Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 13, 14 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 13 and 14)

சிவானந்த லஹரியில இன்னிக்கு 13 வது ஸ்லோகம் பார்ப்போம்

असारे संसारे निजभजनदूरे जडधिया

भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।

मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-

स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥

அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா

ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா பாதுமுசிதம் ।

மத³ன்ய: கோ தீ³னஸ்தவ க்ருʼபணரக்ஷாதினிபுண:

த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே ॥

ரொம்ப கருணை ரசத்தோட ஒரு ஸ்லோகம் ‘அஸாரே ஸம்ஸாரே’ – இந்த வாழ்க்கையில ஒண்ணும் அர்த்தம் இல்லாமல் இருக்கு ‘நிஜப⁴ஜனதூ³ரே’ – பரமேஸ்வரனை பஜனம் பண்ணுவதில் இருந்து என்னை விலக்குவதான ஜட³தி⁴யா

ப்⁴ரமந்தம் – இந்த புத்தி கெட்டு ‘மாமந்தம்’ – கண்ணும் தெரியலை எனக்கு. வழியும் தெரியலை. இந்த ஸம்ஸார சுழல்ல சுத்தி வந்துண்டு இருக்கேன் ‘பசுபதே’ – ஹே பரமேஸ்வரா ‘பரமக்ருʼபயா பாதுமுசிதம்’ – என்னை காப்பாத்தறதுதான் உஸித்தம்.என்னை நீ காப்பாத்த வேண்டியதுதான் நீ பண்ண வேண்டிய காரியம். ‘பரம க்ருபயா’ – க்ருபையினால அதை நீ பண்ணு ‘மத³ன்ய: கோ தீ³ன:’ – என்னை விட தீனன் யார் இருக்கா ‘க்ருʼபணரக்ஷாதினிபுண’ க்ருபணர்களை காப்பாற்றுவதில் அதிநிபுண: உனக்கு தான் அந்த சாமர்த்தியம் இருக்கு ‘ஸ்த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே’ உன்னை விட்டா எனக்கு இந்த மூவுலகத்துலேயும் அடைக்கலம் தருவதற்கு யார் இருக்கிறார்கள் னு கேட்கறார். ரொம்ப அழகான ஒரு ப்ரார்த்தனை.

இதை இரண்டு விதத்துல நாம அர்த்தம் பண்ணிக்கலாம்.இந்த உலகத்தில தைன்யம்ங்கிறது படிப்பு இல்லேன்னாலோ, அழகு இல்லேன்னாலோ, பணம் இல்லேன்னாலோ, குலம் இல்லேன்னாலோ ஏதாவது ஒரு காரணங்கள்னால இந்த உலகத்துல நமக்கு தைன்யம் ஏற்படறது. ஒரு அவமானமோ ஒரு அவமதிப்போ ஏற்படறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி ஒரு குறையும் இல்லேன்னா கூட ரொம்ப பெருந்தன்மையினால நாம பந்தா இல்லாம ரொம்ப humble ஆ இருந்தா அதனாலயே ஜனங்கள் கேலி பேச்சு பேசுவா. அதெல்லாம் பொறுத்துண்டு போகிறோம். நாம ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ ன்னு நாம ego இல்லாம உலகத்துல நம்மை பெரியவனா நினைக்காம மத்தவா கிட்ட இருந்து நல்லதை பாத்துண்டு போனா தான் நமக்கு மனுஷான்னு இருப்பா.அவா என்னிக்காவது ஒரு நாள் நம் அருமையை உணர்வா. ஆனா அந்த மாதிரி இருக்கும் போது அப்பப்போ ஒரு அவமானங்கள் ஏற்படறதுக்கு வாய்ப்பிருக்கு. அதை துடைச்சு விட்டுட்டு நாம காரியங்களை பண்ணிண்டே போக வேண்டியது தான். நம்ம பெரியவாளெல்லாம் தினமும் கார்த்தால ஸ்நானத்தின் போது ஒரு ஸ்லோகம் சொல்வா

அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் |

தேஹிமே க்ருபயா சம்போ த்வயிபக்திம் அசஞ்சலாம் |

அனாயாஸேன மரணம் – அனாயசமா மரணம் வேணும் வினா தைன்யேன ஜீவனம் – இந்த உலகத்துல தைன்யம் இல்லாம என் வாழ்க்கையை தள்ளிண்டு போகணும் தேஹிமே க்ருபயா சம்போ த்வயிபக்திம் அசஞ்சலாம் – உன்னிடத்தில் அசையாத பக்தியை கொடுன்னு ப்ரார்த்தனை பண்ணுவா.

