ஸ்வாமிகள் பண்ணின உபகாரத்தில் எது எல்லாருக்கும் நன்னா ஞாபகம் இருக்கும் என்றால், அவர் கிட்ட வந்து ஏதோ ஒரு கஷ்டம்னு சொன்னால், அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, ஒரு உபாயம் சொல்வார். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பண்ணினா, அந்த கஷ்டம் தீர்ந்துடும். இதை எல்லாரும் ஞாபகம் வெச்சிருப்பா. உடம்புக்கு ஏதாவது சரி இல்லைனு சொன்னால்
अच्युतानन्तगोविन्द विष्णो नारायणाsमृत |
रोगान्मे नाशयाशेषान् आशु धन्वन्तरे हरे ||
“அச்யுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாமிர்த |
ரோகான் மே நாஷய அசேஷான் ஆசு தன்வந்த்ரே ஹரே ||
இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்து “ஒரு செப்பு பாத்திரத்தில் ஜலம் வச்சுண்டு 32 ஆவர்த்தி ஜபம் பண்ணிட்டு இதை குடிச்சிடுங்கோ. அப்புறம் போக வர சொல்லிண்டே இருங்கோ” என்று சொல்லுவார். அல்லது “அஸ்மின் பரமாத்மன்” என்று நாராயணீயம் ஸ்லோகம் இருக்கு. அந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுப்பார். மனக்கிலேசம்னு தான் அதிகமா ஜனங்கள் வருவா. ஏதோ ஒரு பண விஷயத்திலேயோ, குடும்பத்திலே, பிள்ளைகள் பெண்கள் விஷயத்துல ஏதோ ஒரு சஞ்சலத்தோடே வருவா. அவா அதை சொல்லுவா. ஸ்வாமிகள் அதை பேசாமல் empathatic ஆக கேட்டுண்டு இருப்பர். கேட்டு முடிச்சுட்டு
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने l प्रणत क्लेश नाशाय गोविन्दाय नमो नमः ll
“க்ருஷ்ணாய வாஸுதேவாய ஹரயே பரமாத்மனே |
ப்ரணத: கிலேச நாசாய கோவிந்தாய நமோ நமஹ ||
என்ற ஸ்லோகத்தை சொல்லச் சொல்லுவார். கிருஷ்ணனை, கோவிந்தனை நமஸ்காரம் பண்ணினால் அந்த கிலேசத்தை போக்கிடுவான். இந்த ஸ்லோகத்தை “பாகவத காயத்ரி” என்று சொல்வார்கள். இந்த ஸ்லோகத்தில் 32 அக்ஷரம் இருக்கு. கேரளாவில் 32 லக்ஷம் ஜபம் பண்ணி சித்தி (siddhi) பண்ணி வெச்சுண்டு, யாராவது ஒரு கஷ்டம்னு சொன்னா அந்த ஸ்லோகத்தை ஜபிச்சி விபூதி குடுப்பா. அந்த கஷ்டம் சரி ஆயிடும். அப்பேற்பட்ட மகான்கள் இருக்கா. இதை நீங்க நம்பிக்கையா சொல்லுங்கோ. “ப்ரணத: கிலேச நாசாய கோவிந்தாய நமோ நமஹ” என்று வருகிறது. முடிந்தால் 32 நமஸ்காரம் பண்ணி சொல்லுங்கோ” என்பார்.
