Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 23 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 23)

சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்துல… என் மனமாகிய திருடன் பேராசையினால பணக்காரா வீட்டுகுள்ள எல்லாம் போகப் பார்த்துண்டிருக்கான். ‘ஹே தஸ்கரபதே !’ – திருடர்களுக்கெல்லாம் தலைவனே! என் மனமாகிய திருடனை உன்னுடைய கட்டுப்பாட்டுல வெச்சுக்கோன்னு சொன்னார்.

23வது ஸ்லோகத்துல…

करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो

विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्याः फलमिति ।

पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन् पक्षिमृगतां

अदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शंकर विभो ॥ २३॥

கரோமி த்வத்பூஜாம் ஸபதி³ ஸுக²தோ³ மே ப⁴வ விபோ⁴

விதி⁴த்வம் விஷ்ணுத்வம் தி³ஶஸி க²லு தஸ்யா: ப²லமிதி ।

புநஶ்ச த்வாம் த்³ரஷ்டும் தி³வி பு⁴வி வஹந் பக்ஷிம்ருʼக³தா-

மத்³ருʼஷ்ட்வா தத்கே²த³ம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴ ॥ 23॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

‘விபோ⁴’ன்னா எங்கும் நிறைந்தவர்… ‘த்வத்பூஜாம் கரோமி’ – உன்னுடைய பூஜையை நான் பண்றேன்… ‘ஸபதி³ மே ஸுக²தோ³ ப⁴வ’ – உடனடியாக திருப்தியாகி, எனக்கு சுகத்தை பேரின்பத்தை அளிக்க வேண்டும். அது ஏன் பேரின்பம்னா, எனக்கு எது வேண்டாம்னு சொல்றார்னு பார்த்தா, அதுக்கும் மேலான ஒரு இன்பம் வேணும்னு கேட்கறார். அப்போ அது பேரின்பமாத்தான் இருக்க முடியும்… ‘விதி⁴த்வம்’ – நீ ப்ரம்மாவோட பதவியோ… ‘விஷ்ணுத்வம்’ – விஷ்ணுவோட பதவியோ… ‘தஸ்யா: ப²லமிதி’ – இந்த பூஜைக்கு பலன் “உன்னை பிரம்மாவா ஆக்கறேன், விஷ்ணுவா ஆக்கறேன்னு” நீங்க சொன்னேள்னா.. ‘தி³ஶஸி க²லு புநஶ்ச த்வாம் த்³ரஷ்டும்’ – இன்னொருவாட்டி உங்களை தரிசனம் பண்றதுக்கு ‘தி³வி’ – ஆகாசத்துலயும் ‘பு⁴வி’ – பூமியிலயும்… ‘பக்ஷிம்ருʼக³தாம்’ – ஹம்ஸ பறவையாகவோ இல்ல வராஹ வடிவமோ எடுத்துண்டு… நான் ‘வஹந்’ – அங்க இங்க அலைஞ்சு… ‘அத்³ருʼஷ்ட்வா’ – அப்பவும் காண முடியாம… ‘தத்கே²த³ம்’ – அந்த கஷ்டத்தை படுவேன்… ‘கத²மிஹ ஸஹே’ – அதை எப்படி நான் பொறுக்க முடியும். இப்பவே உங்களை தர்சனம் பண்ணிண்டிருக்கேன். ஹே சங்கரா! மங்களத்தை செய்பவரே! இப்பவே இங்கேயே எனக்கு சாக்ஷாத்காரத்தை கொடுத்துடுங்கோ. உங்களை பிரியற அந்த கஷ்டம் எனக்கு வேண்டாம் அப்படிங்கறார். திருப்பள்ளியெழுச்சியில மாணிக்கவாசக ஸ்வாமிகள் இதைத்தான் சொல்றார்.

புவனியிற் போய் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்! திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

அப்படீன்னு ஒரு பாட்டு.

