Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

இந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப  ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன்.

முதல் ஸ்லோகம்,

तपस्स्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम्

नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् १॥

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்³விதா³ம் வரம்

நாரத³ம் பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் 1

‘நாரத பகவான்கிட்ட தபஸ்வியான வால்மீகி முனிவர் இவ்வாறு கேட்டார்’ அப்படீன்னு ஆரம்பிக்கிறது. நாரத பகவானுக்கு 4 அடைமொழிகள்.தபஸ்வாத்யாய நிரதம்’,வாக்³விதா³ம் வரம்’, ‘முனிபுங்கவம்’ அப்படீன்னு. 4ன்னு ஏன் சொன்னேன்னாதபோ நிரதம்’ , ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக்³விதா³ம் வரம்’, ‘முனிபுங்க³வம்’.

தபஸ்அப்படீங்கிறதுக்கு நமக்கு comfort zoneல இருந்து வெளில வர்றது அப்படீன்னு ஒரு அர்த்தம் வெச்சுக்கலாம். நமக்கு புலன் இன்பங்கள், இந்த உலக வாழ்க்கை ரொம்ப சௌக்யமா இருக்கு. அதுல இருந்து மனசை திருப்புறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே ஒரு penanceஆட்டம் இருக்கு. அதனால அப்படி ஒரு அர்த்தம் வெச்சுக்கலாம்தபஸ்’க்கு.

ஸ்வாத்யாயம் அப்படீன்னா, அப்படி மனசை திருப்பினா, அந்த மனசுக்கு எதாவது feed பண்ணனும் இல்லையா? அந்த மாதிரி அதுக்கு கொடுக்கறது தான் ‘பகவத் பஜனம்’. அந்த கார்யம் தான் ஸ்வாத்யாயம்‘.

அப்படிதபஸ்’ஸையும்ஸ்வாத்யாய’த்தையும் ரதி’யோட ரொம்ப சந்தோஷத்தோட பண்றவர் இந்த நாரதர், நாரத முனிவர். அப்படி உலக விஷயங்கள்ல இருந்து மனசை எடுக்கறதயும், பகவானுடைய சரிதத்துல மனசை வெக்கறதிலேயும் ரொம்ப ‘நிரதம்’. ‘ரதம்ன்னா ரொம்ப சந்தோஷப்படுபவர். ‘நிரதம்ன்னா எப்போவும் அதிலேயே ரமித்து இருப்பவர்.

‘வாக்³விதா³ம் வரம்’ – அப்படி தான் அத்யயனம் பண்ண அந்த பகவானுடைய சரிதத்தை அழகா எடுத்து சொல்லவும் தெரிஞ்சவர். அதனால நமக்கு வாக்குங்கிற ஒரு  faculty பகவான் எதுக்கு கொடுத்திருக்கார்னா, பகவானுடைய கதையைப் பேசறதுக்குதான். அதைப் பண்றதுல ரொம்ப சிறந்தவர் அவர். ‘வாக்³விதா³ம் வரம்’ – எப்போவும் அதை மட்டும் தான் பேசுவார்.

‘முனிபுங்க³வம்’ – மௌனமா இருக்கிறவர். மௌனமாக இருப்பவர்களுக்குள்ள ரொம்ப ஸ்ரேஷ்டர் – ‘புங்க³வம்’ அப்படீன்னு சொல்றார். அப்போ, பகவத் விஷயம் பேசறது மௌன பங்கமாகாது. நான் பார்த்திருக்கிறேன். கடம்பவன சுந்தரம் அந்த மாதிரி சில பேரெல்லாம் sunday  மௌனமா இருப்பார். ஆனா பஜனையில கலந்துப்பார். திருப்புகழ் பாடுவார், அபங்கங்கள் பாடுவார். அது மௌன பங்கம் கிடையாது.  அப்படி பகவானை பேசறது மௌன பங்கம் கிடையாது. அதை தவிர வேற எதுவுமே பேச மாட்டார் இவர். அதனாலமுனிபுங்கவ:’.

