Categories
Shankara Stothrani Meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் 5 ஸ்லோகங்கள் மட்டும்; Meenakshi Pancharathnam 5 slokams recitation

நீலகண்ட தீஷிதர் இயற்றிய ஆனந்த ஸாகரஸ்தவம் – மகாபெரியவா ஸ்ரீமுகத்தோடு 1944ல் வெளியிட்ட புத்தகம்

மீனாக்ஷி பஞ்சரத்னத்துல கடைசி ரெண்டு ஸ்லோகங்கள், நாலாவது  அஞ்சாவது ஸ்லோகங்கள் பார்ப்போம்.

श्रीमत्सुन्दरनायिकां भयहरां ज्ञानप्रदां निर्मलां
श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम् 
वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधामम्बिकां 
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥४॥

ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்

ஶ்யாமாபாம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம்

வீணாவேணும்ருʼ³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதாடம்பி³காம்    மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் 4

“ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம்”கைலாசத்துல போய் அம்பாள் பரமேஸ்வரனைப் பார்த்து, கல்யாணசுந்தரரா வந்து, இங்க மீனாக்ஷி, மதுரைல மீனாக்ஷியை கல்யாணம் பண்ணிண்டார்.  அதுல இருந்து இங்க மதுரைல மீனாக்ஷி ஆறுமாசம் செங்கோல் வெச்சிண்டு ஆட்சி பண்ணுவா, சுந்தரேஸ்வரர் ஆறுமாசம் செங்கோல் வெச்சிண்டு ஆட்சி பண்ணுவாராம்.

அதுல ஆனா, மதுரைனாலே மீனாக்ஷிதான், மதுரை மீனாக்ஷியம்மன் கோவில்ன்னுதான் சொல்வாளே தவிர, யாரும் சுந்தரேஸ்வரர் கோவில்ன்னு சொல்றதில்ல! அங்கே மீனாக்ஷிக்கு தனி ஆதிக்கம். அம்பாளுக்குத் தான் பூஜை நிவேத்தியம் எல்லாம் கூட அதிகமா! அப்படி, விளையாட்டா கூட கேட்பா. உங்காத்துல மதுரையா? சிதம்பரமா? அப்படிம்பா. மதுரைன்னா ஆத்துக்காரி voice ஜாஸ்தி! சிதம்பரத்துல, நடராஜா காளியை நர்த்தனம் பண்ணி ஜெயிச்சார்! அதனால அங்க ஆத்துக்காரருக்கு வாய்ஸ் ஜாஸ்தி, அப்படிங்கறதை விளையாட்டா உங்காத்துல மதுரையா, சிதம்பரமா அப்படிம்பா. அந்த மாதிரி, மதுரைன்னா மீனாக்ஷிதான்.

“பயஹராம்”பயத்தைப் போக்குபவள், அம்மாதானே பயத்தைப் போக்கமுடியும் குழந்தைக்கு.

ஆனந்தஸாகரஸ்தவத்துல 59வது ஸ்லோகம்.

अप्राकृतं मृदुलतामविचिन्त्य किञ्चि

दालम्बितासि पदयोः सुदृढं मया यत्

तन्मे भवार्णवनिमज्जनकातरस्य

मातः क्षमस्व मधुरेश्वरि बालकृत्यम् ५९

அப்ராக்ருʼதம் ம்ருʼது³லதாமவிசிந்த்ய கிஞ்சி

தா³லம்பி³தாஸி பத³யோ: ஸுத்³ருʼம் மயா யத்

தந்மே வார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய

மாத: க்ஷமஸ்வ மதுரேஶ்வரி பா³லக்ருʼத்யம் || 59 ||

அப்படின்னு சொல்வார். எவ்ளோ, என்ன ஒரு அழகான பாவம். சொல்றார், உன்னோட பாதத்தோட ம்ருதுத்தன்மைஅப்ராக்ருʼதம்’. அது, பெண்களுடைய பாதம் ம்ருதுன்னு சொல்லலாம். இது தனியான ஒரு ம்ருதுத்தன்மை, அதைஅவிசிந்த்ய‘ – அதை ஞாபகம் இல்லாம, கொஞ்சம்கூட ஞாபகம் இல்லாம மறந்து போயிட்டு, ‘ஆலம்பி³தாஸி பத³யோ: ஸுத்³ருʼம் மயா யத்‘ – நான் உன்னுடைய பாதங்களை ரொம்ப இறுக்க கெட்டியா பிடிச்சுண்டேன். அதை வந்து நீ மன்னிச்சுடு! ஏன் தெரியுமா?  ‘தந்மே வார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய‘ – இந்த சம்ஸார ஸாகரத்தில் மூழ்கிப்போய் விடுவேனோ என்று பயந்து, ஸாகரத்துல மூழ்குபவன் எது கிடைச்சாலும் அதை கெட்டியா பிடிச்சுப்பான் இல்லையா, அந்த மாதிரி உன் பாதத்தை நான் வந்து கெட்டியா பிடிச்சேன்.

மாத: க்ஷமஸ்வ மதுரேஶ்வரி‘ – மதுராபுரநாயிகே! அப்படின்னு ஹே மீனாக்ஷி! ‘பா³லக்ருʼத்யம்‘ – இந்த சிறுபிள்ளைதனத்தை பொறுத்துக்கொள் அம்மா அப்படின்னு கேட்கறார். அப்படி அம்பாளுடைய சரணத்தை பிடிச்சுண்டாதான் நம்முடைய சம்ஸார பயம் போகும்.

ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்” – அம்பாள் நிர்மல வடிவம்! அந்த தூய்மையை நமக்கும் குடுத்து, ஞானத்தைக் குடுப்பா.

இந்த இடத்துல, மந்தஸ்மித சதகத்துல 80வது ஸ்லோகம். அழகான ஒரு ஸ்லோகம்.

जात्या शीतशीतलानि मधुराण्येतानि पूतानि ते
गाङ्गानीव पयांसि देवि पटलान्यल्पस्मितज्योतिषाम्
एनःपङ्कपरम्परामलिनितामेकाम्रनाथप्रिये
प्रज्ञानात्सुतरां मदीयधिषणां प्रक्षालयन्तु क्षणात् 80

ஜாத்யா ஶீதஶீதலாநி மதுராண்யேதாநி பூதானி தே

கா³ங்கா³னீவ பயாம்ஸி தே³வி படலாந்யல்பஸ்மிதஜ்யோதிஷாம்

ஏன:பங்கபரம்பராமலினிதாமேகாம்ரநாத²ப்ரியே

ப்ரஜ்ஞானாத்ஸுதராம் மதீ³யதிஷணாம் ப்ரக்ஷாலயந்து க்ஷணாத் ॥ 80 ॥

ஹே காமாக்ஷி! ‘ஏகாம்ரநாத²ப்ரியே‘ – ஏகாம்ரநாதருடைய ப்ரிய மனைவியே!

ஶீதஶீதலாநி‘ – உன்னுடைய மந்தஸ்மிதம் எப்படி இருக்குன்னா, ரொம்ப ஶீதலமா இருக்கு மிகமிக குளிர்ந்திருக்கு.

மதுராணி‘ – ரொம்ப இனிமையாயிருக்கு.

பூதானி‘ – ரொம்ப தூய்மையா இருக்கு. இந்த கங்கா ஜலத்தைக் கொண்டு, இந்த மாதிரி ஸ்வபாவமாவே உன்னுடைய மந்தஸ்மிதம் கங்காஜலம் போல குளிர்ச்சியும், மதுரமும், தூய்மையும் நிறைஞ்சதாயிருக்கு.

அந்தஅல்பஸ்மிதஜ்யோதிஷாம்‘ – உன்னுடைய மந்தஸ்மிதமுடைய ஜோதியைக்கொண்டு,ஏன:பங்கபரம்பராமலினிதா மதீ³யதிஷணாம்‘ –என்னுடைய புத்தி பாபங்கள் என்ற சேறுனால ரொம்ப மலினமா ஆயிடுத்து. அதை ஸ்ரீகாமாக்ஷி,ப்ரக்ஷாலயந்து க்ஷணாத்‘ – அதை நன்னா, புத்தியை நன்னா அலம்புமா, அப்படிங்கறார்.

உன்னுடைய இந்த மந்தஸ்மிதம்ங்கற கங்கையைக் கொண்டு, அதுக்கு கூட என்னத்தை வெச்சுக்கணும்ன்னா, இப்ப ஒரு சோப்பு போட்டு அலம்பறாயில்லையா? அந்தமாதிரி, அந்த காலத்துல ஒண்ணொண்ணு வெச்சிருந்திருப்பா. அந்த மாதிரி, எந்த, எதைப் போட்டு அலம்பணும்ன்னா, ஞானத்தை போட்டு அலம்பு, அப்படிங்கறார்! அப்படின்னு அழகான ஒரு ஸ்லோகம், அந்த மாதிரி, அம்பாளே நிர்மலமா இருக்கறதுனால, அம்பாள்தான் ஞானத்தை குடுக்கமுடியும்.

ஶ்யாமாபாம்” – கருப்புவர்ணமா இருக்கா. திரும்ப எனக்கு ஒரு மூகபஞ்சசதி ஸ்லோகம் ஞாபகம் வர்றது. (ஸ்துதி ஶதகம் 6)

श्यामा काचन चन्द्रिका त्रिभुवने पुण्यात्मनामानने
सीमाशून्यकवित्ववर्षजननी या कापि कादम्बिनी
मारारातिमनोविमोहनविधौ काचितत्तमःकन्दली
कामाक्ष्याः करुणाकटाक्षलहरी कामाय मे कल्पताम् 6

ஶ்யாமா காசன சந்த்³ரிகா த்ரிபுவநே புண்யாத்மநாமானனே

ஸீமாஶூன்யகவித்வவர்ஷஜனனீ யா காபி காத³ம்பி³னீ

மாராராதிமனோவிமோஹனவிதௌகாசிதத்தம:கந்த³லீ

காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷலஹரீ காமாய மே கல்பதாம் ॥ 6 ॥

காமாக்ஷி கருப்பா இருக்காங்கறதை வெச்சிண்டு, பலவிதத்துல சொல்றார், இந்த மூககவி! இந்த காமக்ஷிங்கற தெய்வம், ‘ஶ்யாமா காசன சந்த்³ரிகா‘ – சந்திரன்னா வெள்ளைவெளேர்ன்னு இருக்கும், ஆனா இந்த காமாக்ஷிங்கற சந்திரிகை கருப்பா இருக்கு. மூவுலகத்துகும் ஆனா ஒளி குடுக்கறது.  