‘புவனியிற் போய் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி’…. அப்படீன்னு ‘சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்! திருமாலாம்’ – திருமாலும் பிரம்மனும் ‘திருப்பெருந்துறையுறைவாய்’ – வாசலைப் பார்த்துண்டு… இந்த பூமியில போயி நாம பிறந்தோம்னா நம்மை பரமேஸ்வரன் ஆட்கொள்வார். இங்க அவமா… வீணா பொழுதை போக்கிண்டு இருக்கோமே அப்படீன்னு வருத்தப்படறா… அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி, சங்கர பகவத்பாதாள் ‘எனக்கு உன் பூஜைக்கு பலனா விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் எல்லாம் கொடுத்துறாத. ஏன்னா அப்புறம் நான் திரும்பவும் அலைஞ்சுண்டு இருக்கணும், தரிசனம் கிடைக்காம’ அப்படீன்னு சொல்றார். அந்த சரித்திரம்… அந்த புராணக் கதை நமக்கு தெரியும். அதாவது விஷ்ணுவும், பிரம்மாவும் நாந்தான் பெரியவன்னு நினைச்சு சண்டை போட்ட போது, அங்க ஒரு பெரிய ஜோதி ஸ்வரூபமா… லிங்க வடிவமா பகவான் பரமேஸ்வரன் தரிசனம் கொடுத்தார். இதோட அடியை நான் பார்த்துண்டு வரேன்னு வராஹ ரூபம் எடுத்து விஷ்ணு போனார். முடியை நான் பார்த்துண்டு வரேன்னு ஹம்ஸரூபம் எடுத்துண்டு பிரம்மா போனார். இரண்டு பேரும் பார்க்க முடியாம அலைஞ்சு திரும்பி வந்தா அப்படீன்னு. அதுக்கு சூக்ஷ்மமான அர்த்தம் என்னன்னா “லக்ஷ்மிபதியான விஷ்ணுவும், சரஸ்வதி நாயகனான பிரம்மாவும் – அதாவது படிப்பும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது! பக்தி ஒண்ணுனாலதான் அடைய முடியும்”. இந்த சங்கரர் சொல்ற மாதிரி, உன்னோட பூஜை பண்ணேன்… இந்த திருப்தி … இதுல எனக்கு கிடைச்ச இந்த சாக்ஷாத்காரம்… இது… அதுக்கெல்லாம் மேலே அப்படீன்னு சொல்றார். திருவண்ணமலை தீபம் வரப் போறது கார்த்திகையில… இதை ஞாபகப்படுத்தறதுகாகத்தான்.

படிப்பாலயும், பணத்தாலயும் பகவானை அடைய முடியாது அப்படீங்கிறத படிச்ச உடனே… எனக்கு மூக பஞ்ச சதியில ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரது. 89வது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல,

यदत्यन्तं ताम्यत्यलसगतिवार्तास्वपि शिवे
तदेतत्कामाक्षि प्रकृतिमृदुलं ते पदयुगम् ।
किरीटैः सङ्घट्टं कथमिव सुरौघस्य सहते
मुनीन्द्राणामास्ते मनसि च कथं सूचिनिशिते ॥89॥

யத³த்யந்தம் தாம்யத்யலஸக³திவார்தாஸ்வபி ஶிவே

ததே³தத்காமாக்ஷி ப்ரக்ருʼதிம்ருʼது³லம் தே பத³யுக³ம் ।

கிரீகடை: ஸங்க⁴ட்டம் கத²மிவ ஸுபரௌக⁴ஸ்ய ஸஹதே

முனீந்த்³ராணாமாஸ்தே மனஸி ச கத²ம் ஸூசிநிஶிதே ॥ 89 ॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

