ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning
ஸங்க்ஷேப ராமாயணத்துல 70 ஸ்லோகம் வரைக்கும் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 71லேந்து பாக்கலாம். நேத்து கதைல, சுக்ரீவன் ராம கார்யத்தை மறந்துட்டு, குடிச்சிட்டு பெண்களோட பொழுது போக்கிண்டு இருந்தான். லக்ஷ்மணன் போய் அவனுக்கு ராமர் சொன்ன வார்த்தையை சொல்லி பயமுறுத்தினவுடனே வந்து ராமர் கால்ல விழறான்.அதுக்குள்ள ஹனுமார் சொல்லி எல்லா வானராளும் வந்து சேந்துடறா. அதனால ராமர் அவனை மன்னிச்சுடறார். எல்லா வானராளும் வந்துட்டதால, ராமர் சுக்ரீவன்கிட்ட நீ எல்லாருக்கும் உத்தரவு குடுன்னு சொல்றார். சுக்ரீவன் இது உங்களுடைய படைன்னுசொன்னவுடனே, ராமர் இல்ல நீ தான் ராஜா , நீயே இவாளுக்கு உத்தரவு குடு. என்ன வேணும்னு உனக்கு தெரியுமே, சீதாதேவி எங்க இருக்கா ? ராவணன் அவளை எங்க வெச்சிருக்கான். எப்படி அவளை மீட்கறது. இதெல்லாம் தெரிஞ்சிண்டு வரணும். சீதையை பார்த்து பேசிட்டு வரணும் அப்டினு ராமர் சொன்னவுடனே
स च सर्वान् समानीय वानरान् वानरर्षभः |
दिशः प्रस्थापयामास दिदृक्षुर्जनकात्मजाम् ||
ஸ ச ஸர்வான் ஸமானீய வானரான் வானரர்ஷப⁴꞉ |
தி³ஶ꞉ ப்ரஸ்தா²பயாமாஸ தி³த்³ருʼக்ஷுர்ஜனகாத்மஜாம் ||
வானரர்களுக்கு ராஜாவான சுக்ரீவன் கோடி கணக்கான வானரர்களை கிஷ்கிந்தைக்கு வரவழைத்து, அவாளை சீதாதேவியை தேடுவதற்காக நாலு திக்கிலேயும் அனுப்பிச்சான். சுக்ரீவன் அந்த வனராளுக்கெல்லாம் அவா போக கூடிய திசையில் வரக்கூடிய கிராமங்கள்,நகரங்கள், மலைகள், நதிகள், குஹைகள்,அங்க இருக்கக்கூடிய ரிஷிகள் அங்க வரக்கூடிய ஆபத்துக்கள் எல்லாத்தையும் detailed instruction குடுத்து சீதாதேவியை பாத்துண்டு வரணும். சீதாதேவி எங்க இருக்கானு பாத்துண்டு வரணும். ஒரு மாசத்துக்குள்ள வரணும். இல்லைனா நான் மரண தண்டனை குடுப்பேன், அதே மாதிரி யாரு என்கிட்ட வந்து “கண்டேன் சீதையை” அப்டின்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு சமமான அந்தஸ்தை கொடுப்பேன், அவா பண்ண தப்பெல்லாம் மன்னிச்சுடுவேன் அப்டினு சொல்லி கிழக்கு திக்குல வினதன்னு ஒரு வானரனை ஒரு லக்ஷம் வானராளோட அனுப்பறான். தெற்கு திக்குல முக்கால்வாசி படையோட அங்கதன் தலைமைல ஹனுமான், நலன், நீலன், ஜாம்பவான் எல்லாரோடயும், ஏன்னா தெற்கு திக்குலதான் லங்கா நகரம் இருக்கு அங்கதான் சீதை இருக்கானு அங்க எல்லாரையும் அனுப்பறார். முக்கியமா சுக்ரீவன் ஹனுமாரை பாத்து நான் உன்னை தான் நம்பி இருக்கேன்னு சொன்னவுடனே, ராமர் தன் கைலேந்து மோதிரத்தை குடுத்து, சீதையை பார்த்தா இதை குடு அப்போதான் நான் அனுப்பிச்சு நீ வந்திருக்கேன்னு அவ நம்புவானு சொல்லறார். மேற்கு திக்குல சுஷேணன்னு தாராவோட அப்பா, மாமனாரை அனுப்பறார். வடக்கு திக்குல சதபலினு ஒரு வானரனை போய் பாத்துண்டு வாங்கோன்னு அனுப்பறார். மூணு திக்குல போன வானராளும் ஒரு மாசத்துல வந்து நாங்க தேடினோம், தெற்கு திக்குல போன ஹனுமார் நல்ல செய்தியோட வருவார்னு சொல்றா. தெற்கு திக்குல போனவா விந்திய மலை காடுகள்ல வழி தவறி ரொம்பநாள் சுத்திண்டு இருக்கா. அப்புறம் “ருக்ஷ பிலம்”னு ஒரு குஹைக்குள்ள போய் மாட்டிண்டுடறா. அங்க அவாளுக்கு இருட்டா இருக்கு, உள்ள போனா வெளில வர முடில தவிச்சிண்டு இருக்கிறபோது, அங்க ஸ்வயம்பிரபா அப்டினு ஒரு தபஸ்வி இருக்கா. அவ இந்த வானராளுக்கு தன்னுடைய தபோ மஹிமைனால, சாப்பாடு குடுத்து, உயிரை காப்பாத்தி ஹனுமார் சொன்ன ராம கதைல த்ருப்தி ஏற்பட்டு தபோ மஹிமைனால இவாளை குஹைலேந்து வெளில கொண்டு விடறா. வெளில வந்தா, மகேந்திர மலை இருக்கு எதிர்ல கடல் இருக்கு, சுக்ரீவன் ஒரு மாசத்துல வரணும்னு சொன்னான், இப்போ 3-4 மாசம் ஆயிடுத்து வசந்த ருதுவே வந்துடும் போலிருக்கு. அங்கதன் ரொம்ப தளர்ந்துடறான் . நான் வரமாட்டேன், சுக்ரீவன் தண்டிப்பான். இங்கேயே ப்ராயோபவேசம் இருந்து உயிரை விடப்போறேன்னு, தர்பையை விரிச்சு படுத்துக்கறான்.