Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 11, 12 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 11 and 12)

இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகமும் 12ஆவது ஸ்லோகமும் பார்ப்போம்

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ

நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।

யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே

ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம். வடுன்னா பிரம்மசாரின்னு அர்த்தம். கேஹின்னா க்ஹஸ்தன்னு அர்த்தம். யதின்னா ஸந்யாசின்னு அர்த்தம். ஜடின்னா ஜடை போட்டுண்ட வானப்ரஸ்தன். ததிரஹா –  இந்த நான்கு ஆஸ்ரமத்துல இருக்கிறவாளோ, அல்லது இதுக்கும் வெளியில அதி வர்ணாஸ்ரமியா இருக்கிறவாளோ, நரோ வா ய: கஸ்சித்³ ப⁴வது – ஒரு மனிதன் எந்த ஆஸ்ரமத்தில் வேணும்னாலும் இருக்கட்டும் கிம் தேன ப⁴வதி – அதனால என்ன ஆகப் போறது? ‘பவ’ – பரமேஸ்வரா ‘பசுபதே’ – எல்லா ஜீவர்களுக்கும் தலைவனே ‘யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம்’ – ஒருவனுடைய மனத் தாமரையானது உன் வசத்தில் இருந்து விட்டால், உன்னை நம்பி ஒருவன் இருந்து விட்டானானால், ஹே சம்போ! பரம மங்களங்களை அளிப்பவனே. ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி – நீயே அவனைச் சேர்ந்தவன் ஆயிடற. உன்னையே அவனுக்கு கொடுத்துடற. ப⁴வபா⁴ரம் ச வஹஸி – அவனுடைய பவ பாரத்தை நீ தாங்கி கொள்கிறாய் னு சொல்றார்.

முந்தின ஸ்லோகங்கள்ல நரத்வம்,தேவத்வம் – மனுஷனா இருந்தா என்ன?தெய்வமா இருந்தா என்ன? ஸ்த்ரீயா இருந்தா என்ன? புமானா இருந்தா என்ன? அலியா இருந்தா என்ன? கொசுவா இருந்தா என்ன? என்ன ஜன்மாவா இருந்தா என்ன? திருவானைக்காவல்ல ஒரு சிலந்தியும்,யானையும் நல்ல கதி அடையலையா? அது மாதிரி பக்தி இருந்தா போறும். பகவான் காப்பாத்துவார்ங்கிற ஸ்லோகம் சொன்னார். இங்கே, கிடைச்ச பிறவியில பலவிதமான ஆஸ்ரமங்கள் இருக்கு. அது ஒண்ணு ஒண்ணுத்துலேயும் ஒவ்வொரு விதமான பொறுப்புகள் இருக்கு. முக்யமா கிரஹஸ்தாஸ்ரமத்துல மத்த மூணு ஆஸ்ரமத்துகாராளையும் காப்பாத்தணும். பிரம்மச்சாரியையும் வானப்ரஸ்தனையும், ஸந்யாசிகளையும் காப்பாத்தணும்கிற ஒரு பொறுப்பு இருக்கு. அதுனால அதிகமா பொறுப்பு இருக்கிற ஒரு stage அது. ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவா அவாளோட அனுஷ்டானங்கள் இருக்கும். பிரம்மச்சாரிக்கு அவ்ளோ அனுஷ்டானம் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு தபஸ்வி மாதிரி இருந்துண்டு அவனும் ஒரு படிப்பை கவனிக்கணும். குரு சிஸ்ருஷை பண்ணனும். பிக்ஷாசரணம் பண்ணனும். அப்படி ஒவ்வொருத்தருக்கும் அவருடைய கடமைகள் இருக்கு. அதை எப்படி பண்ணுவோம்ங்கிற அந்த பாரம், கிரஹஸ்தாஸ்ரமத்துல இருக்கும் போது கூட, நாம எப்படி இதையெல்லாம் தாங்கப் போறோம் என்கிற கவலை பகவத் பக்தனுக்கு கிடையாதுன்னு சொல்றார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை ரொம்ப அழகா சொல்வார். ஒரு பாயை நன்னா விரிச்சு காத்து வரும்படியா வெச்சுட்டான்னா படகோட்டி அதற்கப்புறம் relax பண்ணலாம். ஏன்னா காத்தே அந்த படகை தள்ளிண்டு போயிடும். அந்த மாதிரி பகவானுடைய அனுக்ரஹத்தை பெறும்படியா நம்முடைய வாழ்க்கையை அமைச்சுண்டோம்னா இறைவனுடைய கருணை என்கிற காத்தே பக்தனோட வாழ்க்கையை செலுத்திக் கொண்டு போகும்னு ராமகிருஷ்ணர் சொல்றார். அதுமாதிரி பகவான்தான் எல்லாத்தையும் நடத்தறார்ங்கிற அந்த உணர்ச்சி உறுதிப்படறதுதான் பக்தின்னு பேரு. அவன் அங்க இருந்து ஆட்டுவிக்கறான்ங்கிற அந்த ஞானம் தான் பக்தி. அது ஏற்பட்ட பின்ன அவா ஒவ்வொண்ணுத்துக்கும் ரொம்ப கவலைப் பட மாட்டா. பொறுப்பெடுத்து காரியங்களை எல்லாம் பண்ணுவா. ஆனா அதை பத்தின பாரத்தை சுமந்துண்டு அவா கவலைப் பட மாட்டா. ஏன்னா, அவாளோட அந்த பாரத்தை பகவானே சுமக்கறார்னு இந்த ஸ்லோகத்துல அழகா சொல்றார். எந்த ஆஸ்ரமமா இருந்தாலும், எந்த ஜன்மமா இருந்தாலும் பக்தி இருந்தா போறும்னு அந்த பக்தியை உண்டாகுவதற்கான காரியங்கள் பண்ணனும்னு சொல்றார்.