புண்யாத்மநாமானனே‘ – புண்யசாலிகளுடைய வாக்கில்,

ஸீமாஶூந்ய‘ –எல்லையற்ற,

கவித்வவர்ஷஜனனீ‘ – கவிதை என்ற மழையை கொட்டச் செய்யும்,

யா காபி காத³ம்பி³னீ‘ – ஒரு மேகம்போல இருக்கா காமாக்ஷி அப்படின்னு. மேகமும் கருப்பா இருக்கும்.

மாராராதி‘ – மதனனை எரித்தவருடைய, மதனனுக்கு எதிரியான, பரமேஸ்வரனுடைய  ‘மனோவிமோஹனவிதௌ⁴’ – மனத்தை மோகிக்க செய்யறவிதத்துல,

காசிதத்தம:கந்த³லீ‘ – ஏதோ ஒரு இருளைப்போல இருக்கு. இருட்டுதானே வந்து மோகிக்கப் பண்ணும்.

அந்த, ஹே காமாக்ஷி! உன்னுடைய  ‘கருணாகடாக்ஷலஹரீ‘ – உன்னுடைய கருணா கடாக்ஷம்ங்கற அலை, அது  ‘காமாய மே கல்பதாம்‘ – என்னுடைய ஆசைகளெல்லாம் பூர்த்தி பண்ணட்டும்.

அதுமாதிரி, “ஶ்யாமாபா⁴” அப்படிங்கறதுக்கு, கருப்பு வர்ணத்தின் ஒளி மிகுந்தவள்ன்னு அர்த்தம்.

“கமலாஸனார்சிதபதா³ம்” – ‘கமலாஸன:’ அப்படின்னா, தாமரைப்பூவில் அமர்ந்திருப்பவர். பிரம்மாதி தேவர்களெல்லாம் வணங்கும் திருவடித் தாமரைகளைக் கொண்ட மீனாக்ஷி.

ययोः पीठायन्ते विबुधमुकुटीनां पटलिका
ययोः सौधायन्ते स्वयमुदयभाजो भणितयः
ययोः दासायन्ते सरसिजभवाद्याश्चरणयोः
तयोर्मे कामाक्ष्या दिनमनु वरीवर्तु हृदयम् 6

யயோ: பீடா²யந்தே விபு³முகுடீநாம் படலிகா

யயோ: ஸௌதாயந்தே ஸ்வயமுத³யபாஜோ ணிதய:

‘யயோ: தா³ஸாயந்தே ஸரஸிஜபவாத்³யா:’எந்த திருவடிகளுக்குஸரஸிஜபவாத்³யா:பிரம்மாதி தேவர்களெல்லாம்தா³ஸாயந்தேஅடிமைகளா இருக்காளோ,

‘தயோர்மே காமாக்ஷ்யா தி³னமனு வரீவர்து ஹ்ருʼ³யம்’அந்த இரு திருவடிகள்லேயும் என் மனம் தினமும் லயித்து இருக்கட்டும், அப்படின்னு பிரார்த்தனை பண்றார். (பாதாரவிந்த ஶதகம் 6).

அந்த மாதிரிகமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம்” – நாராயணனுடைய, விஷ்ணு பகவானுடைய தங்கை. அதனாலதான் விஷ்ணு தாரை வார்த்துக் குடுத்தார். அந்த சுந்தரேசர், விஷ்ணுபகவான், மீனாக்ஷி, இந்த காக்ஷி ரொம்ப அற்புதமான ஒரு சிலையா மதுரை கோவில்ல இருக்கும்! அதைத்தான் எல்லா கல்யாணப் பத்திரிக்கைள்லேயும் போடறா. எல்லா கல்யாண  மண்டபங்கள்லேயும் அதை வெச்சிருக்கா. இதை பார்க்கறதுக்கு அவ்ளோ ஆனந்தமா இருக்கும்.

“வீணாவேணும்ருʼ³ங்க³வாத்³யரஸிகாம்” – “வீணா”ன்னா வீணைவேணு”ன்னா புல்லாங்குழல், ம்ருதங்கம், இதெல்லாம் கொண்டு, அழகான சங்கீதத்தை ரசிப்பவள் மீனாக்ஷி. மீனாக்ஷிதேவியினுடைய, இந்த மலயத்வஜனுக்கு மகளா தடாதகைப்ராட்டியா பிறந்ததைப் பத்தி சொன்னேன்.

அதே மாதிரி இன்னொரு அவதாரம், ராஜமாதங்கி ஶ்யாமளாதேவின்னு சொல்வா. மதங்கர்ன்னு ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு பிள்ளை மாதங்கர்ன்னு ஒருத்தர் இருந்தார். அந்த மாதங்கரும் ஹிமவானும் நண்பர்களா இருந்தா. ஆனா ஒரு தடவை ஹிமவான் பேசும்போது, ‘எல்லாம் சரிதான். ஆனா கெளரியே எனக்கு குழந்தையா பிறந்தாளே! பர்வதராஜகுமாரி பார்வதின்னு அம்பாள் எனக்கு குழந்தையா பிறந்தா! அந்த பெருமை யாருக்கு உண்டு?’, அப்படின்னு சொன்னவுடனே, இவருக்கும் அதுல ஒரு ஆசை வந்துடுத்தாம்! அதனால இவர் அம்பாள்ட்ட தபஸ் பண்ணி, இந்த மாதங்கமுனிவர், ‘நீ எனக்கு பொண்ணா பொறக்கணும்’ன்னு வேண்டிக்கறார். அப்போ அம்பாள் அவருக்கு பொண்ணா மாதங்கின்னு பொறக்கறா!

