Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 9, 10 தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 9 and 10)

சிவானந்தலஹரில ஒன்பதாவது ஸ்லோகமும் பத்தாவது ஸ்லோகமும் இன்னிக்கு பார்ப்போம். ஒன்பதாவது ஸ்லோகம்,

गभीरे कासारे विशति विजने घोरविपिने

विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः ।

समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते

सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥

க³பீ⁴ரே காஸாரே விஶதி விஜனே கோ⁴ரவிபினே

விஶாலே ஶைலே ச ப்⁴ரமதி குஸுமார்த²ம் ஜட³மதி: ।

ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜமுமானாத² ப⁴வதே

ஸுகே²னாவஸ்தா²தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ ॥

ன்னு ஒரு ஸ்லோகம் கபீரேன்னா – ஆழமானன்னு அர்த்தம், காஸாரஹன்னா மடு, ஆழமா இருக்குற மடுவுலயும், இப்படி பல இடங்களல்ல புஷ்பத்துக்காக, ஜடமதி – அறிவு குறைந்தவன், அங்க இங்க அலையறான், புஷ்பம் கொண்டு வந்து பகவானுக்கு போடணும்னு, விஜனே கோர விபினே, ஜனங்களே இல்லாத கோரமான காட்டுல போய் தேடறான், விஷாலே ஷைலே ச, பெரிய மலைல போய், சுத்தி சுத்தி ஏதாவது புஷ்பம் கிடைக்குமான்னு தேடிண்டு இருக்கான், ‘குஸுமார்த்தம் ஜடமதிஹி விஷதி ப்ரமதி’ – உள்ள போய் அந்த காட்டுக்குள்ள போய் சுத்தி அலைஞ்சு, ஒரு புஷ்பம் கிடைக்குமான்னு தேடிண்டு இருக்கான், கொண்டுவந்து பகவானுக்கு சமர்பிக்கணும்-னு நினைக்கிறான். ஆதி ஆசார்யாள் சொல்றார் “ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜம்” மனமாகிய தாமரையை, ‘ஏகம்’ நம்ம கிட்ட இருக்கறது ஒரு மனசு, அந்த மனஸை ‘உமா நாத’ பார்வதி பதியான பகவானிடம் ‘பவதே சுகேன சமர்ப்ய’ உன்னிடத்தில் சந்தோஷமா அந்த மனஸை அர்ப்பணம் பண்ணிட்டு, ‘ஸுகே²னாவஸ்தா²தும்’ சுகமா எங்கும் அலையாம ஒரு இடத்துல இருக்கறதுக்கு, இந்த மனுஷனுக்கு தெரியமாட்டேங்கறதே அப்படீன்னு சொல்றார். ‘ஆஹோ’ – ஆஸ்ச்சர்யம்’ அப்படீன்னு சொல்றார்.

இந்த மாதிரி சுலபமான உபாயம், இந்த பக்திங்கறது, மனஸ பகவான் கிட்ட அர்பணிக்கறதுதான் இருக்கறதுலேயே சுலபமான உபாயம், மத்ததெல்லாம், ரொம்ப கஷ்டமான உபாயம். ஆனா அது பண்ணாம அங்க இங்க அலையறது தான் ஜனங்களுக்கு பிடிச்சியிருக்கு, அப்படீன்னு சொல்றார் இந்த ஸ்லோகத்துல.

‘அந்தர்முகத் து ஸமாராத்யா பஹிர்முக ஸுதுர்லபா’ ன்னு மாதிரி லலிதா சஹஸ்ர நாமத்துல சொல்ற மாதிரி, மனசுக்குள்ள நம்மால பகவானை நிறுத்திட முடியுமானால், அதற்குமேலான ஒரு வழிபாடு இல்லை, ஆனா என்னன்னா இந்த மனஸை பகவான் கிட்ட அர்ப்பணம் பண்ணிட்டு சுகமா இருங்களேன்னு மஹான்கள் சொல்றா, எப்பேர்ப்பட்ட மனஸு இருந்தா அந்த மாதிரி பகவான் கிட்ட நிலைச்சு இருக்க முடியும், எந்த மனஸை பகவான் தன்னுடைய சரணாரவிந்தத்துல வெச்சுகிறான் அப்படிங்கறதுக்கு மூகபஞ்சசதில ஒரு ஸ்லோகம் இருக்கு,

