கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 5 and 6)
கணேச பஞ்சரத்னத்ல நாலு ஸ்லோகங்கள் பார்த்தோம். இன்னிக்கு அஞ்சாவது ஸ்லோகம். ‘பஞ்சரத்னம்’ – ‘அஞ்சு ஸ்லோகங்கள்’. அப்புறம் பலஸ்ருதி, ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ரெண்டையும் பார்க்கலாம்.
नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
“தம் ஏக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்” – ‘ஸந்ததம்’ – இடையறாது எப்பொழுதும் அந்த ஏக தந்தரையே ‘விசிந்தயாமி’ – நான் சிந்தனை பண்றேன், த்யானம் பண்றேன் அப்படின்னு முடிக்கிறார்.
அந்த கணபதி எங்க இருக்கார்னா ‘ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்’ – யோகிகளுடைய ஹ்ருதயத்தில் நிரந்தரமாக வசிப்பவர். யோகிகளுடைய ஹ்ருதயத்ல பரம்பொருள் ஒளி வடிவமாக இருக்கார். அந்த பரம்பொருள் கணபதி தான், அப்படின்னு சொல்றார்.
இந்த ‘ஏக தந்தம்’ னா ஒரு தந்தம். இன்னொரு தந்தத்தை அவர் உடைச்சார். எதுக்கு உடைச்சார்? ஒண்ணு ரெண்டு கதை இருக்கு. ஆனா நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கதை, மஹாபாரதம் எழுதறதுக்காக உடைச்சார். அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். வியாச பகவான், அந்த மஹாபாரதத்தை ஒரு லக்ஷம் ஸ்லோகங்கங்கள், அது முழுக்க அவர் கவனம் பண்றார்! ஆனா எப்படி எழுதறது இதை, அப்படின்னு சொன்னபோது, பரமேஸ்வரன், ‘நீ கணபதியை கேளு’ங்கறார். கணபதியை கேட்ட போது, ‘நான் எழுதறேன். ஆனா நீங்க நிறுத்தாம சொல்லிண்டே போகணும்! நீங்க நிறுத்திட்டேள்னா, என்னோட flow தடை ஆயிடும். அப்புறம் நான் எழுத முடியாது’, அப்படிங்கறார் கணபதி.
‘ஆஹா! நான் நிறுத்தாம சொல்றேன்’ன்னு சொல்றார். அப்போ வியாச பகவான் சொல்லிண்டே போறார். பிள்ளையார் அதை எழுதிண்டே போறார். அப்படி ஒரு லக்ஷம் ஸ்லோகத்தையும் ஒரு sittingல எழுதி முடிச்சா ரெண்டுபேருமா! அதுல, இவர் கவனம் பண்ணனுமோல்லியோ? வியாசர், அதுக்கு அவர் என்ன பண்ணுவாராம்… முதல்ல வியாசர் சொன்னாராம், ‘நான் நிறுத்தாம சொல்லிண்டே போறேன், ஆனா நீங்க அர்த்தம் புரிஞ்சுண்டு தான் எழுதணும்!’, அப்படின்னாராம். பிள்ளையாரும் சரின்னு சொன்னாராம். ஆயிரம் ஸ்லோகத்துக்கு ஒரு ஸ்லோகம் அர்த்தம் ரொம்ப easyயா கண்டுபிடிக்கமுடியாத ரொம்ப கஷ்டமான ஒரு ஸ்லோகம் வியாசர் சொல்லிடுவாராம். அப்போ பிள்ளையார் அதை ஒரு நிமிஷம் யோசிச்சு, அர்த்தம் புரிஞ்சுண்டு எழுதுவாராம். அதுக்குள்ள இவர் அடுத்த ஆயிரம் ஸ்லோகத்தை மனசுல கவனம் பண்ணிடுவாராம்! அப்படின்னு ஒரு கதை இருக்கு.
அப்படி வியாசர் சொல்ல சொல்ல பிள்ளையார் எழுதிண்டே வரார். அப்போ அவருடைய எழுத்தாணி உடைஞ்சுபோச்சாம். ஆனா, ‘நிறுத்தாம எழுதுவேன்’னு சத்தியம் பண்ணியிருந்தார் இல்லையா, அதனால தன்னுடைய தந்தத்தையே உடைச்சு எழுதிண்டே போனார், நம்முடைய மஹாபாரதத்துக்காக! அவ்ளோ பெரிய த்யாகம்! யானைகளுக்கு, தந்தம்ங்கறது ரொம்ப இஷ்டமான ஒரு பகுதி. அதை கூட நினைக்காம, டக்குனு அதை உடைச்சு நமக்கு மஹாபாரதம் எழுதி குடுத்தார் கணபதி.
