ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning
ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வந்தோம். இன்னிக்கி கடைசி பத்து ஸ்லோகங்கள். அதுக்கு முன்னாடி ஒரு வரில
रामः सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ||89||
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89||
அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா தான் ஆனந்தமா இருக்கும். அதனால ராம பட்டாபிஷேக சர்கம் 131வது சர்கம், யுத்த காண்டத்துலேந்து எடுத்து கொண்டாடுவோம்.
விஸ்தாரமா 3 மணி நேரத்துக்கு மேல சங்க்ஷேப ராமாயணத்தை பார்த்திருக்கோம், ராமருடைய கதையை. அதனால பட்டாபிஷேகத்தையும் கொண்டாடிட்டு பூர்த்தி பண்ணலாம் இல்லையா. ராம பட்டாபிஷேக சர்க்கத்துல முதல் ஸ்லோகம்,
शिरस्यञ्जलिमादाय कैकेयीनन्दिवर्धनः |
बभाषे भरतो ज्येष्ठन् रामं सत्यपराक्रमम् || 1||
ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய கைகேயீனந்தி³வர்த⁴ன꞉ |
ப³பா⁴ஷே ப⁴ரதோ ஜ்யேஷ்ட²ன் ராமம்ʼ ஸத்யபராக்ரமம் || 1||
ஹனுமனை அனுப்பிச்சி ராமர் பரதன்கிட்ட நான் வரேன்னு சொல்லுன்னு சொல்லும்போதே ராமர் சொல்றார், நீ போய் பாரு 14 வருஷங்கறது ஒரு பெரிய காலம் , அயோத்தி ராஜ்யம்ங்கறது அமராவதிக்கும் மேல செல்வ செழிப்பும் ஆனந்தத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு பூமி, ஒரு நகரம் . பரதனுக்கு ராஜ்ஜியத்துல ஒரு சொட்டு அதுல பற்று வந்திருந்தாகூட நீ உடனடியா வந்து என்கிட்ட நான் பக்கத்துல வறதுக்குள்ள சொல்லு, ஏன்னா பரதனே ஆட்சி செய்யணும்னு நான் ஆசை படறேன் அவன் விரும்பினான்னா, அப்படின்னு ராமருக்கு தம்பி மேல அவ்ளோ ஒரு அன்பு அப்படின்னு சொல்றார். ஆனா பரதன் நான் ராமரோட ராஜ்ஜியத்துல ஒரு நாளும் மனசு வெக்க மாட்டேன் அப்படின்னு சொன்ன வார்த்தை அதான்.
அதனால ராமர் வந்து சேர்ந்தவுடனே பரதன் நமஸ்காரம் பண்ணறான். அப்புறம் இதை சொல்றான், “ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய” – கைகள் தலை மேல கூப்பிண்டு, ஏன்னா அவனுக்கு ராமரோட இந்த எண்ணம் தெரியும். கைகேயி சந்தோஷத்துக்காக பரதா நீயே ராஜ்ஜியத்தை திரும்பவும் வெச்சுக்கோன்னு சொல்லிடப்போறார்னு சொல்லி, “சத்ய பராக்ரமம் ராமம் பரத: பபாஷே” – பரதன் இந்த வார்த்தைகளை சொன்னான் . இந்த இடத்துல பரதனுக்கு “கைகேயானந்த வர்தன:” அப்படின்னு ஒரு பதம் போட்டுருக்கார், கைகேயியின் ஆனந்தை வளர்ப்பவர்னு.
ராமர் அங்கேருந்து பரதனை பாதுகை குடுத்து திருப்பி அனுப்பும்போது ஒரு ப்ரதிஞை பண்ண சொல்றார். என் மேலயும் சீதை மேலயும் ஆணை, நீ கைகேயியை கடிந்து எதுவுமே பேச கூடாதுன்னு, பரதனும் ஆஹா னு சொல்றான். அவன் நீங்க பதினைத்தாவது வருஷம் முதல் நாள் திரும்ப வரணும் , நான் உயிரை கையில் பிடிச்சிண்டு காத்துண்டிருப்பேன்னு சொன்னதும், ராமரும் அதுக்கு ஒத்துக்கறார். அந்த மாதிரி அவன் கைகேயியை எதுவும் கடிந்து பேசாம, அம்மாங்கற அளவுல பாத்துண்டு இருக்கான்.
பரதன் சொல்றான், இந்த ராஜ்ய பாரத்தை என்னால தாங்க முடியாது. ஒரு காளை இழுக்க வேண்டிய சுமையை ஒரு கன்னுக்குட்டி இழுக்க முடியாது. ஒரு கழுகு பறக்கற மாதிரி ஒரு காக்கை பறக்க முடியாது. தசரத மஹாராஜாஉங்களைத்தான் இந்த ராஜ்யத்துல முடி சூட்டணும்னு எல்லா ராஜ குணங்களும் எல்லா விஷயங்களும் கத்து குடுத்து உங்களை வளர்த்தார். ஒரு மரம் நல்லா கப்பும், கிளையுமா வளர்ந்து கடைசில பழம் குடுக்கலன்னா எப்படியோ, அப்படிதான் நீங்க இருக்கும்போது நீங்க ராஜாவா இருக்கலைன்னா எங்களுக்கு பெரிய நஷ்டம் குறை. தயவு செய்து இந்த ராஜ்யத்தை ஏத்துக்கணும்.
यावदावर्तते चक्रम् यावती च वसुन्धरा |
तावत्त्वमिह सर्वस्य स्वामित्वम्अनुवर्तय ||
யாவதா³வர்ததே சக்ரம் யாவதீ ச வஸுந்த⁴ரா |
தாவத்த்வமிஹ ஸர்வஸ்ய ஸ்வாமித்வம்அனுவர்தய ||
“யாவதா³வர்ததே சக்ரம்“ – எது வரைக்கும் கால சக்கரம் சுழல்கிறதோ,
“யாவதீ ச வஸுந்த⁴ரா“ – எது வரைக்கும் மலைகளும், நதிகளோடும் இந்த பூமி இருக்கிறதோ
“தாவத்”- அது வரைக்கும்
“த்வம் இஹ ஸர்வஸ்ய” – நீங்கள் இங்க எங்கள் எல்லாருக்கும்
“ஸ்வாமித்வம்அனுவர்தய” – ஸ்வாமியா இருக்கனும் , அப்டின்னு சொல்றான்.