அந்த ஶ்யாமளாநவரத்னமாலிகா,

ओङ्कारजरशुकीमुपनिषदुद्यानकेलिकलकण्ठीम् ।

आगमविपिनमयूरीमार्यामन्तर्विभावये गौरीम्  ॥ १॥

दयमानदीर्घनयनां देशिकरूपेण दर्शिताभ्युदयाम् ।

वामकुचिनिहतवीणां वरदां संगीतमातृकां वन्दे ॥ २॥

ஓங்கார பஞ்ஜரஶுகீம் உபநிஷதுத்யானகேலிகலகண்டீம் |

ஆகமவிபினமயூரீம் ஆத்யாமந்தர்விபாவேய கௌரீம் ||1||

தயமானதீர்க்கநயனாம் தேஶிகரூபேண தர்ஶிதாப்யுதயாம்

வாமகுசநிஹிதவீணாம் வரதாம் ஸங்கீதமாத்ருகாம் வந்தே ||2||

அப்படின்னு அந்தசங்கீதமாத்ருகா’ அப்படின்னு சொல்றது ஶ்யமளாதேவிதான்!

सरिगमपधनिरतां तां वीणासंक्रान्तकान्त हस्तान्ताम्

शांतां मृदुलस्वांतां कुचभरतान्तां नमामि शिवकांताम् ५॥

ஸரிகமபதநிரதாம் தாம் வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தாம்

ஶாந்தாம் ம்ருதுலஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமி ஶிவகாந்தாம் || 4 ||

அப்படின்னு சங்கீதத்துக்கு அதிதேவதை இந்த ஶ்யமளாதேவி. ஶ்யமளாதேவி மதுரை மீனாக்ஷி மந்த்ரிணி, அப்படின்னு சொல்றா. அந்த மாதிரி, அம்பாளுடைய மந்திரியா இருக்கா. சேனாதிபதியா இருக்கா. அந்த அம்பாளுக்கு அடுத்த இடம், காமாக்ஷிக்கு கூடயே நிக்கற இடம். அந்த நவாவர்ண பூஜைகள்ல, அந்த ஶ்யமளாதேவியுடைய சந்நிதி காமாக்ஷி கோவில்லையும் சுத்திவரும்போது  பார்க்கலாம். அந்த ஶ்யமளாதேவியை உபாசனை பண்ணா எல்லா கலைகளும் வரும்! கலைகளில் சிறந்ததான சங்கீதமும் வரும் அப்படின்னு சொல்வா.

அந்தவீணாவேணும்ருʼ³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதாடம்பி³காம்”    

பலவிதமான அவசரங்கள்! அதுமாதிரி காமாக்ஷி, மீனாக்ஷி, மந்திரிணி, ஶ்யாமளா, பா³லை எல்லாம் மீனாக்ஷி தான்!

“மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்”

இந்த மீனாக்ஷியை நினைக்கும்போது மஹாபெரியவா, ஆனந்தஸாகரஸ்தவம் பண்ண நீலகண்டதீக்ஷதருடைய சரித்ரத்தை விஸ்தாரமா சொல்லிருக்கா, அதை நினைச்சே ஆகணும். நீலகண்டதீக்ஷிதர், பெரிய மஹாவித்வான்! பதினெட்டு வயசுக்குள்ள எல்லா வேத சாஸ்த்ரங்களெல்லாம் படிச்சு, எல்லா, சில்பசாஸ்த்ரங்கள், எல்லாம் தெரிஞ்சு, மஹாமேதையா இருக்கார்! அதனால ராஜ வேண்டிண்டபடி, அவருக்கு மந்திரியா இருக்கார். அந்த திருமலைநாயக்கர் மஹாராஜா, அந்த நீலகண்டதீக்ஷிதர் மந்த்ரியா இருந்ததினால, அபாரமான காரியங்கள் பண்ணியிருக்கார். இன்னிக்கும், அந்த நாயக்கர்கள் பண்ண சேவை, இன்னிக்கும் நம்ம தேசத்துக்கு, நம்ம தமிழ்தேசத்துக்குப் பெருமை. அப்போ ஒரு வாட்டி இந்த ராஜா, அம்பாள் கோவில்ல, தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையுமா வைக்கணும், அப்படின்னு ஆசைப்படறான். இவர் ஒத்துக்கறார், நீலகண்டதீக்ஷிதர். அது பண்ணும்போது, அந்த சிலை பண்றவன், இந்த அவருடைய , இந்த ராணியுடைய, முட்டிக்குமேல ஒரு இடத்துல சில்லு தட்டிடறது. அதை வந்து இவர்ட்ட சொல்றான், ஐயா தீக்ஷிதர்ட்ட, அப்படின்னு சொல்வா, நீலகண்டதீக்ஷிதரை. அவர் ஒரு second யோசிச்சு பார்த்துட்டு அந்த இடத்துல ஒரு மச்சம் இருக்கும், ராணிக்கு, மனசுல டக்குனு படறது. அதனால அது அப்படியே இருந்துட்டு போகட்டும்னு சொல்றார்.