அப்போ சம்பாதினு ஒரு கழுகு பார் த்து, ஆஹா பகவான் தான் ஜீவன்களுக்கு எப்படி சாப்பாடு குடுக்கறார். எனக்கு இங்க இறக்கை கூட இல்லாமல் நான் இருக்கேன். பக்கத்துலயே வந்து கொஞ்சம் பேர் உயிரைவிட போறேன்னு சொல்றா, ஒண்ணொண்ணும் 3-4 மாசம் தாங்கும், வயத்துப்பாட்டுக்கு ஆச்சுன்னு சொல்லிண்டு இருக்கு. அப்போ அங்கதன் இந்த ராமருடைய பெருமை தான் எப்படி பட்டது, அவருக்காக நாமெல்லாம் உயிரை விடறோம். அன்னிக்கி ஜடாயு கழுகு கூட சீதைக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி உயிரை கொடுத்ததுனு சொன்ன உடனே சம்பாதி, ஜடாயுனு சொன்னேளே அவன் என் தம்பி ஆச்சே விவரம் சொல்லுங்கோன்னு சொன்னவுடனே, எல்லாம் சொல்றான் அவன். தசரத குமாரரான ராமர் காட்டுக்கு வந்ததுலேர்ந்து ஆரம்பிச்சு, ஜடாயு எப்படி ராவணனோடு யுத்தம் பண்ணி ராமருக்காக உயிரை கொடுத்தது எல்லாம் சொல்லி, அப்புறம் சம்பாதி, என்ன கடற்கரை தூக்கிண்டு போங்கோ, ஜடாயு என் தம்பினு அங்க தர்ப்பணம் எல்லாம் பண்ணி,அந்த கடற்கரைல நின்னுண்டு நான் இங்கிருந்தே பாக்கறேன், இங்க இருந்து 100 யோஜனை கடலுக்கு அப்பால் லங்கைனு ஒரு தீவு இருக்கு. அங்க ராவணன் சீதையை சிறை வெச்சிருக்கான். அப்போவே அந்த சம்பாதிக்கு இறக்கை முளைக்கிறது. அந்த சம்பாதி சொல்றது, மின்ன எனக்கு ஒரு காரணமாக இறக்கை போனபோது நான் நிஷாகர மகரிஷி கிட்ட அழுதபோது, அவர் த்ரேதா யுகத்துல ராம பத்தினியான சீதையை வானரர்கள் தேடிண்டு வருவா, அவாளுக்கு நீ சீதை எங்க இருக்கான்னு சொன்னவுடனே உனக்கு இறக்கை முளைக்கும்னு சொன்னார். இதுலேயே உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் . 100 யோஜனை கடலை தாண்டி லங்கைல போனா சீதையை பாக்கலாம்னு சொல்லிட்டு பறந்து போய்டறது.
ततो गृध्रस्य वचनात्सम्पातेेर्हनुमान् बली |
शतयोजनविस्तीर्णं पुप्लुवे लवणार्णवम् ||
ததோ க்³ருʼத்⁴ரஸ்ய வசனாத்ஸம்பாதேேர்ஹனுமான் ப³லீ |
ஶதயோஜனவிஸ்தீர்ணம்ʼ புப்லுவே லவணார்ணவம் ||
அந்த சம்பாதி சொன்ன வார்த்தையால 100 யோஜனை கடலை யாரு தாண்டறதுன்னு இப்போ இவாளுக்கு கவலை வரது. அப்போ ஜாம்பவான் சொல்றார், நம்மளால எல்லாம் முடியாது. இந்த கார்யத்தை பண்ண கூடியவர் ஹனுமார் தான். நாம அவரை உத்ஸாஹ படுத்துவோம், அவருடைய பெருமையை அவருக்கு ஞாபக படுத்துவோம்னு எல்லா வானராளும் வந்து ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. ஜாம்பவான் சொல்றார், நீ வாயு குமாரன், உன்னால தான் முடியும், நீ தான் சீதையை பார்த்துண்டு வந்து எங்க உயிரை காப்பாத்தணும்னு வேண்டிக்கறார். எல்லாரும் ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ண பண்ண, அவரோட பலம் அவருக்கு ஞாபகம் வந்து பெருசா மலை போல உருவம் எடுத்து, என்னால முடியும். நான் காற்று போல ஆகாசத்துல போவேன். நான் போய் சீதையை பாத்துண்டு வரேன், அப்டினு இந்த மஹேந்திரமலை மேல ஏறி
यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः।
गच्छेत् तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.39।।
யதா² ராக⁴வநிர்முக்த꞉ ஶர꞉ ஶ்வஸனவிக்ரம꞉ |
க³ச்சே²த் தத்³வத்³க³மிஷ்யாமி லங்காம்ʼ ராவணபாலிதாம்||5.1.39||
எப்படி ராம பானம் தடையில்லாமல் போகுமோ, அது மாதிரி நான் சீதையை பார்த்து, லங்கைல இல்லைனாலும் மூவுலகத்துல எங்க இருக்கானு தேடி கண்டு பிடிச்சிட்டு வரேன்னு, ஆகாசத்துல போறார். கடல் நடுவுல “மைனாகம்”னு ஒரு தங்க மலை வந்து என் மேல தங்கி இளைப்பாறிட்டு போ, நான் சாப்பாடு தரேன்னு சொன்னதும், இல்ல நான் ராம கார்யமா போயிண்டு இருக்கேன்னு அன்பு பாராட்டிட்டு போறார். அப்புறம் “சுரசா”னு ஒரு நாக மாதா, தேவர்கள் வந்து இன்னிக்கி நீ தான் எனக்கு ஆஹாரம்னு சொல்லிருக்கா, நீ என் வாய்க்குள்ள போகணும்னு பெருசா வாயை திறக்கறா. இவர் எனக்கு வழி விடம்மா, நான் ராம கார்யமா போயிண்டு இருக்கேன் முடிச்சிட்டு திரும்ப வரேன்னு சொன்னவுடனே, இல்லைனு அவ இன்னும் பெருசா வாயை திறக்கறா. அவர் இன்னும் பெருசாகிறார். அவ இன்னும் பெருசா வாயை திறக்கறா. உடனே ஒரு கட்டைவிரல் அளவுக்கு உருவம் எடுத்து அவ வாய்க்குள்ள போயிட்டு வெளில வந்துடறார். அம்மா வழி விடு. நீ வாய்க்குள்ள போகணும்னு சொன்ன. நான் வாய்க்குள்ள போயிட்டு வந்துட்டேன்னவுடனே . சரி போயிட்டு வாப்பா.
अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्।।5.1.169।।
समानयस्व वैदेहीं राघवेण महात्मना।
அர்த²ஸித்³த்⁴யை ஹரிஶ்ரேஷ்ட² க³ச்ச² ஸௌம்ய யதா²ஸுக²ம்||5.1.169||
ஸமானயஸ்வ வைதே³ஹீம்ʼ ராக⁴வேண மஹாத்மனா|
ராமரையும் சீதையையும் சேத்து வை . நல்லபடியா போயிட்டு வான்னு வழி விடறா. “சிம்ஹிகை”னு நிழலை பிடிச்சு இழுக்கற ராக்ஷசி, அவ ஹனுமாரை பிடிச்சு இழுக்கறா. ஹனுமார் அவளை வதம் பண்ணிடறார். அப்புறம் லங்கைல போய் குதிக்கிறார். லங்கைல 4 அங்குலம் பாக்கி இல்லாம எல்லா இடத்துலயும் தேடறார்.ராவண அந்தபுரத்துல தேடறார்,எல்லா வீடுகள்லேயும் தேடறார், ஒவ்வொரு கதவையும் திறந்து பாத்து தேடறார். அப்டி தேடி சீதை கிடைக்கல அப்டிங்கறபோது தளர்ந்து போய், நான் என்ன பண்ணுவேன் இவ்ளோ தேடியும் சீதை கிடைக்கலயேன்னு வருத்தமா இருக்கார்.
नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै।
नमोऽस्तु रुद्रेन्द्रयमानिलेभ्यो नमोऽस्तु चन्द्रार्कमरुद्गणेभ्यः।।5.13.59।।
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தே³வ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோ(அ)ஸ்து ருத்³ரேந்த்³ரயமானிலேப்⁴யோ நமோ(அ)ஸ்து சந்த்³ரார்கமருத்³க³ணேப்⁴ய꞉ ||5.13.59||
அப்புறம் எல்லா தெய்வங்களையும் , ராம லக்ஷ்மண சீதாதேவியையும் வேண்டிண்டு பாக்கறார் அங்க ஒரு அசோக வனம் இருக்கு. ஆஹா இங்க பாக்கவே இல்லையேன்னு அங்க போய் பாக்கறார். அங்க ஒரு சிம்சுபா மரத்தடில சீதாதேவி இருக்கா. ராமரையே நெனைச்சிண்டு தபோ வடிவமா இருக்கக்கூடிய சீதாதேவியை கண்டார்.
तत्र लङ्कां समासाद्य पुरीं रावणपालिताम् |
தத்ர லங்காம்ʼ ஸமாஸாத்³ய புரீம்ʼ ராவணபாலிதாம் |
ராவணன் அவ்ளோ பாதுகாப்பு போட்டு வெச்சிருந்த லங்கா நகரத்துக்குள், லங்காதேவி எல்லாம் ஜெயிச்சு, மத்த ராக்ஷஸா கண்ணுல படாம
ददर्श सीतां ध्यायन्तीमशोकवनिकां गताम् ||
த³த³ர்ஶ ஸீதாம்ʼ த்⁴யாயந்தீமஶோகவநிகாம்ʼ க³தாம் ||
அசோக வனத்தில் ராமரையே த்யானம் பண்ணிண்டு இருந்த சீதாதேவியை கண்டார். சீதையை பாத்தபோது அவருக்கு அப்டியே மனசு உருகறது. இப்டி கூட ஒருத்தர் இருப்பாளா. இவ்ளோ பக்தி ராமர்கிட்ட அப்டின்னு,
नैषा पश्यति राक्षस्यः नेमान् पुष्पफलद्रुमान्।
एकस्थहृदया नूनं राममेवानुपश्यति।।5.16.25।।
நைஷா பஶ்யதி ராக்ஷஸ்ய꞉ நேமான் புஷ்பப²லத்³ருமான்|
ஏகஸ்த²ஹ்ருʼத³யா நூனம்ʼ ராமமேவானுபஶ்யதி||5.16.25||
அந்த அசோக வனம் அவ்ளோ அழகா இருக்கு. வண்ண வண்ண பூக்களும், வாசனை பூக்களும் கொட்டி கிடக்கு. அதெல்லாம் அவ பாக்கல. இந்த ராக்ஷசிகள் கோரமா சுத்தி உக்காந்துண்டு பயமுறுத்தறா, அதையும் அவ பாக்கல. மனசுல ராமனையே பாத்துண்டு ஒக்காந்திருக்கா. அந்த நேரத்துல ராவணன் அங்க வரான் . வந்து சீதைகிட்ட, நீ என் செல்வத்தை பாரு, உனக்கு எல்லாம் தரேன், நீ எனக்கு பட்டமஹிஷியா இருக்கலாம் , அப்படியெல்லாம் சொல்றான். சீதை ஒரு துரும்பை எடுத்து போட்டு, ராவணா உனக்கு உயிர் பிழைக்கனும்னா ராமர்கிட்ட என்னை ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டு,அவர் சரணாகத வத்சலர் பொழைச்சு போன்னு சொல்றா. அவனுக்கு கோபம் வர்ரது.