Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி மூன்றாவது ஸ்லோகம் – முருக பக்தியே மனக்கவலைக்கு மருந்து

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி மூன்றாவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script above)

இன்னிக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருபத்து மூணாவது ஸ்லோகம்.

सहस्राण्डभोक्ता त्वया शूरनामा

हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।

ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं

न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥ २३ ॥

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |

மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி ||

ன்னு சொல்றார். இதுல ‘மமாந்தர் ஹ்ருதிஸ்தம்’ : என் ஹ்ருதயத்துக்கு உள்ளே இருக்கும் ‘மனக்லேசம்’: மனக்கவலை என்ற அசுரனை ‘ந ஹம்ஸி ப்ரபோ’: நீ கொல்ல மாட்டேங்கறியே ப்ரபோ ‘கிம் கரோமி’ நான் என்ன பண்ணுவேன், ‘க்வயாமி’ யார் கிட்ட போய் கேட்பேன்-னு சொல்றார். அந்த ‘கிம் கரோமி க்வயாமி’ ங்கறது, எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? நான் யார் கிட்ட போய் சொல்ல முடியும்? என்கிற ஒரு tone அந்த வார்த்தைகள்லேயே வர்றது. அந்த மெட்டுலயே வர்றது. ஸ்லோகத்தோட முதல் பாதில ‘ஸஹஸ்ராண்ட போக்தா’ இந்த உலகத்தை ஆயிரம் அண்டங்களாக செய்து ஏக சக்ராதிபதியா ஆண்டுண்டு இருக்கான் ஸூரபத்மன். அந்த ஸூரபத்மன் என்ற பெயர் கொண்ட அவனையும், தாரகனையும், ஸிம்ஹவக்த்ரனையும் நீ கொன்றாய். அந்த தைத்யர்களை எல்லாம் நீ வதம் பண்ணே. ஆனா என் மனசுக்குள்ள இருக்கற இந்த கவலைங்கற ஒரு அசுரனை மட்டும் நீ கொல்ல மாட்டேங்கறியேன்னு கேட்கறார்.

கந்த புராணத்துல வரக்கூடிய கதை இது. மூணு அசுரர்கள் இருந்தா. அவாளுக்கு பல வித மாயைகள் எல்லாம் தெரிஞ்சு இருந்துது. வெவ்வேறு உரு எடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். முருகர் அவாளை வதம் பண்ணினார். சூரசம்ஹாரம் ன்னு திருச்செந்தூர்ல விமர்சையா பண்ணுவா. அந்த சூரனுடைய உடம்புல, சிங்கம் குதிரைன்னு ஒவ்வொரு தலையா வச்சு கொண்டு வருவா. ஸுப்ரமண்ய ஸ்வாமியும் வருவார். அந்த அசுரனும் வருவான். இவரோட வேல் எடுத்து குத்தின உடனே அந்த தலை கீழே விழுந்துடும். அப்புறம் அவன் தலை இல்லாம பின்னாடி ஓடுவான். இந்த உத்சவம் கடற்கரையில ரொம்ப உத்ஸாகமா நடக்கும். கடைசியில அவன் மாமரமா வருவான். வேலை விட்ட உடனே அவனை இரண்டு பாகமா பிளந்து சேவலும், மயிலுமாக ஆக்கி முருக பெருமான் அருள் பண்ணுவார். சூரஸம்ஹரம்னு புராண கதையை உத்சவமாக பண்ணுவா. அசுரர்களை நீ வதம் செய்தாய் என்கிறதுக்கும் என் மனக்கவலையை போக்கு என்கிறதுக்கும், என்ன சம்பந்தம்னு சாதாரணமா நம்மால அர்த்தம் புரிஞ்சுக்க முடியாது. ரொம்ப அழகா தேதியூர் சாஸ்திரிகள் அதை புரிய வைக்கறார்.

கீதையில

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |

काम: क्रोध: तथा लोभ: तस्मात् एतत् त्रयं त्यजेत् ||

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனம் ஆத்மன: |

காம: க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் ||

ன்னு பகவான் சொல்றார். இந்த கீதா வாக்கியத்துல, தெய்வ சம்பத்துல பிறந்தவா மோக்ஷத்தை அடையறதுக்கு மூன்று எதிரிகள் இருக்கா. ‘த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்’ நரகத்துக்கு போக மூன்று கதவுகள் இருக்கு. ‘நாசனம் ஆத்மன:’ அது ஆத்மாவை நாசமடையச் செய்யும். ‘காமஹ க்ரோதஹ ததா லோபஹ’: அதுக்கு காமம், க்ரோதம், லோபம்னு பேரு. இந்த மூன்றையும் ஒரு புத்திமானானவன் கைவிட வேண்டும். அவன் அதிலிருந்து தன்னை திருப்பிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் க்ஷேமம் அடைய முடியும், அப்படீன்னு இந்த ஸ்லோகம்.