ஸ்வாமிகள் கிட்டே யார் வேண்டுமானாலும் வரலாம். ஏழையோ பணக்காரனோ, படிச்சவனோ படிக்காதவனோ, எந்த குலத்துல பிறந்தவாளா இருந்தாலும் சரி, யார் வேணா எப்ப வேணா வந்து தன்னோட கஷ்டத்தை சொல்லலாம். அவர் காலையில் கொஞ்சம் கஞ்சியை குடிச்சுட்டு சுந்தர காண்டம் ஆரம்பிச்சு மத்தியானம் ஒரு மணிக்கு பூர்த்தி பண்ணனும்னு படிச்சுண்டு இருப்பார். ஒரு மணிக்கு முன்னாடி 12:45 கு யாராவது வருவா. அவர் பாராயணத்தை நிறுத்திட்டு அவாகிட்டே பேசி ஆறுதல் சொல்லி அனுப்பிச்சுட்டு அப்பறம் ரெண்டு மணிக்கு பாராயணத்தை முடிச்சு பட்டாபிஷேகம் பண்ணி அதற்கப்பறம் சாப்பிடுவர்.
அவர் சொல்லுவார் “பாகவதத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கு. ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லறது பஜனம் பண்ற அளவுக்கு முக்கியம். அதானாலேயும் பரமாத்மா திருப்தி அடையரார். அதனாலே நமக்கு சீக்கிரம் அனுக்கிரகம் கிடைக்கும்னு இருக்கு. அதனாலே நான் ஆறுதல் சொல்லறது ஒரு கடமையா வெச்சிண்டு இருக்கேன். இங்க சில பேர் இவரை வரவா ச்ரமபடுத்தறானு சொல்வா. நான் அதை பொருட்படுத்தமாட்டேன். தனக்கு கஷ்டம் வந்தா அவாளும் அதே மாதிரி ஆறுதலுக்கு வருவா. நான் ஆறுதல் சொல்வேன். அதனாலே ஸ்ரமம் கிடையாது. இது பண்ணவேண்டிய காரியம்” என்பார்.
இன்னும் ஒண்ணு சொல்வார். “ஏதாவது ஒரு ரிஷி வந்தவனை “நீ மகா பாவம் பண்ணிருக்கே. அதனாலே இங்கே வராதே” னு சொல்லி இருக்காளா. அது மாதிரி ரிஷிகளே சொல்லாத போது நாம சொல்லறத்துக்கு அருகதை கிடையாது. ரிஷிகள் “இந்த ஸ்வாமியை ப்ரதக்ஷிணம் பண்ணு, கோவில் கட்டு. பூஜை பண்ணு. ஜபம் பண்ணு” அப்படினு சொன்னா என்று தானே புராணத்தில் வரது. ரிஷிகள் யார் வந்தாலும் என்ன பாவம் பண்ணினேன்னு சொன்னாலும், பகவான் மன்னிப்பார்னு சொல்லி அதற்கு பரிகாரம் சொல்லறா. அது மாதிரி யாருக்கும் மீட்பு உண்டு. அதனாலே இங்க யார் வந்தாலும் எல்லாருக்கும் நான் ஆறுதல் சொல்வேன். யாரையும் விலக்கி வெக்கமாட்டேன்” என்று சொல்லுவார்.
ஆனால் அவர் கிட்டே இருக்கும்போது, அவரை பார்க்கும்போது, இவர் பரம சாந்தமாக இருக்காரே. இவர் நம் மாதிரி இந்த அளவுக்கு துக்கப் படலையே. என்ன ஒரு திதீக்ஷை! உடம்பு வியாதியோ மனக்கவலையோ இவரை பாதிக்கவே இல்லையே! கஷ்டம்னு நெனச்சாதானே கஷ்டம் . தாங்கிண்டு போறது. ஏதாவது உடம்புக்கு வந்தால் போன தலைமுறை முந்தின தலைமுறை எல்லாம் பதறிண்டு, இவ்வளவு மாத்திரைகள் சாப்பிட்டாளா? ஏதோ ஒரு பத்து நாள் இருந்துட்டு போகட்டும்னு அதை அனுபவிச்சு தீர்த்துடுவா. அந்த மாதிரி ஒரு திதீக்ஷை! ஒரு கொசு கடி மாதிரி. இருக்கட்டும், பாத்துக்கலாம், அப்படினு நினைக்கிற மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அது பாட்டுக்கு இருக்கட்டும்னு ஸ்வாமிகள் இருந்தார்.