रजःसंसर्गेऽपि स्थितमरजसामेव हृदये
परं रक्तत्वेन स्थितमपि विरक्तैकशरणम् ।
अलभ्यं मन्दानां दधदपि सदा मन्दगतितां
विधत्ते कामाक्ष्याः चरणयुगमाश्चर्यलहरीम् ॥

ரஜ:ஸம்ஸர்கே³ऽபி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருʼத³யே
பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகஶரணம் ।
அலப்⁴யம் மந்தா³நாம் த³த⁴த³பி ஸதா³ மந்த³க³திதாம்
வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³மாஶ்சர்யலஹரீம் ॥

இதுக்கு என்ன அர்த்தம்னா, அவர் கவித்துமா சொல்றார், அதாவது அம்பாளுடைய சரணத்துல, சுமங்கலிகளுக்கு இந்த சிவப்பா வர்ண பூச்சுயெல்லாம் பண்ணுவா இல்லையா, அந்த பொடி இருக்கே, கால்ல சிவப்பு பொடி, ரஜஸ் ஸம்ஸர்க: அந்த ரஜஸ்ங்கறது பொடின்னு அர்த்தம். அந்த பொடியெல்லாம் இருந்தா கூட, ‘அரஜஸாமேவ ஹ்ருதயே’ அம்பாளுடைய சரணம், ‘காமாக்ஷ்யாஹா சரணம்’ ரஜஸ் இல்லாதவாளுடைய, சத்வம் நிரம்பி, ரஜஸ், தமஸ் எல்லாம் இல்லாதவாளுடைய ஹ்ருதயத்துல தான் இந்த காமாக்ஷியோட சரணம் இருக்கு, ‘பரம் ரக்தவேன ஸ்த்திதமபி விரக்தைக சரணம்’ அம்பாளுடைய சரணம் செக்கசெவேல்ன்னு இருக்கு, ஆனா விரக்தர்களா, வைராக்கியம் வந்தவர்களுடைய, மனசுலதான் ‘ஸ்திதமபி காமாக்ஷியாஹா சரணம்’ அவாதான் இந்த சரணத்தையே நம்பி இருக்கா, வைராக்கியம் வந்தவாதான், ‘அஸப்யம் மந்தாநாம் அபி’ மந்த புத்தி இருக்கறவா, அதாவது உலக விஷயங்களேயே ரொம்ப ஈடுபட்டு, காமத்துலேயும், போகங்களேயும் ஈடுபட்டு இருந்தா மனசு மந்தம் ஆயிடும். அந்த மாதிரி மனசு, புத்தி எல்லாம் மந்தமாக இருக்கறவாளுக்கு ‘அலப்யம்’ அம்பாளோட சரணம் கிடைக்காது. ‘ஸதா மந்த கதிதாம்’ ஆனா அம்பாளுடைய நடை ரொம்ப மந்தமா இருக்கு, மெதுவா நடந்தாலும் அந்த சரணம், மந்தர்களுக்கு கிடைக்காததா இருக்கு, அப்படீன்னு வேடிக்கையா சொல்றா மாதிரி சொல்றார். ‘விதத்தே காமாக்ஷியாஹா சரணம் அதிக ஆஸ்ச்சர்ய கரணம்’ இப்படி ஆஸ்ச்சர்யத்தை அளிக்கிறது, அப்படீன்னு சொல்றார். இதுல என்னென்னா ‘ரஜஸ்’ ரஜஸ்ங்கறது ஓயாத, ஓடிண்டே அலைஞ்சுண்டே இருக்கறது, காரிய உலகத்துலேயே இருக்கறது ‘ரஜஸ்’, அதுலேர்ந்து திரும்பணும், திரும்பறதுக்கு வைராக்கியம் வரணும். உலகவிஷயங்கள்ல, பணத்துலே பற்று, மனுஷாள் கிட்ட ரொம்ப பாசம் ஜாஸ்தியா இருந்தா, அப்போ அலைஞ்சிண்டே இருப்போம். அதுலேர்ந்து வைராக்கியமும், அதே நேரத்துல பகவானோட விஷயத்துல ரொம்ப மனசு, புத்தியெல்லாம் சுறுசுறுப்பா இருக்கனும், அதுல மந்தமா இருக்க கூடாது, அப்படி இருந்தாதான் அம்பாளுடைய சரணம் கிடைக்கும், அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

