Categories
Govinda Damodara Swamigal

அம்பாள் பாத ஸ்மரணம் மனத்தூய்மை அளிக்கும்


மூக பஞ்சசதி பாதாரவிந்த சதகத்தில் 76வது ஸ்லோகம்

कथं वाचालो‌sपि प्रकटमणिमञ्जीरनिनदैः

सदैवानन्दार्द्रान्विरचयति वाचंयमजनान् ।

प्रकृत्या ते शोणच्छविरपि च कामाक्षि चरणो

मनीषानैर्मल्यं कथमिव नृणां मांसलयते ॥

கதம் வாசாலோபி பிரகட மணி மஞ்ஜீர நினதை:

ஸதைவ ஆனந்தார்த்ரான் விரசயதி வாசம்யம ஜனான் |

ப்ரக்ருத்யா தே ஷோணச்சவிரபி ச காமாக்ஷி சரண:

மனீஷா நைர்மல்யம் கதமிவ நருணாம் மாம்ஸலயதே ||

இதுக்கு என்ன அர்த்தம்னா “வாசால:” என்றால் வாயாடின்னு அர்த்தம். பேசிண்டே இருக்கறவா. இந்த பாதாரவிந்தத்துல கட்டியிருக்கற சலங்கை  மணி சத்தம் பண்றது. அந்த மணிய வெச்சுண்டு ஓயாத பேசிண்டே இருக்கு. ஆனால் வாயாடியா இருக்கற அந்த பாதாரவிந்தம் எப்பவும் “வாசம்யமஜனான்” வாக்கை அடக்கிய முனிவர்களுக்கு, அந்த அம்பாளோட சரண தியானம் பேரானந்தத்தை கொடுக்கிறது. மஹாபெரியவா கூட மூக பஞ்சசதி “சிவ சிவ பஷ்யந்தி” என்ற ஸ்லோகத்தைப் பற்றி பேசும் போது, “அம்பாளோட சரண த்யானம் தான் பண்ணவேண்டிய கார்யம், அதை பண்ணிணா நாம நிறைஞ்சு இருக்கலாம்” என்று சொல்வார். அந்த மாதிரி மகான்களுக்கு அம்பாளுடைய பாத ஸ்மரணத்னால பேரானந்தம் கிடைக்கறது, அதை இப்படி வேடிக்கையாக கவி சொல்கிறார். உன்னோட பாதாரவிந்தத்துல இருக்கற சலங்கை ஓயாத சத்தம் பண்றது. ஆனா வாக்கை அடக்கி மௌனமா முனிவர்களா இருக்கிறவர்களுக்கு இந்த பாதஸ்மரணம் ஆனந்தத்தை கொடுக்கிறது. பொதுவா பேசாம இருக்கிறவாளுக்கு யாராவது சத்தம் போட்டுண்டே இருந்தா பிடிக்காது இல்லையா? அதற்கு மாறுதலா விரோதாபாசமா இருக்குனு விளையாட்டா சொல்றார்.

ஸ்லோகத்தோட இரண்டாவாவது பார்ட்லேயும் அதே அலங்காரத்தை உபயோகப் படுத்தறார். பாதாரவிந்தம் செக்கச்செவேல்னு இருக்கு, ஆனா நமஸ்காரம் பண்ற மனுஷாளோட மனசுல வெண்மையை உண்டாக்குகிறது. அதாவது மனசுல  தூய்மையை  உண்டாக்குகிறது. அது ரஜஸா (சிவப்பா) இருந்தாலும் தன் பக்தர்கள் மனத்தில் ஸத்வத்தை (வெண்மையை) வளர்க்கிறது அப்படீன்னு இந்த அழகான சுலோகம்.

