ஶம தன ஜனாஹா: (6 min audio in Tamizh, same as the script above)
நம்ம ஸ்வாமிகளை பத்தி நெனச்சாலே, பேசினாலே, படிச்சாலே, கேட்டாலே ஒரு, தனியான ஒரு ஆனந்தம். தனியான ஒரு நிம்மதி ஏற்படறது, அப்படிங்கறது, ஒரு பெரிய பாக்கியம். அது தான் ஒரு அனுக்ரஹம்.
இந்த அனுக்ரஹத்தை நமக்கு குடுக்கறதுக்காகதான், நம்ம ஓட்டமா ஓடிண்டு இருக்குற நம்ம Life ல, ஒரு நிமிஷம் நின்னு அவரை த்யானம் பண்ணி, அதனால ஒரு தூய்மை அடையணும், அந்த பேறு நமக்கு கிடைக்கட்டும் என்கிற ஒரே காரணத்துக்காகதான் அவர் ஸன்யாசம் வாங்கிண்டார், அப்படிங்கறத நான் பார்த்தேன்.
அவருக்கு அந்த ஸன்யாசம் வாங்கிக்கணும் என்கிற ஒரு எண்ணம் எப்படி வந்தது என்றால், அவருக்கு சதா சர்வதா மஹான்களோட த்யானம்தான், ராமகிருஷ்ண பரமஹம்சருடைய பொன்மொழிகளை, எழுவத்தஞ்சு தடவை படிச்சிருக்கார், வள்ளிமலை வள்ளல், அப்படின்னு வள்ளிமலை ஸ்வாமிகளோட சரித்திரத்தை ஒரு நூறு தடவை படிச்சிருக்கார். நம்ம ஆச்சார்ய ஸ்வாமிகளோட திவ்ய சரித்திரம், பூர்வாஸ்ரம தம்பி சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள் எழுதினது, ஒரு நூறு தடவை படிச்சிருக்கார், சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்திரத்தை ஒரு நூறு தடவை படிச்சிருக்கார், ஸ்ரீ கி. வ. ஜகன்னாதன் எழுதின ரமண பகவானோட அனுபவங்களை, கணக்கில்லாம படிச்சிருக்கார் இப்படி மஹான்களோட சரித்திரம், அவாளுடைய வாக்கு, இப்படி இதே த்யானமா இருப்பார் அவர்.
அதனால அவர் மனசுல ஸன்யாசம் வாங்கிக்கணும் ஒரு எண்ணம் இருந்தது, சிவன் சார் கிட்ட கேளுங்கோன்னார். சிவன் சார், “அவர் வெள்ளை வேஷ்டியா இருந்தா என்ன, ஸன்யாசியா இருந்த என்ன, அந்த மாதிரி ஒரூ ஜீவனை பார்க்கவே முடியாது, ரொம்ப அபூர்வமான ஒரு Soul, ரொம்ப தூய்மையானவர்” அப்படின்னு சொன்னார். சிவன் சார் ஸ்வாமிகளோட பேரைச் சொன்னாலே கையெடுத்து தலை மேல வெச்சுண்டு நமஸ்காரம் பண்ணுவார், “அவர் ஸன்யாசம் வாங்கிக்கணும் என்கிறதே இல்ல, இப்பவே ஸன்யாசிதான்” அப்படின்னு சொன்னார். இருந்தாலும் ஸ்வாமிகள், ஒரு மாசம் கழிச்சு, மறுபடியும் கேக்க சொன்னார், அப்போ சிவன் சார், “அவசியம் வாங்கிக்கட்டும், அமோகமா இருப்பார்” னு சொன்னார், அந்த சிவன் சார் வாக்கால் அமோகமா இருப்பார்னு சொன்னது தான் இப்போ, இவ்வளோ வைபவம், பெரிய கோவிலா எழும்பி, அவரோட அதிஷ்டானம் நமக்கு கிடைச்சிருக்கு, நாமெல்லாம் ஆராதனை பண்ணி சந்தோஷப் படறோம்.
