சிவானந்தலஹரி ஸ்லோகம் 34, 35 தமிழில் பொருள் (14 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 34 and 35)
சிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய அர்த்தம் பார்த்தோம். இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.
33வது ஸ்லோகத்துல, “ஹே பரமேஸ்வரா! உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார். “பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும். இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு?” அப்படீன்னு சொல்றார். அடுத்த சில ஸ்லோகங்கள்ல பகவானுடைய கல்யாண குணங்களை நினைச்சுப் பார்க்கிறார். அந்த குணங்களை தியானம் பண்ணி பண்ணி, பூஜை ஸ்தோத்திரத்துனால இப்போ எந்த ஒரு அனுபவம் கிடைச்சுதோ, அதை ஸ்திரப்படுத்திக்கணும். பகவானுடைய குணங்கள்னா சாதாரண குணங்கள் இல்லை. ரொம்ப ஈஸ்வர குணங்கள். அதெல்லாம் நினைச்சுப் பார்த்து ‘யத்பாவம் தத் பவதி’ ன்னு அந்த தியானத்துனால ஈஸ்வர தன்மையை தானும் அடைய முடியும்ங்கறயான மாதிரி குணங்களை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார்.
அடுத்த ஸ்லோகத்துல,
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–
द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।
भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं
पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥
கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–
த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।
ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்
பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.
ஹே பசுபதே! உன்னுடைய சாகஸத்தை ‘கிம் ப்³ரூமஹே’ – எப்படி சொல்ல முடியும்? உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார். அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு? உன்னுடைய தைரியம், உன்னுடைய சாகஸம் யாருக்குமே இல்லை.
‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – இந்த ஆத்மாவிலேயே லயிச்சி இருக்கிற உன்னுடைய ஸ்திதியானது வேறு ஒருவராலும் அடையப் படவில்லை.
எப்படி அது தெயரியறதுன்னா, பிரளய காலத்துல, ‘ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம்’ – தேவக்கூட்டம் அவாளோட ஸ்தானத்துல யாரும் இல்லை. எல்லாரும் விழுந்துடறா!
‘முனிக³ணம் த்ரஸந்’ – முனிகள் கூட்டம் நடுங்கறது. அப்பேற்பட்ட பிரளயக் கால காட்சியை நீ ஒருத்தன் பார்த்துண்டு,
‘ஆனந்த³ஸாந்த்³ர:’ – ‘ஆனந்தத்துல நிரம்பி, தாண்டவமே ஆடறே நீ!’ன்னு சொல்றார். அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது. அதுக்குதான் இந்த இடத்துல ‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ – உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார்? இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்வைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம். ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது. ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற! அதைப் பத்தி கொஞ்சம் கூட கலங்காத உன்னுடைய சாகசத்தை என்னவென்று போற்றுவேன்னு வியக்கறார்.