இப்போ ராஜா அதை பார்த்தபோது,ஏன் இப்படி பண்ணே!’ன்னவுடனே, ‘ஐயாதீக்ஷிதர் அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டார்!’ன்னவுடனே, ராஜாக்கு சந்தேகம் வர்றது. ‘ராணியுடைய மச்சம் அவருக்கு என்ன தெரிஞ்சது?’ அப்படின்னு. ஆட்களை அனுப்பிச்சு,அவரைக் கைது பண்ணிண்டு வாங்கோ’ன்னு அனுப்பறான். அப்போ இவர் பூஜை பண்ணிண்டு இருக்கார். பூஜை பண்ணிண்டு இருக்கும்போது, அவா வர்றா. அவா வாசல்ல வந்திருக்கா. ‘ராஜாவுடைய சேவகர்கள் உங்களை கைது பண்ண வந்திருக்கா’ன்னு சொன்னவுடனேயே இவருக்கு புரிஞ்சுடுத்து! கற்பூர ஆரத்தி பண்ணப் போறார். ரெண்டு கைல ரெண்டு கற்பூரத்தை ஏத்தி, கண்மேல வெச்சுண்டுடறார். வெச்சுண்டு வெளிலே வந்துராஜாட்ட, ராஜா என்ன எனக்கு சிக்ஷை பண்ணனும்னு நெனைச்சாரோ அதை நானே பண்ணிண்டேன்னு சொல்லுங்கோ!’ங்கறார். இதைப்போய் அவர்ட்ட சொன்னவுடனேயே ராஜா ரொம்ப தவிச்சுப் போயிடறார். ‘அடடா! மஹான்ட்ட அபச்சாரம் பண்ணிட்டோமே,’ அப்படின்னு ஓடோடிவந்து கால்ல விழுந்து, ‘தெரியாம பண்ணிட்டேன். உங்களுடைய ஞானத்ருஷ்டி தெரியாம நான் தப்பா புரிஞ்சுண்ட்டேன். மன்னிச்சுடுங்கோ’, அப்படின்னு சொன்னவுடனே, ‘போட்டும்! சந்தேகம் வர்றது சகஜம்தானே’ அப்படின்னு சொல்றார். இல்லல்ல அப்படி நீங்க சொல்லக்கூடாது. நீங்க இந்த மாதிரி கண்ணு தெரியாம இருந்தா, ஒவ்வொரு நாளும் நான் வருத்தப்பட்டு, அதுலயே எனக்கு உயிர் போயிடும்!  திரும்பவும் கண்ணு வரணும். மீனாக்ஷிட்ட வேண்டிக்கோங்கோ. மீனாக்ஷின்னு , கண்களால கருணை பண்றவ அவள்! தயவு செய்து நீங்க ப்ரார்த்தனை பண்ணிக்கோங்கோன்ன உடனே, அப்போ தான் இந்த ஆனந்தஸாகரஸ்தவம் பண்ணிருக்கார் நீலகண்டதீக்ஷிதர். அதுல கூட 62வது ஸ்லோகத்துல, ‘அம்மா! உன்னுடைய பாத தர்சனம் எனக்கு கிடைக்குமா? கிடைச்சாக்கூட, எந்த கண்ணைக் கொண்டு நான் அதை பார்ப்பேன்?’னு சொல்றார். இதை உட்குறிப்பா பெரியவா சொல்லிருக்கா. அதனால, அப்போ அப்படி சொன்னவுடனே, அவருக்கு கண்ணு வந்துடுத்து அப்படின்னு சொல்லிருக்கார். இதுமாதிரி, மீனாக்ஷி அவருக்கு கண்ணை குடுத்துட்டா!

இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நீலகண்டதீக்ஷிதர், ‘எனக்கு இந்த ராஜ சேவகம் போறும்‘, அப்படின்னு சொல்லிட்டு, திருநெல்வேலில பாலாமடைன்னு ஒரு இடத்துல, போயிருந்து, நீலகண்டஸமுத்ரம்ன்னு அந்த ஊருக்கு இப்போ பேரு வைச்சுட்டாளாம். அந்த மாதிரி, அங்கேயே சித்தியாயிட்டார்.

இது நாலாவது ஸ்லோகம். அஞ்சாவது ஸ்லோகம்,

नानायोगिमुनीन्द्रहृन्निवसतीं नानार्थसिद्धिप्रदां
नानापुष्पविराजिताङ्घ्रियुगलां नारायणेनार्चिताम् 
नादब्रह्ममयीं परात्परतरां नानार्थतत्त्वात्मिकां 
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥५॥

நானாயோகி³முனீந்த்³ரஹ்ருʼந்நிவஸதீம் நானார்த²ஸித்³திப்ரதா³ம்

நானாபுஷ்பவிராஜிதாங்க்ரியுக³ளாம் நாராயணேனார்சிதாம்

நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த²தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்

“நானாயோகி³முனீந்த்³ரஹ்ருʼந்நிவஸதீம்”எல்லா முனீந்த்ரர்களுடைய யோகிகளுடைய ஹ்ருதயத்தில் வசிப்பவள் மீனாக்ஷி. ஸ்ருங்கேரி சாரதாபீடத்துல இருந்த சந்திரசேகரபாரதி ஸ்வாமிகள், மீனாக்ஷி மேல ரெண்டு ஸ்தோத்ரம் பண்ணிருக்கார். ரமணபகவான் பண்ணிருக்கார். அப்படி, பெரியவாளுக்கு அவ்ளோ மீனாக்ஷிமேல பக்தி. அப்படி எல்லா யோகிகளும், முனிவர்களும் மீனாக்ஷியை த்யானம் பண்றா.