அம்பாளுடைய நடை மென் நடை. மெதுவா நடக்கறா! அப்படீங்கிற வார்த்தையை சொன்னாலே அந்த பாதம் வந்து… ‘யத்³ அத்யந்தம் தாம்யதி’ ஏன்னா ரொம்ப ரொம்ப மெதுவா நடக்கற அந்த பாதத்தை வந்து, வெறுமனே மெதுவா நடக்கறான்னு சொன்னா அது பொறுக்காம அந்த பாதங்கள் வந்து துவண்டு போயிடறதாம். அவ்ளோ sensitive… ‘யத்³ அத்யந்தம் தாம்யதி அலஸக³தி வார்தாஸ்வபி ஶிவே’ – இப்பேற்பட்ட உன்னுடைய பாதங்கள்… ‘ப்ரக்ருʼதிம்ருʼது³லம்’ – இவ்ளோ ம்ருதுவா இருக்கு… ‘தே பத³யுக³ம் காமாக்ஷி’ – எப்படி இதெல்லாம் பொறுத்துக்கறது?.. எதுன்னா…’ கிரீகடை: ஸங்க⁴ட்டம் கத²மிவ ஸுபரௌக⁴ஸ்ய ஸஹதே’ – தேவர்கள்லாம் வந்து நமஸ்காரம் பண்றாளே… அந்த கிரீடத்துடைய… அது உன் கால்ல எங்கானு பட்டு உன்னை ஸ்ரமப் படுத்தாதோ, இவ்ளோ ம்ருதுவான பாதங்களை! அப்படீன்னு சொல்றார்…. ‘முனீந்த்³ராணாமாஸ்தே மனஸி ச கத²ம் ஸூசிநிஶிதே’ – முனிவர்கள் ஊசி போன்ற அவாளுடைய கூர்மையான ஏகாக்ர சித்தத்துல உன் பாதங்களை வெச்சுண்டிருக்கா. அந்த சித்தத்துல உன்னுடைய பாதம் எப்படி வசிக்கறது? முனிவர்கள் மனசுல அம்பாள் பாதம் இருக்கு. ஆனா அதை எப்படி தாங்கறது அப்படீங்கறார். இந்த ஸ்லோகத்தை படிச்சபோதும் எனக்கு… தேவர்களுடைய கிரீடம் அப்படீன்னா பணம், முனிவர்களுடைய சித்தம்… ஏகாக்ர சித்தம் அப்படிங்கிறது இந்த புத்தியோட திறமை. இந்த இரண்டும் கொண்டு அம்பாளுடைய பாதத்தை… அந்த ம்ருதுதன்மையை புரிஞ்சுக்க முடியாது. அது அவ்வளோ sensitive அப்படீன்னு சொல்றார்.