இன்னொரு கதை, இந்த கஜமுகாசுரன், ‘எந்த ஒரு ஆயுதத்தினாலேயும் எனக்கு மரணம் வரகூடாது!’ன்னு வேண்டிண்டு இருக்கான். அதனால அவன் மேல தந்தத்தை உடைச்சு ஆயுதமா போட்டு, அவனைப் பிளந்தார். அதுக்கப்புறம் அவன் மூஷிகமா வந்தான். அந்த மூஷிகத்தை கர்வத்தை அடக்கி தனக்கு வாகனமா வெச்சுண்டார் அப்படின்னு ஒரு கதை இருக்கு.
“தம் ஏக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்” ன்னு முடியறது.
‘நிதாந்த காந்த தந்த காந்திம்’ – ‘தந்த காந்தி’ – இவருடைய அந்த தந்ததோட காந்தி எல்லையற்ற காந்தியா இருக்கு, இவருடைய தந்தம் அவ்ளோ பளிச்சுனு இருக்குன்னு சொல்றார்.
‘அந்த காந்த காத்மஜம்’ – மார்கண்டேயனுக்காக அந்தகனையே எவர் கொன்றாரோ, எமனுக்கும் எமனான பரமேஸ்வரனுடைய, ‘ஆத்மஜம்’ – பிள்ளையான கணபதி.
‘அசிந்த்யரூபம்’ – இப்படி என்று வர்ணித்துவிடமுடியாத ஒரு உருவம், மனசுல நினைச்சு நினைச்சு பார்க்கவேண்டிய ஒரு உருவம்.
‘அந்த ஹீனம்’ – முடிவே அற்றவர். பரமாத்மாவாச்சே!
‘அந்தராய க்ருந்தனம்’ – தன்னுடைய பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைப் போக்குபவர் அப்படின்னு அர்த்தம்.
இந்த ‘க்ருந்தனம்’, ‘சர்வணம்’ அப்படிங்கற வார்த்தைகளெல்லாம் இந்த யானை பண்ணகூடிய சேஷ்டைகளுக்கு இருக்கற ஸமஸ்க்ருத வார்த்தைகளாம்! அப்படி ஒரு குறிப்பு போட்டிருந்தா. அந்த மாதிரி இடையூறுகளைப் போக்குபவர். யானை அப்படின்னவுடனே ‘மூகபஞ்சசதி’ல ஒரு ஸ்லோகம் இருக்கு, காமக்ஷியினுடைய கடாக்ஷத்தை, ஒரு யானையா வர்ணிக்கிறார். 7வது ஸ்லோகம், கடாக்ஷ சதகம்.
ताटाङ्कमौक्तिकरुचाङ्कुरदन्तकान्तिः
कारुण्यहस्तिपशिखामणिनाधिरूढः ।
उन्मूलयत्वशुभपादपमस्मदीयं
कामाक्षि तावककटाक्षमतङ्गजेतन्द्रः ॥7॥
தாடாங்கமௌக்திகருசாங்குரத3ந்தகாந்தி:
காருண்யஹஸ்திபஶிகா2மணிநாதி4ரூட4: |
உன்மூலயத்வஶுப4பாத3பமஸ்மதீ3யம்
காமாக்ஷி தாவககடாக்ஷமதங்க3ஜேந்த்3ர: ||7||
அப்படின்னு சொல்றார். அதாவது, காமக்ஷியினுடைய கடாக்ஷம் ஒரு ‘மதங்க3ஜேந்த்3ர:’ – ஒரு யானை அரசனைப் போல இருக்கு. யானைனா? – இவர் கூட ‘நிதாந்த காந்த தந்த காந்திம்’ ங்கறாரே , அந்த தந்த காந்தி யானை வரும்போது, பெரிய தந்தங்கள் பளிச்சுன்னு தெரியும். இந்த யானையோட தந்த காந்தி என்னன்னா, காமக்ஷியினுடைய கடாக்ஷத்தை யானைங்கறார். கடாக்ஷம்னா ‘கண்ணு கிடையாது, கண்ணுலேர்ந்து வந்த அந்த பார்வை’, அதை ஒரு யானைன்னு சொல்றார். அந்த யானைக்கு, ரெண்டு காதுலையும் முத்து போட்டுண்டுருக்கா (அம்பா) , அந்த அம்பாளுடைய, ‘மௌக்திக ருசாங்குர த3ந்தகாந்தி’ – முத்து தாடங்கத்துலேர்ந்து வர்ற அந்த ஒளி தான், தந்தம் போல இருக்கு.
