Categories
Mukunda Mala

முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை

‘முனிமனோவ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்’ Muvva Gopala by Keshav Venkataraghavan

முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 27 and 28)

முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார். இந்த கிருஷ்ணனாகிய ஔஷதம் ‘ வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம்’ நம்மோட ஒரு மனமயக்கம். உலக வாழ்க்கையில ஏற்படக் கூடிய மயக்கங்களை எல்லாம் தெளிவிக்கக் கூடிய ஒரு மருந்து இதுங்கிறார். ‘முனிமனோவ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்’ மௌனமா இருந்துண்டு, பகவானுடைய நாமத்தை ஜபிச்சிண்டு இருக்கக் கூடிய மஹான்களோட சித்தத்தைத் தூய்மைப் படுத்தி அவர்களுடைய ஆத்மீக சக்தியை வளர்க்கிற ஔஷதம் இந்த கிருஷ்ண ஔஷதம் -‘முனிமனோவ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்’

‘தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம்’ தைத்யர்களுடைய இந்திரன். அதாவது அஸுர ராஜாக்கள். அவாளுக்கெல்லாம் ஆர்த்தி உண்டாக்கற ஔஷதம். அவாளை வருத்தப் படச் செய்யும் ஔஷதம். கிருஷ்ண பகவான், நரகாசுரன், முராசுரன் போன்ற அசுரர்களை எல்லாம் வருத்தப் பட வெச்சார்.

‘ த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம்’ மூவுலகங்களுக்கும் புத்துயிர் கொடுக்கற ஔஷதம் இது. கிருஷ்ணனை நினைச்சா நமக்கு battery திரும்பவும் charge ஆகிடும். ‘ ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம்’ பக்தர்களுக்கு அத்யந்த ஹிதத்தை செய்யக் கூடிய ஔஷதம்ங்கிறார். ‘ ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்’ இந்த வாழ்க்கைப் பிரச்சினைகள், வாழ்க்கையைப் பத்தின ஒரு கவலை, பவபயம். அதை போக்குவதற்கு ஏக ஔஷதம். இது ஒண்ணு தான் மருந்துன்னு சொல்றார். ‘ ச்ரேய: ப்ராப்தி கரௌஷத⁴ம்’ மங்களங்களை கொடுக்கும் மருந்து.

‘பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம்’ ஹே மனமே நீ இந்த கிருஷ்ணன் என்ற சிறந்த ஔஷதத்தை குடின்னு சொல்றார்.

அப்படி வாழ்க்கையில கஷ்டங்களை போக்கிக்கறதுக்கு மணி, மந்திர, ஔஷதம்னு ஒரு வழி இருக்கு. குலசேகராழ்வார் கிருஷ்ணனே உனக்கு மணியாகவும், மந்த்ரமாகவும், ஔஷதமாகவும் இருப்பான். நீ வேற ஒண்ணை நாடாதே. கிருஷ்ணனை மனசுல வெச்சுண்டே இரு. அது போறும்னு சொல்றார். இந்த மணி, மந்திர, ஔஷதம்னு இந்த மூணு ஸ்லோகங்கள் ஒரு set.

அடுத்த ஸ்லோகத்துல, கிருஷ்ண பக்தி இல்லேன்னா கர்மா, வேத பாராயணங்கள் எல்லாம் ஒண்ணும் பிரயோஜனம் இல்ல. கிருஷ்ண பக்தி இருந்தா தான் அதுக்கெல்லாம் பலன், அதுக்கெல்லாம் சக்தி கொடுக்கறதே கிருஷ்ண பக்தின்னு சொல்றார்.

आम्नायाभ्यसनान्यरण्यरुदितं वेदव्रतान्यन्वहं

मेदश्छेदफलानि पूर्तविधयः सर्वं हुतं भस्मनि ।

तीर्थानामवगाहनानि च गजस्नानं विना यत्पद –

द्वन्द्वाम्भोरुहसंस्मृतिर्विजयते देवः स नारायणः ॥ २८ ॥

ஆம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்

மேத³ச்சே²த³பலானி பூர்தவித⁴ய: ஸர்வம் ஹுதம் ப⁴ஸ்மனி ।

தீர்தா²நாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³ –

த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருʼதிமர்விஜயதே தே³வ: ஸ நாராயண: ॥ 25 ॥ ன்னு சொல்றார். எந்த நாராயணனுடைய இரண்டு சரண கமலங்களை நினைக்காமல், பகவானை மறந்துட்டு, சாக்ஷாத் நாராயணன் தான் எல்லாத்துக்கும் மூலம் அப்படீங்கிறது ஞாபகம் இல்லாமல், நீ வேதத்தை ஓதினா, காட்டுல போயி அழற மாதிரி தான். யாராவது ஒருத்தர் கிட்ட சொல்லி அழுதா அவா தாப சமனத்துக்கு ஏதாவது சொல்ல முடியும், பண்ண முடியும். ஒருத்தன் காட்டுல மாட்டிண்டிருக்கான். அழுது என்ன பிரயோஜனம்? அந்த மாதிரி வேத பாராயணம் பண்றது, பக்தி இல்லேன்னா காட்டுல புலம்பறதுக்கு சமானம்னு சொல்றார்.

