Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 15, 16 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 15 and 16)

ஆச்சார்யாளோட சிவானந்தலஹரியில 14 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். 13வது 14வது ஸ்லோகத்துல, ‘இந்த சாரமில்லாத ஸம்ஸாரத்துல நான் சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு அடைக்கலம் கொடுப்பா? நீ க்ருபை பண்ணு’ ன்னு சொன்னார். 14 வது ஸ்லோகத்துல ‘ஒரு ஏழை பந்து இருந்தான்னா ஒரு ப்ரபு தயவு பண்ண மாட்டானா? அந்த மாதிரி நான் தான் தைன்யர்களுக்குள்ள ரொம்ப முக்யமானவன். ரொம்ப deserving. என்னை கொஞ்சம் கண்ணெடுத்து பாரு’ ன்னு சொல்றார்.

இந்த 15 ஆவது ஸ்லோகத்துல

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥

உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்

ஹே பசுபதே! உனக்கு என் கிட்ட உபேக்ஷை இல்லேன்னு சொல்றே. அதாவது என் மேல வெறுப்பு இல்லை. என்னை உதாசீனம் பண்ணலேன்னு சொல்ற. ஆனா ‘து³ராசாபூ⁴யிஷ்டா²ம்’ – கெட்ட ஆசைகள் நிறைஞ்சதும் ‘ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்’ உன் த்யானம் பண்ணாமல் வேறே ஏதேதோ விஷயங்களில் இழுத்துண்டு போகிற மாதிரி ஒரு தலையெழுத்தை – ‘விதி⁴லிபி’ – என் தலையில பிரம்மா எழுதியிருக்கார். இதை ‘கிம் ந ஹரஸி’ – நீ ஏன் போக்கடிக்க மாட்டேங்கறே? உனக்கு தயவு இருக்குன்னு சொல்ற. இதை நீ போக்கிட்டேன்னா, உன்னோட தியானத்தை நான் பண்ணினா, நான் எவ்வளவோ நன்னாயிருப்பேனே. அப்படீன்னு சொல்றார். “நான் எப்படி பிரம்மா எழுதினதை மாத்த முடியும். ‘ப⁴வான்அசக்தோ யதி³’ என்னால முடியாதுன்னு நீங்க சொல்றேளா? ன்னு கேட்டுண்டு, ‘சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம்’ – அந்த ப்ரம்மாவோட தலை அப்படி ஒண்ணும் எடுக்க முடியாது. strong ஆ திடமாதான் அமர்ந்து இருந்தது. அதை கிள்ளிவிட முடியாது. ஆனால் அதை ‘வைதா⁴த்ரம் சிர: கத²ம் வா நிர்யத்னம் – அந்த ப்ரம்மாவோட தலையானது ஒரு யத்தனம் இல்லாம ‘கரனக²முகே²னைவ லுலிதம்’ – உன்னால் உன் நக நுனியினாலேயே கிள்ளி எறியப் பட்டதே. “என் தலையில பிரம்மா எழுதினதை அழிக்க முடியாது. அனுபவிச்சு தீர்த்துக்கோன்னு சொல்றே.ஆனா ஒரு க்ஷணத்துல ப்ரம்மாவோட தலையையே கிள்ளி எறிஞ்சேளே, உங்களால முடியாதா!” ன்னு வேடிக்கையா சொல்றார்.

பிரம்மாவும்,விஷ்ணுவும் நான் பெரியவன், நான் பெரியவன்னு வாக்குவாதம் பண்ணின போது அங்கே ஒரு ஜோதி ஸ்வரூபமா பரமேஸ்வரன் காட்சி கொடுக்கறார். இந்த ஜோதியினுடைய பாதத்தை, அடியை நான் பார்த்துண்டு வரேன்னு விஷ்ணு பகவான் வராஹரூபம் எடுத்துண்டு போறார். பிரம்மா ஹம்ஸரூபம் எடுத்துண்டு இந்த ஜோதியோட முடியை பார்த்துண்டு வரேன்னு போறார். ஆனா இரண்டு பேராலயும் அடிமுடி காண முடியாத பரமேஸ்வர ஸ்வரூபம். ஆனா விஷ்ணு பகவான் திரும்பி வந்து நான் பார்க்கலை. என்னால பாதத்தை பார்க்க முடியலைன்னு சொல்றார். ஆனா பிரம்மா வந்து நான் பரமேஸ்வரனுடைய சிரஸை பார்த்தேன். அந்த ஸிரஸிலிருந்து இந்த தாழம்பூ கீழ விழுந்துண்டு இருந்துதாம். அந்த தாழம்பூவையே கூட்டிண்டு வந்து பொய்சாக்ஷி சொல்ல சொல்லி, நான் பரமேஸ்வரனுடைய சிரஸைப் பார்த்தேன்னு பிரம்மா சொல்றார். அந்த தாழம்பூ ஆமாம்னு சாக்ஷி சொல்றது. உடனே பரமேஸ்வரன் தரிசனம் கொடுத்து கோவிச்சுண்டு ப்ரம்மாவோட 5வது தலையை கிள்ளி போட்டுட்டார்னு கதை. அந்த மாதிரி பிரம்மாவை தண்டிக்கவே உங்களால முடியுமே. என் தலையில அவர் இந்த மாதிரி எழுதின, அதுவும் ஒரு கெட்ட எழுத்தை, கெட்ட எண்ணங்கள், கெட்ட ஆசைகள் இதுலேயே நான் இருந்துண்டு இருக்கேன். அதை நீங்க போக்கக் கூடாதான்னு சொல்றார்.