அதுக்கு முந்தின ஸ்லோகத்துல
तूर्यसङ्घातनिर्घोषैः काञ्चीनूपुरनिस्वनैः |
मधुरैर्गीतशब्दैश्च प्रतिबुध्यस्व राघव ||
தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ காஞ்சீநூபுரநிஸ்வனை꞉ |
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ ||
ராஜாவா இருந்தா எல்லாரைக்காட்டிலும் அவருக்குதான் பொறுப்பு அதிகம்,எல்லாரைக்காட்டிலும் அவருக்கு தான் போகங்களும் அதிகம் . பரதன் சொல்லும்போது, தன்னால ராஜ போகங்களெல்லாம் இழந்து காட்டுல கல்லுலேயும், முள்ளுலேயும் கஷ்டப்பட்டு நடந்து , தரைல படுத்துண்டு கஷ்டப்படறாரே, அப்டின்னு அது அவன் மனச ரொம்ப பாதிச்சிடுத்து . அதனால, நீங்க ராஜ பட்டாபிஷேகம் பண்ணிக்கணும், எங்களுக்கு நீங்க ராஜாவா இருக்கறதுனால நாங்கள்ளாம் சந்தோஷமா இருப்போம்ங்கறது மட்டுமில்ல, நீங்களும் சந்தோஷமா இருக்கனும்.
“தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ “ – நல்ல நாதஸ்வரம் , வீணா நாதம், ம்ருதங்கம் , “காஞ்சீநூபுரநிஸ்வனை꞉” – பெண்களுடைய ஆபரண சப்தங்கள் எல்லாம் கேட்டுண்டு ,
“மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச “- இனிமையான கீதங்கள் கேட்டுண்டு , வந்திகள் எல்லாம் உங்களை ஸ்தோத்ரம் பண்ற மாதிரி ,
“ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ” – ஒவ்வொரு நாளும் நீங்க எழுந்துக்கணும். ராஜ போகங்களையும் நீங்க அனுபவிக்கனும் , எங்களையும் ராஜாவாக இருந்து வழிநடத்தணும் அப்டின்னு பரதன் வேண்டிக்கறான்.
भरतस्य वचः श्रुत्वा रामः परपुरञ्जयः |
तथेति प्रतिजग्राह निषसादासने शुभे ||
ப⁴ரதஸ்ய வச꞉ ஶ்ருத்வா ராம꞉ பரபுரஞ்ஜய꞉ |
ததே²தி ப்ரதிஜக்³ராஹ நிஷஸாதா³ஸனே ஶுபே⁴ ||
ராமரும் அப்டியே ஆகட்டும்னு சொல்றார்.
ஸ்வாமிகள் சொல்வார், பரதன் கேட்டபோது காலச்சக்கரம் இருக்கற வரைக்கும் ராமா நீ எங்களுக்கு ராஜாவா இருக்கணும்னு கேட்டதுக்கு, ராமர் அப்படியே அகட்டும்னு சொல்லிருக்கார். ராமர் சத்தியமும் தர்மமும் வடிவானவர். அதனால இன்னிக்கும் நமக்கெல்லாம் ராமர் தான் ராஜா. “நாடாளுநாயகா வயலூரா ” னு அருணகிரிநாதர் முருகப்பெருமானை பாடறார். அந்த மாதிரி நமக்கெல்லாம் நாடளுநாயகன் ராமர்தான் அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.
அப்புறம் ராமர், லக்ஷ்மணன் , பரதன், சத்ருக்னன் நாலுபேரும் ஜடையெல்லாம் எடுத்துட்டு
“ஸுக²ஹஸ்தா꞉ ஸுஶீக்⁴ரா: ஶ்மஶ்ருவர்த⁴கா꞉” – நாவிதர்கள் பத்தி சொல்லும்போது அவா கைப்படறதே தெரியாது, சீக்கிரமாவும் செய்வான்னு ரெண்டு அடைமொழி போட்ருக்கா. அவாளைக்கொண்டு ஜடையெல்லாம் எடுத்துட்டு, ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிண்டு, இந்த எல்லா பரிஜனங்களோட ராமர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்திரனை போல ஜொலிக்கிறார். அப்புறம் ராமரை சூரியனை போல ஜொலிக்கற ஒரு தேர்ல ஒக்காற வைத்து, பரதனே ஒட்டிண்டு நந்திக்ராமத்துலேந்து எல்லாரோடும் அயோத்திக்கு ராமர் போறார்.
ऋषिसङ्घैर्तदाकाशे देवैश्च समरुद्गणैः |
स्तूयमानस्य रामस्य शुश्रुवे मधुरध्वनिः ||
ருʼஷிஸங்கை⁴ர்ததா³காஶே தே³வைஶ்ச ஸமருத்³க³ணை꞉ |
ஸ்தூயமானஸ்ய ராமஸ்ய ஶுஶ்ருவே மது⁴ரத்⁴வனி꞉ ||
ராமர் நந்திக்ராமத்துலேந்து அயோத்தி தேர்ல போறத பாத்து, ஆகாசத்துல தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ற மதுரமான ஒலி எல்லார்க்கும் கேட்டது அப்படின்னு ஒரு ஸ்லோகம். அதுல இந்த “மதுரத்வனி” ங்கறத வெச்சிண்டு ஸ்வாமிகள் சொல்வார், இந்த ராமாயணம் வாசிக்கும் போது கேக்கறதுதான் எல்லத்தைக்காட்டிலும் மதுரத்வனி, அதனால அடிக்கடி ராமாயணம் படிக்கணும் , ராமாயணம் கேக்கணும் அப்டின்னு சொல்வார்.
अक्षतन् जातरूपं च गावः कन्यास्तथा द्विजाः |
नरा मोदकहस्ताश्च रामस्य पुरतो ययुः ||
அக்ஷதன் ஜாதரூபம்ʼ ச கா³வ꞉ கந்யாஸ்ததா² த்³விஜா꞉ |
நரா மோத³கஹஸ்தாஶ்ச ராமஸ்ய புரதோ யயு꞉ ||
முன்னாடி ஜனங்களெல்லாம் சீர் வரிசை எல்லாம் எடுத்துண்டு போறா. அதுல தங்கம் போல ஜ்வலிக்க கூடிய அக்ஷதை , அவ்ளோ அழகா இருக்காம். கன்யா பெண்கள் பசுமாடுகள் , ப்ராஹ்மணர்கள், “நரா: மோத³கஹஸ்தாஶ்ச “ – ஜனங்கள் கைல தட்டுல மோதகம் எல்லாம் எடுத்துண்டு, “ராமஸ்ய புரதோ யயு꞉ “ – ராமர் முன்னாடி போறார்கள்னு வரது. இந்த பட்டாபிஷேக சர்க்கத்துல அப்படி வரதுனால, ராம பட்டாபிஷேக சர்கம் பூர்த்தில மோதகம் நெய்வேத்தியம் பண்ணலாம் அப்டின்னு ஸ்வாமிகள் சொல்வார். ஸ்வாமிகள் விஷயத்துல என்னன்னா அவர் பாராயண விஷயத்துல எந்த condition னும் போட மாட்டார்.
