முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை (13 minutes audio Meaning of Mukundamala slokams 25 and 26)
முகுந்தமாலையில 25 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். 24ஆவது ஸ்லோகத்துல நிறைய கிருஷ்ணனுடைய நாமங்கள் இருக்கறதுனால அதை இன்னொரு வாட்டி சொல்றேன்.
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।
ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ன்னு அழகான ஸ்லோகம். அடுத்த மூணு ஸ்லோகங்களில் 25 ,26, 27 கிருஷ்ணன் தான் மணி, மந்த்ர, ஔஷதம் எங்கிறார். நம்முடைய ஆயுர்வேதத்தில் வ்யாதிகள் வந்தா, இந்த காலத்துல மாதிரி கை வலினா கையை மட்டும் பார்த்து அதுக்கு ஒரு மருந்து கொடுத்து, அந்த மருந்து சாப்பிட்டா தலைவலி வரும்னு side effect, அப்படி போயிண்டிருக்கு. அந்த காலத்துல holistic ஆ இருந்தது. ஆயுர்வேதம்ங்கிறதுல வியாதிகள் இல்லாம ஆரோக்யமா வாழறதுக்கு வழி சொல்லி கொடுத்தா அவா. அதனால ஒவ்வொரு பார்ட் வியாதிக்கு சிகிச்சை கிடையாது. உடம்பு முழுக்க நாடி சுத்தி பண்ணி உடம்புல இருக்கிற நச்செல்லாம் எடுத்து, கப, வாத, பித்தங்கள் எல்லாம் சரியா இருக்கும்படியா பண்றது தான் சிகித்சை.
ஒரு ஊர்ல ஒரு வைத்தியர் இருப்பார். அவருக்கு இந்த காலம் மாதிரி கொள்ளை அடிக்கிற எண்ணம் இருக்காது. வைத்தியர், பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் எல்லாம் பரம ஏழைகளா இருப்பா. அவாளுக்கு எல்லாரும் நன்னா இருக்கணும்ங்கிற எண்ணம் தான் இருக்கும். அதனால் தான் அதை noble profession னு சொல்லிண்டிருந்தா. அவா பண்ற service க்கு value வே கொடுக்க முடியாது. உயிரை காப்பாத்தரவாளுக்கு என்னத்தை கொடுக்கிறது. அவாளுக்கு வீடு கொடுத்தாலும் போறாது. கோடி கொடுத்தாலும் போறாது. படிப்பை சொல்லிக் கொடுத்து ஆளாக்கரவாளுக்கு எப்படி பிரதி பண்ண முடியும்? ஆனா அவா அந்த படிப்பை காசாக்கணும்னு நினைக்கவே இல்லை. குழந்தைகள் நன்னா வரணும்னு sincere ஆ சொல்லிக் கொடுத்தா. அது மாதிரி கிராமத்துல வைத்தியர்னு இருந்தான்னா எல்லாருக்கும் உடம்பு நன்னா இருக்கறதுக்கு அவன் பொறுப்பு. அதுக்கு அவாளுக்கு மூட்டை நெல்லு கொடுத்துடுவா. புளி, உப்பு, பருப்பு கொடுத்துடுவா. ஆனா அவர் கிட்ட எல்லாரும் பயப்படுவா. அவர் சொன்னதை கேட்பா. கெட்டபழக்கம் இருந்துதுன்னா கண்டிப்பார்னு சொல்லி அவர் கிட்ட பயப்படுவா. அப்படி ஒரு systemமாக இருந்தது.
அவா இந்த மணி, மந்திர, ஔஷதம் னு வெச்சுண்டு இருந்தா. மனசு நன்னா இருந்தாலே உடம்பு நன்னாயிருக்கும். மனசுக்கும், உடம்புக்கும் சேர்த்து அவா சிகித்சை பண்ணுவா. இந்த காலத்துல உடம்பு ரொம்ப சூடு ஆறது. குளிர்ச்சியினால கபம் வரது. அந்த ஞானத்தையேஅவா complete ஆ தூக்கிப் போட்டா. உடம்பு சூடு ஆறது என்கிற conceptஏ allopathyல இல்லை. உடம்பு ரொம்ப சூடு ஆகிறதுன்னா அவன் ஜாதகத்தை பார்த்து, ‘இந்த மணியை நீ மோதிரம் பண்ணி கையில போட்டுக்கோ. அல்லது கழுத்துல ஒரு மாலையா போட்டுக்கோன்னு சொல்லி அதை போட்டுண்டான்னு அவ்ளோ குளிர்ச்சி உடம்புக்கு ஏற்பட்டு, அந்த ஸ்படிகமோ, முத்தையோ போட்டுண்டா உடம்பு ரொம்ப குளிர்ச்சி ஆகி உடம்பு சரியாகிவிடும். அது மாதிரி மணி.