எனக்கு இதை படிக்கும் போது கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய இயல்பும், அங்க நடந்த விஷயங்களும் ஞாபகம் வரது. ஸ்வாமிகள் ரொம்ப sensitive. மஹான்களே அப்படிதான் இருப்பா. ரொம்ப sensitiveஆ இருப்பா. அவாகிட்ட இந்த பணம் படைத்தவர்களும் பக்தியோட அணுகினா ஸ்வாமிகள் அவ்ளோ எல்லாம் சொல்லி கொடுப்பார். அவ்ளோ ஆனந்தமா இருக்கலாம். ஆனா பணக்காரா படிச்சவா அங்க வந்து படர ஸ்ரமத்தையும் ஸ்வாமிகளை வந்து படுத்தற ஸ்ரமத்தையும் நான் பார்த்துண்டு உட்கார்ந்திருக்கேன். பணக்காரா என்ன பண்ணுவா? பணக்காராளுக்கு வந்து தன்னை புகழ்ந்து பேசறவாளுக்குத்தான் பணம் கொடுப்பா. ஸ்வாமிகள் பணக்காராளையும் புகழ மாட்டார். பாகவதத்துல மெட்டீரியலிசத்த வெறுத்து பேசறது, அதுல இருக்கறது அப்படியே சொல்வார். பணம் வந்துடுத்துன்னா மனுஷன் எவ்வளோ தீய குணங்களுக்கெல்லாம் ஆளாறாங்கிறதையும் stress பண்ணி சொல்வார். பணக்காரா தப்பு வழியில சம்பாதிக்கறதோ, அதுனால பண்ற புண்யங்களுக்கோ பலன் இல்லேங்கறதை அழுத்தி சொல்வார். அந்த மாதிரி சொல்லும்போது பணக்காராளுக்கு நெஞ்சு குறுகுறுக்கும். அதுனால அவா ஸ்வாமிகளுக்கு அதிக பணம் கொடுக்க மாட்டா. பணக்காராளுக்கே இந்த negotiation, calculation புத்தி இருந்துண்டே இருக்கும். ஒண்ணுக்கொண்ணு free தானே எங்க பார்த்தாலும். அந்த மாதிரி ஸ்வாமிகள்கிட்ட வந்து அவர் கொடுத்ததை வாங்கிக்கறா அப்படீங்கறதுனால அவருடைய எளிய தேவைகளுக்குக் கூட… 1950ல இருந்து 1986 வரைக்கும் எவ்வளோ பெரிய ஒரு மகான் கடன்ல இருந்தார் அப்படீன்னா, ஜனங்களுக்கு தன்னை ஸ்தோத்ரம் பண்ற, இல்ல entertainmentக்கெல்லாம் கொடுப்பாளே தவிர இந்த மாதிரி ஒரு மஹான் கிட்ட போயி நம்மளுடைய பணத்தை கொடுப்போம். நம்மளுடைய த்ரவியசுத்தி அதுங்கிறது தெரியலை… ஏன்னா கேட்கறவாளுக்கு தான் கொடுப்பா… thanks சொல்லணும், praise பண்ணனும், இல்ல entertainingஆ ஏதாவது பண்ணனும். ஸ்வாமிகள் பண்ணது எல்லாம் enlightenment. அதுனால அவர் entertainment பண்ணலை. அவர் ஒரு மஹான். இது ஒரு வேடிக்கை நான் பார்த்திருக்கேன். அதுமாதிரி படிச்சவா அங்க வந்தா தன்னோட படிப்பை, தன்னோட ஜப தபங்களை, தன்னோட யோகத்தை, யந்த்ர, தந்தர, மந்த்ரத்தை எல்லாம் அவர்கிட்ட சொல்வா. அவர் ஆஹாஹான்னு கேட்டுப்பார் ஸ்வாமிகள். ஒண்ணும் புகழவும் மாட்டார் இகழவும் மாட்டார். ஏன்னா அவர் பாகவத வழில இருந்தார்.  அதனால ஆஹான்னு கேட்டுப்பார். அவரை test பண்ற மாதிரி ஏதாவது கேள்விகள் கேட்டுண்டிருப்பா ஸ்வாமிகள்கிட்ட. அவர் “எனக்கு தெரியாது. நான் அதெல்லாம் படிச்சது இல்லை. நான் ஒரு சாஸ்திரமும் வாசிச்சதில்லைன்னு பதில் சொல்வார்”. படிச்சவாளுக்கு என்னன்னா, அவாஅவாளுடைய அந்த வித்தையை ஏதோ விதத்துல சாமர்த்தியமா காசு பண்ணிண்டிருக்கா. இவரை மாதிரி பணம்ங்கிறது ஒரு motiveஆ இருக்காதுங்கிறதே ஜனங்களுக்கு புரியாது. ஸ்வாமிகளுடைய அந்த ஒரு வைராக்கியத்தை படிச்சவா, பணக்காரா புரிஞ்சுக்காம அவரை ஏதாவது needle பண்ணிண்டிருப்பா. ஆனா அவர் என்ன பண்ணுவார்? அவருக்கு பாராயணம் நடக்கணும்கிறதுக்காக இதுக்கெல்லாம் சட்டையே பண்ண மாட்டார். மெதுவா அனுப்பிச்சி விட்டுடுவார். அவர் திரும்பியும் தன்னுடைய ராமாயணத்துக்குள்ள மூழ்கிடுவார். அந்த மாதிரி ரொம்ப sensitive ஆ இருந்து, அவருக்கு இதெல்லாம் புரிஞ்சா கூட இதெல்லாம் பொறுத்துண்டிருந்தார்னா…. உன் பாதம் எப்படி பொறுத்துண்டு இருந்ததுன்னு மூக கவி கேட்கற மாதிரி, இந்த ஸ்லோகத்துக்கும், ஸ்வாமிகளோட நடத்தைக்கும் தொடர்பு இருக்கிற மாதிரி எனக்கு தோணித்து.