அந்த காமக்ஷினுடைய கடாக்ஷம் என்ற யானை, ‘உன்மூலயது அஶுப4பாத3பம் அஸ்மதீ3யம்’. ‘மதங்க3ஜேந்த்ர:’ – மதம் கொண்டு வர்ற யானைங்கறதால மரத்தையெல்லாம் பிடுங்கி போடுமோல்லியோ? ‘அஸ்மதீ3யம்’ . எங்களுடைய ‘ அஶுப4பாத3பம்’ – எங்களுக்கு வரக்கூடிய இடையூறுகள், தீமைகள் என்ற மரத்தை, ஹே காமாக்ஷி! உன்னுடைய கடாக்ஷம்ங்கற யானை, ‘உன்மூலயது’ – வேரோடு பிடுங்கி போட்டு விடட்டும் அப்படிங்கறார்.
ஆனா யானைனா அதுக்கு ஒரு பாகன் இருப்பானே! இந்த காமாக்ஷி கடாக்ஷம்ங்கற யானைய செலுத்தற பாகன் யாருன்னு கேட்டா, அவன் சாதாரண ஹஸ்திபன் கிடையாது. ‘ஹஸ்த்திப:’னா பாகன்னு அர்த்தம். ‘ஹஸ்திபஶிகா2மணிநா அதி4ரூட4:’ – அவன் ஹஸ்திப சிகாமணி! அவன் உட்கார்ந்து ஓட்டறான் இந்த யானையை! அது யாருன்னா, ‘காருண்ய நாம ஹஸ்திபஶிகா2மணிநா அதி4ரூட4:’ – கருணைதான். ‘காமாக்ஷியினுடைய கடாக்ஷம் யார் மேல பாயும்? யாரோட தீமைகளை போக்கும்?’னா, யாரிடத்துல காமாக்ஷிக்கு கருணை ஏற்படறதோ, அவாளுடைய தீமைகளை, விக்னங்களை, காமாக்ஷி கடாக்ஷம்ங்கற, – ‘கஜேந்தி3ர:’ ன்னு சொல்றபோது, பிள்ளையார் னு தோணறது, ஏன்னா, ‘விக்ன விநாயகர்’ன்னு அவருக்கு தான் பேரு. இந்த ஸ்லோகம் ஞாபகம் வந்தது, ‘அந்தராய க்ருந்தனம்’ அப்படிங்கறதை பார்த்தபோது.
அந்த யோகிகளும், ‘ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்’ யோகிகளுடைய ஹ்ருதயத்தில நிரந்தரமா வசிக்கக்கூடிய இந்த ‘ஏக தந்தம் விநாயகம் அஹம் சந்ததம் சிந்தயாமி’ – இடையறாது நான் சிந்தனை பண்றேன் அப்படின்னு சொல்றார். இது கடைசி ஸ்லோகம்.
இந்த பிள்ளையாரை எத்தனையோ யோகிகள், எத்தனையோ விதமா சிந்திக்கறா! நமக்கு இந்த மூகபஞ்சசதில ஒரு ஆசை இருக்கறதுனால, மூககவி எப்படி சிந்திக்கறார்ன்னு ஒரு ஸ்லோகம் சொல்றேன். 42வது ஸ்லோகம் மந்தஸ்மித சதகம்.
कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरा-
नापीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः ।
ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया
सूनुसुते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥42॥
காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீம் தவ ப4ஜே யஸ்யாஸ்த்விஷாமங்குரா-
நாபீனஸ்தனபானலாலஸதயா நிஶ்ஶங்கமங்கேஶய: |
ஊர்த்4வம் வீக்ஷ்ய விகர்ஷதி ப்ரஸ்ருʼமரானுத்3தா3மயா ஶுண்ட3யா
ஸூனுஸுதே பி3ஸஶங்கயாஶு குஹனாத3ந்தாவலக்3ராமணீ: || 42 ||
காமக்ஷினுடைய மடியில படுத்துண்டு கணபதி ஸ்தன்யபானம் பண்ணிண்டு இருக்காராம். அப்போ அம்பாளுடைய புன்சிரிப்பு, அதை நிமிர்ந்து பார்த்துட்டு, அது ஏதோ தாமரை தண்டு (ன்னு நினைச்சிண்டு), யானைகளுக்கு இந்த தாமரை தண்டு ரொம்ப பிடிக்குமாம். குளத்துக்குள்ள போனா, அந்த தாமரை தண்டு வெள்ளையா இருக்கும். அதை ரொம்ப விரும்பி சாப்பிடும் அப்படின்னு ஒரு ஐதீகம். அதனால அந்த புன்சிரிப்பு வந்து வெள்ளைவெளேர்ன்னு இருக்கு. அதை இரு தாமரை தண்டோன்னு நினைச்சிண்டு , தன்னுடைய தும்பிக்கையால துழாவறார். அந்த, ‘ஸ்மிதமஞ்ஜரீம் தவ பஜே’ – ‘அந்த மந்தஸ்மிதத்தை நான் பஜிக்கிறேன்!’, அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இந்த கணேச பஞ்சரத்னம், அஞ்சு ஸ்லோகங்கள், ஒவ்வொண்ணும் ரத்னம்! இந்த பஞ்சரத்னத்துக்கு ஒரு பலஸ்ருதியும் இருக்கு,
महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥६॥
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்ட் பூதிமப்யுபைதி ஸோசிராத்
இந்த கணேசரை, ‘ஹ்ருதி ஸ்மரன்’ – மனசுல த்யானம் பண்ணிண்டு, இந்த பிள்ளையாரோட ரூபம், இருக்கறதுக்குள்ள easyயா மனசுல நிறுத்தக்கூடிய ஒரு ரூபம். அதுவும், இந்த ஸ்லோகத்தையும் படிச்சு, விநாயகர் அகவலையும் படிச்சா,
‘சீதக்களப செந்தாமரை பூம்பாதச்சிலம்பு பல இசை பாட’ ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து வரில, அந்த பிள்ளையாரோட உருவத்தை ரொம்ப அழகா ஔவைப் பாட்டி வரைஞ்சுருப்பா , அதை easyயா மனசுல நிறுத்திக்கலாம்.
அந்த கணேசரை மனத்தில் நிறுத்தி, ‘யஹ அன்வஹம்’ – எவனொருவன் தினமும் நிறுத்தி, ‘ப்ரபாதகே’ – விடியற்காலம்பர, இந்த மஹாகணேச பஞ்சரத்னத்தை, ‘ப்ரஜல்பதி’ – ஜபிக்கிறானோ, அவன் ‘அரோகாதாம்’ – அவனுக்கு உடம்புல எந்த வியாதியும் வராது! ‘அதோஷதாம்’ – அவனுடைய தோஷங்களெல்லாம் போய்டும்! ‘ஸுஸாஹிதீம்’ – ‘ஸுஸாஹிதீம்’ங்கறதுக்கு, நல்ல மனைவி அமைவாள் அல்லது நல்ல கணவன் அமைவான்னு அர்த்தம் போட்டிருக்கா, ‘ஸுபுத்ரதாம்’ – நல்ல குழந்தைகள் இருப்பா, ‘ஸமாஹித ஆயு:’ – தீர்க்காயுஸா இருப்பான், ‘அஷ்டபூதிம் அப்யுபைதி’ – எட்டு விபூதிகள்னு இருக்கு, அதாவது கண்ணுக்கு தெரியாம ஆறது, பெரிய உருவமாறது, ரொம்ப லேசாறது, ரொம்ப குண்டாறது, ஆகாசத்துல பறக்கறது, அந்த மாதிரி, அணிமா, கரிமா, லகிமா அப்படில்லாம் இருக்கு, அந்த மாதிரி விபூதிகளெல்லாம் ‘அப்யுபைதி ஸோசிராத்’ – அவனுக்கு வெகு விரைவில் கிடைக்கும் அப்படின்னு ஒரு பலஸ்ருதி சொல்லி இருக்கார்.
இந்த கணேச பஞ்சரத்னம், ஒரு வாட்டி நான் சொல்லிட்டு பூர்த்தி பண்ணிக்கறேன்.
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாசி தேப தைத்யகம் |
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் || 1 ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க்திக பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் |
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் || 2 ||
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஷ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
நிதாந்த காந்தி தந்த காந்தி மந்த காந்தி காத்மஜம் |
அசிந்த்ய ரூபமந்த ஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் || 5 ||
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்ட் பூதிமப்யுபைதி ஸோசிராத் || 6 ||