எவ்வளவு தூரம் கஷ்டங்களை பொறுத்துண்டார் என்றால் அவரோட பூர்வாச்ரம பிள்ளை நாராயணன் னு ஒருத்தன் இருந்தான். அவன் நன்னா வேதம் படிச்சு பாகவதம் சப்தாஹம் பண்ற அளவுக்கு நன்னா படிச்சான். ஒரு தடவை பூணல் போட்ட போது அந்த பிள்ளையை மஹாபெரியவா கிட்டே கூட்டிண்டு போனார். பெரியவா “ஆப: புனந்து” அப்படினு கேட்டவுடன் அந்த பையன் “ப்ருத்விம் ப்ரித்வீ பூதா புநாதுமாம்” அப்படினு சொன்னான். உடனே பெரியவா சொன்னாளாம் “நல்ல வித்வத் பரம்பரை ல வந்திருக்கான். “ஆப: புனந்து” என்று எடுத்து குடுத்த உடனே அதை திரும்ப சொல்லாமே விட்ட இடத்துல இருந்து சொல்றான் பாரு” அப்படினு பெரியவா கொண்டாடி இருக்கா. அப்பேற்பட்ட பையன் 28 வயசுல கிட்னி failure ஆகி காலம் ஆயிட்டான். ஸ்வாமிகள் அதைக் கூட பொறுத்துண்டார். அதற்குள் அவர் ஸன்யாசம் வாங்கிண்டுட்டார். “நல்ல ஜீவன். கொஞ்சம் சிரமம் பட்டான். முடிவு வந்துடுத்து. நல்ல கதி அடைஞ்சுட்டான்” என்று சொல்லி அன்னிக்கும் அவர் பாகவத பாராயணம் பண்ணிண்டு இருந்தார்.
அப்படி அவரை பார்க்கும் போது, நம்ம கஷ்டத்தை சொன்னோம், ஆறுதல் சொன்னார், அப்படினு பார்த்துண்டு இருந்தாலும், இவரை மாதிரி ஆகணும். ஒவ்வொன்றுக்கும் நாம் புலம்பக்கூடாது. பகவான் விட்ட வழினு இருக்கணும். அப்படினு தோணும். ஸ்வாமிகள் கிட்ட பிரார்த்தனை பண்ணினா, “வாஸ்தவம் தான். பகவான் விட்ட வழின்னு இருப்பதே நிம்மதி.
त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव |
त्वमेव विद्या, द्रविणं त्वमेव, त्वमेव सर्वं ममः देवदेवा ||
“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ |
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவ ||
என்னோட பணமும் நீ தான், பந்துகளும் நீதான், நண்பர்களும் நீதான் என்னோட அப்பா அம்மா நீதான், என்னோட குழந்தைகள் நீதான், எல்லாமே நீதான்னு நினைச்சா எதைப்பற்றியும் நமக்கு மனசுல ஒரு conflict, ஒரு துக்கம் வராது. இன்னிக்கு இவா விஷயத்தில் இப்படி இருக்கட்டும்னு பகவான் வெச்சிருக்கார் என்று அந்த பொறுமை வரத்துக்கு ஸ்வாமிகள் எப்படி இருந்தானு நினைச்சுக்கலாம். அவர் சொல்லுவார்
चिन्त्यमानस्समस्तानां क्लेशानां हानिदो हि य: ।
समुत्सृज्याखिलं चिन्त्यं सोऽच्युतः किं न चिन्त्यते ।।
“சிந்த்யமான: ஸமஸ்தானாம் க்லேஷானாம் ஹானிதோ ஹி ய: |
சமுத்ஸ்ருஜ்ய அகிலம் சிந்த்யம் ஸோச்யுத: கிம் ந சிந்த்யதே ||
நாம் கவலைப்படும் எல்லாத்துக்கும் முடிவை பகவான் தான் கொடுக்க முடியும். அதனாலே, நீ ஏன் கவலை படுகிறாய்?. அதை விட்டுட்டு பகவானை நினைச்சுண்டு உட்கார்ந்து இரு” அப்படினு சொல்லுவார். அப்படி பகவானை பஜனை பண்ணினா, நாம் பாப வழிகளில் போகாமல், சோகத்தில் பல தப்புகள் பண்ணிவிடாமல் இருக்க முடியும்.