இந்த வேதத்துல சொல்ற வ்ரதங்கள் எல்லாம் நீ பண்றயா? உனக்கு பக்தி இல்லேனா அது உனக்கு ஏதோ கொஞ்சம் உடம்பு இளைக்கறதுக்கு பயன்படுமே தவிர அதுனால உனக்கு வேற ஒண்ணும் பிரயோஜனம் கிடைக்காதுன்னு சொல்றார்.

வேற புண்ய கார்யங்கள், இஷ்டா பூர்த்தங்கள்னு எல்லாம் சொல்வா. கோயில்கள்ல மண்டகப் படி பண்றது, அன்னதானம் பண்றது, குளம் வெட்டறது. இந்த மாதிரி நல்ல கார்யங்கள் எல்லாம் பக்தி இல்லேன்னா, சாம்பல்ல பண்ண ஆஹூதி மாதிரிங்கிறார். ஆஹூதிங்கிறது எப்பவுமே ஜ்வலிக்கிற அக்னியிலதான் பண்ணனும். சாம்பல்ல பண்ணக் கூடாது. நெய்யை சாம்பல்ல விட்டா என்ன ஆகப் போறது? எரியப் போறது இல்ல. அந்த மாதிரி பிரயோஜனம் இல்லாம போயிடும்.

நீ புண்ய கார்யங்கள் பண்ணி அதை கிருஷ்ணார்ப்பணமா பண்ணினா தான் அதனால உனக்கு பயன் ன்னு சொல்றார். இது மாதிரி புண்ய தீர்த்தங்கள்ல போய் நீ குளிச்சாலும் அது பக்தி இல்லேனா யானை குளிக்கற மாதிரி தான்னு சொல்றார். யானை கங்கையில குளிச்சா என்ன? குளத்துல குளிச்சா என்ன? அதுக்கு பாவ புண்ணியத்தைப் பத்தி தெரியப் போறது இல்லை. அழுக்கு போகும் அவ்வளவு தான். அதுனால கிருஷ்ண பக்தியோட நீ இந்த கார்யங்கள் எல்லாம் பண்ணனும்.

இன்னிக்கு ஆஷாட ஏகாதசி. லக்ஷக்கணக்கான பக்தர்கள் பண்டரிபூர் வந்து அந்த ஞானேஸ்வரருடைய பாதுகையையும் துக்காராமோட பாதுகையை எடுத்துண்டு வந்து பண்டரிபூர்ல ஸ்வாமி நமஸ்காரம் பண்றா. அது மாதிரி பக்தியோட பண்ணனும். இன்னிக்கு மனசுல அந்த பகவானை வெச்சுண்டு உபவாசம்ங்கிற அந்த வார்த்தைக்கே பகவானுக்கு பக்கத்துல வசிக்கறதுன்னு, மனசுல பகவானை வெச்சுசுக்கறதுன்னு அர்த்தம். பக்தியை பிரதானமா வெச்சுண்டு இந்த வ்ரதங்கள் பண்ணுங்கோ. தினம் அனுஷ்டானம் பண்றோம். அச்சுதாயநம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா,த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா அப்படீன்னு இந்த நாமங்களை சொல்லி ஆசமனம் கார்த்தால, மத்யானம், சாயங்காலம் பத்து பத்து வாட்டி பண்ணினாலே ஒரு சஹஸ்ரநாமம் பண்ணின மாதிரி ஆயிடும். அவ்ளோ இந்த நாமங்கள் வரும். ரிஷிகளே நம்மளோட கர்மால கூடக்கூட பக்தியை சொல்லிக் கொடுத்திருக்கா. சந்த்யாவந்தனம் பூர்த்தியிலே “காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத், கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.” அப்படீன்னு பண்ணின காயத்ரி ஜபத்தோட பலனை கிருஷ்ணார்ப்பணம் பண்ணினா நமக்கு பக்தி ஏற்படும். சித்தஸுத்தி ஏற்படும். அதுனால நாம பகவானுக்கு பக்கத்துல போக முடியும் ன்னு அந்த ஞாபகத்தோட அதற்காகத்தான் இதெல்லாம் பண்றோம்னு பண்ணனுமே தவிர மனஸு காமினி காஞ்சனத்துலயே இருந்துண்டு இருந்தா எத்தனை வருஷம் இதெல்லாம் பண்ணி என்ன ப்ரயோஜனம்னு கேட்கறார்.

