ராம: கமலபத்ராக்ஷ: (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகளை முதல்ல வேத அத்யயனத்துல தான் போட்டிருக்கா, ஆனா அந்த காலத்துல வேதம் படிச்சா வைதீகத்துக்கு போகணும், வைதீகத்துக்கு போனால் பிராமணார்த்தம் சாப்பிடணும், இவருக்கு வயிறு trouble இருந்ததாலே, ஒரு பதினைஞ்சு வயசுல இங்கிலீஷ் படிப்புக்கு போட்டிருக்கா, ஆறாம் கிளாஸ்ல.
ஸ்வாமிகள், “நான் சென்னைக்கு வந்தபோது மஹாபெரியவா பிரவசனம் கேட்டேன், வேதம் படிச்சா ஆரோக்கியம் வரும், வேதம் படிச்சா Nerves எல்லாம் Strong ஆகும், அப்படின்னு சொன்னார். அதை முதலிலேயே கேட்டு இருந்தேன்னா அப்பாவை convince பண்ணி வேத அத்யயனமே முடிச்சுருப்பேன்” என்று சொல்வார். ஆனா, அந்த குறை இல்லாம ஸ்வாமிகள், சென்னைல வந்த பின்ன ஒரு வாத்தியாரை வெச்சுண்டு யஜூர் வேதம் பூரணமா அத்யயனம் பண்ணி, தினம் பிரம்ம யக்ஞத்தின்போது யஜூர் வேதம் சொல்வார். “ஸ்வாத்யாய நிரதம்” அப்படின்னு, ராமயணத்துல வர்றது ஸ்வாமிகளுக்கு பொருந்தும்.
இங்கிலீஷ் படிப்புக்கு போன பின்னே, இங்கிலீஷ் ஸ்கூல் வாத்தியார், அவாள் எல்லாம், ரொம்ப ப்ரியமாக இருந்திருக்கா, அதுல சமஸ்கிருத வாத்தியார் கந்தசாமி சிரோன்மணின்னு ஒருத்தர். ஸ்வாமிகளுக்கு அவர்கிட்ட ரொம்ப நெருக்கம், சமஸ்கிருதம் ஏற்கனவே ரொம்ப பிடிக்கும், இவர் நன்னா பதினைஞ்சு வருஷம் படிச்சுட்டு வந்திருக்கார், அதனால அவா ரெண்டு பேரும் ரொம்ப, நிறைய, சல்லாபம் பண்ணி சந்தோஷபட்டிருக்கா,
அந்த கந்தசாமி சிரோன்மணி பத்தி ஸ்வாமிகள் சொல்வார் “அந்த காலத்துல, அவாளுக்கு நல்ல படிப்பும் இருக்கும், ரொம்ப Dedication உம் இருக்கும், கொழந்தேளுக்கு சொல்லி தரதுல, ரொம்ப முயற்சியா சொல்லித் தருவா, கொழந்தேள் நன்னா படிக்கலன்னா, எனக்கு தான் சொல்லித்தர தெரியலடா என்று சொல்லுவாளாம். இன்னொரு வாட்டி சொல்லித்தரேன் அப்படின்னு ரொம்ப விநயமாவும் இருப்பா” இப்படி ஸ்வாமிகள் அவரோட ஒவ்வொரு வாத்தியார் பேரையும் சொல்லி அவாளை எல்லாம் கொண்டாடுவர்.