இடம் குடுத்தா மேல மேல பேசற நீ, கெஞ்சினா மிஞ்சற, நீ வழிக்கு வரலைன்னா ரெண்டு மாசத்துல உன்னை வெட்டி தின்பேன் அப்டின்னு சொல்றான். இந்த மாதிரி ராம பத்தினியான என்ன பார்த்து பேசற, நானே உன்ன எரிச்சுடுவேன் என் தபஸால, ஆனா ராமர் உத்தரவு கொடுக்கல. ராமர் வந்து உன்னை வதம் பண்ண போறார்னு சீதையும் கொஞ்சம்கூட கலங்காம பதில் சொல்றா. அப்போ அவன் கோவம் வந்து சீதையை கொல்ல வரான். அப்போ மத்த மனைவிகள் எல்லாம் நீ ஏன் இந்த மனுஷ்ய பெண்ணோட மண்ணாடிண்டு இருக்கா. வா எங்களோட சந்தோஷமா இருக்கலாம்னு கூட்டிண்டு போறா. அவன் ராக்ஷசிகளை பாத்து சாம,தான,பேத,தண்டம் எது வேணா உபயோகப்படுத்துங்கோ, இவளை வழிக்கு கொண்டு வாங்கோன்னு சொல்லிட்டு போறான். ராக்ஷசிகள் எல்லாம் சீதை கிட்ட சூலத்தை காட்டி பயமுறுத்தறா, உன்னை கொன்னுடுவோம், இவ உன் குடலை எடுத்துப்பா, நான் உன் கையை எடுத்துப்பேன் , இவ உன் காலை எடுத்துப்பா , நாங்கெல்லாம் குடிச்சிண்டு சந்தோசமா சாப்பிடுவோம், உனக்கு என்ன இவ்ளோ பெரிய ராவண மஹாராஜா வந்து கேக்கறார், உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா, ராமன் எங்கேயோ காட்டுல சுத்திண்டு இருக்கான், உயிரோடு இருக்கானோ இல்லையோ தெரியாது, பத்து மாசம் ஆச்சு. 100 யோஜனை கடலை தாண்டி அவனால வர முடியுமா என்னமோ ராமா ராமானு சொல்லிண்டு இருக்கியேனு பயமுறுத்தறா. அப்போ சீதை,
दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।
तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।
தீ³னோ வா ராஜ்யஹீனோ வா யோ மே ப⁴ர்தா ஸ மே கு³ரு꞉ |
தம்ʼ நித்யமனுரக்தாஸ்மி யதா² ஸூர்யம்ʼ ஸுவர்சலா ||5.24.9||
ஏழையோ, ராஜ்யத்தை இழந்தவனோ, யாரா இருந்தாலும் என் கணவன் தான் என் தெய்வம். நான் சூரியனை சுவர்ச்சலா தேவி பின்தொடர்வதை போல, நான் ராமனையே பின்தொடர்வேன் அப்டினு சொல்றா. அவளெல்லாம் அலுத்து போய் ராவணன் கிட்ட இதை சொல்லலாம்னு போறா. அப்போ த்ரிஜடானு ஒருத்தி, நீங்க இவளை போட்டு ரொம்ப கொடுமை படுத்தாதீங்கோ. இவளுக்கு நல்ல காலம் வர போறது. நான் ஒரு ஸ்வப்னம் கண்டேன். அதுல ராமருக்கு நன்மையும், ராவணாதி ராக்ஷஸர்களுக்கு பெரும் கேடும், விபீஷணனுக்கு வாழ்வும் வர போறது. அதனால இவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு, இவகிட்ட ப்ரியமா பேசுங்கோ அப்டின்னு சொல்றா.
प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा ||
ப்ரணிபாதப்ரஸன்னா ஹி மைதி²லீ ஜனகாத்மஜா ||
நமஸ்காரம் பண்ண கருணை பண்ணுபவள் அப்டின்னு சொல்றா, அந்த ராக்ஷஸிகளும் அதுமாதிரி நமஸ்காரம் பண்றா. சீதைக்கு ஆனா ராமன் வரலையே அவனுக்கு என்ன ஆச்சோன்னு மேலும் மேலும் கவலை ஜாஸ்தியாகி, இனிமேலும் என்னால பொறுக்க முடியாது அப்டின்னு
प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।
ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम्।।5.26.50।।ப்ரியான்ன ஸம்ப⁴வேத்³து³꞉க²மப்ரியாத³தி⁴கம்ʼ ப⁴யம்|
தாப்⁴யாம்ʼ ஹி யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம்ʼ மஹாத்மனாம்||5.26.50||
தன் பின்னலையே சுருக்கா போட்டுண்டு நான் உயிரை விட போறேன்னு தீர்மானம் பண்றா. ஹனுமார் இதெல்லாம் பாத்துண்டுஇருக்கார். ஹனுமார் எப்படி இவளை பயமுறுத்தாம பேசறதுனு யோசிச்சு, நம்ப ராம கதையை சொல்வோம், அதை கேட்டா இவள் கொஞ்சம் சமாதானம் அடைஞ்சு நம்பகிட்ட பேசுவா அப்டின்னு யோசிச்சு, மெதுவா அவ காதுல விழற மாதிரி அவகிட்ட ஒரு கிளைல ஒக்காந்துண்டு ராம கதையை சொல்றார். அதுக்குள்ள அவளுக்கும் நல்ல சகுனங்கள் எல்லாம் வர்ரது. அவ நிமிர்ந்து ஹனுமாரை பாக்கறா,அடடா குரங்கை பாத்துட்டோமே, ஸ்வப்னத்துல குரங்கை பாத்தா கெடுதலேன்னு நெனைக்கறா. ஹனுமார் கீழ வந்து நீ யாரம்மா, ஏன் அழறேனு கேக்கறார்.அப்போ நீ ராம பத்தினி சீதாதேவியா இருந்தா சொல்லு அப்டின்னவுடனே, அமாம் நான் தசரதர் நாட்டுப்பெண், ஜனக குமாரி, ராமரோட மனைவி அப்டின்னு நடந்த வ்ருத்தாந்தங்கள் கைகேயி வரம் கேட்டதுலேந்து எல்லாத்தையும் சொல்றா. ஹனுமார் நான் ராம தூதன், ராமர் க்ஷேமமா இருக்கார். உனக்கும் க்ஷேமத்தை சொல்ல சொன்னார் அப்டிநன்னு சொல்லி,