நாரத பக்தி சூத்திரத்துலக் கூட नास्ति तेषु जातिविद्यारूपकुलधनकियादिभेदः நாஸ்தி தேஷு ஜாதிவித்யாரூபகுலதானக்ரியாதிபேத: ஒருவனுக்கு பக்தி இருந்தால் பிறப்பாலும், கல்வியாலும், குலத்தாலும், அழகாலும், பொருளாலும், தொழிலாலும், ஏற்படும் வேற்றுமைகள் இல்லைன்னு நாரதபக்தி சூத்திரத்துல சொன்னதை இந்த ஸ்லோகங்கள்ல ஆச்சார்யாள் சொல்றார்.

அடுத்த ஸ்லோகமும் எந்த இடத்தில் இருந்தாலும் உடம்பு எங்க இருந்தாலும் சரி. அதை பத்தி பொருட்படுத்த வேண்டாம்னு சொல்றார்

गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे

जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् ।

सदा यस्यैवान्तःकरणमपि शंभो तव पदे

स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥

கு³ஹாயாம் கே³ஹே வா ப³ஹிரபி வனே வாऽத்³ரிசிக²ரே

ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம் ।

ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி சம்போ⁴ தவ பதே³

ஸ்தி²தம் சேத்³யோகோ³ऽஸௌ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ² ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம். குஹாயாம் – குஹையில் வசிப்பதுனாலையோ கேஹே வா – வீட்டுல வசிப்பதுனாலையோ ப³ஹிரபி  – வெளியில ஸஞ்சாரம் பண்ணிண்டு இருந்தாலும் வனே வா – காட்டுல இருந்தாலும் அத்³ரிசிக²ரே – ஒரு மலை உச்சியில போயி தங்கினாலும் சரி ‘ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம்’ – ஜல மத்தியிலோ அக்னி மத்தியிலோ இருந்தாலும் என்ன? இருப்பிடத்தைக் கொண்டு என்ன இருக்கு? அதுனால என்ன பலன்? ஒருத்தன் கிரஹத்துல இருக்கக் கூடாது. எங்கயோ மலை உச்சியில போயி உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்க வேண்டியது இல்லைன்னு சொல்றார் ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி சம்போ⁴ தவ பதே³

– எவனுடைய அந்தக்கரணமானது ஒரு க்ஷணம் கூட உன்னுடைய பாதாரவிந்ததுல இருந்து விலகாம அங்கேயே இருக்கோ, மனசு பகவான் கிட்ட இருந்துதுன்னா, உடம்பு எங்க இருந்தா ஏன்னா? எவனுடைய மனது இடையறாது பகவானது பாதாரவிந்தத்துல இருக்கோ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ²  – அவனே பரம யோகி. அவன்தான் சிறந்த யோகி. அவன்தான் ஸந்தோஷத்துல இருக்கான்னு சொல்றார்.