தேதியூர் சாஸ்திரிகள் சொல்றார். நமக்குள்ள காமம், க்ரோதம், லோபம்-னு மூணு சத்ருக்கள் உள்ள இருக்கு. அது தான் இந்த தாரகாசுரன், ஸூரபத்மன், ஸிம்ஹவக்ரன்-னு புராணங்கள்ல சொல்லியிருக்கா. ஞான பண்டிதனான சுப்ரமண்ய ஸ்வாமி அவாளை வதம் பண்ணினா தான் நமக்கு மோக்ஷம். அந்த சாமர்த்தியம் முருகப் பெருமான் ஒருத்தருக்குத் தான் இருக்கு. அதனால ‘முருகா நீ என்னை காப்பாத்து’ நாம வேண்டிக்கணும், அப்படீங்கறதை தான் ஆச்சார்யாள் சொல்லிக் கொடுக்கறார். அந்த மூணும் போனா தான் மனக்கவலைகள் ஒழியும். உடம்புல வர்ற வ்யாதிக்காவது ஏதாவது மருந்து சாப்பிட்டு குணப்படுத்திக்கலாம். இந்த மனோ வியாதிக்கு முருகனோட அருள் ஒண்ணு தான் வழி. அதுக்கு வேறே மருந்தே இல்லை. நல்ல பலவானைக் கூட இந்த கவலைங்கறது உருக்கிடும். இதுக்கு பல பேர் வைக்கறா. இந்த வ்யாதியை சரி பண்ணிக்கறதுக்கு திருச்செந்தூர்ல இருக்கும் முருகன் சன்னதி தான் மருந்து. வேற உபாயமே கிடையாது. பகவனோட கடாக்ஷம்தான் அதுக்கு ஓளஷதம்ன்னு சொல்றார்.

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸனம் ஆத்மனா: |

காம: க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் ||

அப்படிங்கிற ஸ்லோகத்தை ஸ்வாமிகள் எனக்குப் படிச்சு காண்பிச்சு, ‘அமெரிக்கா போரும்னு நினைச்சு அதை விட்டுட்டு வா’ ன்னு ஒரு வார்த்தை சொன்னார். அவருடைய ஆத்ம சக்தியினால, எதோ நான் அதைக் கேட்டேன். அங்கெல்லாம் இருக்கும் போது, எல்லாம் சௌக்கியமா இருக்கிற மாதிரி இருக்கும். ஏதோ மனசுக்குள்ள கவலையும் இருந்துண்டே இருக்கும். அந்த வியாதிக்கு மருந்து மகான்களோட சங்கம். அதன் மூலமா ஏற்படக்கூடிய ‘பக்தி’ அப்படிங்கறதை ஸ்வாமிகள் சொன்னார். அவருடைய கருணையினால எனக்கு அன்னிக்கு ஏதோ கேட்கணும்ன்னு தோணித்து.

இந்த ஸ்லோகத்தை பார்க்கும் போது இன்னொன்னு தோணறது. திருப்புகழ்ல நிறைய பாடல்கள்ல முதல் பகுதியில மரண பயத்தைப் பத்தியோ, பெண்களோட மயல்ல நான் விழுந்துட்டேன் காப்பாத்துன்னோ நாலு வரிகள் இருக்கும். அடுத்த நாலு வரிகள்ல முருகப் பெருமானுடைய பெருமை, ஸ்கந்தப் புராண தகவல்கள் எல்லாம் இருக்கும். அதைக் கொண்டு இந்தத் திருப்புகழே படிக்கக் கூடாது. ஏன்னா அதுல பெண்களைப் பத்தின வர்ணனை இருக்குன்னு ரொம்ப வருஷம் வச்சிருந்து இருக்கா. சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகளுக்குச் சொல்லி அவர் அதை மந்திரமா உரு ஏத்தின பிறகுதான், அவர் திருப்புகழை அபார கருணை பண்ணக் கூடிய தெய்வ வாக்குன்னு எல்லாருக்கும் உணர்த்தினார். நம்ம காலத்தில் பிறந்த அருணகிரிநாதர்ன்னு வள்ளிமலை ஸ்வாமிகளை கொண்டாடுவா. அப்படி அவர் அதை எல்லாரையும் பாட வெச்சதுனாலதான் நமக்கு தெரிஞ்சுது. ஒரு திருப்புகழ் பாட்டு சொல்றேன்.