அந்த மாதிரி அந்த மனத்தாமரையை தூய்மைப் படுத்தி அதை பரமேஸ்வரனுடைய சரணத்துல அர்ப்பணம் பண்ணிட்டா, அப்பறம் வேற எந்த ஒரு பூவையும் தேடி எடுத்துண்டு வந்து பூஜையே பண்ண வேண்டாம் அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி மஹான்கள் இருந்த இடத்துலே தானே இருந்தா. ரொம்ப அலையாம ஒரு இடத்துல இருக்கறது ஒரு முக்கியமான தபஸ், ஆரம்பத்துல க்ஷேத்ராடனங்கள் எல்லாம் பண்றோம், ஆனா மனசு அடங்கி ஒரு இடத்துல பகவானை தியானம் பண்றதுங்கறது உயர்ந்த பக்தி அப்படீங்கறதும் இந்த ஸ்லோகத்துல தெரியறது, அப்படிப்பட்ட பக்தி நமக்கு வேணும்ங்கறதுக்கும் பிராத்தனைதான் பண்ணனும், அப்படிப்பட்ட மனசு நமக்கு வேணும், மனசு உயரணும்ங்கற பிராத்தனை பண்றதுக்கு ராமர் பரமா அழகான ஒரு ஸ்லோகம் இருக்கு, ஸ்வாமிகள் எனக்கு சொல்லி கொடுத்து இருகார், அதை இன்னிக்கி பகிர்ந்துக்கறேன்.