பாராயணம் பண்ணுவார். list எல்லாம் எதுவுமே கொடுக்கவே மாட்டார். என்ன அவருடைய தேவைன்னா, எனக்கு ஒரு தேவையுமில்லை, என்கிட்ட புஸ்தகம் இருக்கு நான் படிக்க போறேன் உங்க ஆத்துல. இருக்க இடம், சாப்பாடு அவ்ளோ எளிமையா இருப்பார் அவர். அவா பிரியப்பட்டு என்ன பண்ணலாம்னு கேட்டா, இந்த மாதிரி ஒண்ணு இருக்கு, மோதகம் வேணா பண்ணுங்கோ அப்டின்னு சொல்லுவார். அதுக்கு மேல மத்ததுஎல்லாம் நம்ப ஆசைக்கு பண்றதுதான். அந்த text படிக்கணும், வால்மீகி ராமாயணம் படிக்கணும் அப்படிங்கறது ஸ்வாமிகளோட உபதேசம். ஏன்னா வெளிஉலகத்துல நாம கோவில் கட்டலாம் ராமருக்கு, ஆனா இந்த ராமாயணத்தை திரும்ப திரும்ப படிச்சு அந்த தர்ம பலம், சத்ய பலம் அது தான் தேசத்துக்கு ரொம்ப முக்கியம். மத்தது எல்லாம் தானா நடக்கும் அப்படிங்கறது அவரோட அனுபவம். அப்படி ராமர் அயோத்திகுள்ள நுழையும்போது
हृष्टपुष्टजनाकीर्णामयोध्यां प्रविवेश ह |
ஹ்ருʼஷ்டபுஷ்டஜனாகீர்ணாமயோத்⁴யாம்ʼ ப்ரவிவேஶ ஹ |
ஜனங்கள்லாம் சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்டாளாம். ரொம்ப ஆனந்தமா கொடிகளெல்லாம் கட்டி, நாதஸ்வரம் மேல தாளத்தோட ராமரை அயோத்தியில் வரவேற்றார்கள். ராமர் தசரதருடைய அரண்மனைக்கு போய் சேரரார்.அங்க தான் அமர்ந்தவுடன் பரதனை கூப்பிட்டு இந்த சுக்ரீவனுக்கு என்னுடைய மாளிகைகளில் மிகச்சிறந்ததை ஒழித்து குடு அப்டிங்கறார்.
यच्च मद्भवनन् श्रेष्ठं साशोकवनिकं महत् ||
मुक्तावैदूर्यसङ्कीर्णन् सुग्रीवस्य निवेदय |
யச்ச மத்³ப⁴வனன் ஶ்ரேஷ்ட²ம்ʼ ஸாஶோகவனிகம்ʼ மஹத் ||
முக்தாவைதூ³ர்யஸங்கீர்ணன் ஸுக்³ரீவஸ்ய நிவேத³ய |
சுக்ரீவனை பார்த்தவுடனே எங்க நாலுபேரோட சேந்து நீயும் ஒரு சகோதரன் ஆயிட்ட அப்டிங்கறார். குஹனை பாக்கும்போது ராமர், பட்டாபிஷேக கோலத்துல இருக்கார், பக்கத்துல சுமந்தரர் கைகூப்பி நிக்கறார், தேர் இருக்கு
slokam
குகன் நாங்களெல்லாம் அடிமைகள், நீங்க உலகத்துக்கே ராஜா அப்டின்னு சொல்றான்.அது ஒரு பக்தி. விபீஷணன் வந்து சரணாகதி பண்ணம்போது, சுக்ரீவனோட 67 வெள்ளம் சேனை இருந்தது ராமர் பின்னாடி. அவன் வந்து சரணாகதி பண்றான் ராமர் அவனுக்கு அபயம் தறார்.
சுக்ரீவனை பாக்கும்போது தான், நாட்டை இழந்து, அப்பா அம்மாவை பிரிஞ்சு ,சீதையை தொலைச்சு, ஒரே நண்பன்னு காட்டுல இருந்த ஜடாயு மரணமாகி, ரொம்ப சோகத்துல இருந்தார். அந்த நேரத்துல சுக்ரீவன் கையை பிடிச்சு உன்கஷ்டம் என்கஷ்டம், உன்சுகம் என்சுகம், அப்டின்னு சொல்லி, நடுவுல கொஞ்சம் ராம காரியத்தை மறந்தாகூட , அவனுடைய படை எல்லாம் கூட்டிண்டுவந்து யுத்தத்துல உயிரையே குடுக்கறான். அப்புறம் ஹனுமான் சஞ்சீவி கொண்டுவந்து அவாளை உயிர்ப்பிக்கறார்.அப்படி சுக்ரீவன் ஒரு special friend ராமருக்கு. அதனால என்னுடைய மாளிகைகளில் சிறந்ததை ஒழித்து குடு அப்டின்னு சொல்றார்.
இந்த சுக்ரீவன் என்னனா நம்பள மாதிரி மனுஷாளுக்கு ஒரு representative. ராமர் தெய்வம். நம்ப வந்து குரங்கு புத்தியா மனசு மாறிண்டே இருக்கும், நம்பள மாதிரி இருக்கறவளுக்கும் ஆசை இருக்கும் உலக விஷயங்கள்ல பதவி பணம் போகங்கள் இதெல்லாம். அப்படி இருந்தாலும் ராம கார்யம் பண்ணினா ராமருடைய அனுக்கிரஹம் கிடைக்கும்னு தெரியறதுக்காக சுக்ரீவன். ராமருடைய அனுக்கிரஹம் கிடைச்சதனால, கனவிலும் கிடைக்காத ராஜ்யம் அவனுக்கு கிடைச்சது.
அந்த மாதிரி அவனுக்கு ஒழிச்சுக்குடுன்னு சொன்னபோது… இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார், ராமர் தன்னுடைய மாளிகைகளில் சிறந்ததை சுக்ரீவனுக்கு குடுன்னு சொல்றார், குசேலர் த்வாரகை வந்து கிருஷ்ணனை பார்த்துட்டு திரும்ப போறார். தன்னுடைய ஊருக்கு போனா, அவர் குடிசை இருந்த எடத்துல ஒரு மாளிகை இருக்கு. என்னடா இது நாம சுத்திசுத்தி திரும்ப த்வாரகைக்கு வந்துட்டோமா, இது கிருஷ்ணனுடைய மாளிகை மாதிரி இருக்குனு நெனைக்கறார் . அப்புறம் கிருஷ்ணன் மாளிகை காட்டிலும் இது அழகா இருக்கேன்னு வியக்கறாராம். அதாவது கிருஷ்ணனுக்கு மாளிகை கட்டினது மயன். குசேலருக்கு மாளிகை கட்டினது பகவான். அதனால பகவான் ரொம்ப சிறந்ததை தான் தன்னுடைய பக்தனுக்கு கொடுப்பார், அப்டின்னு இந்த எடத்துல ஸ்வாமிகள் சொல்வார்.