ஆனா பகவானுடைய அனுக்ரஹம் கிடைச்சுடுத்துன்னா நம்ம தலையில பிரம்மா எழுதினது மாறிடும். தலையெழுத்தை தான் ஜாதகம் ஒரு indicate பண்றது. அந்த ஜாதகத்துல இருக்கிற எல்லாத்தையும் பகவானுடைய அருள் மாத்த முடியும்.

ஒரு மூகபஞ்சஸதி ஸ்லோகம் இருக்கு

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण-
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि ।
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ॥

வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-

ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।

அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ

விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥

வினம்ராணாம் – ரொம்ப வணக்கத்தோட அம்பாளை நமஸ்காரம் பண்றவாளோட சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி – அவாளுடைய மனம், சேதஸ் என்ற வீட்டின் மாடியில் சரணப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி – அவாளுடைய மனசுல அம்பாளோட சரணம் வந்துடும்ங்கிறார்.அந்த சரண தீபம் அவாளுடைய மனமாகிய வீட்டில் ஏற்றப்பட்டவுடன், தவ நிர்தூ⁴ததமஸி – அது அக்ஞான இருட்டைப் போக்கிக் கொண்டு ஒளியோடு அந்த தீபம் விளங்குகிறது. அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ – எல்லையில்லாததும், ரொம்ப நான் மீள முடியாததுமான து³ஷ்கர்மலஹரீ கெட்ட வினைகளின் கூட்டங்கள் விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே – அம்பாளுடைய பஜனம் பண்றவாளோட மனசுல அந்த பாதமாகிய தீபத்தை ஏற்றி வெச்சதுனால கூட்டம் கூட்டமாக தீவினைகள் என்ற சலபபரீபாடினா ஈசல் பூச்சி. அது விளக்குல வந்து விழுந்துடும். அந்த மாதிரி கூட்டம் கூட்டமாக என்னோட தீவினைகள் உன்னோட பாதமாகிய நெருப்புல விழுந்து பொசுங்கி போயிடறதுன்னு சொல்றார். அந்த மாதிரி நம்முடைய பூர்வஜன்மாவுல எவ்ளோ தீவினைகள் பண்ணியிருந்தாலும் பகவானுடைய பக்தி இருக்கணும். ரொம்ப வணக்கத்தோட இருக்கணும்.அந்த egoவை விட்டு நான் பண்றேன்னு நினைக்காம பகவான் பண்றார்னு நினைச்சாலே பாதி வினைகளோட பாரம் குறைஞ்சுடும். மேலும் அந்த அருட் பார்வை பட்டுடுத்துன்னா  எல்லா தீவினைகளும் போயிடும். வாழ்க்கையே நிம்மதியா இருக்கும்னு சொல்றார்.

சிவக்ருபை இருந்தா விதியை வெல்லலாம் என்கிறதை வேடிக்கையா இந்த ஸ்லோகத்துல சொல்றார். அடுத்ததுல இன்னும் அந்த jokeஐ extend பண்ணி சொல்ற மாதிரி இருக்கு.

विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-

श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।

विचारः को वा मां विशद कृपया पाति शिव ते

कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥

விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது ப⁴வதா தத்பரசிர:

சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் ।

விசார: கோ வா மாம் விசத³ க்ருʼபயா பாதி சிவ தே

கடாக்ஷவ்யாபார: ஸ்வயமபி ச தீ³னாவனபர: ॥

பிரம்மாவை வந்து நீங்க கோவிச்சுண்டேளே, தலையை கிள்ளி போட்டேள். இப்ப நான் ஒரு appeal விட்டுருக்கேன். அந்த பிரம்மாதான் என்னை ரொம்ப தொல்லை பண்றார். தலையில ஏதோ எழுதிட்டார்னு சொல்றேன். உடனே நீங்க கோவிச்சுண்டு அவருடைய இன்னொரு தலையை ஏதாவது கிள்ளிடாதீங்கோ என்கிறார் விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது – விரிஞ்சு தீர்க்காயுசா இருக்கட்டும் ப⁴வதா தத்பரசிர: சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் – அவருடைய பாக்கி நான்கு தலைகளும் உம்மால் காப்பாற்றப்படட்டும். அதாவது அதை எல்லாம் நீங்க எடுத்துக் கிள்ளிப் போட்டுடாதீங்கோ ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான்  – அவர்தான் என் தலையில எழுதினார். ஆனா தைன்யத்தை எழுதியிருக்கார். அதுல ஒரு லாபம் ஆச்சு. ஏன்னா நீங்க தீ³னாவனபர: – தைன்யமா இருக்கிரவாளை காப்பாத்தணும்னு ஒரு கொள்கை வெச்சிசிண்டிருக்கேள். அதுனால என்ன ஆச்சு? சிவ –  மங்கள வடிவமான பரமேஸ்வரா, விஷத – நிர்மல ஸ்வரூபியே! எனக்கு ஒண்ணும் யத்தனம் இல்லாமலேயே உங்களுடைய கடாக்ஷம் கிடைச்சுடுத்து. நீங்க ஐயோ பாவமா இருக்கிறவாளைத்தான் கண்ணெடுத்துப் பார்க்கறேள். அந்த பிரம்மா இந்த மாதிரி ஒரு தலையெழுத்தை எழுதியிருக்கார். ரொம்ப தைன்யமா இருக்கேன் நான். அதுனால என்ன ஆச்சுனா,உங்களோட கடாக்ஷம் எனக்கு கிடைச்சுது,அப்படீன்னு சொல்லி சந்தோஷப் படறார். அந்த மாதிரி நாம் பகவானிடத்தில் தன்னோட தைன்யத்தை வெளிப்படுதறதுன்னுஒரு அங்கம் சரணாகதியில. பகவான் தான் ப்ரபு. நாம் அவரோட அடிமைன்னு நினைக்கத் தெரிஞ்சாலே அவாளுக்கு

“அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே”

ன்னு திருநாவுக்கரசர் தேவாரத்துல பாடறார். பகவானுக்கு அடிமை பூண்டா அல்லல் என் செயும்? அருவினை என் செய்யும்? தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்?என்னுடைய பழைய வினைகளெல்லாம் என்ன பண்ணப் போறது? என்னுடைய மூன்று விதமான வினைகளும் (சஞ்சிதம், ஆகாமி பிராரப்தம்) என்னை ஒண்ணுமே பண்ண முடியாது. என்னை எதுவுமே அல்லல் படுத்த முடியாதுன்னு சொல்றார்.

‘நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

ன்னு பாடினா மாதிரி இங்க ஒரு பாட்டுல சொல்றார். அந்த பகவானிடத்தில் அடிமை பூண்டு இருக்கணும்ங்கிற அந்த புத்தி, அவர் கிட்ட மட்டுமே தைன்யமா இருக்கணும் என்கிற பிரார்த்தனை இந்த ஸ்லோகங்கள்ல வெளிப்படறது. இன்னும் இதே மாதிரி மேலும் ‘நான் உன்னை சரணாகதி பண்ணேன். என்னை காப்பாத்து’ ன்னு வேண்டப் போறார். அதெல்லாம் அடுத்தது பார்ப்போம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை”

Thank you. Reminds me of YPM, “விதியை மாற்றவல்லவர் துறவி”; And TP’s rejoinder on our qualification: “எல்லை இல்லாத அடிமை பூண்டேனுக்கே”and “மீளா ஆளாய்”: ஷங்கரர் பொடி வெச்சி சொல்லி இருக்கிறார்”

சிவாய நம:
பூர்ண சரணாகதி பண்ணினா நாளும் கோளும் இன்ன பிற இடர்களும் என்ன பண்ணும்.மனிதர்களை ?
நாதன் நாமம் நம சிவாய என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓதுவார்களை ? பக்தி, ச்ரத்தை எல்லாம் அவர் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் கைவிடுவாரா நம்மை ?
சஞ்சிதம், ஆகாமி பிராரப்தம் எதுவுமே ஈசன் எந்தன் இணையடி நீழலில் தம்மை ஈடுபடுத்தித் தொழுவாரை அண்டாது ! நாள் என்ன செய்யும், வினைதான் என் செய்யும் அப்பன் பாதாரவிந்த சரணத்தில் அடைக்கலம் அடைந்தால் ?

நல்லதோர் பிரவசனம் தக்க மேற்கோள்களுடன் !
மூல பஞ்ச சதி ஸ்தோத்ரம் இங்கு சாலைப் பொருந்துமாறு கூறப்பட்டது அருமை !!
பகவத் பாதாள் சிவானந்தலஹரி ஒரு பக்தி பெட்டகம் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.