அதே மாதிரி மந்திரங்கள், ஒவ்வொரு வியாதி போக்கறதுக்கு ஒரு மந்திரம். விஷ்ணு சஹஸ்ரநாமம் மகா மந்திரம் வியாதி எல்லாம் போக்கறதுக்கு. 632 ஆவர்த்தி பண்ணினா தீராத வியாதியெல்லாம் தீரும்னு சொல்லி பண்ணுவா. அது மாதிரி மந்திரங்கள்.
கடைசியா ஔஷதம் என்கிற மருந்து. இதுகளைக் கொண்டு மனசையும், உடம்பையும் சரி பண்ணிண்டிருந்தா. ஆனா இதெல்லாம் இந்த காலம் மாதிரி easyயா கிடைக்காது. ஒரு மணியோ, மந்திரமோ, ஔஷதமோ நல்ல வைத்தியன் கிடைச்சு அவா சரியா diagnosis பண்ணி ஒரு மணியை வாங்கி போட்டுக்கோன்னா அதை தேடித் போய்த் தான் வாங்கணும். கடல்லயோ மலையில இருந்தோ கிடைக்கக் கூடியதாக இருக்கணும். அது சுத்தமா இருக்கணும். உடம்புக்கு ஒத்துக்கணும். வைரமா இருந்தா அதுல தோஷங்கள் இருந்தா negative effect ஆ ஆயிடும். அப்படியெல்லாம் பார்த்து அந்த சரியான மணியை போட்டுண்டு பெரிய கஷ்டங்கள்ல இருந்து மீண்டுடுவா. அப்படி இந்த மணி, மந்திர, ஔஷதம்ங்கற உபாயம் கஷ்டங்களை போக்கிக்கறதுக்கு இருந்தது. ஆனா அது கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.
ஔஷதம்னாலும் மூலிகைகள் எல்லாம் தேடி எடுத்துண்டு வரணும். மந்திரம்னாலும் நல்ல குருவா இருக்கணும். அவர் நல்ல சிஷ்டரா இருக்கணும். இப்படி அந்த மணி, மந்திர, ஔஷதங்கள் நன்மை செய்யும். ஆனா அது கிடைக்கறதுக்கு கஷ்டமா இருந்தது.
குலசேகராழ்வார் சொல்றார். ‘நீ அது மாதிரி எல்லாம் தேடி அலையாதே. நான் உனக்கு மணி, மந்திர, ஔஷதம் சொல்றேன்ன்னு சொல்லி கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம். கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு இந்த மூணு ஸ்லோகங்கள்ல சொல்றார். ரொம்ப அழகா இருக்கும்.
भक्तापायभुजङ्गगारुडमणिस्त्रैलोक्यरक्षामणि:
गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः
यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः
श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥ २५ ॥
ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்
கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |
ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 25 ॥
அதற்கு ‘கோபால சூடாமணி’ ன்னு பேரு. கோபாலஹ ன்னா பசுக்களை பார்த்துக் கொள்பவன். அந்த இடையர்களுக்குள் சூடாமணியாக தலைவனா விளங்கும் கிருஷ்ணன், ‘ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி’ – பக்தர்களுக்கு அபாயம் என்ற பாம்புக்கு கருடனா விளங்கற மணிங்கிறார். அபாயம்கிறது பாம்பு மாதிரி இருக்கு. கிருஷ்ணான்னு நீ சொன்னேன்னா கருடன் வந்து பாம்பை விரட்டற மாதிரி உன் கஷ்டம் போயிடும். ராமலக்ஷ்மணா நாகபாஸத்துல கட்டுண்டு இருந்த போது கருட பகவான் வந்த மாதிரி, இந்த கிருஷ்ண நாமத்தை நீ சொன்னேன்னா உன்னுடைய அபாயம் காணாமல் போயிடும். எப்ப என்ன கஷ்டம் வந்தது?’ னு மறந்து போயிடற அளவுக்கு அந்த கஷ்டம் மறைஞ்சு. ‘த்ரைலோக்யரக்ஷாமணி:’ – மூவுலகத்தையும் காப்பாத்தற மணி க்ருஷ்ணன் என்கிற மணி. ‘கோபி லோசன சாதகாம்புத மணி:’ கோபிகைகளுடைய கண்களாகிய சாதக பக்ஷிகளுக்கு மேகமா இருக்கிறா மணின்னு சொல்றார். இதுல என்னா அழகுன்னா, சாதக பக்ஷிங்கிறது வானத்துல இருந்து வரும் மழை நீரை மட்டும் தான் சாப்பிடும். அதுக்கு கழுத்துல ஒரு ஓட்டை இருக்கும். அது மத்த பக்ஷிகள் மாதிரி தரையில இருந்து தண்ணியைக் குடிச்சா குடிச்சு நிமிர்ந்த உடனே குடிச்ச தண்ணியெல்லாம் கீழே விழுந்துடும். அதுனால தலையை மேலே தூக்கிண்டு இருக்கும் போது மழை வந்து அந்த நீரை குடிச்சாதான் அதுக்கு உள்ள போகும். அது மாதிரி சாதக பக்ஷிகளுக்கு எப்படி மழை ஒன்று தான் திருப்தியை அளிக்குமோ, அது மாதிரி இந்த கோபிகைகளுக்கு கிருஷ்ணனை பார்த்தா தான் திருப்தி. வேற ஒண்ணுல திருப்தி கிடையாதுன்னு சொல்லி அழகான உவமை சொல்லி கோபிகைகளோட கண்கள் என்கிற சாதக பக்ஷிகளுக்கு மேகம் போன்ற மணிங்கறார். ‘சௌந்தர்ய முத்ரா மணி: -அழகுக்கு அடையாளமே கிருஷ்ணன்தான். அப்படி ஒரு அழகு மணி அவன். ‘ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:’ – காமாக்ஷியை மூக கவி கூட ‘நாரீகுலைக சிகாமணி:’ ன்னு சொல்வார். அந்த மாதிரி பெண் ரத்தினமாகிய ருக்மணிதேவியினுடைய குசங்களுக்கு அலங்காரமாக விளங்கும்னு இந்த கிருஷ்ணன் என்கிற மணின்னு சொல்றார். ‘தே³வசிகா²மணி:’ – தேவர்களுக்கு சிகாமணி தேவர்களுடைய தலைவன். அந்த கிருஷ்ணன் ‘ ஸ்ராயோ திஷது’ – நமக்கு மங்களங்களை, நன்மையை அளிக்கட்டும் ன்னு அழகான ஸ்லோகம்
ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்
கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |
ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி:
அடுத்ததுல இந்த கிருஷ்ண நாமம் தான் மந்திரம்கிறார். உனக்கு வேற மந்த்ரமே வேண்டாம்.
शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं
संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।
सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं
जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २६॥
சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥
ன்னு ஒரு ஸ்லோகம். சத்ருச்சே²தை³கமந்த்ரம் – இந்த கிருஷ்ணனன்கிற மந்திரத்தை நீ ஜபிச்சிண்டே இருந்தேன்னா ஜப ஜப, சததம், கிருஷ்ணா, கிருஷ்ணா ன்னு சொல்லிண்டே இருந்தேன்னா உன் சத்ருக்களை வெட்டி போட்டுடும் சத்ருச்சே²தை³கமந்த்ரம். அதற்கப்பறம் உனக்கு பகைவர்களே இருக்க மாட்டா. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்தை நிலை காணும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன் எனதுளத்தில் உறைகருத்தன் மயில் நடத்தும் குஹன் வேலே. அப்படீன்னு அருணகிரி பாடினமாதிரி நீ கிருஷ்ண நாமம் சொல்லிண்டு இருந்தா உனக்கு எதிரிகளே இருக்க மாட்டா. ஓடி, காணாம போயிடுவா என்கிறார்.