மூகபஞ்ச ஸதி பாதாரவிந்த சதகத்துல 48 ஆவது ஸ்லோகம் இருக்கு

नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥

நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்

க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।

உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ

மனோஜ்ஞே காமாக்ஷ்யா: சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥

அம்பாளுடைய நகத்தினுடைய முனையில இருந்து வெளிப்படும் அந்த காந்தி, வெள்ளை வெளேர்னு இருக்கு. அது விமலமா இருக்கு. சுத்தமான க³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்

க்ருʼதஸ்னானம் – கங்கை ஜலம் போல இருக்கு. அந்த அம்பாளோட சரணத்தோட நகக்காந்தி கங்கை ஜலம், கங்கை கரையில ஒரு இரத்தின மாளிகை கட்டிண்டு ஒருத்தன் வசிச்சான்னா என்ன ஸுகமா இருக்கும்? மூக கவி சொல்றார். வீடுன்னா ஜலம் சௌரியமா இருக்கணும். ஸ்தலம் சௌரியமா இருக்கணும். கங்கை கரைக்கு மேல என்ன? நல்ல ஸ்தலம். என்ன ஜலம்? கிடைக்கும்னா ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் – விமலமான, பரிசுத்தமான அம்பாளுடைய நகக்காந்தி என்கிற கங்கா ஜலதுல குளிச்சுண்டு, என்ன குடிக்கப் போறேன்னா? ஞானம்ருதம். அம்பாளோட சரணத்துலேருந்து எப்பவும் ஞானம் பெருகிண்டு இருக்கு. அந்த ஜலத்தை குடிச்சுண்டு, அம்பாளோட சரணத்துல சலங்கை இருக்கு. அந்த சலங்கை கிணி, கிணின்னு ஸப்தம் பண்றது. அது ஒளிமயமா ரத்னவிளக்கு மாதிரி இருக்கு. அந்த மணி தீபத்தை ஏற்றி வெச்சுண்டு மனோக்ஞே-ரொம்ப அழகான காமாக்ஷ : சரணமணிஹர்ம்யே விஹரதாம்.காமாக்ஷியினுடைய சரணம் என்கிற இரத்தின மாளிகையில் மாமா மன: விஹரதாம் – அங்கே என் மனம் வசிக்கட்டும்னு மூக கவி பிரார்த்தனை பண்றார். அந்த மாதிரி நம்முடைய மனசு அம்பாளுடைய சரணத்துல இருக்கணும். உடம்பு எங்க இருந்தா என்ன? இங்க போய் இருந்தா நான் ரொம்ப happyயா இருப்பேன்னு நினைக்க வேண்டாம். இங்க போய் இருந்தா இந்த காலத்துல peace of mind ங்கிறா. அந்த peace of mindஐ தேடிப் போக வேண்டாம். எங்கேயும் அது உனக்கு கிடைக்கும். பக்தி பண்ணத் தெரிஞ்சா போறும். பகவான் கிட்ட மனசு வைக்கத் தெரிஞ்சா அவன் பரமயோகி – பெரிய யோகிங்கிறார்.

மூக பஞ்ச ஸதி ஸ்துதி சதகம் கடைசி ஸ்லோகத்துல

इमं परवरप्रदं प्रकृतिपेशलं पावनं
परापरचिदाकृतिप्रकटनप्रदीपायितम् ।
स्तवं पठति नित्यदा मनसि भावयन्नम्बिकां
जपैरलमलं मखैरधिकदेहसंशोषणैः ॥

இமம் பரவரப்ரத³ம் ப்ரக்ருʼதிபேசலம் பாவனம்

பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம் ।

ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பா⁴வயன் அம்பி³காம்

ஜபைரலம் அலம் மகை²ரதி⁴கதே³ஹஸம்ஷோஷணை: ॥

ன்னு ஒரு ஸ்லோகம். இந்த காமாக்ஷி தேவியின் மேல் உள்ள ஸ்துதி சதகத்தின் நூறு ஸ்லோகங்கள் ரொம்ப தூய்மையானவை, பாவனம் – தூய்மைபடுத்தக் கூடியவை பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம் – எது உண்மை?எது மாயை? என்பதை தெளிவிக்கக் கூடிய ஒரு தீபம் போன்ற ஒரு ஸ்தோத்ரம். இந்த ஸ்தோத்ரத்தை படிச்சா எது ஸத்?எது அஸத்? னு தெரிஞ்சுடும் ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பா⁴வயன் அம்பி³காம் – அம்பிகையை எப்போதும் மனதில் தியானம் பண்ணிக் கொண்டு இவன் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறானோ அவன் பரமயோகி. ஜபைரலம் அலம் மகை²ரதி⁴கதே³ஹஸம்ஷோஷணை:  – அவன் கோடிக் கணக்குல ஜபம் பண்ண வேண்டியது இல்லை. அவன் ஹோமம், யாகமெல்லாம் பண்ண வேண்டியதில்லை, உடம்பை வருத்திண்டு எந்த ஒரு யோகமும் பண்ண வேண்டியதில்லை. இந்த ஸ்லோகங்களை படிச்சிண்டிருந்தாலே போறும். அவன் பரமயோகின்னு சிவானந்தலஹரில சொல்ற மாதிரி மூக கவியும் சொல்றார். அப்படி மஹான்கள் எல்லாரும் ‘பக்தியை புரிஞ்சுகோங்கோ. அது இல்லாம மற்ற முயற்சி பண்ணி பிரயோஜனம் இல்லை. அது இருந்துதுன்னா மற்ற முயற்சிகள் எல்லாம் சுலபமா உங்களுக்கு பலனைக் கொடுக்கும்’ ன்னு சொல்றா.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை >>