அந்த மாளிகைல சுக்ரீவன் போய் ஒக்காந்த உடனே, சத்ருக்னன் சொல்றான், நாளை பட்டாபிஷேகத்துக்கு நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும் அப்டின்னவுடனே சுக்ரீவன், ரத்னமயமான நாலு தங்க குடத்தை நாலு பேர்கிட்ட குடுத்து
यथा प्रत्यूषसमये चतुर्णान् सागराम्भसाम् ||
पूर्णैर्घटैः प्रतीक्षध्वम् तथा कुरुत वानराः |
யதா² ப்ரத்யூஷஸமயே சதுர்ணான் ஸாக³ராம்ப⁴ஸாம் ||
பூர்ணைர்க⁴டை꞉ ப்ரதீக்ஷத்⁴வம் ததா² குருத வானரா꞉ |
நீங்க நாலு பேரும், நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும், “ப்ரத்யூஷ சமயே” – உஷத் காலம் னா, விடியற பொழுது . அதுக்கு ரொம்ப முன்னாடியே நீங்க வந்து காத்துண்டு இருக்கணும். எங்க வந்தாளான்னு நாங்க வாசல்ல வந்து காத்துண்டு இருக்கற மாதிரி வெக்க கூடாது , அப்படி பண்ணுங்கோ “ததா² குருத வானரா꞉ “ அப்டின்னு சொன்னவுடனே அவா போய் எடுத்துண்டு வந்துடறா. இன்னும் ஒரு 500 புண்ய தீர்த்தம் வந்துடுத்து அப்டின்னு சொல்றா. ஸ்வாமிகள் சொல்வார், மத்த வானராலெல்லாம் எங்களுக்கு ராம கைங்கர்யம் கிடைக்காதா னு queueல நின்னுட்டாளாம். அப்புறம் நீ போய் காவேரிலேந்து ஜலம் எடுத்துண்டு வா, நீ கங்கையிலேந்து ஜலம் எடுத்துண்டு வான்னு சுக்ரீவன் சொன்னான். 500 புண்ய தீர்த்தங்கள் வந்துடுத்து. பொழுது விடிந்தது.. அப்ப சத்ருக்னன் வசிஷ்டர்கிட்ட ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைங்கோ அப்டின்னு வேண்டிக்கறான்.
ततः स प्रयतो वृद्धो वसिष्ठो ब्राह्मणैः सह ||
रामन् रत्नमयो पीठे सहसीतं न्यवेशयत् |
वसिष्ठो वामदेवश्च जाबालिरथ काश्यपः ||
कात्यायनः सुयज्ञश्च गौतमो विजयस्तथा |
अभ्यषिञ्चन्नरव्याघ्रं प्रसन्नेन सुगन्धिना ||
सलिलेन सहस्राक्षन् वसवो वासवं यथा |
தத꞉ ஸ ப்ரயதோ வ்ருʼத்³தோ⁴ வஸிஷ்டோ² ப்³ராஹ்மணை꞉ ஸஹ ||
ராமன் ரத்னமயோ பீடே² ஸஹஸீதம்ʼ ந்யவேஶயத் |
வஸிஷ்டோ² வாமதே³வஶ்ச ஜாபா³லிரத² காஶ்யப꞉ ||
காத்யாயன꞉ ஸுயஜ்ஞஶ்ச கௌ³தமோ விஜயஸ்ததா² |
அப்⁴யஷிஞ்சன்னரவ்யாக்⁴ரம்ʼ ப்ரஸன்னேன ஸுக³ந்தி⁴னா ||
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷன் வஸவோ வாஸவம்ʼ யதா² |
அப்போ சீதாதேவியை ராமரோடு ரத்னமயமான சிம்ஹாசனத்தில் அமர்த்தி எட்டு ரிஷிகளும், வசுக்கள் எப்படி இந்திரனுக்கு அபிஷேகம் பண்ணி வச்சாளோ அந்த மாதிரி ராமரை சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் பண்ணி வைத்தார்கள்.
छत्रं तस्य च जग्राह शत्रुघ्नः पाण्डुरन् शुभम् ||
श्वेतन् च वालव्यजनन् सुग्रीवो वानरेश्वरः |
अपरन् चन्द्रसङ्काशन् राक्षसेन्द्रो विभीषणः ||
ச²த்ரம்ʼ தஸ்ய ச ஜக்³ராஹ ஶத்ருக்⁴ன꞉ பாண்டு³ரன் ஶுப⁴ம் ||
ஶ்வேதன் ச வாலவ்யஜனன் ஸுக்³ரீவோ வானரேஶ்வர꞉ |
அபரன் சந்த்³ரஸங்காஶன் ராக்ஷஸேந்த்³ரோ விபீ⁴ஷண꞉ ||
சத்ருக்னன் சந்த்ரனை போல ஒரு குடையை புடிக்கறான். இந்த பக்கமும் அந்த பக்கமும் சுக்ரீவனும் விபீஷணனும் நின்னுண்டு ராமருக்கு கவரி வீசறா.