நீ பகவானை அடையணும்னு நோக்கத்தை ஞாபகம் வெச்சுண்டுபண்ணு. வேதமே பகவானோட நாமங்கள், அப்படீன்னு நினைக்கணும். ஸ்ரீ ருத்ரத்தை ஜபிக்கும் போது இந்த பகவான் எல்லா வடிவமாயும் இருக்கார்னு 300 நமஸ்காரம் சொல்றது. அப்படி அந்த ருத்ரத்தை ஜபிக்கும் போது நமக்கு அந்த பகவான் கிட்ட பக்தி வரணும்னு வேண்டிக்கணும். அப்படியே தான் ஒவ்வொரு கார்யங்கள் பண்ணும் போதும். வ்ரதங்கள் இருக்கும் போது மனசு பகவான்கிட்ட இல்ல, ரொம்ப களைச்சு போறதுன்னா, ஸ்வாமிகள் சொல்வார். ‘அந்த காலத்துல எலும்புல உயிர் இருந்தது. அப்புறம் மஜ்ஜையில இருந்தது. இப்ப அன்னத்துலதான் இருக்கு. உன்னால ரொம்ப முடியலைன்னா ஸ்ரமப் படுத்திக்காதே. நீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்றது தான் முக்கியம். சாப்டுட்டு பாராயணத்தை முடி. அதுவே முடியாம தளர்ச்சி ஆயிட்டேன்னா நீ வ்ரதங்கள் இருக்கறது கஷ்டம்’ ன்னு சொல்வார். ஆனா பக்தி முற்றினா அப்புறம் அந்த வ்ரதங்கள் எல்லாம் இயல்பா பண்ண முடியுமா இருக்கும்.

அப்படி இந்த ஸ்லோகத்துல நல்ல கார்யங்கள் பக்தியோடு பண்ணனும். வேதத்தைக் குறைக்கறதா அர்த்தம் இல்ல. அந்த நாராயண ஸ்ம்ருதி, பகவானை தியானம் பண்ணாமல், இதெல்லாம் பண்ணா பயனில்லாம போயிடும்ங்கிறதுதான் இந்த ஸ்லோகத்துல முக்கியமா சொல்றார். ஆச்சார்யாள் கூட குரு அஷ்டகம்னு ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதுல விதேசேஷு மான்ய:ஸ்வதேசஷு தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷு மத்தோ ந சான்ய: I
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

உனக்கு இந்த ஊர்லயும் பெருமை. வெளியூர் போனாலும் பெருமை. ‘ ஸதாசார வ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:’ ஆச்சாரத்துல உனக்கு சமமா யாருமே இல்லைன்னு இருந்தாலும் மனசுல ‘ மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே’ உனக்கு குரு கிட்ட பக்தி இல்லேன்னா இதெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்னு சொல்றார். பின்னாடி ‘உனக்கு ஞானம் வந்துடுத்து. உனக்கு பணம், பெண்கள்கிட்ட எல்லாம் ஆசை போயிடுத்து. உலகமே உன்னை வணங்குகிறது. பெரிய யோகியா இருந்தாலும் சரி. நீ காட்டுல இருந்தாலும் சரி. நாட்டுல இருந்தாலும் சரி. உன் உடம்பையே நீ இல்லேன்னு ஞானம் வந்துட்டாலும் சரி உனக்கு குரு பக்தி இல்லேனா என்ன ப்ரயோஜனம்?’ ன்னு கேட்கறார். இந்த ஸ்லோகத்துல அப்படி யோகியா இருந்தாலும், போகியா இருந்தாலும் சரி, குரு பக்தி தான் ரொம்ப முக்யம்னு சொல்றார். அந்த மாதிரி முகுந்தமாலையில ஒரு ஸ்லோகம். நாம முடிஞ்ச அளவுக்கு வேதத்துல சொன்ன ஸம்ஸ்காரங்கள் எல்லாம் பண்ணிண்டு முடிஞ்ச வ்ரதங்களை பண்ணிண்டு, முடிஞ்ச தீர்த்தாடனம் பண்ணிண்டு, கூடக் கூட இந்த பகவானோட நாமங்களை சொல்லிண்டு பக்தி வரணும்னு வேண்டிண்டு humble ஆ இருக்கணும்ங்கிறது இந்த ஸ்லோகத்தோட கருத்து. அடுத்த ஸ்லோகம் நாராயண நாமத்தை பத்தி வர்றது. அதை நாளைக்குப் பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.