“நானார்த²ஸித்³திப்ரதா³ம்”எல்லாவித ஸித்திகளையும் குடுப்பா மீனாக்ஷி தன்னுடைய பக்தர்களுக்கு! இந்த உலகமே அம்பாளுடைய ஸ்ருஷ்டி. இதுல தன்னோட குழந்தை ஒண்ணு ஆசைப்பட்டா குடுக்கமாட்டாளா! ஆனா நம்ப வந்து, யோசிச்சுப் பார்த்தா அஞ்சு வயசு வரைக்கும் சின்ன குழந்தையா, அம்மா நமக்கு என்ன பண்ணாளோ, ‘அம்மா பாத்துப்பா!’ அப்படின்னு இருக்கறவரைக்கும், அது தான் ரொம்ப Happiest Period of life இல்லையா? அதுமாதிரி இருக்க தெரிஞ்சுடுத்துன்னா, எப்பவும் சந்தோஷமா இருக்கலாம். அந்த மாதிரி, இந்த வயசு வந்தாலும், சித்திகளெல்லாம் கிடைச்சு, அதைக்கொண்டு ஒண்ணு அனுபவிச்சு சந்தோஷப்படறதைவிட,அம்மா! நீ விட்ட வழி’ அப்படின்னு இருந்தா, நமக்கு என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் அம்மா குடுப்பா.

நானாபுஷ்பவிராஜிதாங்க்ரியுக³ளாம்” – பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு, அர்ச்சனை பண்ணப்பட்ட அம்பாளுடைய சரணயுகளம். இந்த மதுரையே, மல்லிகைப்பூக்கு பேர்போனது. அங்க வர்ற மல்லிகைப்பூதான் உலகம் முழுக்க போறது! அப்படி புஷ்பங்களால அர்ச்சிக்கப்பட்டபாதயுகளம்”.

“நாராயணேனார்சிதாம்”பிரம்மாதி தேவர்கள் வணங்குவார்கள். விஷ்ணு பகவானும் பூஜை பண்றார்.

நாத³ப்³ரஹ்மமயீம்”மீனாக்ஷிதேவி நாதப்ரம்ம வடிவம்! நாதப்ரம்மம்ங்கற வார்த்தையை கேட்டவுடனே, முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஞாபகம் வர்றது. முத்துஸ்வாமி தீக்ஷிதர், எல்லா க்ஷேத்ரங்கள்லேயும் போய் அற்புதமான க்ருதிகளெல்லாம் பண்ணிருக்கார்! அதுக்கு ஈடு இணையே கிடையாது. அந்த முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு தீபாவளி நாளன்னிக்குமீனாக்ஷி மே முதம்தேஹி’ ஒரு க்ருதியை பாடிண்டு, ‘மீனலோச்சனி பாஶமோச்சனி’ அப்படின்னு சொல்லிண்டே அவர் அம்பாள்ட்ட போய் சேர்ந்துட்டார்! சித்தியாயிட்டார்! அப்படி மீனாக்ஷி, நாதப்ரம்மமா மீனாக்ஷியை பார்த்தார் அவர்.

“நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம்” – ‘உயர்ந்த வஸ்துக்கள் எல்லாத்தக் காட்டிலேயும் உயர்ந்தது காமாக்ஷி திருவடி!’ன்னு சொல்வார் மூககவி! அந்த மாதிரிபராத்பரதராம்”. உயர்ந்ததுன்னு உனக்கு ஒண்ணு தோணறதா? அதெல்லாம் காட்டிலும் உயர்ந்தது மீனாக்ஷிதேவின்னு தெரிஞ்சுக்கோ.