அன்னிக்கு ராமர் காட்டுக்கு போன போது கௌசல்யை புலம்பி அழறா, பிச்சை எடுத்துண்டாவது என் கண்ணுமுன்னால இருக்க கூடாதான்னு. ஒரு தப்பும் பண்ணாத என் கொழந்தயை காட்டுக்கு அனுப்பனுமானு சொல்றா. அப்போ சுமித்திரை சமாதானம் சொல்றா. என்ன குறை ராமனுக்குன்னு நீ இப்படி வருத்தப்படற,
धर्मसत्यव्रतधनः किं न प्राप्तस्तवात्मजः।
த⁴ர்மஸத்யவ்ரதத⁴ன꞉ கிம்ʼ ந ப்ராப்தஸ்தவாத்மஜ꞉ |
சத்தியத்தையும், தர்மத்தையும் வ்ரதமாகவும், தனமாகவும் கொண்ட உன் பிள்ளை என்னத்த இழந்துட்டான், அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போறான் அவ்ளோதானே. அவன் கூட லட்சுமிதேவி மாதிரி சீதை போறா, லக்ஷ்மணன் போறான். அவனுக்கு ஒரு குறையும் கிடையாது. அவன் எங்க போனாலும் இந்திரனுக்கு இந்திரன், வாயுக்கு வாயு, அந்த மாதிரி தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். காட்டுல அவனை மரங்கள் , அருவிகள் , ஆறுகள் எல்லாமே அவனை வரவேற்று பூஜை பண்ணும். சூரியன் அவனை தஹிக்காது. சந்திரன் போர்வை மாதிரி, அப்பா மாதிரி அவனை அன்பு பாராட்டும். இப்படி அவன் இருக்கப்போறான். அவனை பத்தி கவலைப்படாத அப்படினு சொன்னா. எல்லாரும் அழும்போது சுமித்திரை ஏன் அப்டி சொன்னன்னா அவ ஞானி. அவளுக்கு 14 வருஷம் கழிச்சு, ஒரு வானர ராஜாவும் , ராக்ஷச ராஜாவும் கவரி வீச ராமன் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணிப்பான்னு தெரிஞ்சுது. அதனால தான் அப்படி சொன்னா. அந்த வார்த்தை கௌசல்யைக்கு ஆறுதலா இருந்தது. அப்படி இந்த பட்டாபிஷேக வைபவம். ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணா, நம்ப ஒவொருத்தருக்கும் தலைல மகுடம் சூட்டின மாதிரி தான்.தர்மத்துக்கு என்றும் ஜெயம், அப்படிங்கற message . அதனால அடிக்கடி ராமாயணம் படிச்சு, ராம பட்டாபிஷேகம் பண்ணி முடிக்கணும்.
அப்புறம் ராமர் எல்லாருக்கும் பரிசுகள் குடுக்கறார்.சீதாதேவி தன் கழுத்துலேந்து ஒரு முத்து மாலையை, எடுத்து அனுமாருக்கு கொடுக்க விரும்பி எல்லாரையும் பார்க்கறா.ராமரை பார்க்கறா.
तामिङ्गितज्ञः सम्प्रेक्ष्य बभाषे जनकात्मजाम् |
प्रदेहि सुभगे हारन् यस्य तुष्टासि भामिनि ||
पौरुषम् विक्रमो बुद्धिर्यस्मिन्नेतानि नित्यदा |
தாமிங்கி³தஜ்ஞ꞉ ஸம்ப்ரேக்ஷ்ய ப³பா⁴ஷே ஜனகாத்மஜாம் |
ப்ரதே³ஹி ஸுப⁴கே³ ஹாரன் யஸ்ய துஷ்டாஸி பா⁴மினி ||
பௌருஷம் விக்ரமோ பு³த்³தி⁴ர்யஸ்மின்னேதானி நித்யதா³ |
ஹே சீதே, ஸுபகே. யார்கிட்ட உனக்கு த்ருப்தியோ, யார்கிட்ட பௌருஷம், விக்ரமம், புத்தி எல்லாம் எப்பவும் நெறஞ்சு இருக்கோ அவாளுக்கு கொடு அப்டின்னு சொல்றார். பௌருஷம்ங்கறது – உடல் பலம், விக்ரமம்ங்கறது – தைர்யம், மனோபலம் , புத்தினா – புத்தி.
சீதாதேவி கைல “ராம நாம அன்கிதம் ச ராம நாம அன்கிதம் ச இத³ம் பஶ்ய தே³வி அன்கு³லீயகம் ||” – ராம நாமம் பொறித்த இந்த அங்குலீயத்தை பார் அப்டின்னு கைய நீட்டி காமிச்சார். சீதை அத வாங்கிண்டு கண்ல ஒத்திண்டா.
राम नाम अन्कितम् च इदम् पश्य देवि अन्गुलीयकम् ||
ராம நாம அன்கிதம் ச இத³ம் c ||
அந்த நிமிஷத்துல சீதைக்கு ஏற்பட்ட சந்தோஷத்துல அவ சொன்னது என்ன,
विक्रान्तः त्वम् समर्थः त्वम् प्राज्ञः त्वम् वानर उत्तम |
येन इदम् राक्षस पदम् त्वया एकेन प्रधर्षितम् ||
விக்ராந்த꞉ த்வம் ஸமர்த²꞉ த்வம் ப்ராஜ்ஞ꞉ த்வம் வானர உத்தம |
யேன இத³ம் ராக்ஷஸ பத³ம் த்வயா ஏகேன ப்ரத⁴ர்ஷிதம் ||
ஹே ஹனுமான், விக்ரந்த: த்வம் , சமர்த்த: த்வம், ப்ராக்ஞ: தவம் – நீ தான் உடல் பலமும், மனோபலமும் , புத்தி பலமும் பொருந்தினவன். உன் ஒருத்தனால தான் இந்த காரியத்தை பண்ண முடியும் அப்டின்னு கொண்டாடினா. அப்போ அங்க ராமர் இல்ல. ஆனா அவா ஆதர்ஷ தம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க வேண்டாம். அதே வார்த்தைகளை இங்க திருப்பறார் ராமர். அந்த ஹநுமானுக்கு கொடுன்னு சொல்லாம சொல்றார். உடனே சீதை அத ஹனுமானுக்கு கொடுக்கறா . ஹனுமான் அதை போட்டுண்டு மலைமேல் மேகம் போல அந்த முத்து மாலையோட பிரகாசிச்சார் அப்டின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இப்படி ராம பட்டாபிஷேகம் முடிஞ்சுது. வந்தவா எல்லாரும் சந்தோசமா ராமர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு அவா அவா கிஷ்கிந்தைக்கு வனரா எல்லாம் போய் சேந்தா. லங்கைக்கு விபீஷணன் தன் மந்திரிகளோடு போய் சேர்ந்தான். ராமர் அஸ்வமேதாதி யாகங்கள் எல்லாம் பண்ணி 11000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் பண்ணி தர்மத்தை நிலைநாட்டினார்.
आजानुलम्बिबाहु: महास्कन्धः प्रतापवान् |
लक्ष्मणानुचरो रामः पृथिवीमन्वपालयत् ||
ஆஜானுலம்பி³பா³ஹு: மஹாஸ்கந்த⁴꞉ ப்ரதாபவான் |
லக்ஷ்மணானுசரோ ராம꞉ ப்ருʼதி²வீமன்வபாலயத் ||
” ஆஜானுலம்பி³பா³ஹு: ” – முட்டி வரைக்கும் நீண்ட கைகளோடு அந்த அம்பு வில்லை வெச்சுண்டு லக்ஷமணனோடு கூட ராமர் ராஜ்யபரிபாலனம் பண்ணார், அப்டின்னு இதுவரைக்கும் ராம காவியம். அடுத்த 10-15 ஸ்லோகங்கள் ராம ராஜ்யத்தோட பெருமை இந்த சர்க்கத்துல . அப்புறம் ஒரு 10 ஸ்லோகங்கள், ராம சரிதத்தை படிக்கறதோட புண்யம் அதுல வரது.
