அந்த கவலைகளை ஒதுக்கி நல்லதை நினைக்கவே முடியறதில்ல. அப்போ இந்த மஹான்களோட வாக்கு மந்திரமாக வேலைசெய்து இந்த வரங்களை எல்லாம் பெற்றுத் தரும். அது தான் நம்ம மதத்தோட பெருமை.

இதே போல குழந்தயாக, முருகா நீ குழந்தையா என் மடியில தவழ்ந்து எனக்கு முத்தம் கொடுக்கணும்னு அருணகிரிநாதர் ஒரு பாட்டுல சொல்லியிருக்கார்.

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த

திருமாது கெர்ப்ப …… முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

திரமாய ளித்த …… பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி …… லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த

மணிவாயின் முத்தி …… தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு

முலைமேல ணைக்க …… வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

மொழியேயு ரைத்த …… குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த

தனியேர கத்தின் …… முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்

சமர்வேலெ டுத்த …… பெருமாளே.

ன்னு ஒரு அழகான பாடலையும் வள்ளிமலை ஸ்வாமிகள் குழந்தை பேற்றுக்காக படிக்கச் சொல்வார்.

நாளைக்கு குமாரேசஸுனோன்னு ஆரம்பிச்சு முருகனுடய பதினொரு நாமங்களை சொல்ற ஸ்லோகம். நாமமந்திரம்னே சொல்லணும். அதைச் சொல்லி முருகனை வழிபடறார்.

குமாரேச ஸீனோ குஹ ஸ்கந்த சேனா

பதே ஸக்திபாணே மயூராதிரூட |

புலிந்தாத்மஜாகாந்த பக்தார்த்திஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதாரக்ஷ மாம்த்வம் ||

அதனுடைய அர்த்தத்தை நாளைக்குப் பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினேழாவது ஸ்லோகம் – முருகா! எனது முன் ஓடி வரவேணும்!ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும் >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார”

சம்பந்தாண்டான் போல மனிஷா நிறைய பேர் பல சமயத்திலே இருந்தா. பொறாமை என்ற தீய குணம் ஆட்டிப் படைக்கும் மனிதர்கள் !
அப்பையு தீக்ஷிதர் காலத்திலும் இது போல் ராஜாவிடம் அவரைப்.பற்றி தோஷனை பேசி, அவர் யாகம் செய்யும்.போது ஆஹூதி க்காக வாங்கும் பொருள்களை அவர் சுவீகரிப்பதாக!
அரசன் அதனை நம்பி, அவனுடன் காளஹஸ்தி யில் யாகம் நடக்கும் இடத்துக்குச் செல்ல, ஞான திருஷடியால் உணர்ந்த தீக்ஷிதர் யாக புருஷனை வேண்ட, யாக புருஷன் ஆஹூதியில் திரவ்யங்கள் சமர்ப்பணம் செய்யும்போது, அகனியிலிருந்து எழுந்து ‘ அப்பையா , நீ இது நாஜ்ல வரை ஆஹோதி செய்த அனைத்துப் பொருள்களும் என்னிடம் உள்ளன இந்தா பிடி” என்று சொல்லி அரசன் எதிரில் அவர் சுததத் தன்மையை யாவருக்கும் உணர்த்தினார் !
மயில் விருத்தம் சொன்னதும் குழந்தை முருகன் மடி மீதிலிருந்து இறங்கி வந்தது என்னால்.அகக் கண்ணால் உணர முடிகிறது ! ஏனென்றால் என்னைப் போல் ஒர் எளிய மனுஷி பிரார்த்தனையை செவி சாய்த்து முருகன் மயில் ரூபமாக ஆடினான் 20 வருஷம் முன்பு !
என் தம்பி மகளை அழைத்துக் கொண்டு கிண்டி பார்க்கில் மிருகங்கள் காணச் சென்றோம் !
மயில் தோகை விறிக்காமல் நின்றது பார்த்து, என் மருமகள் ” என்ன அத்தை ஆடாமல் அசையாமல் அப்படியே நிக்கறதே , ஆடினால்.நண்ணா இருக்கும் “என்று சொல்ல, நான் இப்போ ஆட வெக்கட்டுமா” என்று சொல்லி மயில் விருத்தம் பாட அந்த நிமிஷமே மயில்கள் நீருண்ட மேகம் பார்த்து, ஆடுவது போல் கோடை வெயிலில் ஆடியது, அற்புதமான நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று !
பக்திக்கு செவி சாய்க்காத கடவுள் இருப்பாரா?
மயில் வேல் விருத்தங்களின் சந்தன்கள் அப்படி வலிமை வாய்ந்தது ! செக மாயை யுற்றேன் என்று தொடங்கும் திருப்புகழ் மிக அருமை யான பலனளிக்கும் திருப்புகழ் !
இதை ஒரு மண்டலம் தொடர்ந்து பாராயணம் செய்ய கை மேல் பலன்!
இன்று திருப்புகழ் சுப்ரமண்ய புஜங்கம் விளக்கம் கேட்டு மனம் மிக முழுமை பெற்றது !
நன்றி கணபதி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.