சிவன் சார் கூட, சோலனும் கிரீஸஸும்ங்கிற கதைல கிரீஸஸ்னு ஒரு ராஜா இருப்பான். அவன் கிட்ட குபேரன் போல சம்பத்து இருக்கும். சோலன்ங்கிறவர் philosopher. தத்துவஞானி. அவர் வருவார். கிரீஸஸ் தன்னோட செல்வத்தை எல்லாம் காண்பிச்சு ‘இந்த உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான சந்துஷ்டி உள்ள மனிதன் யார்?’ னு கேட்பான். அந்த கிரீஸஸ்க்கு என்ன எண்ணம்னா சோலன் தன்னைத் தான் சொல்வார். ‘உன்னை மாதிரி யார் பாக்யசாலி. நீ தான் உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்’ னு சொல்வார்னு நினைக்கிறான். ஆனா சோலன் ஞானியானதுனால, ஞானினா lightஆ use பண்றேன். சார் bookல ஞானிங்கிறதுக்கு வேற விளக்கம் இருக்கு. தூய்மைல சிறந்த முற்றின விவேகியா இருக்கிறதுனால சோலன் சொல்வார் – “சந்துஷ்டிங்கிறது இன்னின்ன குணங்கள்னு விவரிச்சுட்டு, (சிவானந்தலஹரியோட அடுத்த ஸ்லோகத்துல கூட நாம அதையெல்லாம் பார்ப்போம்.) அப்பேற்பட்ட குணங்கள் எல்லாம் கொண்ட, தூய்மைல நிறைந்தவர்கள் தான் சந்தோஷமா இருக்கா”ன்னு சொல்லிட்டு, அதுக்கான சில லக்ஷணங்கள் சொல்வார். அதுல ‘மரணத்தை வரவேற்பது என்பது அந்த வேதாந்த பக்குவங்களில் ஒரு சின்ன பக்குவம் ஆகும்’னு சார் எழுதியிருப்பார். “மரணத்தை பத்தி பயப்படாம அதை வரவேற்கிறதுங்கிறது செயல் வேதாந்திகளால தான் முடியும். ஒருத்தன் தன் உடம்பிலேயிருந்து உயிர் பிரியற அந்த மரணம் இல்லை. பரமேஸ்வரா, பிரபஞ்சமே பிரளயத்துல லயம் அடையும் போது கூட அதை பார்த்துண்டிருக்கிற உன்னோட சாகசம் எப்பேற்பட்டது!”ன்னு வியக்கறார்.
சங்கரரே அம்பாளை பத்தி சௌந்தர்யலஹரில சொல்லும்போது, 2 ஸ்லோகத்துல, “எல்லா இந்திராதி தேவர்களும், விஷ்ணுவும், பிரம்மாவும் கூட பிரளய காலத்துல காணாம போயிடறா! உலகமே தூங்கிப் போயிடறது. ஆனா உன்னுடைய பதி மட்டும் ரமிச்சிண்டிருக்கார். ஏன்னா உன்னோட பாதிவ்ரத்யம் தான், ஏன்னா நீ சதியா இருக்கியோல்லியோ!” ன்னு சொல்றார். பிரளய காலத்துல எல்லாருக்குமே முடிவு ஏற்பட்டாக் கூட, விஷத்தை சாப்பிட்ட உன்னோட பதிக்கு ஒண்ணும் ஆகலை. பிரளயகாலத்துல அவர்மட்டும் சந்தோஷமா இருக்கார். அது ஏன்னா உன்னோட ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ ன்னு நீ போட்டுண்டிருக்கிற தாடங்கம் தான். தாடங்கம் ஸௌமாங்கல்யத்துக்கு அடையாளம்.
மூக கவியும்,
क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी–
शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः ।
घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे
मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् ॥100॥
க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணிவிபஞ்சீலயஜ2ரீ–
ஶிர:கம்பா கம்பாவஸதிரனுகம்பாஜலநிதி4: |
க4னஶ்யாமா ஶ்யாமா கடி2னகுசஸீமா மனஸி மே
ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரநடனஸாக்ஷீ விஹரதாத் ||100||
அப்படீன்னு சொல்றார்.
‘ஹரநடனஸாக்ஷீ’ – பரமேஸ்வரனோட ஊழி தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருப்பவள் நீதான்னு சொல்றார்.
அப்பேற்பட்ட காமாக்ஷி, ‘மம மனஸி விஹரதாத்’ – என் மனசுல சந்தோஷமா விஹாரம் பண்ணட்டும்னு வேண்டிக்கறார். பரமேஸ்வரன் ஊழி தாண்டவம் ஆடறார். அதை அம்பாள் பார்க்கறா. அந்த அம்பாள் என் மனசுல இருக்கணும்ங்கிறார். குழந்தையாயிருந்தா, அம்மாக்கிட்ட என்ன வேணா கேட்கலாம்.
‘அனுகம்பாஜலநிதி4:’ – ‘அனுகம்பா’ன்னா கருணை. கருணைக் கடல் அல்லவா! அதுனால குழந்தை என்ன கேட்டாலும் பண்ணுவா. என் மனசுல நீ இருக்கணும்னா, அந்த அனுபூதி எனக்கும் வேணும்னு மூக கவி கேட்கறார். அம்பாள் அதை கொடுப்பா.
