Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப  இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11 இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம்,

समः समविभक्ताङ्गः स्निग्धवर्णः प्रतापवान्
पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवाञ्शुभलक्षणः || ११||

ஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்34வர்ண: பிரதாபவாந் |

பீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||

ஸம:’ அப்படீன்னாரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!

ஸமவிப4க்தாங்க3:’ – இடது பக்கம் இருக்கிற உறுப்புகள் எல்லாம் வலது பக்கத்துக்கு சமமா இருந்தது! சமமாவிப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள். ஒரு கை நீளம், ஒரு கை குட்டை அப்படியெல்லாம் இல்லாம ரொம்ப similar, symmetrical இருந்தது அவருடைய உடம்பு. அது தானே அழகு! அந்த மாதிரி இருந்தது.

ஸ்நிக்34வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!

பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!

பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்புவக்ஷஸ்’.

விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.

லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! அவரைப் பார்த்தாலே ஒரு நல்லவர், மங்களமானவர் அப்படீன்னு நினைக்கும்படியா இருந்தது.

ஶுப4லக்ஷண:’ – பாக்கறதுக்கு லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷணத்துல, இந்த மாதிரி உடம்பு இருந்தா, இந்த மாதிரி பலன் அப்படீன்னு இருக்கு. அந்த மாதிரி சாக்ஷாத் சக்கரவர்த்தி குமாரன்’ அப்படீன்னு அந்த சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

धर्मज्ञः सत्यसन्धश्च प्रजानां हिते रतः
यशस्वी ज्ञानसम्पन्नः शुचिर्वश्यः समाधिमान् || १२||

4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ஹிதே ரத: |

யஶஸ்வீ ஜ்ஞானஸம்பந்ந: ஶுசிர்வஶ்யஸ்ஸமாதி4மாந்  || 12 ||

4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!

ஸத்யஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்! அந்த நாகபாசத்துல கட்டுப்பட்டிருந்த போது, கருடபகவான் வந்து விடுவிக்கறார். அப்ப சொல்றார், பவதாம் ஆர்ஜவம் பலம் ராக்ஷஸா: கூடயோதின:’ – ‘ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணி ஜயிக்கப் பார்ப்பா. ஆனா உங்களுக்கு பலம் உங்களுடைய இந்த சத்தியம்தான்’, அப்படீன்னு சொல்றார்.

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,

यम् पालयसि धर्मम् त्वम् धृत्या नियमेन |
सवै राघवशार्दुल! धर्मस्त्वामभिरक्षतु || 

யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா நியமேன |

ஸவை ராகவஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

அப்படீன்னு சொல்றா. அந்த மாதிரி, ‘4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச’ அப்படீங்கிறதுதான் ராமாயணம்! அப்படீங்கிறதுதான் ராமர்! நல்லவா சொல்றதுல ஆச்சர்யம் இல்ல. மாரீச்சனே சொல்றான், ‘ராமோ விக்ரஹவான் தர்ம!’ – ‘நீ ராமரை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றியே. ராமர் தர்மமே வடிவானவர்!’,  அப்படீன்னு சொல்றான். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மம் ஜயிக்கும்” அப்படீங்கிறதுதான் இதிஹாஸத்தினுடைய முக்கியமான கருத்தே!

‘ப்ரஜாநாம் ஹிதே ரத:’ – ராஜாங்கிறவர் பிரஜைகள் நன்னா இருக்கணும். எல்லாரும் சௌக்யமா இருக்கணும். யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது அப்படீன்னு நினைக்கணும். ‘ரஞ்சயதே இதி ராஜ’ – ஜனங்களை சந்தோஷப் படுத்தறவன்தான் ராஜா.அப்படி எல்லாரும் நன்னா இருக்கணும்னு நினைக்கிறவர் ராமர்!