இப்பேற்ப்பட்ட நாரத பகவான் கிட்ட இந்த நாலும், புலன்களை ஒறுத்து, பகவானுடைய விஷயங்களைத் தானே ரொம்ப பேசி, அதை ரொம்ப ரொம்ப அழகா மத்தவாளுக்கு எடுத்து சொல்லி, அதை தவிர வேற எந்த பேச்சுக்கும் இடம் கொடுக்காம இருக்கறது, அப்படீங்கிற இந்த நாலுத்தையும் சொல்லும் போது, எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், என் சத்குருநாதரை நினைக்காம போகவே முடியாது. நான் பார்த்த அவருடைய 55 வயசுலேர்ந்து 75 வயசு கடைசி காலம் வரைக்கும், இதேதான் அவர்.  வேறு எதுவுமே அவரை பத்தி ஞாபகம் இல்லை. அப்படி பகவானுடைய கதைகள்ல ரமிச்சு அதையே பேசிண்டு இருந்தவர். அப்படியொரு குரு கிட்ட இருந்து இந்த வால்மீகி பகவான், ராமாயணத்தை கிரஹிச்சுண்டு, ராம கதையை தெரிஞ்சுண்டு அப்புறம் அவர் விஸ்தாரமா காவியத்தைப் பண்ணணும்.

வேத3 வேத்3யே  பரே பும்ஸி ஜாதே  3ஸரதாத்மஜே |

வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியில ராமனா அவதாரம் பண்ண உடனேவேதம், வால்மீகி முனிவர் வழியாக ராமாயணமாக வெளிவந்துவிட்டது. வேதமே தான் ராமாயணம். ராமாயணமே வேதம். அப்படீங்கிறத பகவானுடைய திருவுள்ளம். இந்த மாதிரி, வேதம் ராமாயணமா வெளிவரணும்னு. அத, ஒரு குரு முகமாக வால்மீகி முனிவருக்கு உபதேசம் பண்ணி, அவர் மூலமாக அந்த காவியம் வெளி வரணும். அதனால நாரதர் அங்க வந்து சேர்ந்தார். நாரதரைப் பார்த்தவொடனே, பூஜை பண்ணினார் வால்மீகி. இவரும் தபஸ்வீ. ‘இவர் என்ன தபஸ் பண்ணினார்?’னா ராம நாம ஜபம் தான். புற்று மூடிய நிலையில ராம நாமத்தை ஜபிச்சிண்டிருந்தார் இல்லையா! அதுதான் அவர் பண்ண தபஸ்.

அதனால் அவர் கேட்கிறார் – ‘நாரத³ம் பரிபப்ரச்ச²’  – இந்த கேள்வி கேக்கறார் என்ன கேட்கிறார்?

को न्वस्मिन्साम्प्रतं लोके गुणवान्कश्च वीर्यवान्
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः || ||

கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |

தர்மக்ஞஸ்ச: க்ருக்ஸ்: த்யவாக்ய: த்ருடவிரத: ||

‘கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே’ – ‘ஸ்மின் லோகே’ – இந்த லோகத்தில், ‘சாம்ப்ரதம் லோகே’ – தற்காலத்தில், in the present world அப்படீன்னு அர்த்தம். குணவான் அப்படீன்னு ஆரம்பிச்சு ஒரு list of attributes, குணங்களை சொல்லி இதெல்லாம் ஒரு மனுஷன் கிட்டயே இருக்க முடியுமா? நீங்க அந்த மாதிரி யாரையானும் பாத்திருக்கேளா அப்படீன்னு கேட்கறார். அது என்னென்னன்னா,

‘குணவான்’சகல கல்யாண குணங்களும் இருக்கணும்.

‘வீர்யவான்’ – ‘வீர்யம்’ன்னா இரண்டு அர்த்தம். ஒண்ணு, யுத்தத்தில காண்பிக்கிற வீர்யம். இன்னொண்ணு, புலன்களை அடக்கினதுனால அந்த வீர்யத்தை தனக்குள்ளே வெச்சிக்கறவனுக்கு ‘வீர்யவான்’னு பேரு.

‘தர்மக்ஞஸ்ச’தர்மங்களை அறிந்தவர்.

‘க்ருதக்ஞஸ்ச’செய்த நன்றியைப்  பாராட்டுபவர்.

