Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 24, 25 தமிழில் பொருள் (9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 24 and 25)

இன்னிக்கு மஹா பிரதோஷமா இருக்கு. ஒவ்வொரு பக்ஷத்துலயும் இந்த திரயோதசி திதியும், சாயங்கால வேளையும் சேர்ற அந்த பொழுதுக்கு (4 1/2 மணியிலிருந்து 7 1/2 மணி வரைக்கும்) மஹா பிரதோஷம்னு சொல்வா.  அப்போ பார்வதி பரமேசுவராளை ரிஷபாரூடரா தரிசனம் பண்ணிணா எல்லா வரங்களையும் கொடுப்பா அப்படீன்னு… இதை நாம கண்கூடா பார்க்கறோம்.  மஹாபெரியவா சொல்லி, ஒவ்வொரு கோவில்லேயும் இந்த பிரதோஷத்தை விசேஷமா கொண்டாட ஆரம்பிச்சதிலேர்ந்து தேசத்துல அவ்வளவு சுபிக்ஷம், க்ஷேமம், அந்த பிரதோஷ வேளையில அங்க போயி ஸ்வாமி தரிசனம் பண்ணி, அந்த சிவபுராணத்தை சொல்லி மூணு ப்ரதக்ஷணம் பண்றா.  எங்க திருவல்லிக்கேணில காமகலா காமேச்வரர் கோவில்ல, மைலாப்பூர் போனா கபாலீஸ்வரர் கோவில்ல, எல்லா சிவன் கோவில்லயும் இப்ப ப்ரதோஷத்தை ரொம்ப விசேஷமா கொண்டாடறா.  அது அந்த மஹாபெரியவாளோட தபஸ்.  அது நமக்கெல்லாம் பாக்யம், நானே பார்த்துருக்கேன்.  இருவது வருஷத்துல   ஒரு கோயில்ல போயி பிரதோஷ பூஜை பார்க்கறது இல்ல ஆத்துல பிரதோஷ பூஜை பண்றதுங்கிற ஒரே ஒரு காரியம் வெச்சிண்டிருக்கறவா கூட ரொம்ப க்ஷேமமா இருக்கா.  அந்த மாதிரி பிரதோஷ வேளை இன்னிக்கு.  அதனால சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் படிக்கலாம்னு ஞாபகம் வந்தது.  24 வது ஸ்லோகமும் 25 வது ஸ்லோகமும் பார்ப்போம்.  அந்த 25 வது ஸ்லோகத்துல பிரதோஷ வேளையில ஸ்வாமி எப்படி தரிசனம் தருவாரோ அந்த காட்சியினுடைய வர்ணனை. இந்த 24 லுல கைலாசக் காட்சியினுடைய பெருமை.

कदा वा कैलासे कनकमणिसौधे सहगणै-

र्वसन् शंभोरग्रे स्फुटघटितमूर्धाञ्जलिपुटः ।

विभो साम्ब स्वामिन् परमशिव पाहीति निगदन्

विधातॄणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखतः ॥ २४॥

கதா³ வா கைலாஸே கநகமணிஸௌதே⁴ ஸஹக³ணை-

ர்வஸந் ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட: ।

விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந்

விதா⁴த்ரூʼணாம் கல்பாந் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த: ॥ 24 ||

அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம்.