‘யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர். 25 வயசுக்குள்ள ஜனங்கள்லாம் வந்து அவ்ளோ ராமரை விரும்பறா. அப்படி கொண்டாடறா. இவன் ராஜாவாகணும்னு வேண்டிக்கறா! அவர் ராஜாவா ஆகலேன்னதும் புலம்பி அழறா! அப்படீன்னா எவ்வளோ நல்ல பேர் வாங்கியிருப்பான் அவன். சபையில இருக்கிறவாள்கிட்ட பேர் வாங்கிறது ஆச்சர்யம் இல்லை. வீட்டில இருக்கிற பெண்கள், குழந்தைகள், வயசானவாள்கிட்ட கூட நல்ல பேர் வாங்கியிருக்கான். அப்படி எல்லார்கிட்டயும் புகழ். அப்படி அந்த புகழ், ‘ராமோ ராமோ பவிஷ்யதி’ அப்படீன்னு சொன்னா கூனி,ராமன் காட்டுக்கு போயிட்டான்னா, ராமன் அராமனா ஆயிடுவான்!’ அப்படீன்னு. அப்படி இல்லாம, ‘ராம: ராமோ பவிஷ்யதி’, அப்படீன்னு இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும்படியா, இன்னிக்கு நம்மளும் கொண்டாடும்படியா அப்படி ராமனுடைய புகழ்‘யஶஸ்வீ ‘.

‘ஜ்ஞானஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.

‘ஶுசி:’ – தூய்மையானவன்.

‘புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்’

அப்படீன்னு, வெளியில தூய்மைங்கிறது ஜலத்தைக் கொண்டு, ஸ்நானபானாதிகள் பண்றதால. உள்ளத்தூய்மை சத்தியத்தினால அமையறது. அப்படி இரண்டு விதத்துலயும் தூய்மையாவன்‘ஶுசி:’

‘வஶ்ய:’ – ‘எல்லாரையும் தன்னுடைய குணத்துனால வசியம் பண்ணி வெச்சிருக்கான்’னு ஒரு அர்த்தம். obedient.அவன் எல்லாருக்கும் வசப்பட்டுருக்கான் அப்படீன்னு அர்த்தம்.

‘ஸமாதி4மாந் –  ‘ஸமாதி4’ ன்னா வேதாந்தத்துல ஒரு அர்த்தம். ஆனா சாதாரண சமஸ்க்ருதத்துல தீர்க்க யோஜனை பண்றதுன்னு அர்த்தம். அந்த மாதிரி, என்ன பண்ணா ஜனங்களுக்கு நன்மையா இருக்கும்னு எப்பவும் யோசிச்சுண்டே இருப்பவர்!

प्रजापतिसमश्श्रीमान् धाता रिपुनिषूदनः
रक्षिता जीवलोकस्य धर्मस्य परिरक्षिता ।।1.1.13।।

ப்ரஜாபதிஸமஶ்ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய 4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷

ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!

‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.

ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.

ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.

4ர்மஸ்ய பரிரக்ஷிதா’ – வெறுமன அவா உயிரோட இருக்காளான்னு பாக்கக் கூடாது. அவா தர்மத்தோட இருக்காளான்னு பாக்கணும். காட்டுல போனபோது, வாலியை வதம் பண்றார். அவனை வதம் பண்ணும்போது, “பரதன் ராஜா.அவனோட ஆக்ஞையினால நான் உன்னை வதம் பண்ணேன்”, அப்படீங்கறார். கரணை வதம் பண்ணின போது, “பரதன் ராஜா. அவனோட ஆக்ஞையினால நாங்க தர்மத்தை காப்பாத்திண்டு இருக்கோம். அதனால ரிஷிகளுக்கு ஹிம்சை பண்ற உன்னை நான் வதம் பண்றேன்”னு சொல்றார்.

रक्षिता स्वस्य धर्मस्य स्वजनस्य रक्षिता
वेदवेदाङ्गतत्त्वज्ञो धनुर्वेदे निष्ठितः ।। 14 ।।

ரக்ஷிதா ஸ்வஸ்ய 4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ரக்ஷிதா |
வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ 4நுர்வேதே3 நிஷ்டித: ৷৷ 14 ||

ரக்ஷிதா ஸ்வஸ்ய 4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மத்தை காப்பாற்றுபவர்! ஏகபத்தினி விரதம் ஆகட்டும். பித்ரு வாக்ய பரிபாலனம் ஆகட்டும், அப்படி தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.