அந்த மாதிரி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பலஸ்ருதியில கூட ‘நதேயாந்தி பராபவம் னு முடியும். இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் பண்ணுபவர்கள் அவமானப்பட மாட்டார்கள். குறைவு பட மாட்டார்கள் னு அர்த்தம். அதை முக்கியமா நினைச்சிருக்கா. இந்த உலக வாழ்க்கையில ரோஷத்தோட இருக்கிறவா குறைவு படாம இருந்துட்டு போகணும். மனசு அவமானப்பட்டா தளர்ச்சி ஏற்படும். அதில்லாம எப்பவும் ஸந்தோஷமா இருக்கணும் ங்கிற ஒரே ஒரு நோக்கம் தான் வெச்சிருப்பா.

சில பேர் பணம் இல்லை. எனக்கு குறைவுன்னு நினைச்சுண்டு office ல போய் அவமானப்படுவா.அப்புறம் வீட்டுல வந்து சண்டை போட்டு சத்தம் போட்டு அதுல அவமானப்படுவா. அப்படி இந்த ஸம்ஸார ஸாகரத்துல சுத்தி சுத்தி வந்தா நமக்கு அவமானம் தான் மிஞ்சும். அதிலிருந்து மீளணும்னா நாம பகவானை சரணடையணும். இந்த ஸ்லோகத்துல அதைதான் சொல்றார்.

இந்த ஸ்லோகத்துக்கு இன்னொரு அர்த்தமும் சொல்லலாம் நிஜ பஜன தூரே – நிஜஸ்ய – ஸ்வஸ்வரூபஸ்ய பரமேஸ்வரச்ய, பஜனம் அனுசந்தானம், தூரம் விப்ரக்ருஷ்டம், யஸ்மின் தஸ்மின் சம்ஸாரே ன்னு தன்னுடைய உண்மையை உணர்வது என்ற அந்த நோக்கத்திலேயிருந்து இந்த ஸம்ஸார ஸாகரத்துல சுத்தி வர்றதுங்கிறது நம்மை விலக்கிடறது. அது மாதிரி வீண் காரியங்களே பண்ணிண்டு இருக்காம உட்கார்ந்து

கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |

கஸ்ய த்வம் குத ஆயாத: தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

ன்னு பஜ கோவிந்தத்துல சொன்ன மாதிரி இந்த தத்துவத்தை யோசிக்கறதுக்கு நேரம் வேணும். ‘ஜடதியா இருந்தா முடியாது. மந்த புத்தியா இருந்தா முடியாது. நல்ல புத்தியோட அந்த உண்மை பொருள் என்னன்னு ஒரு நிமிஷம் யோசிக்கறதுக்கு. இந்த ஸம்ஸாரம் அஸாரம்னு நின்னு யோசிக்கறதுக்கே பகவானோட அனுக்கிரகம் வேணும். இந்த ஸ்லோகத்துல அதை ப்ரார்த்திக்கறார்.உன்னை சரணாகதி பண்றேன். என்னை நல்ல வழியில கொண்டு வா. உன்னுடைய பக்தியும் அது மூலமா ஞான விசாரமும், உன்னுடைய ஸ்வரூப ஆனந்தமும் எனக்கு கிடைக்கணும்னு ப்ரார்த்தனை பண்றார்.

அடுத்த ஸ்லோகம்

प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धुः पशुपते

प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः ।

त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः

प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ॥

ப்ரபு⁴ஸ்த்வம் தீ³னாநாம் க²லு பரமப³ந்து:⁴ பசுபதே

ப்ரமுக்²யோऽஹம் தேஷாமபி கிமுத ப³ந்து⁴த்வமனயோ: ।

த்வயைவ க்ஷந்தவ்யா: சிவ மத³பராதா⁴ஸ்ச்ச ஸகலா:

ப்ரயத்னாத்கர்தவ்யம் மத³வனமியம் ப³ந்து⁴ஸரணி: ॥

ன்னு ஸ்லோகம். ப்ரபு⁴ஸ்த்வம் தீ³னாநாம் க²லு பரமப³ந்து:⁴ – ஹே பசுபதே,நீ எளியவர்களுக்கு நல்ல பந்து. நீ ப்ரபுவா இருக்கே. இந்த உலகத்தையே ஸ்ருஷ்டி, ஸ்ருதி, ஸம்ஹாரம் பண்ற. ஏழைகள் கிட்ட கருணையா இருக்கே. அது உன்னுடைய இயல்பான குணமாயிருக்கு. இந்த ஏழைகள்குள்ள நான் ப்ரமுகமா இருக்கேன். அதாவது தைன்யமா இருக்கிறவாளுக்குள்ள நான் தான் ரொம்ப first ல இருக்கேன். நான் ரொம்ப deserving னு சொல்றார். மூக கவி நிரக்ஷரசிரோமணி அப்படீம்பார். நான் எதுல ஸிரோன்மணி வாங்கி யிருக்கேன். வ்யாகரணமா?வேதாந்தமா? னு கேட்டா நிரக்ஷரசிரோமணி – ஒரு எழுத்து தெரியாதவாளுக்குள்ள நான் ரொம்ப முக்கியமானவன். அது மாதிரி தீ³னாநாம் பிரமுக: அதுனால ‘தேஷாமபி கிமுத ப³ந்து⁴த்வமனயோ:’ எனக்கும் உனக்கும் ரொம்ப பந்துத்வம் இருக்கு ‘கிமுத’ – என்ன சொல்றது?ரொம்ப தைன்யமா இருக்கேன். நீ எல்லாருக்கும் ப்ரபுவா இருக்கே. நீ தீனர்களிடத்தில் கருணை காண்பிக்கறதுன்னு ஒரு பண்பு வெச்சிண்டிருக்கே. அதுனால நம்ப இரண்டு பேருக்கும் இப்படி ஒரு உறவு ஏற்பட்டுடுத்து

சிவ மத³பராதா⁴ஸ்ச்ச ஸகலா:என்னுடைய அபராதங்கள் எல்லாவற்றையும் பரமேஸ்வரா த்வயைவ க்ஷந்தவ்யா: – நீ மன்னிக்கணும் ‘ப்ரயத்னாத்கர்தவ்யம் மத³வனம்’ – முயற்சி பண்ணி என்னை காப்பாத்துன்னு சொல்றார். ஸீதா தேவி ஹனுமார்கிட்ட ‘ஹனுமன் யத்னமாஸ்தாய துக்கக்ஷயகரோ பவ’ ன்னு சொல்றா. முயற்சி பண்ணி என்னோட கஷ்டத்தை போக்கு ஹனுமான் னு கேட்கறா. ஏன்னா ஏதோ நம்மோட வினையினால கஷ்டப்படறோம். பகவான் அப்படியே விட்டுட்டார்னா நாம ஒண்ணும் பிழைக்க முடியாது. அவர் க்ருபை பண்ணாதான் நாம பிழைக்க முடியும். இது give and take கிடையாது. அவர் க்ருபைங்கிறது, அதுக்கு நம்மளை ஆளாக்கிக்கணுமே தவிர அவரை demandபண்ண முடியாது. அதுனால ‘ப்ரயத்னாத்கர்தவ்யம் மத³வனம்’ முயற்சி பண்ணி என்னை காப்பாத்து ன்னு இங்க ப்ரார்த்தனை பண்றார். த்வயைவ க்ஷந்தவ்யா: சிவ மத³பராதா⁴ஸ்ச்ச ஸகலா: ன்னு சொல்லி பரமேஸ்வரனுடைய ஆக்ஞை வேதம். அதுல சொன்ன எல்லாத்தையும் நாம உல்லங்கனம் பண்றோம். ஒண்ணுமே கேட்க மாட்டேங்கறோம்.ஏதோ ஒரு போக்குல போயிண்டிருக்கோம். அதுனால இந்த பாபங்களைஎல்லாம் மன்னிச்சு ‘ வனமியம் ப³ந்து⁴ஸரணி:’ உற்றார்கள்னா இப்படி தானே ஒருத்தரை ஒருத்தர் கஷ்டத்துல காப்பாத்துவா. அதுனால நானும், நீயும் பந்து ஆயிட்டோம் இல்லையா. என் மேல கருணை பண்ணுன்னு கேட்கறார்.

ராமாயணத்துல தாரை வாலி கிட்ட சொல்வா. ‘சுக்ரீவன் மேல ஏன் இவ்ளோ வெறுப்பு காண்பிக்கற. அவன் உன் தம்பிதானே. அவனை பக்கத்துல உட்கார வெச்சுக்கோ. நீயும் உயிர் பிழைப்பாய். ராமனோட பகைசுக்காதே’ ன்னு சொல்வா. அந்த மாதிரி அந்த காலத்துல பெரியவாளெல்லாம் ஒரு உறவு விட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி மன்னிக்கற குணத்தை சொல்லிக் கொடுப்பா. அந்த மாதிரி ‘இயம் பந்து ஸரணீஹி’ பந்துக்களோட ரீதி ஆச்சே. அதுனால என்னை கை விடாதே. காப்பாத்துன்னு பிரார்த்தனை பண்றார்.