‘கதா³ வா கைலாஸே’ – எப்போது கைலாச பர்வதத்தில்… ‘கநகமணிஸௌதே⁴’ – கனகம்… தங்கமும், மணிகளும் இழைக்கப் பட்ட ஒரு உப்பரிகையில… ‘வஸந்’ – இருந்துகொண்டு… ‘ஸஹக³ணைஹி  வஸந்’ – ப்ரமத கணங்கள்… பரமேசுவரனுடைய பூத கணங்களோடு இருந்துகொண்டு, பரமேசுவரனுக்கு முன்னாடி… ‘ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட:’ – இரண்டு கைகளையும் தலைமேல கூப்பிண்டு… ‘விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந்’ – ‘விபோ⁴’ங்கிற நாமாவளி சிவானந்தலஹரியில நிறைய வாட்டி வர்றது.  ‘விபோ⁴’ன்னா எங்கும் நிறைந்தவர்னு அர்த்தம்.  ‘ஸாம்ப³’ன்னா அம்பிகையோடு கூடினவர்னு அர்த்தம். ‘ஸ்வாமிந்’னா என்னுடைய தலைவரேன்னு அர்த்தம்.  ‘பரமஶிவ’ – அப்படீன்னா பரம மங்களங்களை பண்ணுபவரே… ‘பாஹீ’ – எங்களை காப்பாற்றும் என்று ‘நிக³த³ந்’ – என்று சொல்லிக் கொண்டு… ‘விதா⁴த்ரூʼணாம் கல்பாந்’ – விதா⁴தா ன்னா பிரம்மா. பிரம்மாவினுடைய கல்பங்கள், எத்தனையோ infinity காலம்னு சொல்லணும்.  அவ்வளவு காலத்தையும்… ‘க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த:’ – இந்த மாதிரி கைலாசக் காட்சி கிடைச்சு, பகவானுடைய சன்னிதியில நின்னுண்டு… ‘விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி’ அப்படீன்னு சொல்லிண்டிருந்தா, அப்படி கல்ப காலங்கள் போனாக் கூட தெரியாது.  ஏன்னா பரமேசுவரன் காலகாலன்.  அவனுடைய சன்னிதியில காலம் போறதே தெரியாது.

இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது மஹாபெரியவா, அவருடைய கணங்களோட இருக்கும்போது அவா முன்னாடி போயி அவாளை தரிசனம் பண்ணா என்ன ஆனந்தமா இருக்குமோ, அந்த ஆனந்தம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

சில புண்ணிய சாலிகள் கைலாச யாத்திரை பண்ணி, அந்த பரிக்ரமா ன்னு சொல்லி கைலாசத்தை சுத்தி கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் distanceஅ, அந்த கைலாச மலையையே பிரதக்ஷணம் பண்ணி , அந்த கைலாச மலை அடிவாரத்துல.  அடிவாரம்னா கொஞ்சம் தள்ளி, மானசரோவர்னு ஒரு ஏரி இருக்கு.  அந்த ஏரியில ஸ்நானம் பண்ணி, அந்த கைலாச தரிசனம் பண்றா.  அந்த காலை வேளையில சூரியன் கைலாசத்து மேல படும்போது தங்க மலை மாதிரி அது ஜ்வலிக்கறது. அந்த காட்சி ‘பொன்னார் மேனியன்’ ன்னு சொல்றா. அப்படி சில பாக்யசாலிகளுக்கு அந்த தரிசனமும் கிடைக்கறது. பக்தி இருந்தா அந்த கைலாசக் காட்சி இங்கும் கிடைக்கும்.  அந்த சிவ பக்தி நமக்கு வேணும்னு பெரியவாகிட்ட வேண்டிப்போம்.

அடுத்த ஸ்லோகம்,

स्तवैर्ब्रह्मादीनां जयजयवचोभिर्नियमिनां

गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि ।

स्थितं नीलग्रीवं त्रिनयनमुमाश्लिष्टवपुषं

कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ॥ २५॥

ஸ்தவைர்ப்³ரஹ்மாதீ³நாம் ஜயஜயவசோபி⁴ர்நியமிநாம்

க³ணாநாம் கேலீபி⁴ர்மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³ ।

ஸ்தி²தம் நீலக்³ரீவம் த்ரிநயநமுமாஶ்லிஷ்டவபுஷம்

கதா³ த்வாம் பஶ்யேயம் கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும் ॥ 25 ||