ஸ்வஜநஸ்ய ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர். அவரைப் போய் உன்னை சேர்ந்தவனா நினைச்சுக்கோ என்னை, அப்படீன்னு  நமஸ்காரம் பண்ணா,

“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4 4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி, பதிதம் பீ4 4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்! அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை! ‘சரணாக3தம் உன்னை வந்து சரணாகதி பண்றேன்! ‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை, ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ஸ்வஜநஸ்ய ரக்ஷிதா

வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் எல்லாம் வெறும் அத்யயனம் மட்டும் பண்ணுபவர் கிடையாது. அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!

4நுர்வேதே3 நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

सर्वशास्त्रार्थतत्त्वज्ञस्स्मृतिमान्प्रतिभानवान् |
सर्वलोकप्रियस्साधुरदीनात्मा विचक्षणः ||15 || 

ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |
ஸர்வலோகப்ரியஸ்ஸாது4: தீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷ 

ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தம், வேதத்தினுடைய  அங்கங்கள், அது தவிர உபாங்கங்கள்னு இருக்கு. அதுல தனுர் வேதம். அந்த தனுர் வேதத்துல தனித்திறமை வாய்ந்தவர். வேதம்ங்கிறது ஸ்ருதி. ஸ்மிருதிங்கிறது சாஸ்திரங்கள். அந்தஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ சாஸ்திரங்கள், பதினெட்டு ரிஷிகள் சாஸ்திரங்கள் சொல்லியிருக்கா. So, தர்ம சூக்ஷ்மம் தெரியணும். வசிஷ்டர் சொல்றார்,அம்மா சொல்றா! நான் உன்னுடைய குரு. உங்க அப்பாக்கும் குரு! நானும் சொல்றேன்! பரதன் ஆசைப்படறான். அதனால ராஜ்யத்தை எடுத்துண்டா தப்பில்லை, அப்படீங்கறார். ராமர் சொல்றார், எடுத்துண்டா தப்பில்லன்னு நீங்க சொல்றேள். ஒரு அப்பா, அம்மா ஒரு குழந்தையை பெற்று வளர்க்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறா! அந்த அப்பாவுடைய வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இந்த பரதன் சொல்ற வார்த்தையை கேட்கணும்ங்கிறது சரியில்லை.அவர் சொன்ன வார்த்தையை, அந்த சத்தியத்தை பரிபாலனம் பண்ணிட்டு அப்புறம் நான் வந்து அவன் பேச்சை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார்! ‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!

‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி! விபீஷணனுக்கு சரணாகதி கொடுக்கும்போது, என்னென்ன மகரிஷிகள் என்னென்ன வார்த்தை சொல்லியிருக்கான்னு டக் டக்னு quote பண்றார்!

‘பிரதிபா4நவாந்’ – ‘பிரதிபா4ங்கிறது presence of mind. நிறைய படிச்சிருக்கலாம். சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம் வரணும். அந்த மாதிரி அதுக்கு ‘பிரதிபா4ன்னு பேரு.

परे जननि पार्वति प्रणतपालिनि प्रातिभ– 
प्रदात्रि परमेश्वरि त्रिजगदाश्रिते शाश्वते
त्रियम्बककुटुम्बिनि त्रिपदसङ्गिनि त्रीक्षणे
त्रिशक्तिमयि वीक्षणं मयि निधेहि कामाक्षि ते 93

பரே ஜனனி பார்வதி ப்ரணதபாலினி ப்ராதிப4– 
ப்ரதா3த்ரி பரமேஶ்வரி த்ரிஜக3தா3ஶ்ரிதே ஶாஶ்வதே |
த்ரியம்ப3ககுடும்பி3னி த்ரிபத3ஸங்கி3னி த்ரீக்ஷணே
த்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதே4ஹி காமாக்ஷி தே ||93||

ப்ராதிப4ப்ரதா3த்ரி’ன்னு காமாக்ஷியை சொல்றார். அந்த மாதிரி ‘பிரதிபா4ங்கிறது படிப்பைவிட அதுதான் ரொம்ப முக்கியம். சபையில சரியான நேரத்துல, சரியான யுக்தியை சொல்லத் தெரியனும்! ‘உத்தரோ உத்தரருக்தீநாம் வக்தா வாசஸ்பதிர் யதா’ அப்படிங்கறார் . மேலும் மேலும் ஒருத்தன் ஒரு யுக்தி சொன்னான்னா, இது நன்னாயிருக்கு, அதுக்கு மேல இது எப்படி இருக்குன்னு பாருங்கோ”ன்னு ஒரு idea சொல்வார். அப்படி சொல்றதுல வாஸஸ்பதியான ப்ரஹஸ்பதி போன்றவர்.

ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!

ஸாது4:’ – ஸாது4’ங்கிறது நம்ம ஏணிப்படிகளில் மாந்தர்கள்”ல இருக்கிற ஸாது4’ங்கிற வார்த்தை எடுத்துக்கணும். சார் எழுதியிருப்பார், “ஸாதுங்கிறதுக்கு அசடன், மந்தன்ங்கிற பொருள் இன்னிக்கு விளங்கறது. அது கிடையாது. ஸாதுன்னா தன்னலம் அற்றவன். 180 line define பண்ணியிருக்கார். அதனால அதை சாதாரணமா define பண்ணக் கூடாது. அந்த மாதிரி, அந்த ஸாது குணங்கள் நிறைந்தவர்!

‘அதீ3நாத்மா’ – தைன்யமே கிடையாது. எந்த கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் மனசு தளரத்தான் செய்யும். ஆனா திரும்பவும் தன்னுடைய சுய நிலைமைக்கு வந்துடுவார்!

விசக்ஷண:’ – எது எப்போ எப்படி பண்ணலாம் அப்படீன்னு பண்றது, அந்த குணத்துக்கு, விசக்ஷண:’னு பேரு!

सर्वदाभिगतस्सद्भिस्समुद्र इव सिन्धुभिः
आर्यस्सर्वसमश्चैव सदैकप्रियदर्शनः ।। 16 ।। 

ஸர்வதா3பி43தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3 இவ ஸிந்து4பி4: |
ஆர்யஸ்ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ந: ৷৷ 16 ৷৷ 

‘ஸர்வதா3பி4 3: ஸத்3பி4: ஸமுத்3 இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வந்துண்டே இருப்பா. ஒரு ராஜாவா இருக்கிறவன், தானே எல்லா கார்யமும் பண்ணிட முடியாது. அவன்கிட்ட நல்லவா வந்து சேரணும். அப்ப தான் அவன் delegate பண்ணி கார்யங்களை முடிச்சு நல்ல பேர் வாங்க முடியும். அந்த மாதிரி நல்லவா தன் கிட்ட வரணும்னா, இந்த மாதிரி நல்ல குணங்கள் எல்லாம் இருக்கணும்.

‘ஆர்ய:’‘ஆர்ய:’னா nobleன்னு அர்த்தம். பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble.

‘ஸர்வஸமஶ்சைவ’ எல்லார் கிட்டயும் சமமா இருப்பார். பாகுபாடு கிடையாது. பகவானப் போல.

‘ஸதை3கப்ரியத3ர்ந:எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார். காத்தால எழுந்த உடனே,

“கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே 
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

அப்படின்னு அந்த குழந்தையை எழுப்பும்போதே கௌசல்யா தினமும் எழுப்பும் போது அழகான இந்த திருமுகத்தைப் பார்த்து, இந்த கண்ணை தொறக்கறதப் பார்த்து, கொஞ்சி எழுப்பறாளேன்னு, ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ னு சொல்றார்.
அந்த மாதிரி எல்லாரும், எல்லா நேரத்லயும், மூக்கடிப்பட்ட சூர்ப்பனகை வந்து, ‘கந்தர்ப்ப மூர்த்திமான்’ அப்படிங்கறா ராவணன்ட்ட போய். இங்க வாலி – ‘ப்ரதித: ப்ரிய3ர்ந:அவன் நெஞ்சுல அம்பு பாய்ஞ்சிருக்கு. உயிர் போகப்போறது. ‘ஹே ராமா! ப்ரதித: ப்ரிய3ர்ந:’ அப்படின்னு சொல்றான். அங்க ராவணன் வந்து யுத்தத்துலேர்ந்து சாரதி அவனை அந்த பக்கம் கூட்டிண்டு போயிடறான். ‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ – ‘பார்க்க பார்க்க இவனுடைய விக்ரமம் மனசுக்கு அவ்ளோ ப்ரியமா இருந்தது! அப்பேர்ப்பட்ட நல்ல எதிரி கிடைச்சிருக்கான். நல்ல யுத்தத்துலேர்ந்து என்னை அப்புறப்படுத்தி, என்னை அவமானப் படுத்திட்டயே!’ அப்படிங்கறான். இது எதிரிகள் கூட சொல்றா! ஸீதா தேவியும் ஹனுமாரும் சொல்றதுக்கு கேக்கணுமா‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’. அது மாதிரி தான் இங்க – ‘ஸதை3கப்ரியத3ர்ந:’ !