அடுத்த ஸ்லோகம் மேலும் பரமேஸ்வரனோட கல்யாண குணங்கள் எல்லாம் நினைச்சுப் பார்த்து, “உன்கிட்ட ஏதோ சிலபேர் வேண்டிக்கறா போலிருக்கு. என்ன வேண்டிக்க முடியும் நான்!”னு வியந்து ஒரு ஸ்லோகம் சொல்றார்.
योगक्षेमधुरंधरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो
दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः ।
सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया
शंभो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५॥
யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய ஸகலஶ்ரேய:ப்ரதோ³த்³யோகி³நோ
த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிநோ பா³ஹ்யாந்தரவ்யாபிந: ।
ஸர்வஜ்ஞஸ்ய த³யாகரஸ்ய ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா
ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராம்யந்வஹம் ॥ 35॥
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.
பரமேஸ்வரா! நீ ‘ஸர்வக்ஞ:’ – உனக்கே எல்லாம் தெரியும். உன் கிட்ட ஒண்ணும் நான் சொல்லிக்க வேண்டியதில்லை!
‘த³யாகரஸ்ய’ – நீ தயை உடையவன். அதனால எனக்கு ஒரு கஷ்டம்னா, நீயே பார்த்து பண்ணப் போற.
‘ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ – உன்கிட்ட நான் சொல்லிக்கறதுக்கு என்ன இருக்கு?
‘யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய’ – உன்னை நம்பினவாளோட யோக க்ஷேமத்தை நீ பார்த்துக்கறே. தாங்கறே. ‘யோக³ம்’னா ஒரு நன்மை வந்து சேர்றது. அந்த நன்மை நம்ம கிட்ட தங்கியிருக்கறது க்ஷேமம். அது மாதிரி எனக்கு தேவையான எல்லாத்தையும் என்கிட்ட கொண்டுவந்து சேரக்கிறதுலேயும், வந்து சேர்ந்த நன்மைகள் என்கிட்ட தங்கிறதுலயும் என்ன உண்டோ அதை நீதான் பார்த்துக்கறே.
‘ஸகலஶ்ரேய:ப்ரதோ³த்³யோகி³ந:’ – அந்த ஸ்ரேயஸான, ப்ரேயஸ்னா உலக விஷயங்கள், ஸ்ரேயஸ்னா மேலான நன்மையை கொடுக்கக் கூடிய விஷயங்கள். அப்படி இந்த உலக விஷயம் முதற்கொண்டு முக்திக்கு வேணும்கிற ஒரு குருவை கொண்டு வந்து சேர்க்கறது. ஓரு நல்ல புஸ்தகம் கையில கிடைக்கறது. எல்லா விதமான ஸ்ரேயஸுக்கான காரியங்களையும் முயற்சியோட நீ எனக்கு பண்ணிண்டிருக்க!
‘த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிந:’ – கண்ணால் பார்க்கக் கூடிய நன்மைகள், கண்ணுக்கு தெரியாத அத்³ருʼஷ்டமான அநுக்ரஹம். இது எல்லாத்தையும் எப்படி பெற வேண்டும்னு உபதேசம் பண்ணக் கூடிய குருவாவும் நீ வரே. குருவா வந்து அந்த உபதேசமும் பண்றே!
‘பா³ஹ்யாந்தரவ்யாபிந:’ – எல்லாவற்றிலும் உள்ளும், புறமும் வ்யாபிச்சிருக்கே. அப்பேற்பட்ட ஸர்வக்ஞனாவும் இருக்க! தயாகரனாவும் இருக்க.
இப்பேற்பட்ட ‘ப⁴வத: மயா கிம் வேதி³தவ்யம்’ – உன்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு?