இந்த ஸ்லோகத்தை படிச்சபோது எனக்கு ஸ்வாமிகள் ஞாபகம் வந்தது. இந்த வர்ணனை சுவாமிகளுக்கு பொருந்தும். எப்படீனா, மஹாபெரியவா தன்னுடைய எண்பது வயசுலேர்ந்து நூறு வயசு வரைக்கும் அதிகமா மௌனமா இருந்தா. அப்ப தான் நம்ப ஸ்வாமிகள் பெரியவா கிட்ட ஸ்ரீமத் பாகவதம் பாராயணம், பிரவசனம் எல்லாம் பண்ணியிருக்கார். அதாவது ஸ்வாமிகள் பெரியவா கிட்ட போய் பேசிண்டே இருந்தார். அவர் கூப்பிட்டுதான் போனார். பெரியவா எங்கே இருந்தாலும் மஹாகான், சதாரா, குல்பர்கா, காஞ்சிபுரம் எல்லா இடத்துலயும், அங்கங்கே போய் பெரியவா பாராயணம் பண்ண சொல்லுவா, பிரவசனம் பண்ண சொல்லுவா. ரொம்ப ஆனந்தமா உட்கார்ந்துண்டு கேட்பா. அப்படி ஸ்வாமிகள் பேசிண்டே இருந்தார். மௌனமா இருந்த மஹாபெரியவாளுக்கு அது ரொம்ப உவப்பாக இருந்தது. அவரை ரொம்ப கொண்டாடி, ஒவ்வொரு வருஷமும் வர சொல்லி கேட்டு சந்தோஷப் பட்டுருக்கா. இப்படி இந்த பாதாரவிந்த சதகம் ஸ்லோகத்தோட முதல் பாதி சுவாமிகளுக்கும் பொருத்தம்னு தோணித்து.

இந்த ரெண்டாவது பார்ட்ல சிவப்பா இருந்தாலும், அதாவது பாதாரவிந்த ரஜஸா (சிவப்பா) இருந்தாலும் தன பக்தர்கள் மனத்தில் ஸத்வத்தை (வெண்மையை) வளர்க்கிறது அப்படீன்னு விளையாட்டா கவி சொல்றார். இது வந்து ஸ்வாமிகள் விஷயத்ல ஒரு விதமா பொருந்தும். எப்படினா ஸ்வாமிகள் கிட்ட வந்து பழகினவா, எப்படி சுக்ரீவன், விபீஷணன் ராமரை பகவான்னு ஒரு க்ஷணம் புரிஞ்சுண்டா கூட, அடுத்த க்ஷணம் அது புரியாம அவருக்காக அழுதா அப்படீன்னு வர மாதிரி, ஸ்வாமிகள் கிட்ட பழகும்போது  ஜனங்கள் அவர அவ்வளவா புரிஞ்சுக்கல. அவருக்கு கல்யாணம் ஆகி நிறைய குழந்தைகள் இருந்தா. அறுபது வயசுல அவர் ஸன்யாசம் வாங்கிண்டு ஆத்துலேயே இருந்தார். அந்த வயசுல அவர் ஸன்யாசம் வாங்கிண்ட போது, “இவ்வளவு குழந்தைகள், இதுக்கப்புறம் ஸன்யாசம் என்ன, நான் கூட ஸன்யாசம் வாங்கிப்பேன்! எல்லாம் அனுபவிச்சாச்சு இனிமே ஸன்யாசம் வாங்கி என்ன” அப்படீங்கற மாதிரி என்கிட்டேயே சில பேர் சொல்லியிருக்கா. அது அவரை புரிஞ்சுக்காததுனால தான். ஸ்வாமிகள் மாதிரி பணத்தில் பற்று இல்லாம இருந்தவா இந்த கலியில் ரொம்ப ரொம்ப அபூர்வம்.