सर्वगुणोपेत: कौसल्यानन्दवर्धन:
समुद्र इव गाम्भीर्ये धैर्येण हिमवानिव ।। 17 ।। 

ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4: !
ஸமுத்3 இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷ 

ஸர்வகு3ணோபேத:’நாரதருக்கு இந்த குணங்களை சொல்லிண்டே இருந்தா இதுவே ஒரு ராமாயணம் ஆயிடும்னு சொல்லிட்டு, இப்பேற்ப்பட்ட எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன், ‘கௌஸல்யா நந்த3வர்த4:கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.

ஸமுத்3 இவ கா3ம்பீ4ர்ய’கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன். சமுத்திரம் நாம பக்கத்தில போனா என்ன காமிக்கறது? கிளிஞ்சல்களைத்தான் காமிக்கறது. ஆனா ரத்னங்கள் எங்க இருக்கு ? உள்ளுக்குள்ள இருக்கு. அந்த மாதிரி கம்பீரம். சமுத்திரம் எதுக்கும் கலங்கப் போது இல்லை. நதில வெள்ளம் வந்தா, சமுத்ரம் கலங்க போறதா? அந்த மாதிரி, எந்த ஒரு சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.

தை4ர்யேண ஹிமவானிவ’ஹிமவானைப் போல தைர்யம்!

विष्णुना सदृशो वीर्ये सोमवत्प्रियदर्शन:
कालाग्निसदृश: क्रोधे क्षमया पृथिवीसम: ।। 18 ।।

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |
காலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷

‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர். லக்ஷம் பேரை மூல பல சைன்யத்துல தனி ஒருவரா யுத்தம் பண்ணார்.14000 கர தூஷணாதிகளை வதம் பண்ணார்.அப்போ ஆகாசத்துல நின்னுண்டு தேவர்கள்லாம் என்ன சொல்றா ? விஷ்ணு பகவான் யுத்தம் பண்றா மாதிரி இருக்கு அப்படீங்கறா – ‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’.

ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ –  பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!

‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!

‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’  – பொறுமையில பூமியைப் போன்றவன். பூமியை நாம வெட்டினாலும் சரி, bomb வெச்சு பிளந்தாலும் சரி, நம்மளுக்கு நிக்கறதுக்கு இடம் கொடுக்கறது. நம்மள தள்ளி விடமாட்டேன்ங்கறது. நமக்கு தானியங்கள்லாம் கொடுக்கறது. அந்த மாதிரி ‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’

धनदेन समस्त्यागे सत्ये धर्म इवापर:

तमेवं गुणसम्पन्नं रामं सत्यपराक्रमम् ।। 19 ।।

4நதே3 ஸமஸ்த்யாகே3 ஸத்யே 4ர்ம இவாபர: |

தமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷

4நதே3 ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல. குபேரன்ட்ட அவ்ளோ செல்வம் இருக்கறதுனால கொடுக்கறதுக்கு அவன் கஷ்டப்பட மாட்டான். அவனுக்கு குறையவே போறதில்லை. அப்படி நெனச்சு கொடுக்கிறவா வந்து,குடுத்தா நமக்கு கொறஞ்சுடுமே’ன்னு நினைக்க கூடாது. ‘கொடுத்தா நமக்கு ஜாஸ்தியாகுமே’ன்னு நினைக்கணும்! –4நதே3 ஸமஸ்த்யாகே3

ஸத்யே 4ர்ம இவாபர:’  – இது கொஞ்சம் குழப்பமா இருக்கும். ஸத்யே 4ர்ம இவாபர:’ –  தர்ம ராஜாவான எமனைப் போலன்னு சொல்லலாம். ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.