‘ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்’ – உபநிஷத் வாக்யங்கள் எல்லாம் இந்த கிருஷ்ண நாமத்தைதான் கொண்டாடறது. உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம். சகலம் எல்லாமே இந்த கிருஷ்ண மந்த்ரம் தான். ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் -ஸம்ஸாரத்துல இருந்து உன்னை தூக்கி விடக் கூடிய மந்த்ரம் இது. ‘ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம்’ நீ சேர்த்து வெச்சிருக்கிற எல்லா அக்ஞானத்தையும் போக்கடிக்கக் கூடிய மந்த்ரம்கிறார். நாம TVயை பார்த்து வெட்டிப் பேச்சு பேசி அந்த மாதிரி பொழுது விடிஞ்சா நிறைய அக்ஞானத்தை சேர்த்து வெச்சுக்கறோம். கிருஷ்ண நாமத்தை ஜபம் பண்ணு. அது எல்லா அக்ஞான இருளையும் அது ஓட்டிடும். சமூபசித- நாம collect பண்ணி வெச்சிண்டிருக்கிற தமஸ்னா அக்ஞானம். சமூக பூஜித தமஸ் சங்க அந்த அக்ஞான கூட்டத்திற்கு நிர்யாண மந்த்ரம். அதை போக்கடிக்கற மந்த்ரம்
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் – எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய மந்திரம். வ்யசன, புஜக சந்தஷ்ட சந்தராண மந்த்ரம். பாம்பு கடிச்சா மந்த்ரிப்பா. வியசனங்கள்னா துக்கம். மனக்கவலைகள் என்ற புஜகம் பாம்பு. சந்தஷ்ட: கடிச்சவனுக்கு சந்தரான மந்த்ரம் – உயிரை கொடுக்கக் கூடிய மந்த்ரம். இந்த கிருஷ்ண மந்த்ரம். ‘ஜிஹ்வே’ தன் நாக்கையே கேட்டுக்கறார். ‘ஹே ஜிஹ்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்ம சாபல்ய மந்த்ரம்’ உன்னுடைய இந்த ஜன்மத்தை பயனுள்ளதாக ஜன்ம சாபல்யம் இந்த கிருஷ்ண மந்திரத்தை சொல்றதுதான்.
மஹா பெரியவா, ஸ்வாமிகள் நிறைய மஹான்கள் கிருஷ்ணா சைதன்ய மஹா பிரபு எல்லாரும் இந்த
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அப்படீங்கிற மந்திரத்தை சொல்ல சொல்லி இருக்கா. ஹரி நாமத்தை சொல்ல சொல்லி முன்னாடி நிறைய ஒருஸ்லோகத்துல வந்திருக்கு. ராம நாமம் கேட்கவே வேண்டாம். மஹா மந்திரம். கிருஷ்ண நாம மந்திரத்தை பத்தி இவ்ளோ சொல்லியிருக்கார்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ன்னு ஜபிச்சுண்டே இருந்தாலே இந்த பலன்கள் எல்லாமே கிடைக்கும்.
அடுத்த ஸ்லோகதுல இந்த கிருஷ்ணன் தான் மருந்துன்னு ஒரு ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா
2 replies on “முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை”
விளக்க உரை மிகவும் அருமை
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
1இடையர்களுக்கு தலைவனாக இருக்கும் கிருஷ்ணன் ஒரு சூடாமணி
2. பக்தர்களுக்கு அபாயம் என்பதை பாம்புடன் ஒப்பிட்டு ஆபத்து ஏற்படும் காலத்தில் கிருஷ்ணன் ஓர் கருடமணியாகி ஆபத்தை விலக்குகிறார்.
3.கோபிகைகளின் கண்களை சாதகபக்ஷியுடன் ஒப்பிட்டு அவைகளுக்கு கிருஷ்ணன் மேகமணியாகின்றார்
4. ருக்மணி தேவியின் அலங்கார மணியாக உள்ளார் கிருஷ்ணன் 5.தேவர்களின் தலைவனாக விளங்கும் தேவசிகாமணி கிருஷ்ணன்
இப்படி எல்லா விதமான மணிக்குன்றின்
சிகரம் ஸ்ரீ கிருஷ்ணன்.
இவ்வளவு பொருள் படும் ஸ்லோகம் ஆறே வரிகளில் அபாரமாக இயற்றியுள்ளார்
ஸ்ரீ குலசேகர ஆழ்வார்.
மேலும் கிருஷ்ண நாமமே மந்த்ரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். கலியில் பகவன் நாமம் தான் கதி. ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள், ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் மற்றும் மஹா பெரியவா போன்ற மகான்கள் எல்லோரும் நாமம் சொல்ல சொல்லி ஊக்குவித்தனர்.
தாங்கள் மிக இனிமையான வார்த்தைகளைக் கொண்டு அளித்த விளக்கம் மேலும் மேலும் பக்தி பெருக ஊக்குவிக்கும்.