Categories
Shankara Stothrani Meaning

ஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning

ஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning

Script will be added soon

Series Navigation<< ஷட்பதீ ஸ்தோத்ரம் இரண்டாவது ஸ்லோகம் பொருளுரை; Shadpadee stothram slokam 2 meaningஷட்பதீ ஸ்தோத்ரம் 5, 6, 7 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 5, 6, 7 meaning >>

4 replies on “ஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning”

வன் கானம் போய் அண்டா முன்பே நின் பொற் கழல் தாராய் என்று அழைக்கிறார் அருணகிரி நாதர், மேலும் சேமக் கோமள பாதத் தாமரை சேர்த்தார் கோதுமநந்த வேதா என்று வேறொரு திருப்புகழில் பாடியுள்ளார் பாத சிறப்பை நமக்கு வலியுறுத்துகிறார் ! கடைசி பயணத்தில் நினையாமல் ஸதா பகவான் பாத கமலங்களை நினைத்து வழி பட ஆசார்யாள் இந்த ஷட் பதி ஸ்லோகம் மூலம் நமக்கு வழி காட்டுகிறார்!!
ஜய ஜய சங்கரா…

ஸ்ரீ ஷங்கரரின் ஸ்தோத்ராணி புத்தகம் வாங்கி சுமார் 3/4 வர்ஷங்ளாயிற்று.
இப்போது எனக்கு தினம் உபயோகிக்க அவரே சித்தம் கொண்டுள்ளார்.
தங்களின் விரிவுரை மிக அற்புதம். ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு அர்த்தம் கிடைப்பது பரம சந்தோஷம்.
ஸ்ரீ ஆசார்யாளே அத்வைதம் இல்லாமல் பக்தி பண்ண வேண்டும் என்று சொல்வது இந்த பக்தி மட்டும் பண்ண ஆயுசு கொடுக்கணும் இல்ல அதற்காகவே இன்னொரு பிறவி கிடைக்கணும்..

தாங்கள் சொன்னது போல் எதுகை மோனையுடன், அழகான சந்தத்துடன் தாளம் போட வைக்கும் ஸ்தோத்ரம்!!
கேக்க வே பரமானந்தம்!! மானுடனாய்ப் பிறப்பது அரிது, அதிலும் ஆண்டவன் பால் பக்தி பண்ணும் நினைவு வருவது அதனிலும் அரிது!அலைகள் சமுத்திரமாக முடியாது ஆனால் பல அலைகள் சமுத்திரத்திலிருந்து உண்டானவை தாம் என்ற கருத்து நாம் எல்லாரும் பகவானிடமிருந்து
தோன்றிய அலைகள் என்ற கருத்து ரொம்ப அருமை!
எப்போதும் ஏதோ ஒன்றை நாடி நிலையாத மனத்துடன் இராமல் அவர் இணையடி நிழலை அடைய ஸதா நினைத்தால் மற்ற லோகாயதமான நினைவுகள் அகலும் இது படிப் படியாக உயர்வு தரும் சாதனம்!! நிலையாத சமுத்திரமான என்ற திருப்புகழ் தவியாமல் பிறப்பையு நாடி யது வேரை யருத்துனை யோதி தலமீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய் என்று நமக்கு அறிவுரை கூறவே சொல்கிறார் அருணகிரி நாதர் !
மேலும் சேமக்கோமள பாதத் தாமரை என்று அவரை அடைய ஓத வேண்டும் என்பதையும் அழகுபடச் சொல்கிறார்!!
எத்தனை அந்தாதி, சௌந்தர்ய லஹரி படித்தாலும் திருப்புகழ் பாடினாலும் மனம் ஒன்றி இறைவனை வழிபட்டு பாத தாமரைப் பற்ற மன முதிர்ச்சி வேண்டும்! அது பழக்கத்தில், அனுபவத்தில் ஏதும் எதிர்பாராத சிந்தனையில்தான் வரும்,!
அருமையான உபன்யாசம் ! எளிதில் பாமரனும் புரிந்து கொள்ளுமாறு இயல்பான நடையுடன்!!
ஜய ஜய சங்கரா……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.