மூகபஞ்ச சதி இல் 63 ஸ்லோகம்
त्वन्मन्दस्मितमञ्जरीं प्रसृमरां कामाक्षि चन्द्रातपं
सन्तः सन्ततमामनन्त्यमलता तल्लक्षणं लक्ष्यते ।
अस्माकं न धुनोति तापमधिकं धूनोति नाभ्यन्तरं
ध्वान्तं तत्खलु दुःखिनो वयमिदं केनोति नो विद्महे ॥
த்வன்மந்த³ஸ்மிதமஞ்ஜரீம் ப்ரஸ்ருʼமராம் காமாக்ஷி சந்த்³ராதபம்
ஸந்த: ஸந்ததமாமனந்த்யமலதா தல்லக்ஷணம் லக்ஷ்யதே ।
அஸ்மாகம் ந து⁴னோதி தாபகமதி⁴கம் தூ⁴னோதி நாப்⁴யந்தரம்
த்⁴வாந்தம் தத்க²லு து:³கி²னோ வயமித³ம் கேனோதி நோ வித்³மஹே ॥
அம்பாளோட மந்தஸ்மிதம் சந்திரன் போல இருக்குனு மகான்கள் சொல்றா. அது சந்திரிகை மாதிரி தூய்மையாகவும் வெள்ளிச்சமாகவும் இருக்கு. இருந்தாலும் என் மனசில் இருக்கும் இருட்டையும் தாபத்தையும் போக்கவில்லையே? சந்திரன் வந்தால் இருட்டும் தாபமும் போகும். ஆனா என் மனசில் இருக்கும் இருட்டு போகலை அப்படினு சொல்றர். ஆனால் ஒரு பத்து ஸ்லோகத்துக்குள்ள 72வது ஸ்லோகம்
ज्योत्स्ना किं तनुते फलं तनुमतामौष्ण्यप्रशान्तिं विना
त्वन्मन्दस्मितरोचिषा तनुमतां कामाक्षि रोचिष्णुना ।
सन्तापो विनिवार्यते निजवचः प्राचुर्यमङ्कूर्यते
सौन्दर्यं परिपूर्यते जगति सा कीर्तिश्च सञ्चार्यते ॥
ஜ்யோத்ஸ்னா கிம் தனுதே ப²லம் தனுமதாமௌஷ்ண்ய ப்ரஶாந்திம் வினா
த்வன்மந்த³ஸ்மிதரோசிஷா தனுமதாம் காமாக்ஷி ரோசிஷ்ணுனா ।
ஸந்தாபோ வினிவார்யதே நிஜவச:ப்ராசுர்யமங்கூர்யதே
ஸௌந்த³ர்யம் பரிபூர்யதே ஜக³தி ஸா கீர்திஶ்ச ஸம்சார்யதே ॥
இதோட அர்த்தம் “சந்திரன் உதயமானால் ஸந்தாபம் போய்த்தானே ஆகணும்! ஒருத்தனுடைய மனசுல அம்பாளுடைய மந்தஸ்மிதம் என்கிற சந்திரிகை உதித்தால், அவனோட தாபங்கள் எல்லாம் போய்விடுகிறது. அவனுக்கு தனி அழகு வந்துவிடுகிறது. நல்ல வாக்கு வந்துவிடுகிறது. உலகில் புகழும் வந்துவிடுகிறது.”