“நிறைமதி முகமெனும் ஒளியாலே

நெறிவிழி கணையெனு நிகராலே

உறவுகொள் மடவர்கள் உறவாமோ

உனதிரு வடியினி அருள்வாயே

மறைபயில் அரிதிரு மருகோனே

மருவலர் அசுரர்கள் குலகாலா

குறமகள்தனை மணம் அருள்வோனே

குருமலை மருவிய பெருமாளே! “

ன்னு ஒரு பாட்டு. ‘உறவுகொள் மடவர்கள் உறவாமோ’ நாம இந்த உலகத்தில ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரோட பழகறோம். இதெல்லாம் ஒரு உறவா. அதெல்லாம் எவ்ளோ Superficialனு சொல்றார். மகான்கள் சொல்றது எல்லாம் Whole Truth. அதுவும் இந்த அழகைக் காண்பிச்சு மயக்கி, பணத்தை பறிக்கக் கூடிய பொது மகளிரோட உறவெல்லாம் ஒரு உறவான்னு சொல்றார் . அந்த மாதிரி உண்மையை மகான்கள் உரக்கச் சொல்றா. அதைக் கேட்ட போது எனக்கு இந்த ஸ்லோகத்தில வர மாதிரி, காமம்,க்ரோதம், லோபம் எல்லாம் நரகத்துக்கு வாயில். இதிலிருந்து நாம திரும்பணும். முருகனிடத்தில மனதை வைக்கணும் அப்படிங்கறதைத் தான் அருணகிரி நாதர் சொல்றார். அந்த first part ல அதை விவரித்து, ‘இதுல நான் மாட்டிக்கக் கூடாது முருகா. எனக்கு ‘உனதிரு வடியினி அருள்வாயே’ன்னு சொல்றார். அதனால தான் மகான்கள் திருப்புகழைக் கொண்டாடி, அதை உலகம் முழுக்க கோடிக் கணக்கான பேர் இன்னிக்கும் ஜபிச்சு, முருகனுடைய அருளைப் பெற்று மனக் கவலைகள் ஒழிந்து நிம்மதியா இருக்கான்னு தோணித்து.

நூறு வருஷங்களுக்கு முன்னாடி பண்டிதர்கள் எல்லாம் திருப்புகழ் படிக்க வேண்டாம், அதுல ஒண்ணும் சாரம் இல்லேன்னு வச்சிருந்ததை, பகவான் ஒரு வள்ளிமலை ஸ்வாமிகள் மூலமா வெளிப்படுத்தி, இன்றைக்கு உலகம் முழுக்க, தேவாரத்துக்கும் திருவாசகத்துக்கும் சமமா இந்த திருப்புகழை எல்லாரும் படிக்கறான்னா இது தான் காரணமா இருக்கும். திருப்புகழ் மனக்கவலைக்கு மருந்துன்னு மகான்கள் தெரிஞ்சுண்டு, பகவானே அதை வெளிப் படுத்தியிருக்கான்னு தோணித்து.

सहस्राण्डभोक्ता त्वया शूरनामा

हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः |

ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं

न हंसि प्रभो किं करोमि क्व यामि ||

அடுத்த ஸ்லோகமும் இந்த மனோ வியாதியைப் பத்தி தான். உன்னோட பக்திக்கு இடைஞ்சலா இருக்கக் கூடிய என்னோட மனோ வியாதியை போக்குன்னு கேட்கறார். நாளைக்கு அதை பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் – நின் ஞான சிவமான பதம் அருள்வாயேஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி நான்காவது ஸ்லோகம் – மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து >>

4 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி மூன்றாவது ஸ்லோகம் – முருக பக்தியே மனக்கவலைக்கு மருந்து”

Sir

The link for Song No. 24 in Sri Subramanya Bhujangqam is empty – meaning it doesn’t have the relevant file. Can you please rectify. Thanks. Krishnan

மனக் கவலை ஏதும் இன்றி உனக்கடிமையே புரிந்து வகைக்குமநு நூல் விதங்கள் தவறாதே என்று பழனி அதிகாரத்தில் ஒர் பாட்டு திருப்புகழில்.வரும்.
அதிலே அவன் அடிமையாக , வேதங்கள் , ஆகமங்கள் முறையாக பதி, வெகுட்சி தனை மறந்து களிப்புடன் நடந்து மிகுக்கு முனையே வணங்க வர வேண்டும் என்று எப்படி முனிவர்கள் கந்தனின் அடி பணிந்து, அடைக்கலமாக இருந்தார்களோ , அப்படி வழி பட்டாலவன் அண்ட ருலகம் சுழல, எண்டிசைகளும் சுழல வேல் எடுத்து நம்மைக் காப்பாற்ற வருவான் என்பது சத்யம்!
சுப்ரமண்ய புஜங்கத்தில் இந்தக் கருத்துடைய மேல் சொன்ன ஸ்லோகம் நம் ஒவ்வொருவருக்கும் இடுக்கண் களைவதாகும்.
அற்புதமான ஒலிப்பதிவு, விளக்கம்!!
இந்த புஜங்கம் ஒர் பொக்கிஷம்! ஒவ்வொருவரும் கற்க வேண்டிய ஸ்தோத்ரம்! பகிர்வுக்கு நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.