த்வம் யஷோபாக் பவிஷ்யதி (10 min audio in Tamizh, same as the transcript above)
ஸ்வாமிகள் எப்படி தன்னுடைய பக்தி மார்கத்துல கூட Time management எல்லாம் பண்ணிண்டு இருந்தார்னு சொல்லிண்டு இருந்தேன். அவர் தன்னுடைய பக்தி மார்கத்துல ஜ்யோதிஷ சாஸ்த்திரத்தையும் உபயோகப்படுத்துவார்.
ஸ்வாமிகளுக்கு கர்மா தியரில ரொம்ப நம்பிக்கை உண்டு. பண்ணின பாவ, புண்ணியங்களுக்குப் பலன் உண்டு. முன்னாடி பண்ணிண பாவத்துனால இப்ப நமக்கு கஷ்ட நஷ்டங்கள் வர்றது. இனிமே பாவம் பண்ணாம இருக்கணும். ஒரு பாவத்துக்கும், புண்யத்துக்கும் செய்த மூணு நிமிஷத்துல, மூணு நாள்ல, மூணு பக்ஷத்துல, மூணு மாஸத்துல, மூணு வருஷத்துல அந்த பண்ணிண பாவ, புண்யத்தோட வீரியத்தைக் கொண்டு பலன் கிடைக்கும். ஸீதா தேவி லஷ்மணனை கடுமையான வார்த்தை பேசினதால மூணு நிமிஷத்துல ராவணன் வந்துட்டான், அப்படீனு அழுத்தமா சொல்வார்.
பாவம் பண்ணக் கூடாது. அதே மாதிரி நம்முடைய பூர்வ வினையினால இப்ப நமக்குக் கஷ்ட நஷ்டங்கள் வர்றது. அதை அனுபவிச்சுதான் தீர்க்கணும். ஸ்வாமிகள் கிட்ட “உங்களுக்கே இவ்வளவு கஷ்டங்கள் வர்றதேன்”னு கேட்டா அவர் சொல்வார், “நீ என்னை இப்ப கொஞ்ச நாளாகத் தான் பார்க்கற. உனக்கே என் கஷ்டத்தை பார்த்து கருணை ஏற்படறது, பகவான் கருணாமூர்த்தி. என்னை ஜன்ம ஜன்மாவா பார்த்துண்டு இருக்கார். ஆனா அவர் இந்த கஷ்டம் இருக்கட்டும்னு நினைக்கிறார்னா, அப்போ நான் ஏதோ அந்த மாதிரி பூர்வ ஜன்மங்கள்ல தப்பு பண்ணியிருக்கேன், அதனால எனக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கார். பகவான் கருணாமூர்த்திதான்” அப்படீன்னு சொல்வார்.
ஸ்வாமிகளுக்கு அவருடைய அப்பா தன்னோட கடைசி காலத்தில் சென்னையில தன்னோடு வந்து இல்லையே, அப்படீனு ஒரு ஏக்கம். அவர் அப்பா “நான் காவிரி கரையிலேயே இருக்கேன்” என்று சொல்லி அக்கா, அத்திம்பேரோடயே இருந்தார். அதை ஸ்வாமிகள் ஒரு குறையாக மனசுல feel பண்ணினார். அயோத்யா காண்டத்துல ராமன் காட்டுக்குக் கிளம்பும்போது தசரதரும், கௌஸல்யையும் “இன்னும் ஒரு நாள் இருந்துட்டு நாளைக்குப் போடா ராமா, இன்னிக்கு உனக்கு நன்னா எல்லாம் சந்தோஷமா, சாப்பாடெல்லாம் பண்ணி போடறோம்” னு சொல்றா. அப்போ ராமன் சொல்றார், “இன்னிக்கு கொடுக்கிறதை நாளைக்கு யார் கொடுக்கப் போறா, அதனால நான் வாக்கு கொடுத்த படியே இன்னிக்கே கிளம்பறேன்” அப்படீன்னு சொல்வார்.