இது அந்த பிரதோஷ வேளையில ஸ்வாமி தரிசனம்.. ரிஷபாரூடராக .. ‘ உமாஶ்லிஷ்டவபுஷம்’ – உமா தேவியை அணைத்துக் கொண்டு… ‘மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³’- கொழுத்து விளங்கும் காளையினுடைய திமில்… ‘ககுதி³’ன்னா திமில்… அந்த திமில் மேல அமர்ந்திருக்கிறார்…’நீலக்³ரீவம் ‘ – கழுத்து நீலமா இருக்கு.  அந்த பிரதோஷ வேளையில ஆலகால விஷத்தை பானம் பண்ணி உலகத்தை… மூவுலகத்தையும், வெளியிலையும், உள்ளும் இருக்கிற உலகங்களை எல்லாம் காப்பாற்றினதுதான் அந்த மஹா பிரதோஷத்துடைய பெருமை.  அதை நினைச்சு பகவான்கிட்ட எல்லாரும் நன்றியோடு ஸ்தோத்ரம் பண்ற அந்த வேளை.  அந்த ‘கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும்’ – கையில் மானும், பாதி வெட்டி இருக்கிற கோடாரி, ‘க²ண்ட³பரஶு’ இதையும் வெச்சிண்டிருக்கார்.   ‘ப்³ரஹ்மாதீ³நாம் ஸ்தவைஹி’ – பிரம்மா முதலிய தேவர்கள் எல்லாரும் அவரை ஸ்தோத்ரம் பண்றா…’நியமிநாம் ஜயஜயவசோபி⁴ஹி’ – நியமமா இருக்கக் கூடிய சிவ பக்தர்களான ரிஷிகள் ‘ஜய ஜய’ அப்படீன்னு அவரை கொண்டாடறா… ‘க³ணாநாம் கேலீபி⁴ஹி’ –  ப்ரமத கணங்கள் பரமேசுவரன் முன்னாடி நடனம் ஆடறா… ‘ஹது நயநம் நீலக்³ரீவம் உமாஶ்லிஷ்டவபுஷம்’… ‘கதா³ பஶ்யேயம்’ – நான் எப்போதும் இந்தக் காட்சியை காண்பேன்னு சொல்றா.  ஒவ்வொரு பிரதோஷத்துலயும் ஒவ்வொரு கோவில்லையும் நாம இந்த காட்சியை, பார்க்கும்படி மஹாபெரியவா பண்ணியிருக்கா.   இது நம்முடைய உள்ளுக்குள்ளேயும் இந்த காட்சி எப்பொழுதும் கிடைக்கக் கூடிய அந்த பாக்யத்தை தரணும்.

பிரதோஷ வேளையில கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ‘சிவசங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே’… ‘சிவசங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே’ அப்படீன்னு ஜபிக்க சொல்வார்.  அது குடும்பத்துல ஆனந்தமும், குழந்தைகளுடைய கல்யாணமும், எல்லாம் நடக்கும்னு அவர் சொல்லி, நானே பார்த்திருக்கேன்.  என்னுடைய நண்பர்கள், உறவினர்கள்னு எல்லார் சுற்றத்துலயும் இந்த மாதிரி பார்வதி பரமேசுவராளை பிரதோஷ வேளையில பூஜை பண்றது அபார புண்யம்  அப்படீங்கிறத நான் பார்த்திருக்கேன்.  நமக்கும் அந்த பார்வதி பரமேசுவராள்கிட்ட பக்தி வரணும்னு வேண்டிப்போம்.

ஸ்தவைர்ப்³ரஹ்மாதீ³நாம் ஜயஜயவசோபி⁴ர்நியமிநாம்

க³ணாநாம் கேலீபி⁴ர்மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³ ।

ஸ்தி²தம் நீலக்³ரீவம் த்ரிநயநமுமாஶ்லிஷ்டவபுஷம்

கதா³ த்வாம் பஶ்யேயம் கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும் ॥ 25 ||

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ.
Series Navigation<< சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 26வது ஸ்லோகம் பொருளுரை >>

6 replies on “சிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை”

உன்னதமான இந்த பிரதோஷ தினத்தன்று …தேனம்பாக்கம் மஹாபெரியவா சந்நதிக்கு முன் ஒரு ருத்ராக்ஷ மரக்கன்றை நடும் பாக்கியமும்..நேற்று வெள்ளிக்கிழமை நம் அம்மா காமாக்ஷி கோவிலில் ..பூவோடு கூடிய செண்பக மரக்கன்றும்,மனோரஞ்சித மரக்கன்றும் நடும் பாக்கியமும் பெற்றேன்..எல்லாம் நம் மஹாபெரியவாளின் ஆசிர்வாதம்.

