Categories
Mukunda Mala

முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை

ஹே’ கோபாலக! Art by Keshav

இன்னிக்கு முகுந்த மாலையில 23, 24 வது ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். ரொம்ப அழகான இரண்டு ஸ்லோகங்கள்.

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः

कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना ।

नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां

अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥ २३ ॥

ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 23 ॥

ன்னு ஒரு ஸ்லோகம். நித்யம் – ஒவ்வொரு நாளும் எப்பொழுதும் ‘த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யானாம்ருதம்’ – உன்னுடைய இரண்டு பாதத் தாமரைகளின் தியானம், அதையே தியானம் பண்றது என்கிற அமிர்தம் – அந்த அமிர்தத்தை குடித்துக் கொண்டு ‘அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம்’ – எங்களுடைய வாழ்நாள் உன்னுடைய சரணாம்ருதம் என்ற அந்த ரசத்தை அமிர்த ரசத்தை பருகிக் கொண்டு ஒவ்வொரு நாளும் கழியட்டும். ஸரஸீருஹாக்ஷ – தாமரைக் கண்ணனேன்னு சொல்றார். உன்னுடைய கண்ணால் எங்களைக் கடாக்ஷித்து எங்களுக்கு அந்த பாக்யத்தைக் கொடு. அந்த அமிர்த ரசத்தை ஒருத்தன் பருகினா என்ன ஆனந்தமாயிருக்கும் என்பதும், அதை எப்படி பருகணும்னும் சொல்லி தரார். ப³த்³தே⁴னாஞ்ஜலினா’ – கூப்பிய கைகளோடு ‘நதேன சிரஸா’ –தலை வணங்கி ‘கா³த்ரை: ஸரோமோத்³க³மை:’ உடம்பு மெய் சிலிர்த்து

‘கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன’ கண்டம் தழுதழுத்து பகவானைப் பாடினா அந்த மாதிரி மஹான்கள் எல்லாம் திருப்புகழ் பாடும்போது, தொண்டை தழுதழுத்து பாடறவாளை பார்த்து இருக்கேன். முருகன் திருவருட் சங்கம்னு திருவல்லிகேணியில இருக்கு. அதுல வாசுதேவ மாமான்னு இருந்தார். அவர் பாடினா ரொம்ப உருகி பாடுவார். அதை கேட்டிருக்கேன். அதே மாதிரி ஸாதுராம் ஸ்வாமிகள்னு இருந்தார். அவர் அண்ணா. எஸ். வீ. சுப்ரமண்யம். அவா எல்லாம் ரொம்ப உருகி பாடுவா. எங்கப்பாவே திருப்புகழ் பாடும் போது கண்ணை மூடிண்டு கேட்டுண்டு உட்கார்ந்திருப்பார். கண்லேருந்து தாரை தாரையா ஜலம் வரும். ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதம் படிக்கும் போதும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்கும்போதும் அப்படியே ஆழ்ந்து இந்த ஸ்லோகத்துல சொல்லியிருக்கிற மாதிரி தான் அவாள்லாம் அந்த பகவானுடைய சரண அம்ருதத்தை பருகினா. கை கூப்பிண்டு தலை வணங்கி உடம்பு மெய் சிலிர்த்து ‘கிருஷ்ணா’ ன்னு சொன்னார்னா அப்படி தொண்டை தழுதழுத்து ‘நயனேனோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³னா’ கண்கள் கண்ணீர் பெருக்கிக் கொண்டு உன்னுடைய சரணாம்ருதத்தை அந்த ரசத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் இடையறாமல் பருகிக் கொண்டு இருக்க வேண்டும். எங்களுடைய வாழ்நாள் இப்படி கழியணும். இதுக்கு அனுக்ருஹம் பண்ணு ஹே கிருஷ்ணா! ன்னு ஒரு ஸ்லோகம்.