இப்பேற்பட்ட பரமேஸ்வரன்! அவருடைய பூஜை பண்ணி, தியானம் பண்ணி, கதைகளைக் கேட்டு எனக்கு அவர் ரொம்ப அந்தரங்கமானவர். ரொம்ப நெருக்கமானவர்ங்கிற ஒரு எண்ணம் என் மனசுல வந்துடுத்து. குருவாகவும் வந்து, அந்த குருவானவர் அனுபூதியில திளைச்சு இருக்கிறதுனால அவரோட பேரானந்தத்தை பார்த்து, அவர் அந்த பேரானந்தத்தையும், அது மட்டும் இல்ல, இந்த உலகத்துல உன் கண்ணுக்கு தெரிஞ்ச என்னென்ன வேணும்னு தோண்றதோ, அந்த கண்ணுக்கு தெரிஞ்ச நன்மைகள், கண்ணுக்கு தெரியாத நன்மைகள் அது எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றார்னு புரிஞ்சுண்ட பின்ன, எனக்கு சொல்றதுக்கு என்ன இருக்கு? எனக்கு என்ன நல்லதோ நீங்களே பார்த்து பண்ணுங்கோ.
நான் என்ன பண்ணப் போறேன்னா, ‘ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராமி அந்வஹம்’ – அடிக்கடி நீ எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமானவன்னு மனசுல நினைச்சு நினைச்சுப் பார்த்து புளங்காகிதம் அடைஞ்சிண்டிருக்கேன்னு சொல்றார். அழகான ஒரு பக்தி பாவம்.
மாணிக்கவாசகர் கூட திருவாசகத்துல,
வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?
அப்படீன்னு ஒரு ஸ்லோகத்துல சொல்றார். அதுனால நாம பகவான்கிட்ட இது வேணும், அது வேணும்னு கேட்கறதுங்கிறது ஒரு சாதாரண stage.
மஹா பெரியவாளைப் பத்தி படிக்கும்போது அவரோட பெருமையை படிக்கறோம். ஏதாவது miracle படிக்கும்போது, நமக்கும் இந்த மாதிரி ஒரு miracle வேணும்னு தோணறது. நமக்கு வேற ஒரு விதத்துல மஹாபெரியவா வேற மாதிரி அநுக்ரஹம் பண்ணுவாளா இருக்கும். அதுனால பெரியவாளோட பெருமையை நினைச்சு, நம்மள பெரியவாளை சேர்ந்தவனா நினைக்க முடிஞ்சுடுத்துன்னா, அதுக்கப்புறம் நாம வேண்டிக்கறதுக்கு ஏதாவது இருக்குமா? அந்த மாதிரி பெரியவா கிட்ட நெருங்கி பழகினவா, அவாளோட அனுபவங்களை கேட்கும் போது, எவ்ளோ நிஸ்சிந்தையா இருக்கா அவா! ஆரம்பத்துல அவாளும் பெரியவாகிட்ட ஏதோ ஒரு வேண்டுதலோடதான் போயிருப்பா. பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்தான் ஆரம்பிச்சிருப்பா. ஆனா பெரியவா ஆட்கொண்ட பின்ன, இப்ப அவா 80,90 வயசுல பெரியவாளைப் பத்தி பேசும்போது எவ்வளோ நிஸ்சிந்தையா இருக்கா! பெரியவாளை எவ்வளோ தூரம் தன்னை சேர்ந்தவரா, தான் பெரியவாளை சேர்ந்தவனாக, பெரியவா எப்படி தன்னை ஆட்கொண்டார் என்று ரொம்ப அந்தரங்கமா நினைச்சு பேசறா இல்லையா. அந்த மாதிரி பரமேஸ்வரனை நினைச்சு ஆசார்யாள் பேசறார். அந்த பக்தி வேணும்னு நாமளும் வேண்டிப்போம்.
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ
4 replies on “சிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை”
Namaste Rama Rama,
Many thanks for the opportunity to hear the meanings of these so amazing verses otherwise we will never have a chance to hear and contemplate.
34: Siva being an ashuthoshi how can so calmly witness the kala Agni and delight in the same unless is of some ultimate good to the Jivas. Certaintly it is a period of rest to the Jivas who are in the terrible “merry(sorry) go round of life, though we hardly see so.