रामनामाङ्कितं चेदं पश्य देव्यङ्गुलीयकम्।।5.36.2।।
ராமநாமாங்கிதம்ʼ சேத³ம்ʼ பஶ்ய தே³வ்யங்கு³லீயகம்||5.36.2||
ராமர் பேர் பொறித்த இந்த மோதிரத்தை பார்னு காண்பிக்கிறார்,சீதாதேவி அதை எடுத்து கண்ல ஒத்திண்டு ராமனையே அடைந்ததை போல சந்தோஷப்பட்டாள். ஹே ஹனுமான், இவ்ளோ பெரிய கடலையும், கோட்டையையும் கடந்து வந்து என்ன பாத்து ராமருடைய வார்த்தையை சொல்லி எனக்கு உயிரையே குடுத்தியே
विक्रान्तस्त्वं समर्थस्त्वं प्राज्ञस्त्वं वानरोत्तम।
येनेदं राक्षसपदं त्वयैकेन प्रधर्षितम्।।5.36.7।।
விக்ராந்தஸ்த்வம்ʼ ஸமர்த²ஸ்த்வம்ʼ ப்ராஜ்ஞஸ்த்வம்ʼ வானரோத்தம |
யேனேத³ம்ʼ ராக்ஷஸபத³ம்ʼ த்வயைகேன ப்ரத⁴ர்ஷிதம்||5.36.7||
நீ ஒருத்தனால தான் இந்த மாதிரி பண்ண முடியும் அப்டினு ரொம்ப கொண்டாடறா. ராமர் க்ஷேமமா இருக்கார்னு சொல்ற, ஆனா ஏன் இவ்ளோ நாள் என்ன வந்து காப்பதால, வருவாரா அப்டினு கேக்கறா. உடனே ஹனுமான், உங்கமாதிரியே அவரும் தவிச்சிண்டு இருக்கார், அவர் கட்டாயம் வருவார், அவருக்கு சாப்பாடு கூட இறங்கறது இல்ல, அவருக்கு தூக்கம் கூட வறதில்லை. அப்படியும் எப்பவாவது கண்ணை மூடினா ஸ்வப்னத்துல உங்கள கண்டு,
सीतेति मधुरां वाणीं व्याहरन्प्रतिबुध्यते।।5.36.44।।
ஸீதேதி மது⁴ராம்ʼ வாணீம்ʼ வ்யாஹரன்ப்ரதிபு³த்⁴யதே||5.36.44||
சீதேனு எழுந்துண்டுடறார். உங்களை மறக்கல. நான் வசிக்கிற மலை மேலயும் , சாப்பிடற பழம் , கிழங்கு மேலயும் சத்தியமா சொல்றேன், அவர் உங்களையே தான் நெனைச்சிண்டு இருக்கார். ராமர் வெகு விரைவில் வருவார். உங்களை மீட்டுண்டு போவார், ஆனா நீங்க படற இந்த கஷ்டம் எனக்கு பொறுக்க முடியல. நீங்க வேணா என் முதுகுல எரிக்கோங்கோ, நான் இப்போவே உங்களை ராமர்கிட்ட சேத்துடறேன் அப்டினு சொல்றார். இல்ல ஹனுமான், நானா வலிய வந்து எப்படி இன்னொரு ஆண் மகன் முதுகுல ஏற முடியும். நீ ராமரை அழைச்சுண்டு வா, அவர் வந்து இந்த ராவணாதி ராக்ஷஸர்களை வதம் பண்ணி என்ன கூட்டிண்டு போனா தான் அவருக்கு பெருமை. ராவணன் தூக்கிண்டு போன மாதிரி, தூக்கிண்டு போறது பெருமை இல்லை. நீ போய் ராமரை அழைச்சிண்டு வா,
स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं पतिं सयूथपं क्षिप्रमिहोपपादय।
चिराय रामं प्रति शोककर्शितां कुरुष्व मां वानरमुख्य हर्षिताम्।।5.37.66।।
ஸ மே ஹரிஶ்ரேஷ்ட² ஸலக்ஷ்மணம்ʼ பதிம்ʼ ஸயூத²பம்ʼ க்ஷிப்ரமிஹோபபாத³ய|
சிராய ராமம்ʼ ப்ரதி ஶோககர்ஶிதாம்ʼ குருஷ்வ மாம்ʼ வானரமுக்²ய ஹர்ஷிதாம்||5.37.66||
சீக்கிரமா ராமரை அழைச்சிண்டு வந்து, ரொம்ப அவரை பிரிஞ்சு சோகத்துல தவிக்கிற என்னை சந்தோசப்படுத்து அப்டின்னு வேண்டிக்கறா. அப்போ கவலை படாதீங்கோ அம்மா, நான் இங்கேருந்து போய் சொல்ற நேரம் தான் delay ஆகும், உடனே ராமர் வானர படையோடு வந்துருவார்.
மொதல்ல ” கிமர்த²ம் தவ நேத்ராப்⁴யாம்ʼ வாரி ஸ்ரவதி ஶோகஜம்” — ஏன் இந்த மாதிரி உன் கண்லேந்து துக்க கண்ணீர் வரதுனு கேட்டார்.