இந்த இரண்டையும் வெச்சுண்டு ஸ்வாமிகள் சொல்வர் “ஸீதாதேவி, ‘பதிவிரதா தர்மத்தை நான் கடைபிடித்தேன். ஆனால் அதோட பலனை நான் பார்க்கலை. இப்ப உயிரை விடப்போறேன்’ அப்படினு புலம்பறா. ஆனா நமக்கு தெரியுமே – மரத்து மேல ஹனுமான் காத்துண்டு இருக்கார். ஆறுதல் சொல்ல போறார். அந்த கஷ்டத்தில் இருந்து அம்பாள் மீண்டு விடுவாள் என்று. அதனால் பதிவிரதா தர்மத்தினால் என்ன பயன் என்பதை அப்படியே எடுத்துக்க கூடாது. அதை கடைபிடித்ததால் தான் ஸீதையை ராமன் வந்து காப்பாற்றினார்.”
அது மாதிரி கௌசல்யா தேவி புலம்பும் போது ‘எத்தனையோ ஹோமம் பண்ணினேன். எத்தனையோ வ்ரதங்கள், பூஜைகள் பண்ணினேன். என்ன பண்ணி என்ன கண்டேன்? என் ராமன் காட்டுக்கு போறான்.’ அப்படினு சொல்றா. ஆனால் ராமன் காட்டுல இருந்து நல்லபடியாக திரும்பி வந்து சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் பண்ணிண்டது அவள் பண்ணின பூஜைகளின் பலனாகத் தான்.
இது நேரடியாக பலன் கிடைத்த விஷயம். ஒரு முனி குமாரன் தசரதனால் அடிபட்டு கிழே விழுந்து இறந்து போயிடறான். அவன் அப்பா அம்மா அவன் மேலே விழுந்து புலம்பறா. ‘நீ எவ்வளவு நல்லவனா இருந்தாய். எங்களை நன்னா பார்த்துண்ட. உனக்கு இப்படி கஷ்டம் வந்துடுத்தே’ னு புலம்பறா. பின்னாடியே அவனை சிதையில் ஏத்தின பின்னே, அவன் ஒரு திவ்ய ரூபம் எடுத்துண்டு இந்திரனுடன் ஸ்வர்கத்துக்கு போறான். ‘அப்பா அம்மா, உங்களுக்கு பண்ணின ஸுஷ்ருஷா பலனால் நான் ஸ்வர்கத்துக்கு போறேன்’ அப்படினு சொல்றான். ஸ்வாமிகள் ‘அவன் அப்பா அம்மாவுக்கு கைங்கர்யம் பண்ணின புண்யம் அவனை கைவிடலை. அவன் நல்ல கதியை அடைஞ்சான்’ என்று சொல்வார்.
ஸீதையாவது ராமரோடு சேர்ந்தாள். கௌசல்யா தேவி ராமருடைய பட்டாபிஷேகத்தை கண்ணாலே பார்த்தாள். இந்த சின்ன பையன் அகால மரணம் அடையாறன். ஆனாலும் ஸ்வர்கத்துக்கு போனான். அதனால் பண்ற புண்ணியம், நல்ல காரியம் நல்ல பலனையே குடுக்கும். அதனால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த ஸ்தோத்ரங்களை படிங்கோ. உங்க கஷ்டம் தீரும்’ அப்படினு சொல்வார். “அம்பாள் மந்தஸ்மிதம் சந்திரிகைனு சொல்றா. என் மனசில் இருக்கும் இருட்டு போகலையே. எனக்கு தாபம் போகலையே என்ற வார்த்தை மாறி பின்னாடி பத்து ஸ்லோகத்தில் சந்திரிகை உதயம் ஆனால் தாபம் எப்படி போகாமல் இருக்கும்! கட்டாயமாக தாபம் போய்டும் என்பதை வெச்சுண்டு ஸ்வாமிகள், “ஸீதைக்கு கஷ்டம் வந்து விலகிடுத்து. அதனால் தர்மம் நம்மை காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை வைச்சுண்டு பகவானை பலன் ஏற்படுகிற வரை பஜனம் பண்ணணும்” அப்படினு சொல்லுவார்.