த்யவாக்ய:’ பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோவாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

‘த்ருடவிரத:’ – வ்ரதங்களை எந்த கஷ்டம் வந்தாலும் காப்பாற்றுபவர். 14 வருஷம் காட்டுல இருப்பேன்னு ஒரு வ்ரதம், தபஸ் எடுத்துண்டார். எத்தனை challenge வந்தது அவருக்கு. இங்க வந்து பரதனைக் கூட்டிண்டு படையைக்  கூட்டிண்டு போலாமே! அவர் அந்த காட்டுல தான் இருப்பேன்னு காட்டுல இருந்தார் – ‘த்ருடவிரத:’

चारित्रेण को युक्तः सर्वभूतेषु को हितः
विद्वान्कः कः समर्थश्च कश्चैकप्रियदर्शनः || ||

சாரித்ரேண கோ யுக்த: ர்வ பூதேஷு கோ ஹித: |

வித்வான் : : மர்தஸ்ச:   கச்யைக ப்ரிய தர்சன: ||

‘சாரித்ரேண கோ யுக்த:’ – நல்ல ஒழுக்கம். ‘சரித்ரம்’னா ஒழுக்கம்ன்னு பேரு. நம்முடைய ஆசாரங்கள். அவாவாளுடைய ஆசாரங்கள். ப்ராமணன்னா அவனுடைய ஆசாரம். க்ஷத்ரியன்னா அவனோட ஆசாரம். அப்பா, தாத்தா பண்ணிண்ட அந்த வழிலயே வர்றது ‘சரித்ரம்’னு பேரு – ‘சாரித்ரேண கோ யுக்த:’

ர்வ பூதேஷு கோ ஹித:’ – எல்லோரும் நன்னா இருக்கணும்ன்னு நினைக்கறதுக்குப்ஸர்வ பூத ஹித:’னு பேர். அந்த மாதிரியும் இருக்கணும். ‘வித்வான்’ – நல்ல படிப்பு இருக்கணும். படிப்புனால ஏற்பட்ட விநயம். அப்படியெல்லாம் நிரம்பி இருக்கணும்.

‘க: மர்தஸ்ச:’ – ‘மர்த:’னா வல்லமை அல்லது  திறமை. மத்தவாளால பண்ண முடியாத காரியத்தை பண்ணக்கூடிய திறமைக்கு ‘சாமர்த்யம்’னு பேரு.

‘கச்யைக ப்ரிய தர்சன:’ – பாக்கறவாளுக்கெல்லாம் அவன்கிட்ட ப்ரியம் ஏற்படணும். அந்த மாதிரி ஒரு ரூபமா இருக்கணும்.

आत्मवान्को जितक्रोधो द्युतिमान् कः अनसूयकः
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे || ||

ஆத்மவான் ஜிதக்ரோத: த்யுதிமான் கோனஸூயக: ||

கஸ்ய பிப்யதி தேவா: ஜாதரோஷஸ்ய சங்க்யுகே ||

‘ஆத்மவான்’மனதை அடக்கினா இருக்கணும்.

‘ஜிதக்ரோத:’கோபத்தை அடக்கினா இருக்கணும்.

‘த்யுதிமான்’ஒளியோடு கூடியவனாக இருக்கணும்.

‘கோனஸூயக:’ஸூயை இருக்க கூடாது. ‘ஸூயை’னா பொறாமை.  ‘ஸூயை’னா exact குணம் இருக்கற வஸ்துவில தோஷத்தை பாராட்டுறது. எவ்வளவு குணம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு ஒரு தோஷம் இருந்தா அதை எடுத்து பேசறது ‘அஸூயை’ன்னு பேரு. அது இல்லாம இருக்கறதுக்கு அனஸூயா’, ‘அனஸூயக:’

‘கஸ்யபிப்யதி தேவா: ஜாதரோஷஸ்ய சங்க்யுகே’யுத்தத்தில் எவர் கோவிச்சுண்டான்னா தேவர்கள் கூட பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் இருக்கணும். ராமர் கோவிச்சுண்டா, சமுத்திர ராஜனே பயந்தான் இல்லையா!

एतदिच्छाम्यहं श्रोतुं परं कौतूहलं हि मे
महर्षे त्वं समर्थोऽसि ज्ञातुमेवंविधं नरम् || ||

ஏததிச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |

மஹர்ஷே த்வம் ஸமர்தோஸி க்ஞாதுமேவம்விதம் நரம் ||

‘ஏதத் இச்சாம் ஹம் ஸ்ரோதும்’ – ‘இப்பேற்பட்ட ஒருத்தர் இருக்கிறாரா?’ என்பதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.