ஸ்வாமிகள், அவர் எப்பவுமே ஸன்யாசி தான், கிருஷ்ண பகவான் நித்ய பிரம்மச்சாரிங்கற மாதிரி, ஸ்வாமிகள், யோகீஸ்வரர், மஹா யோகீஸ்வரேஸ்வரர், அவர் ஸன்யாசிதான், பணத்துல அவருக்கிருந்த அந்த நிஷ்ப்ருஹத்வம் எங்கயுமே நான் பார்த்தது கிடையாது, அதை பத்தி தனியா பேசலாம், அப்படி சன்னியாச தர்மத்துக்கு பூரண யோக்கியதை இருந்தது அவருக்கு.
அதுல ஒரு வேடிக்கை, அவர் ஸன்யாசம் வாங்கிக்கணும்கற எண்ணம் வந்த போது, பக்கத்துல ராமகிருஷ்ண மடத்துலேயும், ஒரு சிவானந்தா ஆஷ்ரமத்தோட ஒரு Branch இருந்தது, அங்க ஸன்யாசிகள் வந்து இருக்கலாமா, இருக்கறதுக்கு அவாளோடைய நியம நிஷ்டைகள் என்னன்னு கேட்டுண்டு வரச் சொன்னார். ஜானகிராம மாமா போய் கேட்டபோது, ஒரு இடத்துல என்ன Capital கொண்டு வருவார்னு கேட்டா, இன்னொரு இடத்துல என்ன Contribute பண்ணுவார்னு கேட்டா. ஸ்வாமிகள் அப்போ மூக பஞ்ச ஸதி படிச்சுண்டிருந்தார்,
सुरागे राकेन्दुप्रतिनिधिमुखे पर्वतसुते
चिराल्लभ्ये भक्त्या शमधनजनानां परिषदा ।
मनोभृङ्गो मत्कः पदकमलयुग्मे जननि ते
प्रकामं कामाक्षि त्रिपुरहरवामाक्षि रमताम् ॥
ஸுராகே ராகேந்து ப்ரதிநிதிமுகே பர்வதஸுதே
சிரால்லப்யே பக்த்யா ஶமதனஜனானாம் பரிஷதா |
மனோப்ருங்கோ மத்க: பதகமலயுக்மே ஜனனி தே
ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுரஹரவாமாக்ஷி ரமதாம் ||
அப்படின்னு ஒரு ஸ்லோகம், இதுல ஶம தன ஜனானாம் பரிஷதா, சாந்தியை தனமாக கொண்ட முனிவர்கள், முயற்சி பண்ணி உன்னுடைய பாதத்தை வந்து அடையறா, நீ பக்தியினால என்னை அந்த பாதத்தில கட்டி போடும்மான்னு பிரார்த்தனை பண்றார், மூக கவி. அது மாதிரி ஸன்யாசிகளுக்கு லக்ஷணம் சாந்தம் தான், என்கிட்டே அந்த சாந்திங்கற தனம் தான் இருக்கு, இவா Capital கேக்கறாளே, அப்படின்னு சொன்னார். அப்புறம் சிவன் சார், ஸன்யாசம் வாங்கிக்கட்டும், அந்த ஆத்துலயே இருக்கட்டும், அந்த மாடியிலயே இருக்கட்டும்னு சொன்னார், அந்த உத்தரவு வந்த உடனே, அப்படியே ஸ்வாமிகள் இருந்தார்.