இப்போ “மாருதோ³ தே³வி ஶோகேன “மா பூ⁴த்தே மனஸோ(அ)ப்ரியம்” – உங்க மனசுல வருத்தங்கள், விபரீதமான எண்ணங்களே இனிமே வேண்டாம், நீங்க வருத்தப்பட்டு அழறதே இனிமே வேண்டியதில்லை.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா, அக்னி வாயு மாதிரி ரெண்டு நாதர்களா இருக்கா ,நீங்க அனாதை கிடையாது. சுக்ரீவன் உங்க கார்யத்துல முனைப்பா இருக்கான். நாங்க ஒவ்வொருத்தரும் உங்களை மீட்கறதுல முணைப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் பொறுங்கோ நான் போய் ராமர் கிட்ட சொல்ற நேரம் தான் ஆகும், அவர் உடனே வானர படையோடு வந்து உங்களை மீட்டுண்டு போயிடுவார், அப்டினு பலதடவை சொல்லி ,” ஸமாஶ்வாஸயிதும்ʼ” – திரும்ப திரும்ப அவர் சமாதானம் பன்றார் சீதாதேவியை. அப்புறம் நீங்க என்னோட வரலைன்னா ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்கோங்கறபோது, சீதை வந்து ஒரு காக்கை வந்து அவ மார்பை கொத்தின போது ராமர் ஒரு புல்லை எடுத்து ப்ரம்மாஸ்திரம் போட்ட வ்ருத்தாந்தத்தை சொல்லி, சித்ரகூடத்துல நடந்தது , இத ராமர்கிட்ட சொல்லு, மேலும் என் நெத்தில திலகம் அழிஞ்ச போது ஒரு சிவப்பு கல்லை தேய்ச்சு என் நெத்திலயும், கன்னத்திலேயும் பூசி விட்டார் அதெல்லாம் சொல்லு.
हनुमन् यत्नमास्थाय दुःखक्षयकरो भव।।5.39.4।।
ஹனுமன் யத்னமாஸ்தா²ய து³꞉க²க்ஷயகரோ ப⁴வ||5.39.4||
முயற்சி பண்ணி எப்படியாவது என் துக்கத்தை போக்கு. நான் என் கணவனோடு சேரும் படியா தயவு பண்ணு.நீ தான் பண்ண முடியும்னு சொல்றா. இந்த இவளுடைய சோகமான வார்த்தைகளை கேட்டு, ஹனுமார் ஆறுதல் சொல்றார்,இருந்தாலும் இவளை இப்படி கொடுமை படுத்தினாலே இந்த ராக்ஷசிகள் அப்டின்னு அவரோட அந்த வருத்தம் கோவமா வரது.
उल्लङघ्य सिन्धो: सलिलं सलीलं य: शोकवन्हिं जनकात्मजाया: |
आदाय तेनैव ददाह लङ्कां नमामि तं प्रान्जलिराञ्जनेयम् ||
உல்லஙக்⁴ய ஸிந்தோ⁴: ஸலிலம்ʼ ஸலீலம்ʼ ய: ஶோகவன்ஹிம்ʼ ஜனகாத்மஜாயா: |
ஆதா³ய தேனைவ த³தா³ஹ லங்காம்ʼ நமாமி தம்ʼ ப்ரான்ஜலிராஞ்ஜனேயம் ||
அப்டினு ஒரு ஸ்லோகம் இருக்கு இல்லையா. அந்த மாதிரி “ய: ஶோகவன்ஹிம்ʼ ஜனகாத்மஜாயா: ஆதா³ய ” –
“தேனைவ த³தா³ஹ லங்காம்ʼ ” – அந்த சோக அக்னியை எடுத்து, அந்த அக்னியாலேயே லங்கையை எரித்தார்.அந்த மாதிரி அவளுடைய சோகம் இவருக்கு கோவமா ஆயிடுத்து. இந்த ராக்ஷஸ பதர்களை எல்லாம் ஏதாவது தண்டிக்கணும் அப்டின்னு
“சமாஸ்வாஸ்யச வைதேஹீம் வார்தயாமஸ தோரணம்”
அந்த அசோக வனத்தையே அழிக்கிறார்.அசோக வனத்துக்கு ஒரு வாயில் தோரணம் இருக்கு.அதை உடைக்கிறார். அங்க ஒரு 100 தூண் கொண்ட ஒரு மண்டபம், மாளிகையெல்லாம் இருக்கு அதையெல்லாம் பொடிப்பொடியா ஆக்கறார். ராவணன் 80000 ரக்ஷஸா, கின்கறாள்னு அவாளை அனுப்பறான். அவாளையெல்லாம் தனி ஒருவரா துவம்சம் பன்றார்.
जयत्यतिबलो राम: लक्ष्मणश्च महाबलः।
राजा जयति सुग्रीव: राघवेणाभिपालितः।।5.42.33।।
दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः।
हनुमान्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः।।5.42.34।।
न रावणसहस्रं मे युद्धे प्रतिबलं भवेत्।
शिलाभिस्तु प्रहरतः पादपैश्च सहस्रशः।।5.42.35।।
अर्दयित्वा पुरीं लङ्काम् अभिवाद्य च मैथिलीम्।
समृद्धार्थो गमिष्यामि मिषतां सर्वरक्षसाम्।।5.42.36।।
ஜயத்யதிப³லோ ராம: லக்ஷ்மணஶ்ச மஹாப³ல꞉|
ராஜா ஜயதி ஸுக்³ரீவ: ராக⁴வேணாபி⁴பாலித꞉||5.42.33||
தா³ஸோ(அ)ஹம்ʼ கோஸலேந்த்³ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண꞉|
ஹனுமான்ஶத்ருஸைன்யானாம்ʼ நிஹந்தா மாருதாத்மஜ꞉||5.42.34||
ந ராவணஸஹஸ்ரம்ʼ மே யுத்³தே⁴ ப்ரதிப³லம்ʼ ப⁴வேத்|
ஶிலாபி⁴ஸ்து ப்ரஹரத꞉ பாத³பைஶ்ச ஸஹஸ்ரஶ꞉||5.42.35||
அர்த³யித்வா புரீம்ʼ லங்காம் அபி⁴வாத்³ய ச மைதி²லீம்|
ஸம்ருʼத்³தா⁴ர்தோ² க³மிஷ்யாமி மிஷதாம்ʼ ஸர்வரக்ஷஸாம்||5.42.36||
அப்டின்னு கர்ஜிக்கறார். நான் ராமதாசன் ஹனுமான், 1000 ராவணர்கள் என் முன்னாடி நிக்க முடியாது. நான் சீதையை பார்த்து ராக்ஷசர்களை வதம் பண்ணி திரும்ப ராமர்கிட்ட போவேன் யாராவது முடிஞ்சா தடுத்து பாருங்கோ, அப்டின்னு கர்ஜிக்கறார். ராவணன் மேலும் மேலும் பஞ்ச சேனாதிபதிகளை அனுப்பறான், ஏழு மந்த்ரி புத்திரர்களை அனுப்பறான், ஜம்புமாலினு ப்ரஹஸ்தனோட புத்திரன் வரான்.