தம் ஏவம் குண ஸம்பந்ந:’ இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை, 

ஸத்யபராக்ரமம்’ –த்ய பராக்கிரமம்’னா பொய்க்காத பராக்கிரமம் னு அர்த்தம். சத்தியத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. அவன் பராக்கிரமம் வீண்போகாது. ஒரு இடத்தில கோபப்பட்டா, அந்த கோபத்துக்கு பலன் ஏற்படும். சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷத்துக்கு பலன் ஏற்படும். ஸத்யபராக்ரமம்’ன்னா வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

ज्येष्ठं श्रेष्ठगुणैर्युक्तं प्रियं दशरथस्सुतम्  
प्रकृतीनां हितैर्युक्तं प्रकृतिप्रियकाम्यया ।। 20 ।।

ஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் 3ரத2ஸ்ஸுதம் |
ப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதிப்ரியகாம்யயா ৷৷ 20 ৷৷

ஜ்யேஷ்ட2ம்’மூத்த பிள்ளை

ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,

ப்ரியம்’ –  தனக்கு ரொம்ப ப்ரியமான,

‘ஸுதம்’பிள்ளையை,

3ரத2:’ – தசரத மஹாராஜா ,

‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,

ப்ரக்ருதி ப்ரிய காம்யயாஅந்த ஜனங்களும் இவனுடைய ஆட்சியை ரொம்ப விரும்புகிறார்கள். இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

यौवराज्येन संयोक्तुमैच्छत्प्रीत्या महीपति:  

யௌவராஜ்யேந ம்யோக்துமைச்சத்ப்ரீத்யா மஹீபதி|

‘யௌவராஜ்யேந ஸம்யோக்தும்’யுவராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணி வைக்கலாம் என்று,

‘ஐச்சத்ப்ரீத்யா மஹீபதி:’தசரத மஹாராஜா ராமனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலாம் என்று சந்தோஷமாக முடிவு எடுத்தார்.

இந்த இடத்துல, பாலகாண்டம் முழுக்க skip பண்ணிட்டார் இந்த ங்க்ஷேப ராமாயணத்து. நாம அதை சுருக்கமாக பார்ப்போம். தசரத மகாராஜா நல்லாட்சி பண்ணிண்டு இருந்தார். ஆனா அவருக்கு குழந்தைகள் இல்லையே? ‘மம லாலப்ய மானஸ்ய – ‘எனக்கு கொஞ்சறதுக்கு குழந்தைகள் இல்லையே’ அப்படீன்னு சொல்றார்.அதனால அஸ்வமேதயாகம் பண்றேன்’னு சொன்ன உடனே, ரிஷிகள் எல்லாம் ஆஹா! பண்ணுங்கோ’ன்னு சொல்றா. சுமந்திரர் ரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு பண்ணுங்கோன்னு சொல்றார்.

ரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு அஸ்வமேதயாகம் பண்ணி புத்திரகாமேஷ்டி பண்ணி, ஒரு மஹாபுருஷர் அக்னியிலேருந்தே வந்து பாயசம் கொடுத்து அதை அவர் தன்னுடைய மனைவிகள், கௌசல்யை, ஸுமித்ரை, கைகேயிக்கு பகிர்ந்து கொடுத்து தசரதருக்குப் பிள்ளையா விஷ்ணு பகவானே ராம லக்ஷ்மண பரத சத்ருக்னனா அவதாரம் பண்றார்.

வசிஷ்டர்கிட்ட வேத, வேதாந்தங்கள்லாம் கத்துண்டு, தனுர் வேதம் கத்துண்டு, விஸ்வாமித்திரர் வந்த தன்னுடைய யாக ரக்ஷணத்துக்காக குழந்தை ராமனைக் கேட்கறார். தசரதர் கவலைப்படறார். வசிஷ்டர் அனுப்புங்கோன்னு சொன்ன உடனே அனுப்பறார். ராமர் விச்வாமித்திரரோட போய் தாடகா வதம் பண்ணி, அவருடைய யாகத்தை ரக்ஷணம் பண்றார். அப்புறம் விஸ்வாமித்திரர் அந்த யாக ரக்ஷணதுக்கு முன்னாடி ஐநூறு அஸ்திரங்களை சொல்லித்தரார் ராமருக்கு.