பரம் கௌதூஹலம் ஹி மே’ – ‘எனக்கு இதைப் பத்தி ரொம்ப ஆர்வமா இருக்கு’ அப்படீன்னு சொல்றார்.  என்னோட இந்த இந்து, சுஜாதா எல்லாரும் என் கொழந்தைகள் மாதிரி, என்ன கேட்டா நான் மசிவேன்னு கண்டுபிடிச்சுண்ட்டா. அதாவது எனக்கு இது கேக்கணும்னு ஆசையா இருக்கு! பரம் கௌதூஹலம் ஹி மே’ – ‘ரொம்ப curiousஆ இருக்கு’னு கேட்டா நான் சரின்னு சொல்ல ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி, இந்த ஸங்க்ஷேப  ராமாயணம் படியுங்கோளேன்! ‘மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இரு!’ன்னு அன்னிக்கி சொன்னேளே! அதனால daily படிங்கோ! படிக்கும்போது கதை சொல்லுங்கோ அப்படீன்னு கேட்டா, அப்படியும் மசியலன்னா அடுத்த lineல, ‘மஹர்ஷே த்வம் ஸமர்தோஸி க்ஞாதும் ஏவம் விதம் நரம்’ – ‘இப்பேற்பட்ட ஒருவனை உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கும்! நீங்க தானே சொல்ல முடியும்!’ அப்படீன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் வந்து சரின்னு surrender ஆயிடுவேன். ஒடனே கதை சொல்ல ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி கதை கேக்கும்போது அவ்வளவு ஆர்வமா கேக்கணும். எனக்கு அந்த ரொம்ப ஆசையா இருக்கு, ‘கௌதூஹலம்’ – ‘curiosityஆ இருக்கு’, அந்த கொழந்தைகள் கண்ல இருக்கும் இல்லையா ‘சொல்லுங்கோப்பா’ன்னு கேக்கறது அந்த curiosityஅ வெளிப்படுத்தணும்ங்கிறதைக் காமிக்கறார் அவர் வால்மீகி.

‘மஹர்ஷே த்வம் ஸமர்தோஸி’ – ‘நீங்க தான் இந்த மாதிரி எனக்கு சொல்ல முடியும். உங்களுக்கு தான் யாரு இருக்கான்னு தெரியும். ஏன்னா நீங்க திரிலோக சஞ்சாரி. சர்வஞாள். சொல்லுங்கோ?’ன்னு கேக்கறார்.

श्रुत्वा चैतत्त्रिलोकज्ञो वाल्मीकेर्नारदो वचः
श्रूयतामिति चामन्त्र्य प्रहृष्टो वाक्यमब्रवीत् || ||

ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச: |

ச்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||

‘ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச:’ – ‘ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு, ‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல ஆரம்பிச்சார்.

‘ச்ரூயதாம்’ – கேளுங்கோ!

‘இதி சாமந்த்ர்ய’ – என்று உத்தரவிட்டு,

‘ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

बहवो दुर्लभाश्चैव ये त्वया कीर्तिता गुणाः
मुने वक्ष्याम्यहं बुद्ध्वा तैर्युक्तः श्रूयतां नरः || ||

பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா: |

முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா தைர்யுக்த: ச்ரூயதாம் நர: ||

‘பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா:’ – நீங்க list பண்ணேளே எவ்ளோ குணங்கள்! எல்லாத்தையும் list பண்ணிட்டேளே! அது ஒண்ணே துர்லபம்! இந்த குணத்துல ஒண்ண follow பண்றதே ரொம்ப துர்லபம்! நீங்க  – ‘பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா:’ – நீங்க பேசின இந்த குணங்களெல்லாம் ‘துர்லபம்’ – ரொம்ப இருக்கறது கஷ்டம்.

ஆனாலும், ‘முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா’ – ஆனா, அப்படி ஒருத்தர் இருக்கார்! எனக்குத் தெரியும். நான் அவரைப் பத்தி சொல்றேன் கேளுங்கோ.

‘தைர்யுக்த: ச்ரூயதாம் நர:’ – அந்த மனிதனைப் பத்தி நான் இப்போ சொல்றேன். நீங்க கேளுங்கோ!

इक्ष्वाकुवंशप्रभवो रामो नाम जनैः श्रुतः
नियतात्मा महावीर्यो द्युतिमान्धृतिमान्वशी || ||

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவோ ராமோ நாம ஜநை: ச்ருத: |

நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமாந்வசீ ||

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன். அதுவே சூரிய வம்சம். அதுல ஒரு சூரியன் மாதிரி வந்தவன் இந்த ராமன்.

‘த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன். அவன் தேஜஸோட இருப்பான்.

‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.

‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

बुद्धिमान्नीतिमान्वाग्मी श्रीमाञ्शत्रुनिबर्हणः
विपुलांसो महाबाहुः कम्बुग्रीवो महाहनुः || ||

புத்திமாந் நீதிமாந் வாக்மீ ஸ்ரீமாஞ்சத்ருநிபர்ஹண: |

விபுலாம்ஸோ மஹாபாஹு: கம்புக்ரீவோ மஹாஹநு: ||

‘புத்திமாந்’ – ‘புத்தி’ங்கிறது மனசுக்கு right wrong சொல்லி தர்றது. இது  convenient. ஆனா இதுதான் rightனு சொல்லி தர்றது பேரு ‘புத்தி’. மனஸ் ஸாக்ஷி அது. எப்போவும் புத்தியோட இருப்பவன்.

‘நீதிமாந்’ – திரும்பவும் அந்த justice. தனக்கும் எது நீதி? மத்தவாளுக்கும் எது நீதி? அவன் கேக்கறான் இல்ல வாலி ‘இதுக்கு எப்படி பதில் சொல்லுவ உலகத்துல’ அப்படீன்ன உடனே, ‘நீ குருடனுக்கு குருடன் வழி காட்டற மாதிரி நாலு பேரை வெச்சுண்டு நீ என்கிட்டே கேள்வி கேக்கற!  இது தான் நீதி!’ன்னு சொன்னவொடனே, அவன், ‘மன்னிச்சுடு! ஏதேதோ பேசிட்டேன். எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’னு கேக்கறான்.

‘வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி’, ‘ப்ரியம்வத:’னு எத்தனை வாட்டி  வர்றது.

‘ஸ்ரீமாந்’ – எல்லா மங்கள குணங்களும் நிறைஞ்சவன். சீதாதேவி பக்கத்துல இருக்கும்போது கேட்கணுமா! – ‘ஸ்ரீமாந்’.

‘சத்ருநிபர்ஹண’ – சத்ருக்களை தண்டிப்பவன்.

‘விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.

‘மஹாபாஹு:’ – பெரிய கைகள்! அப்படியே கைகளெல்லாம் pillars மாதிரி இருக்கும். தூண் மாதிரி இருக்கும். பெரிய கைகள்! அவ்ளோ ‘biceps’ எல்லாம் நல்லா இருக்கும்.

‘கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.

‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

महोरस्को महेष्वासो गूढजत्रुररिन्दमः
आजानुबाहुः सुशिराः सुललाटः सुविक्रमः || १०||

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம: |

ஆஜாநுபாஹு: ஸு சிரா: ஸுலலாட: ஸுவிக்ரம: ||

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ன்னா பெரிய மார்பு.

மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன். திடீர்னு எப்படி சொல்றார்னா, அவ்வளவு பெரிய வில்லை தூக்கறதுக்கு strength இருக்கணும் இல்லையா! அப்படி strength இருக்கிறவர்.

‘கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்.

‘அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.

ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.

‘ஸு சிரா:’ – அழகான தலை.

‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.

ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

இது வரைக்கும் பத்து ஸ்லோகம். நாளைக்கு continue பண்ணிப் பார்க்கலாம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

Series Navigationஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning >>

9 replies on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning”

இது திரட்டுபால் போல திரட்டு தேன். ஸ்ரீ ராம ஜெயம்

இது தேன் தான். இன்று கேட்கும் பாக்யம் கிடைத்தது.

நல்ல ஆரம்பம். தொடர்ந்து கேட்கும் பாக்யம் அந்த அம்பாள் எனக்கு அருள வேண்டும்.

I am amazed at the efforts you have put in – you have recorded the audio and also provided us the transcript. Your Guru’s blessings and mahaperiyava’s grace.

Namaskarams to you sir – salute your initiative.

என்ன அழகான வியாக்யானம்! நிஜமாகவே தேன்தான்! பூரா படிக்கல்லை ஆனாலும் மேலும் மேலும் படிக்க ஒர் உத்வேகம் தோணறா மாதிரி எழுத்து வன்மை வாக்கு வன்மை! தீர்காயுஷ்மான் பவ!

தித்திக்கும் தேனமுது ! பாதம் பிரித்து, அழகான பொருள் விளக்கம் !
Amazing ! Please continue , am waiting for further explanation !!

ஶ்ரீ ராம ராம

அனுபவித்தேன். நானும் சமீபகாலமாக
ஸம்க்ஷேப ராமாயணம் பாராயணம் செய்து வருகிறேன். இப்போது அதை மேலும் உணர்ந்து ரசித்து உள்வாங்கி செய்ய இந்த பதிவின் மூலம் எனக்கு பேருதவி செய்தீர்கள். குரு க்ருபை.
வந்தனங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.