இது புராணங்களில் வரும் ரிஷிகளைப் போல அவரோடே சமாதானம் செய்கிற ஷைலி. அதை நினச்சு இன்னிக்கும் வியந்து கொண்டு இருக்கேன்.
“அச்யுதானந்த கோவிந்தா விஷ்ணோ நாராயணாமிர்த |
ரோகான் மே நாஷய அசேஷான் ஆசு தன்வந்த்ரே ஹரே ||”
என்று சொல்லி நல்ல ஆரோக்யம் பெற்று
“க்ருஷ்ணாய வாசுதேவாய ஹரயே பரமாத்மனே |
ப்ரணத: கிலேச நாசாய கோவிந்தாய நமோ நமஹ ||”
என்று சொல்லி மனக்கவலைகள் விலகி ஒரு சந்தோஷமான மனஸோடு
“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ |
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவ ||”
என்று இதை ஸ்வாமிகளையே நினைச்சு சொல்லி, ஸ்வாமிகள் தான் நமக்கு அப்பா அம்மா தெய்வம் அப்படினு ஸ்வாமிகள் கிட்ட எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டு அதோடு
“கோவிந்த கோவிந்த ஹரே முராரே
கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா |
கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே
கோவிந்த தாமோதர மாதவேதி ||
என்பதை 72 ஆவர்த்தி பண்ணினால் ஸ்வாமிகள் அனுக்ரஹம் கிடைக்கும் என்று தோன்றுகிறது.
இந்த ஸ்லோகத்தில் 14 தடவை பகவான் நாமா வருகிறது. இதை 72 ஆவர்த்தி பண்ணினால் 1008 நாமாவளி. ஒரு சஹஸ்ரநாமம் மாதிரி ஆகும். ஸுமுகச்ச ஏகதந்தச்ச அப்படினு இந்த பதினாறு பிள்ளையார் நாமாவளி இருக்கற ஸ்லோகத்தை 63 ஆவர்தி பண்ணினால் 1008 ஆகிவிடும். அதே மாதிரி “அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமபூஜித” இதில் 3 தடவை ஹனுமார் நாமம் வருகிறது இதை 336 தடவை சொன்னால் 1008 ஆகும். அப்படி பண்ணுங்கோ என்று ஸ்வாமிகள் சொல்வார். நாம் ஒரு கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் அஷ்டோத்திர நாமாவளி அர்ச்சனை பண்ணச் சொல்றோம். அவரும் முடிஞ்சதை பண்றார், அதனால் நமக்கு க்ஷேமம்னு நம்பறோம். அப்படி இருக்கும் போது, நாமளே நமக்காக ஒரு 1008 நாமத்தை சொன்னால் நிச்சயமா அதற்கு பலன் இருக்கும் அப்படினு சொல்வார். இது எல்லாம் அவர் சொல்கிற உபாயங்கள்.
அது மாதிரி, அவர் பெயர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். அதனால் இந்த “அச்யுதானந்த கோவிந்த” “க்ருஷ்ணாய வாசுதேவாய” “த்வமேவ மாதா ச” சொல்லிட்டு “கோவிந்த கோவிந்த ஹரே முராரே” என்ற ஸ்லோகத்தை 72 தடவை சொன்னால் நமக்கு physical health, mental health, பக்தி, முக்தி எல்லாமே ஸ்வாமிகள் அனுக்ரஹத்தால் கிடைக்கும்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்!!! கோவிந்தா கோவிந்தா!!!
கோவிந்த தாமோதர சஹஸ்ரநாமம் (15 min audio in tamizh, same as the transcript above)
One reply on “கோவிந்த தாமோதர சஹஸ்ரநாமம்”
Sir, I am blessed to be included in the mailing list.Many thanks.