त्वं अक्षरोऽसि भगवन् व्यक्ताऽव्यक्त स्वरूपधृत् |

यथा त्वं रावणं हत्वा यज्ञविघ्नकरं खलम् ||

लोकान् रक्षितवान् राम तथा मन्मानसाश्रयम् |

रजस्तमश्च निर्हृत्य त्वत्पूजालस्य कारकम् ||

सत्वं उद्रेकय विभो त्वत्पूजादर सिद्धये |

विभूतिं वर्धय गृहे पुत्रपौत्राऽभिवृद्धिकम् ||

कल्याणं कुरु मे नित्यं कैवल्यं दिश चान्तत: |

विधितोsविधितो वापि या पूजा क्रियते मया ||

तां त्वं संतुष्टहृदय : यथावद्विहितामिव |

स्वीकृत्य परमेशान मात्रा मे सह सीतया ||

लक्ष्मणादिभिरप्यत्र प्रसादं कुरु मे सदा |

த்வம்ʼ அக்ஷரோ(அ)ஸி ப⁴க³வன் வ்யக்தா(அ)வ்யக்த ஸ்வரூபத்⁴ருʼத் |

யதா² த்வம்ʼ ராவணம்ʼ ஹத்வா யஜ்ஞவிக்⁴னகரம்ʼ க²லம் ||

லோகான் ரக்ஷிதவான் ராம ததா² மன்மானஸாஶ்ரயம் |

ரஜஸ்தமஶ்ச நிர்ஹ்ருʼத்ய த்வத்பூஜாலஸ்ய காரகம் ||

ஸத்வம்ʼ உத்³ரேகய விபோ⁴ த்வத்பூஜாத³ர ஸித்³த⁴யே |

விபூ⁴திம்ʼ வர்த⁴ய க்³ருʼஹே புத்ரபௌத்ரா(அ)பி⁴வ்ருʼத்³தி⁴கம் ||

கல்யாணம்ʼ குரு மே நித்யம்ʼ கைவல்யம்ʼ தி³ஶ சாந்தத: |

விதி⁴தோsவிதி⁴தோ வாபி யா பூஜா க்ரியதே மயா ||

தாம்ʼ த்வம்ʼ ஸந்துஷ்டஹ்ருʼத³ய : யதா²வத்³விஹிதாமிவ |

ஸ்வீக்ருʼத்ய பரமேஶான மாத்ரா மே ஸஹ ஸீதயா ||

லக்ஷ்மணாதி³பி⁴ரப்யத்ர ப்ரஸாத³ம்ʼ குரு மே ஸதா³ |

ன்னு ஒரு அழகான ஸ்லோகம், இதுல ராவணாதி ராக்ஷசர்களை எப்படி நீ வதம் பண்ணியோ, அந்த மாதிரி என் மனசுல இருக்கிற ரஜஸ், தமஸ் எல்லாம் போக்கி, உன் பூஜை பண்றதுக்கு சத்வ குணத்தை எனக்கு வ்ருத்தி பண்ணி, அப்பறம் அதன் மூலம் மங்களங்களை சேர்த்து வெச்சு, ‘கைவல்யம் திஷ சாந்ததஹ’ முடிவுல எனக்கு மோக்ஷத்தை கொடு, அப்படீன்னு ஒரு அழகான பிரார்த்தனை. (த்வம் அக்ஷரோ(அ)ஸி ப⁴க³வன் வ்யக்தா(அ)வ்யக்த ஸ்வரூபத்⁴ருʼத் |
‘த்வம் அக்ஷரோ(அ)ஸி ப⁴க³வன்’- ஹே ராமா ! நீயே அழிவற்ற பரம்பொருள். ‘வ்யக்தா(அ)வ்யக்த ஸ்வரூபத்⁴ருʼத்’ – ‘வ்யக்தம்’னா வெளிப்படை. வெளிப்படையாக காணப்பட்ட தசரத குமாரனாக அவதரித்து, வடிவழகனாக வலம் வந்த அந்த உருவமும் நீயே. ‘அவ்யக்தம்’னா நிர்குணமான சச்சிதானந்த பரம்பொருள். இப்படி யோகிகள் அனுபவிக்கும் அந்த ஸ்வரூபமும் நீயே.

யதா² த்வம் ராவணம் ஹத்வா யஜ்ஞவிக்⁴னகரம் க²லம் ||
‘யஜ்ஞவிக்⁴னகரம்ʼ -யக்ஞங்களுக்கு விக்னம் செய்த ‘க²லம்’ – துஷ்டனான
‘யதா² த்வம் ராவணம் ஹத்வா’ – ராவணனை எவ்வாறு நீ கொன்று,

லோகான் ரக்ஷிதவான் ராம ததா² மன்மானஸாஶ்ரயம் |
‘லோகான் ரக்ஷிதவான்’ – உலகங்களை எல்லாம் ரக்ஷித்து காப்பாற்றினாயோ, ‘ராம’ – ஹே ராமா! ‘ததா²’ – அவ்வாறே ‘மன்மானஸாஶ்ரயம்’ – என் மனத்தை பற்றியுள்ள,

ரஜஸ்தமஶ்ச நிர்ஹ்ருʼத்ய த்வத்பூஜாலஸ்ய காரகம் ||
‘த்வத்பூஜாலஸ்ய காரகம்’ -உன் பூஜையில் ஆசை இல்லாமல் சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும், ‘ரஜஸ்தமஸ்ச’ – என் மனதில் உள்ள ரஜோ தமோ குணங்களை ‘நிர்ஹ்ருʼத்ய’ – முழுமையாக அகற்றி,

ஸத்வம் உத்³ரேகய விபோ⁴ த்வத்பூஜாத³ர ஸித்³த⁴யே |
‘த்வத்பூஜாத³ர ஸித்³த⁴யே’ – உன்னுடைய பூஜைக்கு ஆதரவு ஏற்படும்படியாக. மனத்தில் ப்ரியத்தோடு உன்னுடைய பூஜை பண்ணுவதற்கு, ‘ஸத்வம் உத்³ரேகய விபோ⁴’ – ஹே விபோ! ஸத்வ குணத்தை நீ என் மனத்தில் ஏற்படுத்த வேண்டும்.

விபூ⁴திம் வர்த⁴ய க்³ருʼஹே புத்ரபௌத்ரா(அ)பி⁴வ்ருʼத்³தி⁴கம் ||
‘விபூ⁴திம் வர்த⁴ய க்³ருʼஹே’ – ‘விபூதி’னா செல்வம் மட்டும் இல்லை.. பதினாறும் பெற்று என்று ஆசிர்வாதம் பண்ணுவார்களே அப்படி, தன தான்யம் மற்றும் எல்லாவிதமான செல்வங்களையும் என் வீட்டில் வளர்க்க வேண்டும். ‘புத்ரபௌத்ரா(அ)பி⁴வ்ருʼத்³தி⁴கம்’ – பிள்ளைகள் பேரன்கள் என்று சந்ததிகளை ‘வ்ருத்திகம்’ – வளர்க்க வேண்டும். அவற்றை அருள வேண்டும்.

கல்யாணம் குரு மே நித்யம் கைவல்யம் தி³ஶ சாந்தத: |
‘கல்யாணம் குருமே நித்யம்ʼ – எனக்கு எப்போதும் நித்ய மங்களம் இருக்கும்படியாக அனுக்கிரகம் பண்ண வேண்டும். ‘கைவல்யம்ʼ தி³ஶ சாந்தத:’ – முடிவில் ஞானத்தையும் முக்தியையும் அளிக்க வேண்டும்.