அந்த சுபாகு, மாரீசன் ராக்ஷதர்களை எல்லாம் விரட்டி அந்த யாகத்தை நல்லபடியா பூர்த்தி பண்ண பின்ன, ஜனகர்கிட்ட இருக்கிற அந்த சிவதனுசை இந்த குழந்தைகள் பார்க்கணும்னு சொன்ன உடனே, அந்த சித்தாஸ்ரமத்திலேர்ந்து கிளம்பி அவா மிதிலைக்கு போறா. போற வழியில விஸ்வாமித்திரர் தன்னுடைய பூர்வர்களுடைய கதை, குசநாபர், அவருடைய பெண்கள். அப்புறம் குசநாபருக்கு பிள்ளையா காதி, காதிக்கு பிள்ளையா நான் பிறந்தேன்!’னு சொல்றார். அப்புறம், குமாரசம்பவம் முருகப் பெருமானுடைய அவதாரம். அப்புறம்’ கங்கா அவதரணம்கங்கை எப்படி பகீரதன் தபஸுக்காக பிரம்மா சொல்லி, தேவலோகத்துலேருந்து பூமிக்கும், பூமியிலருந்து பாதாளத்துக்கு வந்து, சகர புத்திரர்களை கரை ஏத்தினது, அப்புறம் அமிர்தமதனம், இந்த மாதிரி கதைகளை எல்லாம் சொல்லி, அப்புறம் ராமர், மிதிலைக்கு பக்கத்துல கௌதமாஸ்ரமத்துல அஹல்யா தேவியை சாப சமனம் பண்ணி மிதிலைக்கு போய் சேர்றா.

ஜனகர் வந்து வரவேற்கறார். ஜனகர் சபையில கௌதமருக்கும் அஹல்யாவுக்கும் பிறந்த சதானந்தர் குலகுருவா இருக்கார். அவர், இந்த ராம லக்ஷ்மணாளை விஸ்வாமித்திரர் அழைச்சுண்டு வந்ததுனால ரொம்ப சந்தோஷப்பட்டு, விஸ்வாமித்திரர் முதல்ல எப்படி ராஜாவா இருந்தார்?அப்புறம் வசிஷ்டரோட யுத்தம் பண்ணி, தன்னுடைய க்ஷத்ரியபலம் ஒண்ணுமே  பிரயோஜனம் இல்லை, க்ஷுத் க்ஷத்ரியபலம், பிரம்மதேஜோ பலம் பலம் அப்படீன்னு நான் பிரம்மரிஷியாக ஆவேன்!’னு தபஸ் பண்ணி எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் தபஸ் பண்ணி ராஜ ரிஷியாகவும், அப்புறம் ரிஷியாகவும், அப்புறம் மஹரிஷியாகவும், அப்புறம் பிரம்மரிஷியாகவும் ஆன அந்த வ்ருத்தாந்தத்தை சதானந்தர், அவருக்கு வந்த இடைஞ்சல்கள், திரிசங்கு, சுனஸ்ஷேபன், மேனகா, ரம்பா, இந்திரன் இவாள்லாம் கொடுத்த இடைஞ்சல்களை எல்லாம் மீறி எப்படி பிரம்மரிஷி ஆனார் விஸ்வாமித்திரர், அப்படீங்கிற வ்ருத்தாந்தத்தை ரொம்ப விஸ்தாரமா சதானந்தர் சொல்றார். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.