இந்த ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா
सर्वं मुदितमेवासीत्सर्वो धर्मपरोअभवत् |
ஸர்வம்ʼ முதி³தமேவாஸீத்ஸர்வோ த⁴ர்மபரோஅப⁴வத் |
எல்லாரும் சந்தோசமா இருந்தா, ஏன்னா எல்லாரும் தர்ம பராளா இருந்தா.
राममेवानुपश्यन्त: नाभ्यहिन्सन्परस्परम् ||
ராமமேவானுபஶ்யந்த: நாப்⁴யஹின்ஸன்பரஸ்பரம் ||
ராமனையே பார்த்துண்டு ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம இருந்தார்னு வராது.
இந்த எடத்துல அயோத்யா காண்டத்துல
कथञ्चिदुपकारेण कृतेनैकेन तुष्यति |
न स्मरत्यपकाराणां शतमप्यात्मवत्तया ||
கத²ஞ்சிது³பகாரேண க்ருʼதேனைகேன துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம்ʼ ஶதமப்யாத்மவத்தயா ||
ராமன் ஒரே ஒரு உபகாரம் பண்ணா, அதுலயே ரொம்ப சந்தோஷம் ஆய்டுவான் . அவன்கிட்ட 100 அபகாரம் பண்ணாகூட அவன்கிட்ட பொறுமையும், மனவடக்கமும் இருக்கறதால அதெல்லாம் பொருட்படுத்த மாட்டான் , ஏதோ அவாளுக்கு தெரிஞ்சுது அப்டினு விட்ருவான்.
அந்த குணத்தை, எல்லாரும் பாத்துண்டு யாராவது தப்புபண்ணா சரி போனு விட்டுண்டு இருந்தாளாம். அதனால ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா.
रामो रामो राम इति प्रजानामभवन् कथाः |
रामभूतं जगाभूद्रामे राज्यं प्रशासति ||
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப⁴வன் கதா²꞉ |
ராமபூ⁴தம்ʼ ஜகா³பூ⁴த்³ராமே ராஜ்யம்ʼ ப்ரஶாஸதி ||
ராமா, ராமா , ராமானு ராமனுடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராமமயமாக, ஆனந்தமயமாக ஆகிவிட்டது. அந்த தசரதருடைய ராஜ்யத்தை விவரிக்கும் போது பால காண்டத்துல ஆரம்பிக்கும்போது இதுவே இவ்ளோ நன்னா இருக்கே இதுக்கு மேல என்ன ராம ராஜ்யம் இருக்கப்போறதுனு தோணும். ஆனா தசரதர் காலத்துல இல்லாத ஒரு பெருமை ராம ராஜ்ஜியத்துல என்னன்னா ராமன் கதையை அப்போ தானே பேச முடியும். எல்லாரும் ராம கதையை பேசிண்டு, ராம சரித்திரத்தை பேசிண்டு ராமா ராமானு ஆனந்தமயமாக இருந்தார்கள். இன்னிக்கும் ராமருடைய கதையை படிக்கறவாளுக்கு வாழ்வே ஆனந்தம்தான்.
அந்த ராமாயணத்தை படிக்கறதோட பலன், 1-2 ஸ்லோகங்கள் பாக்கலாம்
प्रार्थितान् च वरान् सर्वान् प्राप्नुयात् इह राघवात् |
ப்ரார்தி²தான் ச வரான் ஸர்வான் ப்ராப்னுயாத் இஹ ராக⁴வாத் |
ராமரிடத்தில், இந்த ராமாயணம் படித்து அதன் மூலமா சந்தோஷமா இருக்கற ராமரிடத்தில் பிரார்த்தனை பண்ண வரங்கள் எல்லாம் கொடுப்பார்.
कुटुम्बवृद्धिं धनधान्यवृद्धिं स्त्रियश्च मुख्याह् सुखमुत्तमं च |
श्रुत्वा शुभं काव्यमिदं महार्थं |प्राप्नोति सर्वां भुवि चार्थसिद्धिम् ||
आयुष्यमारोग्यकरं यशस्यं सौभ्रातृकं बुद्धिकरं शुभं च |
श्रोतव्यमेतन्नियमेन सद्भि राख्यानमोजस्करमृद्धिकामैः ||
குடும்ப³வ்ருʼத்³தி⁴ம்ʼ த⁴னதா⁴ன்யவ்ருʼத்³தி⁴ம்ʼ ஸ்த்ரியஶ்ச முக்²யாஹ் ஸுக²முத்தமம்ʼ ச |
ஶ்ருத்வா ஶுப⁴ம்ʼ காவ்யமித³ம்ʼ மஹார்த²ம்ʼ ப்ராப்னோதி ஸர்வாம்ʼ பு⁴வி சார்த²ஸித்³தி⁴ம் ||
ஆயுஷ்யமாரோக்³யகரம்ʼ யஶஸ்யம்ʼ ஸௌப்⁴ராத்ருʼகம்ʼ பு³த்³தி⁴கரம்ʼ ஶுப⁴ம்ʼ ச |
ஶ்ரோதவ்யமேதந்நியமேன ஸத்³பி⁴ க்²யாநமோஜஸ்கரம்ருʼத்³தி⁴காமை꞉ ||
ச்ரேயஸை விரும்புகிறவர்கள் “ருʼத்³தி⁴காமை꞉” , “ஶ்ரோதவ்யம்” இதை அடிக்கடி கேக்கணும்.
देवाश्च सर्वे तुष्यन्ति ग्रहणाच्छ्रवणात्तथा ||
रामायणस्य श्रवणे तुष्यन्ति पितरः सदा |
தே³வாஶ்ச ஸர்வே துஷ்யந்தி க்³ரஹணாச்ச்²ரவணாத்ததா² ||
ராமாயணஸ்ய ஶ்ரவணே துஷ்யந்தி பிதர꞉ ஸதா³ |
ராமாயணத்தை படிக்கறதாலும் , கேட்பதாலும் “தேவா : சர்வே துஷ்யந்தி” – எல்லா தெய்வங்களும். “தேவா:” நா plural , “ஸர்வே தேவா :” – குடும்ப தெய்வம் , இஷ்ட தெய்வம் , கிராம தெய்வம், உங்களுக்கு யாரோ அந்த தெய்வத்துக்கு பண்ணல அப்டின்னா ராமாயணத்தை எடுத்து படிங்கோ அப்டிம்பார் ஸ்வாமிகள். அந்த மாதிரி ராமாயணம் படிச்சா எல்லா தெய்வங்களும் த்ருப்தி அடைவார்கள். “துஷ்யந்தி பிதர: ததா” – பித்ருக்களும் த்ருப்தி ஆவார்கள். இந்த ஸ்லோகங்கள் எல்லாம் ராமாயண பட்டாபிஷேகம்லேந்து நான் படிச்சேன்.