அப்புறம், படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வந்து ஸ்வாமிகள் செட்டில் ஆயிட்டார், அந்த கந்தசாமி சிரோன்மணி, தன்னோட ஊர்ல வருஷா வருஷம் பெரியவாளை எல்லாம் கூப்பிட்டு பிரவசனம் ஏற்பாடு பண்ணுவாராம், ஸ்வாமிகள் பிரவசனம் பண்றார்னு தெரிஞ்சுண்டு, ஸ்வாமிகளை கூப்பிட்டுருக்கார். ஸ்வாமிகள் வந்து பிரவசனம் பண்ணும்போது, ராமாயண நவாஹம், ஏழாம் நாள், சுந்தர காண்டம் சொல்லிண்டுருக்கார். அந்த குருநாதர் சொன்னாராம், “இந்த ராமாயணம் ரொம்ப அமிர்தமா இருக்கு ஆனந்தமா இருக்கு, உங்கிட்ட இன்னும் நிறைய கேக்கணும்னு ஆசையா இருக்கு, இந்த சுந்தர காண்டத்தையே இன்னொரு ஏழு நாள் நீ பிரவசனம் பண்ணி, பதினஞ்சு நாள்ல பூர்த்தி பண்ணிணா நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்”, அப்படின்னு சொன்னாராம், “எல்லார் சார்புலயும் நான் பிரார்த்தனை பண்ணிக்கறேன்,” அப்படின்னாராம்.
அப்போ ஸ்வாமிகள், “உங்க ஆக்ஞை” அப்படின்னு சொல்லிட்டு பதினைந்து நாட்கள் பண்ணினாறாம். எவ்வளவு படிப்பு இருந்தா, அந்த மாதிரி சுந்தர காண்டத்தை விஸ்தாரமா, நாலு மணி நேரம், ஏழு நாள் Extra சொல்ல முடியும்! எவ்வளவு deep ஆக Study பண்ணிருக்கணும்!
வாத்தியார் சொன்னாராம், இந்த சிவானந்த லஹரில, ஒரு ஸ்லோகம் இருக்கு. ஸதா மோஹாடவ்யாம் சரதி, அப்படின்னு ஆரம்பிக்கும்.
सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः |
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ||२० ||
ஸதா3 மோஹாடவ்யாம் சரதி யுவதீனாம் குசகி3ரௌ
நடத்யாஸா1 ஸா1கா2ஸ்வடதி ஜ2டிதி ஸ்வைரமபி4த: |
கபாலின் பி4க்ஷோ மே ஹ்ரு2த3யகபி மத்யந்த சபலம்
த்3ரு2ட4ம் ப4க்த்யா ப3த்3த்4வா ஶிவ ப4வத3தீ4னம் குரு விபோ4 ||20 ||
ஹே பரமேஸ்வரா நீ பிக்ஷுவா இருக்கே, பிச்சை எடுக்க போகும்போது, கூட ஒரு குரங்கு கூட்டிண்டு போனேன்னா ஜனங்கள் பக்கதுல வருவா, ஏதாவது போடுவா, என் மனம் ஆகிய குரங்கை, பக்திங்கற கயத்துனால உன்னோட பாதாரவிந்ததுல கட்டி வெச்சுடு, அப்படின்னு ஆதி சங்கர பகவத்பாதாள், அழகாக பிரார்த்தனை பண்றார். “இந்த ச்லோகத்தை எங்கயாவாது ராமாயணத்துல பொருத்தி சொல்லேன்னு” அப்படின்னு அந்த வாத்தியார் சொன்னாராம்.