இதுல ‘அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ’ ‘எங்களுடைய’ வாழ்நாள் இப்படி கழியட்டும்னு குலசேகர ஆழ்வார் சொல்றார். நம்மளையும் சேர்த்துக்கறார். அவருக்கு அமிர்தத்தைப் பருகற பாக்கியம் கிடைச்சிருக்கு. ஒரு இனிமையான வஸ்து, ஒரு ஸ்வீட் கிடைச்சுதுனா தனியா மறைவா போயி உட்கார்ந்துண்டு சாப்பிடக் கூடாது. எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிடணும்ங்கிற ஒரு நல்ல குணம் இருக்கு, இல்லையா. அந்த மாதிரி இந்த கவி அந்த அம்ருதத்தை தான் மட்டும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி நாங்க எல்லாருமா இதை பருகணும்னு வேண்டிக்கறார். அடுத்த ஸ்லோகம்,

हे गोपालक हे कृपाजलनिधे हे सिन्धुकन्यापते

हे कंसान्तक हे गजेन्द्रकरुणापारीण हे माधव ।

हे रामानुज हे जगत्त्रयगुरो हे पुण्डरीकाक्ष मां

हे गोपीजननाथ पालय परं जानामि न त्वां विना ॥ २४ ॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥

ன்னு நாமங்களைச் சொல்லி பசுக்களைக் காப்பவனே, கோபாலனே, கருணைக் கடலே ‘க்ருபா ஜலநிதே’ ங்கிறார். ‘ஸிந்து கன்யாபதே’ பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியின் நாயகனே, ‘கம்ஸாந்தக’ – கம்ஸனை கொன்றவனே ‘கஜேந்திர கருணா பாரீண’ கஜேந்திரனுக்கு அருள் செய்தவனே ‘ஹே மாதவா’ ‘ஹே ராமானுஜ’ பலராமனுடைய தம்பியே, ‘ஹே ஜகத்ரயகுரோ’ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்னு சொல்றோம் இல்லையா. அந்த மாதிரி ஜகத்குரு அவர் தான். இங்க பார்த்தசாரதியா எழுந்தருளி கீதோபதேசம் பண்றார். மஹா பெரியவா திருவல்லிக்கேணி வந்தபோது ஹிந்து ஹை ஸ்கூல் ல ஒரு உபன்யாசம் பண்ணாளாம். ஸ்வாமிகள் சொல்வார். அதுல ‘இங்க பார்த்தசாரதி எழுந்தருளி கீதோபதேசம் பண்ணிண்டு இருக்கார். அப்படி ஒரு ஞானோபதேசம் பண்ணின ஜகத்குரு இருக்கும் இடம்னு சொல்வாராம். ‘ஹே புண்டரீகாக்ஷ’ தாமரைக் கண்ணனே ‘ஹே கோபி ஜனநாதா’ கோபிகைகளுக்குத் தலைவனே.

‘மாம் பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா’- உன்னைத் தவிர எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு இந்த சரணாகதியில பகவான் கிட்ட ‘நீ தான் என்னைக் காப்பாத்தணும்’ னு வாய்விட்டு சொல்லணும். அதை இந்த ஸ்லோகத்துல காண்பிச்சு தரார். பகவானுடைய பெருமைகளை நினைச்சு அவன்தான் நம்மளை காப்பாத்த முடியும். அவன் காப்பாற்றுவான்ங்கிற நம்பிக்கை, வேறு விஷயங்களை தவிர்க்க வேண்டும்னு சரணாகதியினுடைய ஒவ்வொரு அங்கங்களை சொல்லிண்டு வரார். இந்த இடத்துல அந்த சரணாகதியை வாய்விட்டு வேண்டறார். இந்த நாமங்களை சொன்னாலே ரொம்ப ஆனந்தமா இருக்கு.

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥

ன்னு அழகான ஸ்லோகம். இதுக்கு அடுத்த மூணு ஸ்லோகங்கள்ல கிருஷ்ணன் தான் மணி, மந்த்ர, ஔஷதம், அப்படீன்னு சொல்லப் போறார். ரொம்ப அழகா இருக்கும். அதை நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா

முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை (7 minutes audio Meaning of Mukundamala slokams 23 and 24)

Series Navigation<< முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.