“விநாயகாஸ்ச ஸாம்யந்தி” – ராமாயணம் இருக்கற எடத்துல எல்லா கஷ்டங்களும் விலகும் அப்படிங்கற ஒரு ஸ்லோகத்துக்கு மஹாபெரியவா, சுபஸ்தானத்துல இருக்கற கிரஹங்கள் எப்படி சுப பலன்களை கொடுக்குமோ, அப்படி சுப இதர ஸ்தானத்துல இருக்கற கிரஹங்களும் சுப பலன்களையே கொடுக்கும் அப்டின்னு ஒரு அர்த்தம் சொல்லிருக்கார்.
இந்த சங்க்ஷேப ராமாயணத்துல இருக்கற கடைசி 10 ஸ்லோகங்களையும் படிச்சு பூர்த்தி பண்ணிக்கறேன்.
न पुत्रमरणं किंचिद्द्रक्ष्यन्ति पुरुषाः क्वचित् |
ந புத்ரமரணம்ʼ கிஞ்சித்³த்³ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வசித் |
ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா, எவன் ஒருவனும் தன் புத்திர மரணத்தை பார்க்க வேண்டி வரவில்லை.
नार्यश्च अविधवा नित्यं भविष्यन्ति पतिव्रताः ||
நார்யஶ்ச அவித⁴வா நித்யம்ʼ ப⁴விஷ்யந்தி பதிவ்ரதா꞉ ||
பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக, பதிவ்ரதைகளாக இருந்தார்கள்.
“ந அக்³நிஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – அக்னினால யாருக்கும் ஒரு கேடும், accident உம் வரவில்லை.
“ந அப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉” – ஜலத்துல யாரும் முழுகவில்லை
“ந வாதஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – வாயுனால ஒரு hurricane ஓ , cyclone ஓ ஏதாவது வந்து யாரும் கஷ்டப்பட்டா அப்படிங்கறது கிடையாது
“ந அபி ஜ்வரக்ருʼதம்ʼ ததா²” – திடீர் திடீர்னு புது புது பேர்ல வ்யாதி வந்து, ஜ்வரம் வந்து ஜனங்கள் கஷ்ட படறா. அந்த மாதிரி ராம ராஜ்ஜியத்துல இருக்கலை.
அதாவது ராஜ்யத்தை ராஜ தர்மமாக ஆட்சி பண்ணினா, இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் வராது அப்டினு தெரியறது.
“ந சாபி க்ஷுத்³ப⁴யம்ʼ தத்ர” – பஞ்சம் பட்டினி அப்டிங்கறதே இல்ல.
“ந தஸ்கரப⁴யம்ʼ ததா²” – திருட்டு பயம் இல்ல. யாரும் வீட்டை பூட்டவே மாட்டார்கள். ஏன்னா பிறர் பொருள் மேல ஆசைப்படறவா யாருமே கிடையாது.
नगराणि च राष्ट्राणि धनधान्ययुतानि च ||
நக³ராணி ச ராஷ்ட்ராணி த⁴னதா⁴ன்யயுதானி ச ||
எல்லா தேசங்களும் , நகரங்களும் தன தான்யத்தில் நிரம்பி இருந்தது.
नित्यं प्रमुदिताः सर्वे यथा कृतयुगे तथा |
நித்யம்ʼ ப்ரமுதி³தா꞉ ஸர்வே யதா² க்ருʼதயுகே³ ததா² |
க்ருத யுகத்தில் இருந்தது போல எல்லாரும் ராம ராஜ்யத்தில் சந்தோசமாக இருந்தார்கள்.
अश्वमेधशतैरिष्ट्वा तथा बहुसुवर्णकैः ||
गवां कोट्ययुतं दत्त्वा विद्वद्भ्यो विधिपूर्वकम् | |
அஶ்வமேத⁴ஶதைரிஷ்ட்வா ததா² ப³ஹுஸுவர்ணகை꞉ ||
க³வாம்ʼ கோட்யயுதம்ʼ த³த்த்வா வித்³வத்³ப்⁴யோ விதி⁴பூர்வகம் | |
நிறைய தங்கத்தை தக்ஷிணையாக குடுத்து 100 அஸ்வமேத யாகங்களை ராமர் பண்ணார்.கோடிக்கணக்கான பசுக்களை விதி பூர்வமாக வித்வான்களுக்கு ராமர் தானம் பண்ணார். இந்த கோதானம் பண்ணும்போது கண்ணுகுட்டியோட தரணும். அந்த மாடு கறவை நின்னவுடனே இன்னொரு கறவை மாட்டை தரணும். அந்த மாதிரி விதி பூர்வமாக பண்ணார்
असंख्येयं धनं दत्त्वा ब्राह्मणेभ्यो महायशाः ||
அஸங்க்²யேயம்ʼ த⁴னம்ʼ த³த்த்வா ப்³ராஹ்மணேப்⁴யோ மஹாயஶா꞉ ||
ப்ராஹ்மணர்களுக்கு கணக்கற்ற செல்வத்தை கொடுத்தார்.
राजवंशान् शतगुणान् स्थापयिष्यति राघवः |
चातुर्वर्ण्यं च लोकेऽस्मिन् स्वे स्वे धर्मे नियोक्ष्यति ||
ராஜவம்ʼஶான் ஶதகு³ணான் ஸ்தா²பயிஷ்யதி ராக⁴வ꞉ |
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ராஜ வம்சத்தை நிலைநிறுத்தினார். அந்த மாதிரி ஒரு சக்ரவர்த்தி stableஆ இருந்தா, சிற்றரசர்களும் நல்லபடியா இருப்பார்கள்.
चातुर्वर्ण्यं च लोकेऽस्मिन् स्वे स्वे धर्मे नियोक्ष्यति ||
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः |
स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः ||
ப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியா வைஶ்யா꞉ ஶூத்³ரா லோப⁴விவர்ஜிதா꞉ |
ஸ்வகர்மஸு ப்ரவர்தந்தே துஷ்டா²꞉ ஸ்வைரேவ கர்மபி⁴꞉ ||
தான் பண்ற கார்யத்துல பெருமையோட , பேராசையில்லாம நாலு வர்ணத்தவர்களும் அவரவருடைய கார்யங்களை ரொம்ப ஸ்ரத்தையா பண்ணிண்டு இருந்தா.