யத³த்யந்தம் தாம்யத்யலஸக³திவார்தாஸ்வபி ஶிவே

ததே³தத்காமாக்ஷி ப்ரக்ருʼதிம்ருʼது³லம் தே பத³யுக³ம் ।

கிரீகடை: ஸங்க⁴ட்டம் கத²மிவ ஸுபரௌக⁴ஸ்ய ஸஹதே

முன ீந்த்³ராணாமாஸ்தே மனஸி ச கத²ம் ஸூசிநிஶிதே ॥ 89 ॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இந்த சிவானந்தலஹரி ஸ்தோத்திரத்துலயும் விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம், பணம், படிப்பு இதை கொண்டு பகவானை அடைய முடியாது. பக்திதான் எல்லாத்தை காட்டிலும் பெரிய பதவி. இந்த காலத்துல பதவி ஏதோ ஒரு Assistant Executive Vice President அப்படீன்னா… இதுலேருந்து நான் வந்து Executive Vice President ஆகணும் அப்படீங்கிறதுக்காக நாயா, பேயா உழைச்சிண்டிருப்பா. அந்த மாதிரி இல்லாமல், பகவானுடைய பக்தர்கள் கூட்டத்துல சேரணும்… அப்படீங்கிற அதுதான் நமக்கு வேண்டிய பதவி அப்படீன்னு நினைக்கணும்னு அப்படீங்கிறது இந்த ஸ்லோகத்தினுடைய தாத்பர்யம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ.
Series Navigation<< சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை >>

6 replies on “சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை”

சூக்ஷ்மமான அர்த்தம் என்னன்னா “லக்ஷ்மிபதியான விஷ்ணுவும், சரஸ்வதி நாயகனான பிரம்மாவும் – அதாவது படிப்பும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது! பக்தி ஒண்ணுனாலதான் அடைய முடியும்”. —–

“அக்ஷரம் லக்ஷம் பெரும்” ஹே..மஹாபெரியவா …இந்த மாறாத பக்தியை எங்களுக்கு அனுக்கிரஹம் செய்…ஜெய ஜெய சங்கர …ஹர ஹர சங்கரா.

Very nicely explained. Great explanation by connecting to Thirupalliyezhuchi by Manickavaasagar “Bhuvaniyir poi piravamaiyil Naal Naam” and further connecting to 89th Shlokha of Mooka Pancha sathee. Then connecting to Govinda Damodara Swamigal’s sensitive nature.
The vast knowledge reflects how to connect different shlokhams under different contexts. Exemplary.
A real feast to Read.
Thanks.
Namaskaarams.
DORAISWAMY GANESH

Namashivaya
Sri Swamigals blessings and your accrued punya ,you are endowed with profound knowledge.
it makes one wonder how you could make time to do so many spiritual activities in a day.
Let Parameswara bless you to share more and more nectar with us and bless us to relish it.
Maha Periyava Paadham sharanam.

ஏ பரமேஸ்வரா ,! என்னுடைய பூஜைக்குப் பலமாக எனக்கு நித்ய மோக்ஷ சுகத்தை அளிக்க வேண்டும் அல்லாமல் , நான்முகனாகிய பிரம்மாவாகவோ, விஷ்னுவாகவோ என்னை தாயை செய்து செய்து விட வேண்டாம்.
ஈஸ்வர பூஜைக்கு பிரம்மத்வமும், விஷ்னுத்வமும் சித்திக்கும் என்பதை மறுக்க முடியாது, ஆனாலும் எனக்கு அது ஸ்ரீ பரமேஸ்வரா ஸ்வரூபத்தை க்காண முடியாது ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக முயன்றும் தங்கள் swaroopaththaik காண இயலவில்லை ஆகையால் பிரம்மத்வம், விஷ்னுத்வம் எனக்கு வேண்டாம் என கேட்டுக்கொள்கிரார் ஆசார்யாள்! அதாவது மோக்ஷ சுகம் ஒன்றையே வேண்டுகிறார்மூக பஞ்ச சதியில்.அம்பாளின் பாத மேன்மையும், மேன்மை என்று சொல்லும்போதே தளர்வடையும் மலர்ப் பாதம் , இவ்வாறு தேவர்களின் கிரீடத்தில் உராய்வை தாங்கிக்கொள்கிரது ! ஏகாகிரா சித்தர்களின் ஓடி போன்ற பிருதயத்தில் எப்படி அம்பாள் வீற்றிருக்கிறாள் !
ஸ்வாமிகள் எப்படி.பணம், புகழ் ஆசை அற்று பகவத் தியானத்தில்.மூழ்கி, யார் மனமும்.கோணாமல், ஆனால் தன் வழியிலேயே, எளிமையாய் சத்தியமாய் இருந்து லோகத்துக்கே ஒரு உதாரணமாக இருந்தார் னுப் படிக்கும்போது மனம் நெகிழவைக்கிறது ! பத்தே உருகி நின் பாதத்தில் மனம் பற்றி என்ற அந்தாதிப் பாடல் நினைவு வருகிறது.
அற்புத விளக்கம்,!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.