அப்புறம் அவர் தண்ட கமண்டலு வெச்சுக்கணும், அப்படின்னு யாரோ சொல்றானு சொன்ன உடனே, ஸ்வாமிகள், புதுப் பெரியாவளைப் போய் கேளுங்கோ, அவர்தான் குடுக்கணும், அப்படின்னு சொன்னார். உடனே புதுப் பெரியாவாள் கிட்ட போய் கேட்ட போது, அவா “நான் சொன்னேன்னு சொல்லுங்கோ, அவருக்கு தண்ட கமண்டலம் எல்லாம் வேண்டாம், அவர் பாகவத ஸன்யாசி, எங்களை எல்லாம் விட ரொம்ப உயர்ந்த நிலைல இருக்கார். அவர் வெள்ளை வேட்டி கட்டின காலத்துலேயே ஸன்யாசி, நான் சொன்னேன்னு சொல்லுங்கோ, அந்த நியமங்கள் எல்லாம் அவருக்கு வேண்டாம், அவர் பூரண ஸன்யாஸத்துக்கு யோக்யதை இருக்கறவர், ஸதா சர்வ காலம் பகவத் பஜனத்துல ஈடுபட்டிருக்கிறவர்” அப்படின்னு புதுப் பெரியவா சொன்னார்.
ஸ்வாமிகள் ஸன்யாசம் வாங்கிண்டதுக்கு, என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே காரணம், நாம் சிஷ்யர்கள், வாழ்க்கையின் ஓட்டத்துக்கு நடுவுல ஒரு நிமிஷம் ஆவது அவரை நினைகிறத்துக்கு ஒரு Opportunity, சிஷ்யர்கள் அவரை த்யானம் பண்ணி அதனால ஒரு ஷேமத்தை அடையணும் எங்கறதுக்காகதான் அவர் ஸன்யாசம் வாங்கிண்டார், அது நாம் பண்ணிண பாக்கியம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!
2 replies on “ஶம தன ஜனாஹா:”
பெரியவா ஷரணம் 🙏
புண்ணியம் செய்தனமே மனமே!
ஸ்ரீ ஸ்வாமிகளைப் பற்றி நினைத்து,பேசி, படித்து, கேட்டு ஆனந்திக்க யாம் செய்த பாக்யமே!. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் மனதில் அமைதியும், ஷாந்தமும் பூரணமாக கிடைக்கிறது.
ஒரு புத்தகம் ஒரு முறை படிப்பதே அறிது , ஒவ்வொரு மஹானின் சரித்திரத்தை அனாயாசமாக 100 முறை படித்தாரென்பது பரமனின் கருணையும், அவரின் பூர்வ ஜென்மத்தின் புண்ணியமுமே. ஸ்ரீ ஸ்வாமிகள் பற்றிய ஒவ்வொரு பதிவும் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்படுத்துகிறது. மிக அருமையான ஒலி வடிவில் உரை உருக்கமாக உள்ளது. என்னே! பக்தி. இந்த நூற்றாண்டில் கண்களுக்கு கிட்டிடாத மஹான். ஆனால் கொஞ்சம் புண்ணியம் நம் செவிகள் செய்திருக்க வேண்டும். ஸ்ரீ ஸ்வாமிகள் அடிகளுக்கு நமஸ்காரங்கள் 🙏🙏
அனந்த கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமிகள் பாதத்திற்கு ! எந்தரோ மகானுபாவோ !!
நீங்கள் ரொம்ப குடுத்து வெச்சவர் ! இப்படிப்பட்ட பூர்ண ஆத்மாவுடன் பழக, பாடம் கற்க பூர்வ ஜென்மத்தில் சுகிர்தம் செய்திருக்க வேண்டும் !
நித்தியம் ராமாயணம், நாராயணீயம் பாராயணத்துடன், இத்தனை முறை சுசரிதம் எல்லாம் படிக்க எல்லோராலும் முடியுமா ? தெய்வப் பிறவி அன்று வேறில்லை ! சிவன் ஸார், புதுப் பெரியவா திரு வாக்கால் அவருக்கு தண்ட கமண்டலம் வேண்டாம் அவர் பூர்ண சன்யாசி என்று சொல்ல எவ்வளவு உயர்ந்த ஆத்மாவாக இருக்கணும் ?
அப்பேற்பட்ட ஒரு ஆத்மாவுடன் பழக, கற்க நீங்கள் எவ்வளவு புண்யம் பண்ணியிருக்க வேண்டும் ! பெரியவா கிருபை !
இதற்கு விமர்சனம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதே என் கருத்து .
பெரியவா சரணம் ! ஸ்வாமிகள் சரணம் .