அப்படி ஒரு 20 தலைமுறை 30 தலைமுறை ஒவ்வொரு fieldலேயும் excel பண்ணிண்டே வந்தா அது என்னம்மா இருக்கும்ங்கரதை நம்ப கோவில்ல இருக்கற சிற்பங்களிலும் காவ்யங்களிலும் தெரிகிறது.
அந்த மாதிரி ராமர் எல்லாரையும் அவரவர் காரியங்களில் நிலை நிறுத்தினார்.
दशवर्षसहस्राणि दशवर्षशतानि च |
रामो राज्यमुपासित्वा ब्रह्मलोकं प्रयास्यति ||
த³ஶவர்ஷஸஹஸ்ராணி த³ஶவர்ஷஶதானி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம்ʼ ப்ரயாஸ்யதி ||
“த³ஶவர்ஷஸஹஸ்ராணி” – பத்து ஆயிரம் வருடங்கள்,
“த³ஶவர்ஷஶதானி ச” – பத்து நூறு வருடங்கள்
இங்க நாரதர் வால்மீகி மகரிஷிக்கு கதை சொல்லிண்டு இருக்கார். அப்போ ராமர் தானே ஆட்சி பண்ணிண்டு இருக்கார். வால்மீகி லவ குஷால்க்கு சொல்லி, ராமர் அவாகிட்டேந்தே நேரா கேக்க போறார். அதனால “ப்ரயாஸ்யதி” – ப்ரஹ்ம லோகத்திற்கு போவார் அப்டினு future tense ல சொல்றார்.
इदं पवित्रं पापघ्नं पुण्यं वेदैश्च सम्मितम् |
यः पठेद्रामचरितं सर्वपापैः प्रमुच्यते ||
இத³ம்ʼ பவித்ரம்ʼ பாபக்⁴னம்ʼ புண்யம்ʼ வேதை³ஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படே²த்³ராமசரிதம்ʼ ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ||
இந்த பவித்திரமான ராம கதை பாபத்தை போக்க கூடியது, புண்யத்தை கொடுக்க கூடியது “வேதை³ஶ்ச ஸம்மிதம்” – சாஷாத் வேத துல்யமானது. எவன் இந்த ராம சரிதத்தை படிக்கிறானோ அவன் எல்லா பாபங்களிலிருந்து விடுபடுவான்.
एतदाख्यानमायुष्यं पठन् रामायणं नरः |
सपुत्रपौत्रः सगणः प्रेत्य स्वर्गे महीयते ||
ஏததா³க்²யானமாயுஷ்யம்ʼ பட²ன் ராமாயணம்ʼ நர꞉ |
ஸபுத்ரபௌத்ர꞉ ஸக³ண꞉ ப்ரேத்ய ஸ்வர்கே³ மஹீயதே ||
யார் இந்த ராமாயணத்தை படிக்கிறார்களோ, அவன் இவ்வுலகில் தீர்காயுசோடு இருந்து, புத்ரர்களோடும், “सपुत्रपौत्रः” – புத்ரனுடைய பேரன், அதாவது கொள்ளுப்பேரன் வரை , “सगणः” – பந்துக்களோடும் ஸ்வர்கம் போவான்
पठन् द्विजो वागृषभत्वमीयात् |
स्यात् क्षत्रियो भूमिपतित्वमीयात् ||
वणिग्जनः पण्यफलत्वमीयात् |
जनश्च शूद्रोऽपि महत्त्वमीयात् ||
பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத் |
ஸ்யாத் க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ||
வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் |
ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ||
இதை படிக்கின்ற ப்ராஹ்மணன் “வாக்³ருʼஷப⁴த்வமீயாத் ” – நல்ல வாக்கு வன்மையை அடைவான். நல்ல பண்டிதனாக ஆயிடுவான்
“க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ” – க்ஷத்ரியன் பூமிக்கு தலைவன் ஆவான். அதாவது ராஜாவாக ஆவான்
“வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் ” – வைஸ்யர்கள், “பண்யம்” னா – வியாபாரம் . வியாபாரத்தில் நல்ல பலன் அடைவார்கள்
“ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ” – இதை படிக்கும் சூத்திரர்கள் மஹத்வத்தை அடைவார்கள், அவர்களுக்குள் ஒரு தலைவராக இருப்பார்கள் .
அப்படி இந்த சங்க்ஷேப ராமாயணம் 100 ஸ்லோகம், இதுவே ராம கதை , இதையே நாம ஒரு 4 மணி நேரமா படிச்சி சந்தோஷ பட்டிருக்கோம். இதை திரும்ப திரும்ப படிச்சிண்டு இருந்தா கிடைக்காதது இல்லை. என்னுடைய அனுபவத்துலயே ஸ்வாமிகள் infant reader வெச்சு , நீ எழுத்து கூட்டி ராமாயணம் படி , தினம் அஞ்சு ஸ்லோகம் படி , உனக்கு ராமாயணம் வரும். உனக்கு புரியும் அப்டின்னார்.
“பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத்” – அப்டின்னு அவர் சொன்னது தானே தவிர, எனக்கு formal ஆ, ஸம்ஸ்க்ருதத்துல education கிடையாது . நானும் இதை படிச்சு சந்தோஷ படறேன். அந்த, ஸ்வாமிகள் வார்த்தை எவ்ளோ பெரிய அநுகிரஹம்ன்னு நான் ஒவ்வொரு நாளும் நெனைச்சு பாக்கறேன். ராமாயணம் படிக்கறதுக்கு மேல வாழ்க்கைல வேற பெரிய சந்தோஷம் கிடைக்காது. நம்ப படிக்கறது நம்ப குழந்தைகளுக்கு சொல்றது ரொம்ப ஸ்ரேயஸை கொடுக்கும். விஸ்தாரமா முழு ராமாயணத்தை படிக்கணும் முடிஞ்ச வரைக்கும் படிக்கணும். இந்த சங்க்ஷேப ராமாயணம் மட்டும் படிச்சே எல்லா வரங்களை அடைந்தவர்களும் இருக்கா. நானும் பாக்கறேன். அதனால ராம கதை புண்ய கதை.எல்லாரும் அடிக்கடி படிப்போம்.
ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!
3 replies on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning”
I heard all topics in this sangshepa Ramayanam
There is no words to explain my happiness
Thank you so much sir
ரொம்ப அருமையாக இருந்தது
Jaisriram 🙏 🙏.. was searching for the meaning. Very well explained. Daily I have started reading. Sankshepa ramayanam.. meaning therinda nanna irukku mey, thought. After reading yours am very happy.
Godblessyou.
Harekrishna 🙏 🙏
Geetvasan56@gmail.com