पञ्च सेनाग्रगान् हत्वा सप्त मन्त्रिसुतानपि |
பஞ்ச ஸேநாக்³ரகா³ன் ஹத்வா ஸப்த மந்த்ரிஸுதானபி |
“ஶூரமக்ஷம்ʼ ச நிஷ்பிஷ்ய” – ராவணனுடைய பிள்ளை மண்டோதரி பிள்ளை “அக்ஷன்” ஒருத்தன் , இவா எல்லாரையும் “நிஷ்பிஷ்ய” – பொடிப்பொடியா ஆக்கிடறார்.
“க்³ரஹணம்ʼ ஸமுபாக³மத்” – அப்புறம் இந்திரஜித் வந்து ப்ரஹ்மாஸ்திரம் போடறான். அதுக்கு அவர் கட்டுப்படறார், ஏன்னா ராவணனை பாக்கணும் அடுத்து.
अस्त्रेणोन्मुक्तमात्मानं ज्ञात्वा पैतामहाद्वरात् |
मर्षयन् राक्षसान् वीरो यन्त्रिणस्तान्यदृच्छया ||
அஸ்த்ரேணோன்முக்தமாத்மானம்ʼ ஜ்ஞாத்வா பைதாமஹாத்³வராத் |
மர்ஷயன் ராக்ஷஸான் வீரோ யந்த்ரிணஸ்தான்யத்³ருʼச்ச²யா ||
தான் ப்ரஹ்மாஸ்திரத்திற்கு கட்டு படவேண்டாம் , ஏன்னா ப்ரம்மாவோட வரம் இருக்கு. இருந்தாலும் கட்டு பட்டு இருக்கார் “க்³ரஹணம்ʼ ஸமுபாக³மத்”. நேரா ராவணன் சபைக்கு அழைச்சிண்டு போறா.
ராவணனுக்கு நல்ல புத்தி சொல்றார்.
सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।।5.51.39।।
पुनरेव तदा स्रष्टुं शक्तो रामो महायशाः।
ஸர்வான் லோகான் ஸுஸம்ʼஹ்ருʼத்ய ஸபூ⁴தான் ஸசராசரான்||5.51.39||
புனரேவ ததா³ ஸ்ரஷ்டும்ʼ ஶக்தோ ராமோ மஹாயஶா꞉|
பதினாலு லோகங்களும் சம்ஹாரம் பண்ணவும், திரும்ப அதே மாதிரி ஸ்ருஷ்டி பண்ணவும் ராமருக்கு தெரியும். அவரோட பராக்ரமம் பத்தியும், வானராளோட பராக்ரமம் பத்தியும் உனக்கு தெரியல. நீ சீதையை அபகரிச்சு இங்க கொண்டு வெச்சிருக்க, அஞ்சு தலை பாம்பை வீட்ல வெச்சிருக்கற மாதிரி, கால ராத்திரி இந்த லங்கா நகரத்துக்கு இந்த சீதாதேவி, நீ தப்பு பண்ற,சீதையை ராமர்கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டு உயிர் பொழைச்சு போன்னு சொல்றார். அவனுக்கு கோபம் வந்து இவரை கொல்லுங்கோன்னு சொல்றான். விபீஷணன் எழுந்து தூதனை கொல்ல கூடாதுனு சொன்னவுடனே, இவர் வால்ல தீ வையுங்கோனு சொல்றான். அந்த வால்ல நெருப்பு வெச்சு கட்டி இழுத்துண்டு போறா.
मर्षयन् राक्षसान् वीरो यन्त्रिणस्तान्यदृच्छया ||
மர்ஷயன் ராக்ஷஸான் வீரோ யந்த்ரிணஸ்தான்யத்³ருʼச்ச²யா ||
அப்டி வால்ல நெருப்பு வெச்சு கட்டி இழுத்துண்டு போகும் போது “யத்³ருʼச்ச²யா” அந்த எந்திரத்துலேந்து விடுபட்டு , அந்த ராக்ஷஸர்களை எல்லாம் அடிச்சு தள்ளிட்டு
ततो दग्ध्वा पुरीं लङ्कामृते सीतां च मैथिलीम् |
रामाय प्रियमाख्यातुं पुनरायान्महाकपिः ||
ததோ த³க்³த்⁴வா புரீம்ʼ லங்காம்ருʼதே ஸீதாம்ʼ ச மைதி²லீம் |
ராமாய ப்ரியமாக்²யாதும்ʼ புனராயான்மஹாகபி꞉ ||
லங்கைக்கு நெருப்பு வெக்கறார். எல்லா வீட்டுக்கும் நெருப்பு வைக்கறார். சீதாதேவி இருந்த அந்த ஒரு இடம் தவிர லங்கைல பாக்கி எல்லா இடமும் பற்றி எரிகிறது. “ருத்³ரேண த்ரிபுரம்ʼ யதா²” – எப்படி முப்புறத்தை பரமேஸ்வரன் எரித்ரோ அந்த மாதிரி லங்காபுரத்தை ஹனுமார் எரிக்கறார். அப்புறம் சீதைக்கு ஏதாவது ஆய்டுதானு கவலை வரது. அவருக்கு ஏற்பட்ட நல்ல சகுனங்களை கொண்டும்,சாரணர்கள் பேசிண்ட பேச்சை கொண்டும் சீதைக்கு ஒண்ணும் ஆகலைனு தெரியறது, இருந்தாலும் நேரா போய் சீதையை பாக்கறார். சீதை, ஹே ஹனுமான் நீ ஒருத்தனே இந்த லங்கா நகரத்தை துவம்சம் பண்ணி ராவண வதம் பண்ணி என்னை மீட்டுண்டு போறதுக்கு திறமை உடையவன்னு தெரியும். நீ போய் ராமரை அழைச்சிண்டு வா, அவர் வந்து என்னை மீட்டுண்டு போணும். அதான் அவருடைய பெருமைக்கு அழகு. சரின்னு உத்தரவு வாங்கிண்டு திரும்பவும் ஆகாச மார்கமாக திரும்ப வந்து அங்கதன் , ஜாம்பவான் முதலிய வானர வீரர்கள்கிட்ட “த்³ருʼஷ்டா ஸீதா” – கண்டேன் சீதையை அப்டினு சொல்றார். அப்புறம்
रामाय प्रियमाख्यातुं पुनरायान्महाकपिः ||
ராமாய ப்ரியமாக்²யாதும்ʼ புனராயான்மஹாகபி꞉ ||
ராமருக்கு இந்த பிரியமான செய்தியை சொல்வதற்காக, “மஹாகாபி:” – வெற்றி வீரரான ஹனுமான் “புனராயான்” – திரும்ப வந்தார். இல்லைன்னா சீதாதேவியை பாத்துண்டு அங்கேயே இருந்துடுவார் போலிருக்கு.