இன்னொண்ணு, ஸ்வாமிகள் family planning, contraception உபயோகிக்க கூடாது என்ற தர்ம சாஸ்த்ரத்துல ரொம்ப நம்பிக்கையோட இருந்தார். மஹாபெரியவா இதில் எவ்வளவு உறுதியா இருந்துருக்கார் என்கிறதுக்கு நேத்திக்கு லலித் மனோஹர்னு ஒருத்தரோட பெரியவா அனுபவங்ளை கேட்டேன். அதுல ஒரு நிகழ்ச்சியை சொல்றார், மஹாபெரியவா பேசினதை ஒட்டி 1968ல் ஹிந்து பேப்பர்ல Kanchi Acharya does not approve family planning அப்டீன்னு prominent ஆக போட்டுட்டா. அப்போ இந்திரா காந்தி prime minister. சந்திரசேகர்னு ஒரு union minister ஐ “பெரியவாகிட்ட போய் நீங்க பேசுங்கோ. அதை வாபஸ் வாங்க சொல்லுங்கோ” அப்டீன்னு சொல்லியிருக்கா. உடனே அந்த சந்திரசேகர் பெரியவாகிட்ட வரார். வந்து நமஸ்காரம் பண்ணி, “இந்த family planning காக நாங்க கோடி கோடியா செலவு பண்றோம், population control முக்யம்னு நாங்க நினைக்கிறோம். நீங்க இப்படி சொன்னா ஜனங்கள் நாங்க சொல்றத கேட்க மாட்டா. அதனால நீங்க இதை வாபஸ் வாங்கணும்” அப்படீன்னு சந்திரசேகர் சொல்றார். அதுக்கு மஹாபெரியவா “சரி வாபஸ் வாங்கிடறேன்” னு சொன்னாளாம். உடனே அவர் என்னடான்னு பார்த்தாராம். “ஒரே ஒரு கண்டிஷன்,” அப்படீன்னு சொன்னாளாம். என்னன்னு கேட்டா “என்கிட்டே வர ஜனங்கள்ல சில பேர் குழந்தையே பொறக்கலைனு வருத்தப்படறா. சில பேர் பிள்ளையா பொறக்கிறது பொண்ணு வேணும்கிறா. சில பேர் பொண்ணா பொறக்கிறது பிள்ளை வேணும்கிறா. அந்த மாதிரி ஒரு மூணு பேரை நான் அனுப்பறேன். நீங்க டெல்லில ஒரு மூணு வருஷம் வெச்சுக்கோங்கோ. யார் பிள்ளை கேட்கறாளோ அவாளுக்கு பிள்ளை குழந்தை. யார் பொண்ணு கேட்கறாளோ  அவாளுக்கு பொண் குழந்தை. யார் குழந்தை இல்லன்னு சொல்றாளோ அவாளுக்கு குழந்தை பொறக்கணும், இதெல்லாம் உங்க science ஐ வெச்சுண்டு பண்ணிட்டா நான் வாபஸ் வாங்கிக்கறேன் அப்டீன்னு சொன்னாளாம். அவர் இதெப்படி பண்ண முடியும்னு சொன்ன போது, பெரியவா சொன்னாளாம், “உன்னால create பண்ண முடியாது. அப்போ destroy பண்றதுக்கு மட்டும் எப்படி உனக்கு உரிமை?” அப்டீன்னு கேட்டாளாம்.

மேலும் தீர்க்கதரிசனத்தோட ஒண்ணு சொல்லியிருக்கா. “மத்த மதஸ்தர்கள் எல்லாம் உங்க பேச்சை ஒண்ணும் கேட்கறது இல்லை. இந்த ஹிந்து மதத்துல ரொம்ப ஏழைகளுக்கு ஒண்ணு ரெண்டு தான் குழைந்தைகள் இருக்கு. ரொம்ப பணக்காராளும் ரொம்ப குழந்தை பெத்துக்கறது இல்ல. மிடில் கிளாஸ்லதான் ஒரு மூணு நாலு பெத்துக்கறாளா இருக்கும். அதை தடுக்க நீங்க இவ்வளவு பிரச்சாரம் பண்றேள். நீங்க அப்படி பண்ணி உங்க programme sucess ஆயிடுத்துன்னா முப்பது நாப்பது வருஷத்துல intelegentsiaவே கம்மி ஆயிடும். இந்த middle class ல இருந்து தான் inteligent people வருவா. அது ரொம்ப கம்மியா போய்டும்” அப்டீன்னு பெரியவா சொல்லியிருக்கா.