நானார்த²தத்வாத்மிகாம்”பலவிதமான தத்வங்களுடைய அர்த்தம் மீனாக்ஷிதான். இந்த இடத்துல இந்த ஆனந்தஸாகரஸ்தவத்துடைய முதல் part படிச்சா, ஒரு 50 ஸ்லோகத்துல பல விதமான தத்வங்கள்! இன்னிக்கே கூட நம்ப ஏதாவது வரீவஸ்யா ரஹஸ்யம் அப்படின்னு ஏதாவது படிச்சா எதாவது புரியறதோ? அதெல்லாம் ஒண்ணுமே நமக்கு புரியாது. அது வந்து கஷ்டம். அந்த மாதிரி மந்திர தந்திர யந்திரங்களெல்லாம்,  நம்ம லாயக்கில்லாம போயிட்டோம்! அது இருக்கு, மஹான்கள் அதை உபாஸிச்சு, மேன்மை அடைகிறார்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாளே,நானார்த²தத்வாத்மிகாம்எல்லா தத்வங்களின் வடிவமாக மீனாக்ஷி இருக்கா! அந்த மீனாக்ஷியை, கருணைக்கடலான மீனாக்ஷியை, “அஹம் ஸந்ததம் ப்ரணதோ³ஸ்மி” – நான் தினம் நமஸ்காரம் பண்றேன்னு சொல்றார். அந்த மாதிரி நம்பளும், humble ஸ்தோத்ரங்களைப் படிச்சுண்டு, அம்பாளை நமஸ்கராம் பண்ணிணாலும், அந்த பெரிய அநுக்கிரஹம் கிடைச்சிடும்! என்ன புரிஞ்சுகணும்ன்னா, நம்முடைய இஷ்டதெய்வம், “பராத்பரதராம்”  அப்படிங்கற புக்தியை வெச்சிண்டு, நம்ப ரொம்ப குழந்தையா இருந்துண்டா அதுக்கு மேல அம்பாள் உபாசனையில்லை, வேற ஒண்ணுமே வேண்டியது இல்லை! அந்தநானார்த² தத்வாத்மிகாம்” அப்படிங்கறதை பார்த்தபோது, அந்த ஆனந்தஸாகரஸ்தவத்தினுடைய first 50 ஸ்லோகங்கள்ல, பலவிதமான தத்துவங்களை எடுத்து, அதோட ஸாரத்தை சொல்லி, ‘ஆனா இது தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? இது எதாவது பண்ணமுடியுமோ நம்மால? நம்மால follow பண்ண முடியுமா?’, அப்படின்னு சொல்லிண்டே வர்றார். ரொம்ப வேடிக்கையா இருக்கும். மஹாபெரியவா அதுக்கு ஸ்ரீமுகம் குடுக்கும் போது, ‘இது இந்த கவி விளையாட்டா சொல்றார், அதுக்காக நம்ம இதெல்லாம் தள்ளிடப்படாது!’, அப்படின்னு சொல்ற அளவுக்கு விளையாட்டா சொல்றார். ஆனா அந்த சாஸ்த்ரங்களெல்லாம் தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சிக்கறவா தெரிஞ்சுப்பா. பக்தி மார்கத்துல எளிமையா இருக்கறது, சுலபமான வழி. அதுக்கு தான் இந்த மாதிரி ஸ்தோத்ரங்களெல்லாம் ஆச்சார்யாள் அநுக்கிரஹம் பண்ணி குடுத்திருக்கார்.

ஒரு வாட்டி இந்த அஞ்சு ஸ்லோகங்களைப் படிச்சு பூர்த்தி பண்ணிக்கறேன்.

உத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்

பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம்

விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் || 1 ||

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபாம்

ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணிதராம் பத்³மப்ரபாபாஸுராம்

ஸர்வாபீஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் 2

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்

ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்யவஸதிம் ஶ்ரீமத்ஸபா நாயிகாம்

ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் || 3 ||

ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்

ஶ்யாமாபாம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம்

வீணாவேணும்ருʼ³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதாடம்பி³காம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் 4

நானாயோகி³முனீந்த்³ரஹ்ருʼந்நிவஸதீம் நானார்த²ஸித்³திப்ரதா³ம்

நானாபுஷ்பவிராஜிதாங்க்ரியுக³ளாம் நாராயணேனார்சிதாம்

நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த²தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் 5 ||

எதேர்சையா எங்க அம்மா பேரு மீனாக்ஷி, அப்பா பேரு சுந்தரேச சர்மா, எங்க மாமா பேரு நாராயணன், என் பேரு கணபதி சுப்ரமண்யன், அதனால இந்த ஸ்லோகத்துல எனக்கு ஒரு தனி இஷ்டம்.

நம: பார்வதி பதயேஹர ஹர மஹாதேவ

Series Navigation<< மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaningஷட்பதீ ஸ்தோத்ரம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Shadpadee stothram slokam 1 meaning >>

6 replies on “மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning”

பக்தி ரசமென்பதன் சாரமே சிவானந்தலஹரி ஸ்தோத்ரங்கள் தாம்!!
பல வித புஷ்பங்களை எடுத்து பூஜை செய்வதை விட
பரமேஸ்வரனிடத்தில் மனம் லயிக்க வேண்டுமென்று ஆசார்யாள்
சொல்கிறார்.எப்பிறவியிலும் அவர் பக்தியில் மனம் திளைக்க
வேண்டுமென ப்ரார்த்தனை ஒரு ஸ்லோகத்தில் ! அடுத்து
எந்த ஆசிரமத்திலும் அவரிடமே மனமீடுபட்டு திளைக்கப்
ப்ரார்த்தனை!!!
இவ்வாறு பரமேஸ்வரனிடத்தில் மனம் ஈடுபட்டால் அதுவே சிறந்த
யோகம் என்றும் நிரந்தர சுகம் என்ற வர்ணனை!!

நீலகண்ட தீக்ஷிதர் ஆனந்த ஸாகரஸ்த்வத்தில் சொல்றார் ” அம்மா
நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்ததில் பாதிப் பங்குதான்
சிவனுக்கு,மறு பாதி நீயல்லவா ? அதுபோல் இடது காலால்
யமனை உதைத்து ஜயித்ததில் அவருக்கு என்ன சம்பந்தம்?அது
அம்பிகையின் பாதமல்லவா?
எனது மனதை உன் பாதாரவிந்தத்தில் சமர்ப்பிக்கிறேன்,,ம்ருதுவானால்
உன் பாதுகை ஆக்கிக் கொள் கடினமானால் விவாஹத்துக்கு
உபயோகிக்குமம்மியாக வைத்துக்கொள் என கவி நயம்பட உரைக்கிறார்!!