4 replies on “சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை”

நம சிவாய
மனதிலே நிறைந்த நிலையில் பரமேஸ்வனை நிரம்ப வைத்தால் எங்கு, எப்படி ,எந்த நிலையில் இருந்தாலும் நமக்கு தேவை என்ற ஒன்று எழும்பாமல் இருக்கும்
(contentment ).
உங்கள் ஒலிப்பதிவு மற்றும் எழுத்து வடிவம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் ஆனந்தமாக அனுபவிக்க முடிகிறது.
ஸம்ஸ்க்ருத ஞானம் குறைவாக (அறவேஇல்லாமல்) உள்ள என்னை போன்றவற்கு மிக உதவியாக இருக்கும்.
காமாக்ஷியின் நகக்காந்தியிலிருந்து பெருகும் ஒளி தெளிந்த தெளிவான கங்கை நீருடன் உவமை சொல்லிய
மூகக் கவியின் திறன் வளத்தை வைத்தே நமக்கு உணர்த்துவது காமாக்ஷியின் மீதுள்ள அவர் பக்தி. அந்த காமாக்ஷியின் சரணத்தில் உள்ள மணி சலங்கையின் ஒலி, மற்றும் அதில் தோன்றும் ஒளி ரத்ன விளக்கின் ஒளி போன்று உள்ளது.
அந்த ரத்ன ஒளி விளக்குக் கொண்டு காமாக்ஷியை மனம் நிறைய நிறைத்து, நினைந்து பக்தி செய்ய வேண்டும்,
அந்த காமாக்ஷி அருளால் மட்டும் தான் இது சாத்யம். அதனால் அந்த அன்னையிடம் பக்தி பிக்ஷை யாசிக்கிறேன்

சிவானந்த லஹரி பக்தியின் சாரம் என்றால் மூகபஞ்ச சதி அதற்கு எந்தவிதத்திலும் குறைச்சல் இல்லை! போட்டி போட்டுக் கொண்டு நமக்கு பக்தியை ஊட்டுவதாகவே அமைந்துள்ளன !!
எந்த நிலையில் இருந்தாலும், எந்த விடத்தில் இருந்தாலும் மனம் பகவான் சிந்தனை தியானத்தில் மட்டுமே ஆழ்ந்தால் வேறென்ன வேண்டும் உய்ய,!
அவன் தாள் பணியவம் அவன் அருள் வேண்டும்! அதனைப் பெற , யாசிக்க நாம் முயல வேண்டும் !
மிக அழகான பிரசங்கம் !! எளிய விளக்கம்! என் போல் பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு ,,,!!
நன்றி கணபதி,!

ஒருவன் எந்த ஆசிரமத்தில் சார்ந்திருந்தாலும் மனம் பரமேஸ்வரனிடம் ஈடுபடாவிட்டால் ஆசிரம தர்மங்களை முறைப்படி அனுஷ்டித்து பயனில்லை! மனது ஈட்டுப்பட்டிருக்கும்.பக்ஷத்தில் அந்த ஆசிரம தர்மானுஷ்டானத்தின் பூர்ண பலனையுமடைவதோடு, சம்சார வாழ்க்கையும் நல்லவிதமாக சுகமாக நடத்தி வருவான் என ஆசார்யாள் இங்கு சொல்கிறார். மேலும் குகையிளோ, வீட்டிலோ, காட்டிலோ மலையின் உச்சியிலோ பஞ்சாகனி , நடுவிலோ வசிப்பவன் ஆனாலும் என்ன பயன்? இவன் மனம் தங்களுடைய அடிகளில் நிலை பெற்றிருக்கும் ஆளால் அவனே சிறந்த யோகி, அவனே பேரின்பத்தை அடைந்தவன் ஆவான்!!
இதனை மூக கவி சொல்கிறார்..தேவியின் திருவடித் தாமரைகள் மனதில் நிலைத்திருந்தால் பவ சாகரம் எனும் கடலைக் கடக்க உதவும் மரக் கலம், அஞ்ஞானக் காட்டை அழிக்கும் அக்னி ஜவா லை,தேவர்களின் முடிகளுக்கு ஆபரண புஷ்பம், உலக தாபம் அகற்றும் நிலா, வேதமேனும் கூட்டில் பெண் கிளி!
அழகிய உபன்யாசம் தக்க மேற்கோள்களுடன்!
ஜய ஜய சங்கரா…
ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.