அவ்வளவு தூரம் கண்டிப்பாக family planning பண்ண கூடாது அப்படீன்னு இருந்திருக்கார், ஸ்வாமிகள் அந்த மஹாபெரியவாளையே தெய்வமா வெச்சுண்டு அவர் வாக்கை காப்பாத்திண்டு இருந்தார். மனைவி பதிவ்ரதையாக இருந்தால் அவளை எல்லா விதத்திலும் திருப்தி படுத்த வேண்டும் என்ற சாஸ்திரத்திலும் நம்ம்பிக்கை அவருக்கு. அதனால அவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். அந்த குழந்தைகளுக்கு எல்லா கடமைகளையும் ஆற்றினார், கடன் வாங்கியாவது சாப்பாடு போட்டு, படிக்க வெச்சு, அவாளுக்கு மருந்து செலவு எல்லாம் ஸ்வாமிகள் பண்ணிணார்.

அவரைச் சுற்றி இருந்த அந்த உலகம், இப்ப இருக்கற attractive ஸ்வாமிஜி சுத்தி இருக்கற மாதிரி இருக்காது. இப்ப இருக்கற கவர்ச்சி சாமியார் மாதிரி நம்ம ஸ்வாமிகள் இருக்க மாட்டார். பரம சாதுவா இருப்பார். அந்த கஷ்டங்கள் எல்லாம் பத்தி கேட்டால், “எனக்கே கஷ்டம் இருக்கு பாரு, எனக்கு என்ன பவர் இருக்கு. ஏதோ நாம பகவானை வேண்டிப்போம்” அப்டீன்னு சொல்வார். ஆனா அவருக்கு அனுக்ரஹம் பண்றதுக்கும், நிக்ரஹம் பண்றதுக்கும் சக்தி இருந்தது. ஆனா அதை மறைப்பதற்காகவே தன்னைச் சுத்தி நாடகம் மாதிரி ஒரு situation ஐ வெச்சுண்டு இருந்தார். தானே கஷ்டத்துல இருக்கற மாதிரி காமிச்சுண்டு இருந்தார்.

இந்த பாதாரவிந்த ஸ்லோகம் இரண்டாவது பார்ட்ல இருக்கறதும் இதுவும் எனக்கு பொருந்துவது மாதிரி தோணித்து. அதாவது பாக்கறவா என்ன நினைச்சா? ஆசையினால் நிறைய குழந்தைகளை பெத்துண்டு அவஸ்தை படரார்னு நினைச்சா. அதனாலேயே நிறைய பேர் அவர்கிட்ட வரல. சுவாமிகளும் நமக்கு நல்லது, நாம படிச்சுண்டு ஆனந்தமா இருக்கலாம் அப்படீன்னு இருந்தார்.

ஆனா அவரை கொஞ்சம் புரிஞ்சுண்டு யாரெல்லாம் நெருங்கினாளோ, அவா எல்லாரும் ஏதோ ஒரு பாராயணமோ, ஒரு ஸ்லோகமோ, ஒரு பூஜையோ சொல்லிக் குடுத்தார்.

ஸ்வாமிகள் தன் கிட்ட பழகினவா எல்லாருக்கும், முயற்சி எடுத்து, ஒவ்வோருத்தருக்கும் தனித்தனியாக ஸ்லோகங்கள், பூஜைகள் சொல்லி கொடுத்துருக்கார். அது இந்த பாதாரவிந்தம் சிவப்பா இருந்தாலும் நமஸ்காரம் பண்றவாளுக்கு வெண்மையை, ஸத்வ குணத்தை கொடுக்கறது என்பது போல இருக்கிறது. ஸ்வாமிகள் கிருஹஸ்தரா இருந்தாலும், ஸந்யாசிகளுக்கும் மேலே, அவரை நமஸ்காரம் பண்ணவா எல்லாரையும் தூய்மை படுத்தி இருக்கார். ஏதோ ஒரு விதத்துல நல்ல வழியில போகறத்துக்கு அவர் அனுக்ரஹம் பண்ணி இருக்கார்னு இந்த ஸ்லோகத்தை படித்த போது தோணித்து.

ஜானகீ காந்த ஸ்மரணம்!!! ஜய ஜய ராம ராம!!!

பாதஸ்மரணம் மனத்தூய்மை அளிக்கும் (9 min audio in tamizh, same as the transcript above)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.