உனது சரண ஸ்பர்சம் எனக்கு எப்படியானாலும்வேண்டும் என்று!!

உலகு தனிற் பலபிறவி தரித்தற உழல்வது விட்டினி யடினாயேன்
உனதடிமைத் திரளதனினுமுட்பட உபய மலர்ப்ப்பதமருள்வாயே என
திருப்புகழில் ஆன்டவன் மலர்ப்பதம் புக ப்ரார்த்தனை செய்கிறார்
அருணகிரியார்!!!

நீலகண்ட தீக்ஷிதர் ஜலத்தில்மூழ்குபவன் கையில்பட்டதைக்
கெட்டியாகப் பிடித்துக்கொள்வான் . சம்சாரக்கடலில் மூழ்கும்
நான் உன் ம்ருதுவான பாதத்தை இறுக்கப் பிடித்துக்
கொண்டேன் .இப்படி உன்னைனான் நோகச் செய்தததற்காக
என்னை மன்னித்து விடு அம்மா என்று அரற்றுகிறா
நீலகண்ட தீக்ஷிதர்11
பாதபத்மம்தான் ultimate சரணாகதி!!
இந்த சந்தர்ப்பத்தில் ஓர் ஞாபகம் வரது , என்ன ?
பெரியவா மீனாக்ஷி தர்சனக் காட்சி கண்முன்
தோன்றுகிறது!!!
பெரியவா மீனாக்ஷி தர்சனம்தான் முதலில்செய்தார்,
பின்பே காமாக்ஷி தர்சனம்!!
ஸன்னிதியில் நிற்கும்போது அவரது மலர்க்கண்கள்
தன்நையறிமாமல் கண்ணீர் சொரிய ஆரம்பிக்கிறது!
கட்டுப்படுத்தமுடியாமல் உடல் நடுங்க அவளிடம் ஈடுபட்டு
நின்ற காட்சி காண்போர் மனதை உருகச் செய்கிறது!!
யாருமவரைத் தொட முடியாத நிலைமை!
தானாகவே சுய நிலைக்கு வந்ததாகச் சொல்வார்கள்!
அந்த சம்யம் அவர் சொன்னார்'”இவள் சேனாதிபதி,
அகிலாண்டேஸ்வரியும் அப்படியே! காமாக்ஷிதான்
ராஜராஜேஸ்வரி!!
ஆநால்மதுரைமீனாக்ஷியும், தஞ்சை பங்காரு காமாக்ஷியும்
நின்ற கோலத்தில் கிளியைக் கையில் வைத்திருப்பதால்
எனக்கு இவளும்காமாக்ஷியாகவே தெரிகிறாள் என்று!!

பக்திபரவசமென்னதான் செய்யாது?
உபய மலர்ப்பதம் தருவாயே என ப்ரார்த்திப்பது மட்டுமே
நமது வேலை! மற்ற யாவும் அவளது திருவடியில் சமர்ப்பணம்
செய்வோம்..
அழகா சிவானந்தலஹரி, மூக பஞ்சசதி, நீலகண்ட தீக்ஷிதர்
அருளிய ஆனந்த ஸாஹஸ்த்வம் எல்லாம்கலந்து பக்தியின்
எல்லைக்கே அழைத்துச் சென்று விட்டார் கணபதி !!

ஜய ஜய ஜகதம்ப சிவே…

இந்த மீனாக்ஷி பஞ்சரத்னம் உரை மிக அழகாக, நளினமாக உள்ளது.
எத்தனை உபமானங்கள்.
ஒவ்வொரு கவியும் தங்கள் பக்தியின் மூலமாக நமக்கெல்லாம் அம்பாளின் சரணங்களைப் பிடித்துக் கொண்டு வணங்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு வழி செய்துள்ளனர்.
தாங்கள் ஒரு சமயம் கூறியது போல ஆசார்யாள் நமக்காக நம் அழுக்கை ஏற்றிக் கொண்டு ஸ்தோத்ரங்கள் வர்ஷித்துள்ளார். அது போல மகான்கள் காட்டிய வழியில் கடவுளை /காமாக்ஷியின் சரணங்களைப் பற்றிக்கொள்வோம். இந்த ஸம்ஸார ஸாகரத்தை கடப்போம்.
ஆனந்தஸாகர ஸ்தவத்தில் கூறியிருப்பது போல் ஸம்ஸார கடலை நினைத்தாலே பயம் அந்த பயத்தின் வெளிப்பாடு அம்பாள் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதாக உள்ளது. இது எப்பேர்ப்பட்ட உண்மை.

தினமும் இம்மாதிரி கிடைக்கும் அமுதமான விஷயம், கிடைக்க பாக்யம் செய்துள்ளேன்

வித்யை அறிய முற்படும் போது பல பாடங்களைக் (subject) கற்க வேண்டும். இன்று நம் பாடம் மீனாக்ஷி தேவி. 🙏🙏

Ambhal’s Padha darshanam through Adhi Shankar, Mooka Kavi and Neelakanda Dikshithar. Blessed to be associated with you Sri Ganapathy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.