ஸ்வாமிகள் எங்கே அதை சொன்னார் என்றால், ஸீதா தேவி கிட்ட ஹனுமார் போய் நமஸ்காரம் பண்ணி, ராம தூதனா வந்துருக்கேன், அப்படின்ன உடனே, சீதை, முதல்ல சந்தேகப்படறா, ராவணனோன்னு, அப்புறம் சந்தேகம் தெளிஞ்சு, ராமரோட குணங்களை சொல்லுங்கறா, ஹனுமார் அவ்வளோ அழகாக சொல்றார், அது ஒரு “ஹனுமத் க்ருத ராம ஸ்தோத்ரம்” அந்த மாதிரி பக்தனா இருந்தாலொழிய, பகவானோட குணங்களை வாயார பாட முடியாது; அப்புறம் “ராம லக்ஷ்மணாளை நீ பார்த்திருக்கேன்கிற, அவாளோட அங்க அடையளங்களை சொல்லு”ன்னு ஸீதாதேவி கேக்கறா, அப்போ ஹனுமார் ஆரம்பிக்கிறார்,
रामः कमलपत्त्राक्ष: सर्वसत्त्वमनोहरः। रूपदाक्षिण्यसम्पन्नः प्रसूतो जनकात्मजे।।
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர:
ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே
ராமர் தாமரை போன்ற கண்ணழகு கொண்டவர், ஸர்வ ஸத்வ மனோஹர: எல்லாருடைய மனத்தையும், கவரும் அழகு, அவரோட அழகு, ஆண்டாள் கூட,
“சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய்”
அப்படின்னு, ராமரைச் சொல்லும்போது “மனத்துக்கினயான்” னு சொல்றாளே, அது மாதிரி. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொன்னாராம், “க்ஷணத்துக்கு க்ஷணம், கிளைக்கு கிளை குரங்கு தாவற மாதிரி, மனசு ஒவ்வொரு நிமிஷம் மாறி மாறி தாவறது, அதனால எங்களை மனசுக்கு உபமானமாக சொல்லுவா. அப்படி இருக்கிற நாங்க, இந்த ராம காரியத்துக்காக, எல்லாரும், ஒரே மனசா இந்த காரியத்துல ஈடுபட்டிருக்கோம்னா, அவருடைய அந்த ராமருடைய கண்ணழகு தான், அவருடைய அழகு எங்களை கவர்ந்துடுத்து, அவ்வளோ இனியவன்,” அப்படின்னு சொல்லி, அந்த இடத்துல அந்த சிவானந்தலஹரி ஸ்லோகத்தையும் சொல்லி, ஸ்வாமிகள் சொன்னாராம், அந்த வாத்தியார் ரொம்ப பாராட்டினாராம், “ஆஹா, வரவாகிட்ட எல்லாம் இதை ஒரு Test மாதிரி சொல்லிண்டுருக்கேன், எல்லாரும் வந்து ஸ்திரீகளோட ஸ்தனங்களாகிய மலைல என் மனசாகிய குரங்கு, அப்படின்னு அங்கேயே தான் உழுதுண்டு இருக்கா, நீதான் இவ்வளவு அழகா, அந்த பக்தியைச் சொல்லி சொன்ன, ரொம்ப சந்தோஷம்; உன்னோட வாத்தியார்னு சொல்லிக்கறதுல நான் பெருமை படறேன்”, அப்படின்னாராம்.
இந்த ஸ்லோகத்தை, இன்னொரு இடத்துல ஸ்வாமிகள் Use பண்ணினாராம், ஸ்வாமிகளுக்கு கல்யாணம், கல்யாணராமனுக்கு கல்யாணம், அந்த கல்யாணத்தும்போது அத்திம்பேர் சொன்னாராம், ‘நீ கெக்கேபிக்கேனுல்லாம் நிக்கபடாது, ஜாம் ஜாம் னு சபையில இருக்கணும்’, அப்படின்னாராம். ‘எனக்கு என்ன தெரியும் அத்திம்பேர், எனக்கு தெரிஞ்சத நான் பண்றேன்’, அப்படின்னு, இந்த ஸ்லோகத்தை சொல்லி இவர் பிரார்த்தனை பண்ணின்டாராம்.
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர:
ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே
அப்படின்னு, எல்லார் மனத்தையும் கவரக்கூடிய அளவுல என்னோட ரூபம் இருக்கட்டும், அப்படின்னு வேண்டிண்டேன்பார். அந்த அத்திம்பேர் வந்து “நன்னா இருந்தடா, ஷோக்கா இருந்த கல்யாணத்துல, என்ன எதாவது மந்த்ரம் சொன்னியா” ன்னு கேட்டார், அந்த மந்திரம் எனக்குத் தானே தெரியும், அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.
இதை என் கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடி சொன்னார்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!
3 replies on “ராம: கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர:”
SIVAN SAAR SADGURU SARANAM
Thanking technology too anna. Same day started with all your writeups audios parayanam… Anantha koti namaskaram. Its like a sugarcane and mangoes of Srikamakshi for all true seekers.
Namaskarams sir…. Blessed to read the explanation of Swamigal on the Soundarya lahari sloka