அடுத்த நாள் சபைக்கு ஜனகர் வர சொல்றார். அடுத்த நாள் வந்த உடனே, அந்த சிவ தனுசை கொண்டு வா!’ன்னு விஸ்வாமித்திரர் சொல்றார். சிவதனுசை கொண்டு வந்த உடனே ராமர், நான் இதை தூக்கட்டுமா! நாண் ஏற்ற முயற்சி பண்ணட்டுமா!’ன்னு கேக்கறான்.  விஸ்வாமித்திரர், ‘வத்ஸ ராம தனு: பஶ்ய’ – ‘பாரு! அந்த வில்லை எடுத்து நாண் ஏற்று!’ன்னு சொன்ன உடனே, எடுத்து அதை நாண் ஏற்றின உடனே, அவருடைய பலம் தாங்காம அது முறிஞ்சு விழுந்துடறது. உடனே தூதர்களை அனுப்பிச்சு, தசரதரையும் அவருடைய மந்திரிமார்களையும், வசிஷ்டர் முதலான எல்லா ரிஷிகளையும், மஹரிஷிகளும், பிரம்மரிஷிகளும் எல்லாருமா வந்து, ஒரு பல்குனி நக்ஷத்திரத்துல சீதாதேவியை ஜனகர் ராமனுக்கு பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுக்கறார். ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா. மாண்டவியை பரதனுக்கும், ஸ்ருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா, அதே முஹூர்த்தத்துல! எல்லாரும் கல்யாணம் ஆகி அங்கிருந்து ரொம்ப சந்தோஷமா, ரொம்ப விமரிசையா தேவர்கள்லாம் கூட பூமாரி பொழிகிறார்கள், ராமரும் சீதையும் கையை பற்றினபோது! அந்த மாதிரி விமரிசையா சீதாகல்யாணம் முடிஞ்சு, அப்புறம் பொண்ணை அனுப்பிச்சு வைக்கறார் ஜனகர், நிறைய பரிசுகளெல்லாம் கொடுத்து!

வர வழியில பரசுராமர், ஜமதக்னியோட பிள்ளை வந்து, நீ ஏதோ சிவதனுசை வளைச்சியாமே? முறிச்சியாமே? இந்த விஷ்ணு தனுசை வளைச்சு காமி நீ. இதை நாண் ஏற்றினா நான் உன்னோட த்வந்தயுத்தம் பண்றேன்’னு சொன்ன உடனே, தசரதர் பயந்துண்டு அபயம் கேட்கறார். ஆனா பரசுராமர் அதை காதுல வாங்கலை. மயக்கம் போட்டு விழுந்துண்டறார் தசரதர். ராமருக்கு கோபம் வர்றது. உடனே, கொடுங்கோ அந்த வில்லை!’ அப்படீன்னு அதை வாங்கி நாண் ஏற்றி, அதுல அம்பு தொடுத்து, இந்த அம்புக்கு என்ன பதில்?’னு கேக்கறார். உடனே பரசுராமர், கர்வம் ஒழிந்து, நான் நீ யாருங்கிறது புரிஞ்சுண்டுட்டேன் நீ, சாக்ஷாத் மதுஹந்தாரம் விஷ்ணும்’ன்னு புரிஞ்சுண்டுட்டேன். இந்த அம்புக்கு நான் ஜயிச்ச உலகங்கள் எல்லாம் எடுத்துக்கோ. என்னோட பாதகதியை எடுக்காதே!’ன்னு சொன்ன உடனே,ராமர் அதே மாதிரி பண்றார். அப்புறம் பரசுராமர் ராமரை பிரதக்ஷிணம் பண்ணிட்டு போயிடறார். ராமர் தசரதரை எழுப்பி அப்புறம் எல்லாருமா அயோத்திக்கு வந்து சேர்றா. கௌசல்யை, சுமித்ரை, கைகேயி எல்லாம் நாட்டுப் பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து, ஆத்துக்குள்ள அழைச்சுண்டு போய்  எல்லாருமாக ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். இது வரைக்கும் பாலகாண்டம். இங்க தசரதர் ஜனங்கள்கிட்ட எல்லாம் உத்தரவு கேட்டுண்டு ராமருக்கு பட்டாபிஷேகம்னு முடிவு பண்றார்’, அப்படீங்கறது வரைக்கும் இன்னிக்கு படிச்சிருக்கோம். அந்த 21 st ஸ்லோகத்தோட first halfம்  படிச்சாதான் அந்த scene complete ஆகும். நாளைக்கு கைகேயில இருந்து ஆரம்பிக்கலாம். நாளைக்கு அதை பார்க்கலாம்.

ஜானகி காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம

Series Navigation<< ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaningஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning >>

2 replies on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning”

அநேக நமஸ்காரங்கள். சுப்ரமண்ய புஜங்கத்திற்கு விளக்கவுரை தேடிய போது எதேச்சையாக இந்த இணையதளம் பார்க்க நேரிட்டது. மஹா பாக்யம். மிக்க நன்றி. கேட்க மிகவும் இனிமை.

ரொம்ப நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். படிக்க அருமையாய் உள்ளது. மனம் மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.