விதி⁴தோsவிதி⁴தோ வாபி யா பூஜா க்ரியதே மயா ||
‘விதி⁴தோ விதி⁴தோ வாபி’ – ‘விதி⁴த: அவிதி⁴தோ வாபி’ -விதிப்படியோ விதிகள் தெரியாமலோ ‘ யா பூஜா க்ரியதே மயா’ – நான் என்ன உனக்கு பூஜை பண்றேனோ,

தாம் த்வம் ஸந்துஷ்டஹ்ருʼத³ய : யதா²வத்³விஹிதாமிவ |
‘யதா²வத்³விஹிதாமிவ’ – எப்படி பண்ணனுமோ அந்த மாதிரி,
அந்த என் பூஜையை ‘தாம் த்வம் ஸந்துஷ்டஹ்ருʼத³ய :’ – நீ என் பூஜையை திருப்தியோடு ஏற்றுக்கொண்டு,

ஸ்வீக்ருʼத்ய பரமேஶான மாத்ரா மே ஸஹ ஸீதயா ||
லக்ஷ்மணாதி³பி⁴ரப்யத்ர ப்ரஸாத³ம் குரு மே ஸதா³ |
‘ஸ்வீக்ருʼத்ய’ – ஏற்றுக்கொண்டு, ‘மாத்ரா மே ஸஹ ஸீதயா’ – என்னுடைய அம்மாவான சீதையோடும்,
‘லக்ஷ்மணதி³பி⁴:’ – லக்ஷ்மணன் முதலிய தம்பிகளோடும், ‘பரமேஶான’ – மஹாதேவனே! ஈசனே! ‘அத்ர’ – அவர்களோடு சேர்ந்து, ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியாக ‘ப்ரஸாத³ம்ʼ குரு மே ஸதா³’ – எனக்கு எப்பொழுதும் அருள வேண்டும். தயவு செய்ய வேண்டும் என்று அழகான ஸ்லோகம்.

இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டினா நம்முடைய ஸத்வ குணங்கள் வளரும். ரஜோ தமோ குணங்கள் குறையும்.

ஸ்வாமிகள் எனக்கு ராமாயண பாராயணம் பண்ணும் போது எப்பயாவது தடங்கல் வரும்போதோ, இல்ல ராமர் பக்தி சம்பந்தமான காரியங்களுக்கு ஏதாவது இடைஞ்சல்கள் வரும்போதோ இதை பாராயணம் பண்ண சொல்லி இருக்கிறார்.)

இந்த ஸ்லோகம் பார்தோம் அடுத்த ஸ்லோகத்துல,

नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता

पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् ।

सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी-

विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥

நரத்வம் தே³வத்வம் நக³வனம்ருʼக³த்வம் மஶகதா

பஶுத்வம் கீடத்வம் ப⁴வது விஹக³த்வாதி³ ஜனனம் ।

ஸதா³ த்வத்பாதா³ப்³ஜஸ்மரணபரமானந்த³லஹரீ-

விஹாராஸக்தம் சேத்³த்⁴ருʼத³யமிஹ கிம் தேன வபுஷா ॥

நரத்வம்-னா மனிதपபிறவி, தேவத்வம் – தெய்வப்பிறவி, நக வன ம்ருகத்வம் – மலையிலயோ, காடுகளிலேயோ மிருகமா பிறக்கறது, மஷகத்வம் – அப்படீன்னா, கொசுவா பிறக்கிறது, பசுத்துவம்னா பசுவா பிறக்கறது, கீடத்வம்னா – புழுவா பிறக்கறது, விஹகத்வாதி ஜனனம் – பறவை முதலிய பிறவிகள், இப்படி எந்த பிறவியா இருந்தாலும் இருக்கட்டும், எப்பொழுதும், ஸதா, த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமானந்த லஹரி, – உன்னுடைய பாதத் தாமரைகளை த்யானம் பண்றது, அப்படிங்கற அந்த ஆனந்த பெருக்கு, என் மனசுல இருந்துடுத்துன்னா, ‘விஹார ஹ்ருதயம்’ அந்த ஆனந்த பெருக்கில் நீந்தறது, விளையாடறது, அப்படிப்பட்ட மனசு எனக்கு கிடைச்சுடுத்துன்னா , அதுல ‘ஆஸக்தம் சேத்’ அதுல என் மனசு ஈடுபட்டு இருந்துதானால் இஹ இந்த உலகத்தில், ‘வபுஷா’ உடம்பைப் பத்தி என்ன, இது ஒசத்தியான உடம்பு இது தாழ்த்தியான உடம்புன்னு என்ன இருக்கு அப்படீன்னு சொல்றார். அந்தமாதிரி