ஸ்வாமிகள் சொல்வார், “நாளைக்கு யார் எனக்கு நல்ல சாப்பாடு போடுவா” ன்னு ராமர் சொல்லலை. “இன்னிக்கு, நீங்க நல்ல சாப்பாடு போட்டு நான் அதை சாப்பிட்டேன்னா அதை பார்த்து உங்களுக்கு, நாளைக்கு இவன் கஷ்டப்படப் போறானேன்னு நினைச்சு மேலும் வருத்தம் தான் ஏற்படுமே தவிர, இன்னிக்கு நான் சாப்பிடும் போது நீங்க சந்தோஷப்பட மாட்டேள். அதனால நான் இப்பவே கிளம்பறேன்” அப்படீன்னு சொல்றார் ராமர்.
இந்த இடத்தில் ஸ்வாமிகள் சொல்வார். “எங்க அப்பா எப்பவாவது ஊரில் இருந்து வருவார், இட்லியா? ரொம்ப நன்னாயிருக்கே இன்னொரு இட்லி போடேன், இன்னும் கொஞ்சம் சட்னி போடேன், இன்னும் கொஞ்சம் எண்ணெய் விடும்பார். எனக்கு கண்ல ஜலம் வரும். இவர் என்னோட இங்க இருக்கக் கூடாதா? இவர் வந்து, ஊருக்கு போறேன்னு கிளம்பறாரே, நான் பண்ணிப் போடறேன்னு ஆசையா கேட்கறேனே, அப்படீன்னு தான் தோணும்” னு ஸ்வாமிகள் சொல்லுவார். அந்த அப்பா கூட வந்து இல்லை அப்படீங்கற எண்ணம் இருந்தாலும், பாகவதத்தில “ஒரு கட்டத்துக்கு மேல் எது விதிச்சிருக்கோ அதை மனசுல ஏத்துக்கணம். எனக்கு ஏன் இந்த கஷ்டம்? ஏன் இப்படி நடக்கறது?” நினைச்சுண்டே இருந்தோம்னா வாழ்கையே நரகமா போய்டும். அது தப்பு, அதுவே ஒரு பாவம்னு பாகவதத்துல சொல்லி இருக்கு. அதனால அதை படிச்ச பின்னர், நான் அந்த எண்ணத்தை விட்டுட்டேன். என்னை ஸமாதானப் படுத்திக்கொண்டு விட்டேன். ஆனா அவர் கடைசி காலத்துலேயாவது என்கிட்ட வந்து இருக்கணும் அப்படீனு ப்ரார்த்தனை பண்ணுவேன். ராவணன் வீழ்ந்த பின்ன, விபீஷணன் புலம்பறான். அப்புறம் “இந்த ராவணனுக்கு நான் ஸம்ஸ்காரம் பண்ணட்டுமா?” என்று ராமரிடம் கேட்கிறான். ராமர் “மரணாந்தானி வைரானி – ஒருத்தன் உயிரோட இருக்கும் வரைக்கும் தான் enimity எல்லாம் இறந்த பின் அது போய்டுத்து. அதனால நீ அவனுக்கு கட்டாயம் ஸம்ஸ்காரம் பண்ணு, நீ பண்ணலைனா நானே பண்ணுவேன். நீ பண்ணு, உனக்குப் பெருமை வரும். “த்வம் யஹோபாக் பவிஷ்யதி” உனக்கு கெட்ட பேர் வராது. அதாவது ராவணனுடய அந்த நடத்தையை வச்சுண்டு அவர் மனைவிகள் வந்து அழுது, புலம்புவதை பார்த்தவுடன் இவனுக்கு விபீஷணனுக்கு சம்ஸ்காரம் பண்ணலாமா கூடாதான்னு ஒரு சந்தேகம். அதனால் ராமர் “நீ இவனுக்கு சம்ஸ்காரம் பண்ணு. உனக்கு புகழ் வரும்” என்று சொல்லும் ஒரு வரி இருக்கு. ஸ்வாமிகள் இந்த வரியை “த்வம் யஹோபாக் பவிஷ்யதி” என்ற இடத்தை படிக்கும் போது “என் அப்பா என்னோட வந்து கடைசி காலத்துலயாவது இருக்கணும். அப்டீன்னு அப்பாக்கு வயசான போது மனசுல வேண்டிண்டு இருக்கார்.