This layam after pralayam is our deep sleep in the microcosm, unless we know for sure , as the lord of this body mind complex , will not prepare for our sleep everyday . We know for sure we will be back and bright (Bhagavan talks this way about we losing ourselves Everyday in sleep).
Certainly this invocatory verse from ulladu narpadu came to my mind..
மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன் — சரணமே
சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்.
அன்வயம்: மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரண் ஆக மரண பவம் இல்லா மகேசன் சரணமே சார்வர். தம் சார்வு ஒடு தாம் சாவு உற்றார். சாவாதவர் சாவு எண்ணம் சார்வரோ?
English translation: Pure-hearted people who have intense fear of death will take refuge at the feet of God, who is devoid of death and birth, as a fortress. By their refuge, they undergo death. Will those who are deathless be associated with the thought of death?
Was really amazed that Solan and Croesus quoted drives home the point the most happy (devoid of fear n contented) are the pure hearted.
Mooka Kavi’ request to be a co-witness to the Uzhi thandavam (Hara natana sakshi mama manasi viharathathu 🙏👌) , made me think is a request to AMBA to give oneself the strength of mind to go through the difficulties of kala thandavam in our lives . Delightful combination of Sivananadalahari and Mooka Pancha Shathi , enjoyed so much.
Request like others , keep the flow going faster and faster . Blessed you are to be with these verses🙏🌸.
Regards
Sujatha.R
Namaste Rama rama 🙏🌸
35: Very few can deny the peace n satisfaction soul mates bring in ones life. One trait of the soul mate is the constant communion which is mostly mental. One who understands this can easily understand the communion Bhagavan and Sri Ramakrishna had with Arunachala and Kali.
One big difference between the earthly and divine communion is lack of any expectation in the later and hence total surrender to the divinity. Total reliance on the divinity for the yoga and kshema and communion is the thing and end thing.
Beautiful analogy of the Mahaperiyava Bhaktha who totally are satisfied in the communion 🙏🌸 really well painted picture of this divine communion or paramantharangam.
Regards
Sujatha
Your attempt to take the readers/listeners with you slowly but steadily to higher plane is the most admirable thing.
Having had the darshan and blessings of HH Mahaperiava in person solely due to His grace and benevolence as often as possible , it is but natural that we coulde draw energy from that Supreme Power House. He continues to generate Aanandam in us, guides us, protects us. Not realising that apt term “அத்யந்த ப்ரியமானவர் எமக்கு” we continue to dwell upon His feet and Him as often as possible.
Is it due to our efforts.? No. HH permits access to us so long as our devotion is pure. HH in turn meditates upon Sambha Parameswara and becomes one . Such merger happens swiftly and gracefully to HH who in turn tries to shower His Grace to the ardent seekers.
Your beautiful commentary set me think on these lines. Namaskaram.
என்னவென்று உரைப்பேன் உலகோனே நின் துணிவதனை,
எவரிடமுண்டு நின் மனஉரம், எங்கனமடைவர் நின் உளநிலை,
பேரழிவு காலம் காணும் தருணம், இயல்நிலை நழுவிடும்
தேவரினமும், அச்சமுடன் உயிர்விழை முனியினமும் இருக்க,
தனியொருவராய் பயமின்றி பரவசமுடன் தரணி காக்கும்
பணிபுரியும் பேரின்பநிலையோனே உயிரினத் தலையோனே! 34
அனைத்துமறிந்த ஆதியென, இகபர இன்பமடை வழிஉரை ஆசானாக,
எனைக் கடந்து என்னுள்ளுறை கடவுளாக, கருணை பொழி ஈசனாக
அடியார்க்கருளும் பரமனென, உலகாளும் உன்னிடம் உரைத்திட,
அடியேனிடம் ஏதும் உண்டோ இறைவா! அணுக்கம் நீ எனக்கு என
சிறியவன் என்மனம் சிந்தனை புரிந்திடும் அனுதினம் சங்கரனே! 35