‘புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி

என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்

இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய்

பாதிரிப் புலியூர் செழுங்கழுநீர் புனர் கங்கை

செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே’

அப்படீன்னு ஒரு திருநாவுக்கரசர் தேவாரம் இருக்கு, இப்படி புழுவா பிறந்தா என்ன, ‘உன் அடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ உன்னுடைய பாத தாமரையை நான் மறக்காமல் இருந்தா போறும், கஜேந்திரனோட கதை படிச்சியிருக்கோம், ஜடாபாரதர் கதை படிச்சியிருக்கோம், மான் பிறவி அடைந்தாலும், முந்தின பிறவியில ராஜ ரிஷியா இருந்து, கடைசி காலத்துல தபஸ் பண்ணிண்டு இருக்கார். பகவானை அடையறதுக்கு நெருங்கும் போது, ஒரு மான்குட்டியை பார்த்த உடனே, பெண் மான் ஒரு குட்டியை ஈன்றெடுத்து தண்ணியோட போயிடறது, இந்த மானை வளர்த்ததுனால அதன் மேல ஒரு பற்று ஏற்பட்டு அடுத்து அவருக்கு மான் ஜென்மம் ஏற்படறது. அப்போ அந்த மான் ஜென்மத்துல பகவானையே த்யானம் பண்ணிண்டு இருக்கார். ஏன்னா அவருக்கு முன்பிறவி ஞாபகம் இருக்கு, நம்ம இந்த ஜென்மமாவது கோட்டை விட்டுடக்கூடாதுன்னு மான் ஜென்மத்துல பகவானையே த்யானம் பண்ணிண்டு, அடுத்த ஜென்மத்துல ஜட பாரதரா பிறந்தது பகவானை அடையறார். அப்படி எந்த ஜென்மம் எடுத்தாலும், பகவானை நம்ம நினைக்கணும், அப்படி நம்ம பகவானையே நினைச்சிண்டு இருந்தா

‘எங்கேனும் யாதாகி பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்’

அப்படீன்னு சம்பந்தர் பாடறார், அந்த மாதிரி பகவானும் எந்த பிறவியா இருந்தாலும், அருள் புரிவான், சில சமயம் நமக்கு வந்து நம்ம உடம்ப பத்தி இழுக்கான ஒரு எண்ணம் இருக்கும், பெண்ணா இருந்தா இந்த பெண் ஜென்மத்துல பல கஷ்டங்கள்-னு தோணும், வேற ஒரு பிறவியா இருந்தா இது குறைவான பிறவி நமக்குன்னு தோணும் , எல்லா பிறவிகளிலும் உடம்புங்கறது மஜ்ஜை, மலம், மூத்ராதிகளும் ரொம்ப அதுக்கு மேல ஒரு வெறுப்பு வர்றது, ஆனால் இந்த உடம்ப வந்து, வெறுக்காமல் அதுக்கு வேண்டிய அளவுக்கு அதை பாத்துக்கணும், ஏன்னா

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

ன்னு திருமூலர் திருமந்திரத்தில் சொல்றார், இந்த உடம்பு இழுக்குன்னு நினைச்சேன் ஆனா இதுக்குள்ள பகவான் கோவில் கொண்டு இருக்கார், ஆதனால இது ஒரு கோவில், இதை தூய்மையா வெச்சிண்டு, இதுக்கு வேண்டிய சாப்பாடை கொடுத்து, வியாதி வராம பார்த்துண்டு, அப்பறம் பகவானை தர்சனம் பண்ணிட்டோம்னா அப்பறம் இந்த உடம்பு வேண்டியது இல்லை. எந்த உடம்புல இருந்தாலும் பகவானை தர்சனம் பண்ணலாம் அப்படீங்கறது இந்த ஸ்லோகத்தோட தாத்பர்யம்.

அடுத்த ஸ்லோகம் ‘வடுர் வா கேஹிவா’ அதை நாளைக்கு பார்ப்போம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை”

We were waiting for the nxt slokas.very happy that we got it today.when you compare these with Moka pancha saathi slokas your work is so complete.Today with Ramayana sloka and quotes from Sambhandam and Thiru moolar along with explanation,shows yr dedication.please continue your work.Thank you so much for yr page “Valmikiramayanam.in “.All topics are precious in this.Thank u.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.