ராமர்கிட்ட இதை சொல்லனுமேன்னு திரும்ப வந்த மாதிரி இருக்கு இந்த வரி.
ஸ்வாமிகள் ஒரு incident சொல்வார். அந்த காலத்துல கல்யாணத்துல எல்லாருக்கும் ஒரு ரூபா கொடுப்பா, பூரி தக்ஷினைனு. ஒருத்தர் queueல வாங்கிண்டு, அவருக்கு என்ன கஷ்டமோ ரெண்டாவது வாட்டி queueல வந்தாராம். இந்த தனிகர் குடுத்துண்டு இருக்கிறவர், “புனராயான்மஹாகபி꞉” அப்டின்னாராம். திரும்ப வந்திருக்கு பாருடா குரங்கு lineல அப்டின்னு சொல்றார் அவர். வாங்கிண்டவர் “ராமாய ப்ரியமாக்²யாதும்ʼ புனராயான்மஹாகபி꞉ ” அப்டினாராம். உடனே அவர் ஆஹா, அதாவது நமக்கு ஒரு ஸ்லோகம் சொன்னா அடுத்த line தான் ஞாபகம் வரும், பின்னாடி இருக்கறது ஞாபகம் வராது. பின்னாடி இருக்கறது ஞாபகம் வரணும்னா நெறைய ஆவர்த்தி பண்ணிருக்கணும். உடனே தனிகர் என்ன மன்னிச்சுக்கோங்கோ அப்டின்னு, அவரை தனியா அழைச்சிண்டு போய், ராமாயண பண்டிதர்னு கௌரவ படுத்தினார் அப்டினு சொல்வார். அந்த வரிக்கு இந்த மாதிரி ஒரு கதை சொல்வார். “ராமாய ப்ரியமாக்²யாதும்ʼ புனராயான்மஹாகபி꞉ “.
அப்படி திரும்ப வந்தா. நடுல மதுவனத்துல கொஞ்சம் தேன் எல்லாம் சாப்டுட்டு, ராமர்கிட்ட வந்து,
सोऽभिगम्य महात्मानं कृत्वा रामं प्रदक्षिणम् |
ஸோ(அ)பி⁴க³ம்ய மஹாத்மானம்ʼ க்ருʼத்வா ராமம்ʼ ப்ரத³க்ஷிணம் |
ராமர்கிட்ட வந்து ப்ரதக்ஷிணம் பண்ணி , நமஸ்காரம் பண்ணி,
न्यवेदयदमेयात्मा दृष्टा सीतेति तत्त्वतः ||
ந்யவேத³யத³மேயாத்மா த்³ருʼஷ்டா ஸீதேதி தத்த்வத꞉ ||
கண்டேன் சீதையை அப்டினு சொல்றார். சீதை குடுத்த சூடாமணியை குடுக்கறார். நடந்தது எல்லாம் சீதை சொன்னதெல்லாம் ஒண்ணு விடாம ராமர்கிட்ட சொல்லி, நம்ப உடனடியா கிளம்பி போய் சீதையை மீட்கணும். ராமரும் ரொம்ப சந்தோஷப்பட்டு, என் குல கௌரவத்தையே ஹனுமான் நீ காப்பாத்தின. உனக்கு நான் என்ன பண்ண முடியும். என்னையே குடுக்கறேன் அப்டினு ஹநுமானை ஆலிங்கனம் பண்ணிக்கறார். அதுக்கப்புறம் எல்லாரும் கிளம்பி சுக்ரீவனோட படையோடு கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். இன்னிக்கி 78 ஸ்லோகங்கள் ஆயிருக்கு. இந்த சங்க்ஷேப ராமாயணத்துல யுத்த காண்டம் ரொம்ப சுருக்கமா இருக்கு. அடுத்த ரெண்டு ஸ்லோகத்துல யுத்த காண்டம் முடிஞ்சிடறது. ஆனா அவ்ளோ சீக்கிரமா முடிக்கறதுக்கு எனக்கு மனசு வரல. நாம 11 நாள் படிக்கலாம்னு இருக்கோம். அதனால நாளைக்கு இந்த ரெண்டு ஸ்லோகங்கள் கொண்டு யுத்த காண்டத்தை முடிக்கிறேன். அப்புறம் ரெண்டு நாள்ல பாக்கி 20 ஸ்லோகத்தை படிச்சு பூர்த்தி பண்ணலாம். இன்னிக்கி இந்த சுந்தர காண்டத்தோட நிறுத்திப்போம்.
ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!
2 replies on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning”
சுந்தர் காண்டம் கேட்ட பின் மனதில் புதுத் தெம்பு வந்தது.
Arputham 🙏🙏🙏🙏🙏