அவா அப்பா, திடீர்ன்னு ஒரு நாள் தந்தி கொடுத்து, ”கல்யாணம் உடனே புறப்பட்டு வரவும்” னு போட்டுருக்கார். அந்த அக்கா, அத்திம்பேர் ஏதோ ஒரு வார்த்தை சொல்லியிருக்கா. உடனே அவர் அப்பாக்கு ரொம்ப கோவம் வந்துடுத்து. “என்னை என்ன அனாதை னு நெனச்சியா? எனக்கு என் பிள்ளை இல்லையா? கல்யாணம் சத்தியம், தர்மம், பாவம், புண்ணியம் னு சொன்னா கட்டுப்படுவான். நான் அவன் கிட்ட போய் இருக்கேன்” னனு கிளம்பி வந்து விடுகிறார். ஸ்வாமிகள் மெதுவாய் அவரை தூக்கி வண்டில ஏற்றி ஸ்டேஷன் கொண்டு வந்து ஆத்துக்கு கொண்டு வந்து, திருவல்லிக்கேணி ஆத்துல இவரோட கொஞ்ச நாள் த்ருப்தியா இருந்து, அப்பறம் இங்கேயே காலமானார். ஸ்வாமிகள் அவருக்கு வேதம் முழுக்க அத்யயனம் பண்ணினவாளுக்கு பிரம்மமேத சம்ஸ்காரம் னு இருக்கு அந்த முறைப்படி சம்ஸ்காரம் பண்ணி த்ருப்தி அடைந்தார். நான் வேற விஷயத்துக்கு போயிட்டேன்.
ஸ்வாமிகளுக்கு கர்மா தியரில ரொம்ப நம்பிக்கை. அவர் ஜ்யோதிஷம் பார்க்கிறவாளை ”தெய்வக்ஞஹ” அப்டீன்னு சொல்லுவார். தெய்வம் அப்படீங்க்ற வார்தைக்கு சமஸ்கிருதத்துல fate என்று அர்த்தம். தெய்வக்ஞஹ ன்னா fate என்ன இருக்கப் போறது, தெய்வங்கள் அடுத்து என்ன விதி சமைச்சிருக்கா, அப்டீங்கறதை தெரிஞ்சவா என்று அர்த்தம். ஸ்வாமிகள் வாழ்கை ல அவருக்கு அந்தந்த நேரத்துல guide பண்றத்துக்கு சில தெய்வக்ஞர்கள் இருந்தார்கள். அவர்கள் பணத்துக்கு ஆசை படாம, அந்த சாஸ்த்ரத்துல ரொம்ப deep ஆக படிச்சு, அதை ஒரு profession மாதிரி வெச்சுக்காம commercialize பண்ணாம இருந்தவா. அவா கிட்ட இருந்து ஸ்வாமிகள் guidance எடுத்துண்டு இருக்கார். அதுலயும், நான் time management ல சொல்லிண்டிருந்த மாதிரி அவர் கேட்கறது உலக விஷயங்கள்ல இல்லை.
நாம ஜோசியர்கிட்ட போனா என்ன கேப்போம்? எப்ப promotion வரும், எவ்வளவு பணம் வரும்? இன்னும் மாடி வீடு கட்டுவோமா? இல்லை, ஏதோ கஷ்டமாயிருந்துன்னா இந்த கஷ்டம் எப்போ தீரும்? இந்த மாதிரி, எத்தை தின்னா பித்தம் தெளியும் கிற மாதிரி அவா கிட்ட போய் நின்னா, அவாளும் காசு பிடுங்கறத்துக்கு வழின்னு தெரிஞ்சுண்டுடறா.