இங்க அண்ணா அழகா ஒண்ணு add பண்ணியிருக்கார் ‘அத்ர ஏவ மகாதேவ: பிரசாதம் அகரோத் பிரபு:’ ன்னு ராமாயணத்துல ஸீதாதேவிக்கு ராமர் நடந்த சரித்திரத்தை எல்லாம் சொல்லிண்டு வரார். அப்ப இங்கதான் பரமேஸ்வரன் எனக்கு தயை பண்ணார். நான் இங்க பூஜை பண்ணேன்னு இராமேஸ்வரத்தை காண்பிச்சு சொன்ன போது சிவபெருமானை ப்ரபுன்னு சொல்றார். இந்த ஸ்லோகத்துல ப்ரபுன்னு வர்றது. அந்த மாதிரி பரமேஸ்வரன் எனக்கு அனுக்ரகம் பண்ணார்னு ராமர் நினைச்சதுனால தான் ராமர் மத்தவாளுக்கு அனுக்ரஹம் பண்ணார்னு அண்ணா சொல்றார். அந்த பரமேஸ்வரனுடைய உதார குணத்தை போற்றினதுனால ராமருக்கும் அந்த உதார குணம் வந்து, அவரும்

ஸக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம ||

ன்னு தன்னை அண்டி வந்தவாளுக்கெல்லாம் அவாளுடைய குணங்களை போற்றி குற்றங்களை மறந்து அனுக்ரஹம் பண்ணார், என்கிறார்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை”

நமசிவாய நமசிவாய.
நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்திலிருந்து கரையேறி விடுபட்டு ஆனந்த சாகரத்தில் முழுகி எழ கொடுத்த இரண்டு ஸ்லோகங்கள்.
இந்த ஜடமான புத்தியினால் சம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டிருக்கோம். அதனால் பரமேஸ்வரனிடம் பிரார்த்திக்கிறார். ஹே பரமேஸ்வரா கருணை புரிவதில் நிபுணனான நீ, உன் கருணை கடல் என்ற பார்வையிலிருந்து ஒரு திவலை என் மீது பட்டால், என்னிடம் உள்ள அறியாமை (உள்நோக்குதல்) போன்ற ஏழ்மையிலிருந்து விடு படுவேன் என்றும்

அடுத்து பரமேஸ்வரனை, எல்லோருக்கும் பிரபுவாக இருப்பதாகவும், தான் மிகுந்த தீனனாக இருப்பதில் முதலாவதாகவும், (1st position)
ஒரு casualty /emergency situation போலவும், தனக்கு முதலில் கருணை காண்பித்து, தன்னுடைய அபராதங்களையும் மன்னித்து அனுக்கிரகம் செய்யணும் என்று பிரார்த்திக்கிறார்.
மேலும் தொடர்ந்து சிவ ஆனந்த லஹரியில் திளைத்திருப்போம். 🙏🙏🌹🌹

ஆசார்யாள் எளிமையின் உருவம்! தன்னை ஒர் சாதாரண பிரஜையாக பாவித்து சொல்கிறார் அவரே ஈஸ்வரனாக இருந்த போதிலும்,,!ஆத்ம ஞானமற்றவனை கிருபணன் என்று குறிப்பிடுகிறார்,!சாதாரணமாகத் கையிலிருக்கும் பொருளை உபயோகப் படுத்தாமல் கஷ்டப்படுகின்றனர் கிருபணன் என்று சொல்வதுண்டு. தன்னிடத்தில் உள்ள ஆத்ம ஸ்வரூபாமான ஈஸ்வரனை அறியாமல் கஷ்டப்படுவார்கள் இங்கு கிருபணன் என்று சொல்கிறார் ஆசார்யாள்!!
உபநிஷத் , பகவத் கீதையில் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஸ்லோகத்தில், ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகியவற்றில் கூறப்பட்ட கரமாக்கள் என் கட்டளை, அவற்றை அனுஷ்டிக்காததால் நீ குற்றவாளியாக இருக்கிறாய், உன்னை நான் எப்படி காப்பாற்ற முடியும்? என பரமேஸ்வரன் சொல்லும் பக்கத்தில் அதற்கு சமாதானமாக ” நாமிருவரும் நெருங்கிய பந்துக்கள், ஆகையால் என் குற்றங்களை பொருட்படுத்தாமல் என்னை ரக்ஷிக்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்” நான் ஏழை, நீரோ ஏழை பங்காளன், நம் இருவருக்கும் நெருங்கிய உறவு இருப்பதால் என்னை ரயக்ஷிக்க கடமைப் பட்டிருக்கி றீர்கள் ” என்று ஆசார்யாள் ஈஸ்வரனுக்கு உள்ள நெருங்கிய தொடர்பை உறுதி செய்கிறார்!!
அழகான பொருள் செறிந்த, ஈஸ்வரனுடன் உள்ள நெருங்கிய பந்தத்தை வெளிப்படுத்துகிறார்!!
அழகான ஸ்லோகங்கள்,!! பக்தியின் வெளிப்பாடு பிரவசனத்தில் நன்றாக விளங்குகிறது!!
நம்: சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.