கைலாச யாத்திரை இரண்டு முறை பரிக்ரமா செய்யும் பாக்யம் பகவான் அருளால் கிடைத்தது. முடிந்தவர்கள் எல்லாம் இதை மேற்கொள்ள வேண்டும். சீன அரசு எவ வளவு நாள் இதை அநுமதிப்பார்கள் என தெரியாது. ஆதலால் தள்ளிப் போடாமல் ஆரோக்யமாக இருக்கும் பொழுதே போக வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஈசன் அருள் அனைவருக்கும் உண்டு.

மிக அழகான ஸ்லோகம் ! ஸதா ஈஸ்வர தியானம் செய்பவருக்கு மானசீகமாக கைலாச தர்சனம் கிடைக்கும் ! பெரியவா இருக்கும் இடமே கைலாசம் தானே ! கணபதி சொன்னார்போல் பெரியவா அவரோட கனங்களோட இருக்கும் காட்சி கைலாசத்தை ஒத்ததாகவே இருக்கும் ! சனி பிரதோஷம் என்றால் கேட்கவே வேண்டாம் .பிரதோஷம் அன்று பிரதோஷம் மாமா தரிசனம் செய்ய மிகவும் கொடுத்து வைத்தவர் சாக்ஷாத் பரமேஸ்வரா தரிசனம் கண்டு களித்தவர் பெரியவா ரூபத்தில் ,! சிவ தாண்டவம் ஆடிபெரியவா பல முறை மாமாவை மகிழ்வுற ச் செய்திருக்கிறார் பெரியவா!
இந்த ஸ்லோகத்தில் ,கைலாசத்தில் ஸ்ரீ சாம்ப பரமேஸ்வரனுக்கு எதிரில், பல பிரதம கணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு, சிரசில் இரண்டு கைகளையும் குவித்து ஏ விபோ! ஏ ஸாம்ப ஏ ஸ்வாமின் சே பரமசிவ என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பிரார்த்திப்பதால் உண்டாகும் ஆனந்தத்திற்கு ஈடு இணை உண்டோ? அந்த அனுபவத்தில் திளைக்கும் போது கல்ப காலம் கூட ஷணம் போல்.தோன்றும் என ஆசார்யாள் இங்கு சொல்கிறார் !
அத்தகைய அனுபவம் பெரியவா சந்நிதியில் கிடைக்கும்,,!!
பிரம்மாதி தேவர்கள் ஒரு புறம் ஸ்தோத்திரம் செய்ய ரிஷிகள் ஜய கோஷமிட , சிவ கணங்கள் நர்த்தனம் பண்ண, ரிஷபாரூடரான சங்கரணை , முக்கண்ணனை தரிசனம் காலம் எப்போதோ என ஆசார்யாள் சொல்கிறார்!!
அவரே ஈஸ்வர அவதாரமானாலும் மனித ரூபத்தில் தன்னை சாதாரண பிரஜையாக நினைத்து சொல்வது நமக்கு எல்லாம் ஞானம் வரவே என்று தோன்றுகிறது .
ஜய ஜய சங்கரா….

கைலாசத்தில் ஸ்வர்ண மணிமயமான மாளிகையில் பரமேஸ்வரன் எதிரில் பல பிரதம கணங்களுடன் வீற்றிருக்கும் சிவனுடைய காட்சி இங்கு வர்நிக்கப் படுகிறது.
பிரம்மாதி தேவர்கள் தோத்திரம் செய்ய, ரிஷிக்கள் ஜய கோஷமிட , கணங்கள் நர்த்தனம் செய்ய, மிக்க மகிழ்ச்சியுடன் வருஷாபாரூடரான முக்கண்ணனாய சிவனைக் கண்டு
மகிழ்வடையும் காலம் எப்போது என ஆசார்யாள் எதிர்பார்த்து.காத்திருப்பது இங்கு விவரிக்கப் படுகிறது!/ .
இதனை தன் இனிய குரலில் எளிமையாக யாவருக்கும்.விளங்கும்.படின் விவரித்துள்ளார் கணபதி !
கைலாயக்.காட்சி கண்முன் விரிகிறது!
ஜய ஜய சங்கரா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.