ஸ்வாமிகள் எங்கிட்ட கூட அவர் ஜாதகத்தை கொடுத்து இந்த ஜோசியர் கிட்ட இதைப் போய் கேட்டுக் கொண்டு வான்னு சொல்லியிருக்கார். அதுல எல்லாம் அவருடைய கேள்வி என்னவா இருக்கும்னா – ஸன்யாஸ யோகம் இருக்கா? அது எப்போ ஸித்திக்கும்? ஸன்யாஸம் வாங்கிண்டதுக்கு அப்பறம், கிருஷ்ண தர்சனம் எப்ப கிடைக்கும்? அதுக்கு நான் என்ன பஜனம் பண்ணனும்? இந்த தசா புத்தி மாறும் போது, அவர் to do list ல இன்னும் ஒரு item ஏத்திப்பார். “ஓ! சுக்ர புத்தி ஆரம்பிக்கறது. சனிதசையிலே, அப்படீன்னா உடனே, அந்த ஜோஸ்யர் ஏதாவது லஷ்மி பரமா பன்ணுங்கோ அப்டீன்னு சொல்வார். உடனே இவர் கனகதாரா ஸ்தோத்திரத்தை list ல add பண்ணிப்பார். இப்படி அவருடைய ஜோசிய consultation ஏ வேற மாதிரி இருக்கும். அவர் மத்தவாளுக்கும் அந்த ஜோஸ்யத்தை வெச்சுண்டு, ஒரு guidance ஒரு ஆறுதல் சொல்றதுக்கு உபயோகப் படுத்தினது உண்டு. அவர் வாழ்ந்த வாழ்க்கையினால, அவருடைய ஸத்ய நிஷ்டையினால, அவர் வாயால சொன்னாலே அது ஸத்யமா பலிக்கும். அந்த ஜாதகத்துல என்ன இருக்கோ இல்லையோ, அவர் சொல்றது சத்யமாயிடும். அப்படி அவர் ஒரு ஆசீர்வாதம் பண்ணுவதற்கு அந்த ஜாதகத்தை உபயோகப் படுத்திப்பார்.
என் விஷயத்துல கூட நான் என் வேலையை விட்டுட்டு அவர் கூட உட்கார்ந்து இருந்த போது குருமூர்த்தி னு அவருடைய ச்நேஹிதர் ஒரு ஜோசியர். ஸ்வாமிகள் ஜோசியர், நாவிதர் அந்த மாதிரி யார் கிட்டயாவது ஏதாவதொரு obligation போக போறார்னா, ஒரு service னா முதல்ல பணத்தை, வெத்தல பாக்கு வெச்சு கொடுத்துட்டு அப்பறம் தான் அவாள் கிட்ட இருந்து ஒரு ஜோசியம் கேட்பார். இல்ல பாட்டு பாட சொல்வார், அந்த மாதிரி. அது மாதிரி இந்த குருமூர்த்தி மாமா கிட்ட பணம் வெச்சு கொடுத்து, என்னோட date, time எல்லாம் வாங்கி, என்னோட ஜாதகத்தை எழுதி அதை வெச்சுண்டு “நீ வந்து உலக வாழ்க்கையில அனுபவிக்க வேண்டியது பாக்கியிருக்கு. அதை முடிச்சுட்டு வரலாம். நீ போய் வேலைக்கு சேரு” அப்டீன்னு என்னை அவர் convince செய்தார்.
“சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை
உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்”
என்று ஒளவை பாட்டி அழகா சொல்லி இருக்கா. அதனால சிவாய நம என்று சிந்தித்து இருப்பவர்களுக்கு வேறு உபாயமே வேண்டாம். விதிவசமா வர இருக்கும் எல்லா கஷ்டமும் போய் விடும். இல்லைன்னா எதையும் தாங்கும் தெளிந்த மதி என்கிற ஞானம் வந்துடும். நாம ரொம்ப ஸாமர்த்தியமாக விதியை மதியால் வெல்லலாம் அப்டீன்னு நினைச்சுண்டு கார்யங்கள் பண்ணினா, உன்னுடய மதி என்ற அறிவிக்குள்ளேயே அந்த விதி வந்து உட்கார்ந்து கொண்டு, அது எங்க கூட்டிண்டு போகணுமோ அங்க கூட்டிண்டு போய்டும் அப்படீன்னு சொல்லறா ஔவைப் பாட்டி. இதைப் புரிந்து கொண்டு ஸ்வாமிகள் பகவத் பஜனம் பண்றத்துக்கு ஜோசியத்தை உபயோகப் படுத்தினார்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!
One reply on “த்வம் யஷோபாக் பவிஷ்யதி”
நீ என்னை இப்ப கொஞ்ச நாளாகத் தான் பார்க்கற. உனக்கே என் கஷ்டத்தை பார்த்து கருணை ஏற்படறது, பகவான் கருணாமூர்த்தி. என்னை ஜன்ம ஜன்மாவா பார்த்துண்டு இருக்கார். ” What a remarkable attitude ! Only a true jnani can say like this. This advice is meant for people like us to develop परिपूर्ण-अचञ्चल-श्रद्धाभक्ति ! Ram Ram 🙏🙏🙏🙏